Mar 23, 2010

குருபெயர்ச்சி பலன்கள் -கன்னி




குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு டிசம்பர் 15, இரவு 11.32 மணிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2010 டிசம்பர் 3 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.


உத்திரம் - 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2
+ தம்பதியர் ஒற்றுமை
- உடல்நலக்குறைவு
எந்த சமயத்திலும் உஷாராக இருக்கும் கன்னி ராசி அன்பர்களே!
குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஆறாம் இடமான கும்பத்தில் அமர்வு பெறுகிறார். தனது 5,7,9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 10, 12, 2ம் இடங்களை பார்க்கிறார். இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு சில கஷ்டங்களைத் தரும் வகையில் உள்ளது. இருந்தாலும், தொழில் ஸ்தானத்தை குருபகவான் பார்ப்பதால் தொழிலில் இடைஞ்சல் இருக்காது. பணவரவு ஓரளவுக்கு இருக்கும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்காது. வீட்டில் பாதுகாப்பு வசதியை மேம்படுத்துவது நல்லது. பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும். பூர்வசொத்தில் கிடைக்கும் வருமானத்திற்கு ஏற்ப செலவுகளும் உண்டாகும். புத்திரர்கள் உங்களுடன் ஒத்துழைப்பர். அவர்களது படிப்பு சுமாராக இருக்கும். உங்களுக்கு அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவச் செலவு அதிகரிக்க வாய்ப்புண்டு.
கணவன், மனைவி ஒற்றுமையுடன் நடந்து கொள்வர். நண்பர்களின் உதவி கிடைப்பதற்குரிய அறிகுறி இல்லை. நெருப்பு, மின்சாரம் சம்பந்தப்பட்ட பணிகளில் அதிக கவனம் வேண்டும். சில அத்தியாவசியத் தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். வெளிநாடு வேலைவாய்ப்பில் முன்னேற்றமும், எதிர்பார்த்த பணவரவும் கிடைக்கும்.
தொழில்: கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், விவசாய இடுபொருட்கள், இரும்பு, எண்ணெய், காகிதத் தொழில் செய்பவர்கள், கல்வி, நிதிநிறுவனம், லாட்ஜ், ஓட்டல் நடத்துபவர்கள் சுமாரான லாபம் பெறுவர். இயந்திரங்களை பராமரிப்பதிலும், பணியாட்கள் வகையிலும் கூடுதல் செலவு ஏற்படும்.
வேலை: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு பணியில் தேவையற்ற தடங்கல் ஏற்படும். நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகைகளில் ஒரு சில மட்டுமே கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். சக பணியாளர்களுடன் அனுசரித்து செல்வது எதிர்காலத்திற்கு நல்லது.
வியாபாரம்: ஸ்டேஷனரி, அழகுசாதனப் பொருட்கள், கட்டுமானப்பொருட்கள், நகை, ஜவுளி, பலசரக்கு, எண்ணெய், தென்னை, பனை பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மருந்து, ஜவுளி, விளையாட்டுசாதனங்கள், காகித வியாபாரிகள் கடும் போட்டியைச் சந்திப்பர். இருப்பினும் ஓரளவு லாபம் கிடைக்கும். பொருட்களை ரொக்கத்திற்கு விற்பது நல்லது. சரக்கு வாகன பராமரிப்பு செலவு கூடும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணி இலக்கை நிறைவேற்றுவதில் சிறு தடைகளை எதிர்கொள்வர். சலுகைகள் பெறுவதிலும் இடைஞ்சல் இருக்கும். இந்த காலகட்டத்தில் பொறுமை மிகத் தேவை. குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவுக்கு சிரமப்பட வேண்டிய சூழல் இருக்கும். குழந்தைகளின் ஒத்துழைப்பு காரணமாக மனநிறைவு இருக்கும். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் சுமாரான வியாபாரமும், அதற்கேற்ப லாபமும் பெறுவர். பாக்கிப் பணம் வசூலாகும்.
படிப்பு: ஓட்டல் மேனேஜ்மென்ட், மார்க்கெட்டிங், கேட்டரிங், அனிமேஷன், வங்கியில், தணிக்கையில், சினிமா தொழில்நுட்பம், மாடலிங், ஆசிரியர் பயிற்சி, ஜர்னலிசம், மரைன், ஏரோநாட்டிக்கல், மெக்கானிக்கல், சிவில் இன்ஜினியரிங், ரசாயனம், பவுதிகம், மருத்துவம், விவசாய மாணவர்கள், கூடுதல் கவனத்துடன் படிப்பதால் மட்டுமே தேற முடியும். படிப்புக்கான பணவரவு ஓரளவுக்கு கிடைக்கும். அனுபவம் இல்லாத சக்திக்கு மீறிய செயல்களில் ஈடுபடக்கூடாது. சக மாணவர்களுடன் சுமூக நட்பு திகழும்.
அரசியல்: அரசியல்வாதிகள் ஆதரவாளர்களிடம் பெற்ற நற்பெயரை இழக்க வேண்டி வரலாம். எதிரிகளின் செயல்களால் மனவருத்தம் கொள்வீர்கள். புத்திரர்களை அரசியல்பணிக்கு பயன்படுத்தி அதன் மூலமும் சிக்கல் வரலாம். கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளின் தயவைப் பெறுவதிலும் கடும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.
விவசாயம்: விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் கிடைக்கும். சாகுபடி செலவுக்கு கடன் வாங்க வேண்டி வரலாம். கால்நடை வளர்ப்பினால் ஓரளவு பயன் உண்டு. நில விவகாரங்களில் சட்டச்சிக்கல் தொடரும்.
வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சியம்மன்
பரிகாரப் பாடல்
பூத்தவளே, புவனம் பதினான்கையும்
பூத்த வண்ணம் காத்தவளே!
பின் கரந்தவளே! கறைக்கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு
இளையவளே! மாத்தவளே!
உன்னையன்றி
மற்றோர் தெய்வம் வந்திப்பதே!

No comments:

Post a Comment