Oct 12, 2010

விருச்சிக ராசி அன்பர்களே சனி பெயர்ச்சி

விருச்சிக ராசியில் பிறந்த நீங்கள் வேடிக்கையாகப் பிறரை கிண்டல் செய்வது உங்கள் வாடிக்கையாகும். யாருக்கும் பயப்பட மாட்டீர்கள். சந்தோஷமாக இருப்பீர்கள். ஆனால் வார்த்தைகளில் அனல் பறக்கும். எதிலும் ஆரம்பத்தில் இருக்கும் ஆர்வம் முடிவில் இருக்காது. கொஞ்சம் சோம்பல் கொண்டிருப்பீர்கள். எண்ணத்தால் உயர்ந்து பலவிதமான கற்பனைகளைச் செய்வீர்கள். ஆனால் செயலில் மந்தமாக இருப்பீர்கள். மற்றவர்களைப்போல பணப்பற்றாக்குறை ஏற்படாது. அதேசமயத்தில் பணத் தேக்கமும் இராது. தேவை அறிந்து பணம் உங்களிடம் வந்துசேரும். சகோதர- சகோதரிகளிடம் ஒற்றுமை இராது.

உங்களுக்கென தனி வழி வகுத்துக் கொள்வீர்கள். கஷ்டம், நஷ்டம் ஏற்பட்டாலும் கொள்கையையும் பிடிவாதத்தையும் விட்டுக் கொடுக்கமாட்டீர்கள். எதிர்காலத்தை அறியும் ஆற்றல் கொண்டிருப்பீர்கள். தத்துவங்களையும் வேதாந்தங்களையும் பேசுவீர்கள். சமயத்தில் குடும்பத்தையும்கூட வெறுப்பீர்கள். பெற்றோ ரின் ஆதரவு உண்டு. அவர்களுடைய வீடு, நிலத்தில் வாழ்வீர்கள். உங்கள் சோம்பலால் சிலவற்றைப் புறக் கணிப்பீர்கள். சொத்து, சுகம் உள்ள குடும்பங்களில் பிறந்தாலும், உங்கள் தகப்பனார் சம்பாதித்த அளவுக் குச் சம்பாதிப்பது கஷ்டம். உற்றார்- உறவினர் தொல்லை தருவார்களேயன்றி ஆதரிக்க மாட்டார்கள்.

சொந்தவீடு இருப்பினும் மிகப் பழமையானதாக இருக்கும். குறை உள்ள வீட்டில் வசிப்பீர்கள். பெரிய வீட்டில் சிதிலமடைந்த அறைகள் மற்றும் சந்து பொந் தாக நுழைதலுமாக இருக்கும். நல்ல புதுமையான- அழகான வீடாக இருந்து அதில் வாழ்ந்தால் நிம்மதி இராது. வயது கடந்த பின்பே சுயமாக மண், பூமி, வீடுகள் ஏற்பட்டு வசதியுடன் வாழ்வீர்கள். பூசப்படாத கட்டிடமாக இருக்கும்.

புத்திக் கூர்மையுடன் செயல்படும் உங்களால் மேன்மை அடைய இயலாது. பட்டப் படிப்பு, மேல்படிப்பு படித்தாலும் பலன் இராது. தொழில்நுட்பக் கல்வி பயில வாய்ப்பு உண்டு. சாதாரணமாக எந்த நோயும் உடலைத் தாக்காது. ஆனால் காயம் ஏற்படுதல், உஷ்ணக் கட்டி, தீப்புண் தழும்பு போன்றவை ஏற்படும். கடன் வாங்குவதில் தயக்கம் கொள்வீர்கள். எவ்வளவு பிரச்சினை வந்தாலும் கலக்கமோ கவலையோ கொள்ளாமல் சிந்தித்துப் பார்த்து சுலபமாகப் பிரச்சினைகளைச் சமாளிப்பீர்கள். புதுமையாக எதையாவது கண்டுபிடித்து புகழ்பெற முயற்சி செய்வீர்கள். அபாரமான அறிவுக் கூர்மையும், வளமிக்க கற்பனையும், புதுமையான சிந்தனைகளையும் கொண்டிருப்பீர்கள்.

சகல கலைகளிலும் வல்லவராக இருப்பீர்கள். எதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்வம் கொண்டிருப்பீர்கள். ஆனால் நேரம் இல்லை என்பீர்கள்.

மந்திர- தந்திர சாஸ்திரங்களை அறிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் ஜாதகத்தையும் தெய்வத்தையும் சில நேரங்களில் வெறுத்தும் பேசுவீர்கள். உங்களுக்கு முன்கோபம் அதிகமாக இருக்கும். மற்றவரை பேச்சால் துன்புறுத்தி விடுவீர்கள்!

உங்களுடைய ராசிக்கு பத்தாம் இடத்தில் இதுவரை இருந்த சனிபகவான் செய்தொழிலில் லாபமும் புகழும் கிடைக்கச் செய்தார். அடிக்கடி வெளியூர் பயணங்கள் செய்ய வேண்டியிருந்தது. அதிக அலைச்சலும் அதற்கேற்ற பண வருவாயும் கிடைத்தது. புதிய நண்பர்களின் சேர்க்கையும், அவர்களால் லாபமும் உதவியும் இருந்தது. உபரி வருமானமும் இருந்து வந்தது. ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டானது. கணவன்- மனைவி உறவு சீராகவே இருந்து வந்தது.

இனி உங்களுடைய ராசிக்கு பதினொன்றாம் இடத்திற்குச் சனி பகவான் பெயர்ச்சியாகிறார். தொழிலில் மேலும் நல்ல லாபமும் மதிப்பும் உண்டாகும். உங்களுடைய மதி நுட்பத்தால் பிறர் செய்ய முடியாத காரியத்தைக்கூட நீங்கள் வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர் கள். பூர்வீக சொத்துக்களினால் லாபம் உண்டாகும். வம்பு, வழக்கு ஆகியவற்றின் முடிவுகள் உங்களுக்குச் சாதகமாகவே இருக்கும். உங்களுக்கு இருந்துவந்த பணப் பிரச்சினைகள் யாவும் தீரும் நேரமிது. எதிரிகளால் இருந்துவந்த தொல்லைகள் தீரும். எதிரியே நண்பனாகும் சூழ்நிலை உண்டாகும். எங்கு சென்றாலும் சிறப்பான வரவேற்பும், அந்தஸ்தும் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு வீடு, வண்டி வாகன யோகம் உண்டாகும். பிதுரார்ஜித சொத்துக்கள் கைக்குக் கிடைக்கும். வீட்டில் நவீன பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு சுபகாரியம் நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

11-ல் சனி வருவதால் மூத்த சகோதரர்களுக்கு உடல்நிலை சிறிது பாதிக்கும். அலைச்சல் அதிகரிக்கும். பூமி, நிலம், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். நீங்கள் பலருக்கு உதவி செய்வீர்கள். இதுநாள்வரை உங்களிடம் பிரச்சினை செய்து வந்தவர்கள் தானாகவே விலகிவிடுவார்கள்.

இதுவரை இருந்த பிரச்சினைகளும் கஷ்டங்களும் ஒவ்வொன்றாக நீங்கிவிடும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக் குப் பதவி உயர்வும் சலுகைகளும் கிடைக்கும். அரசு வகையில் பல காரிய சாதனைகளும் மேலிடத்தவர்களின் தொடர்பும் உண்டாகும்.

கன்னிச்சனி உங்கள் ராசியைப் பார்ப்பதால் செல்வாக்கும் புகழும் கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். குடியிருக்கும் இடத்தில் சில பிரச்சினைகள் உருவாகலாம். உங்களது பிரச்சினைகளைத் தீர்க்க முடியா மல் சிரமப்படுவீர்கள். நடப்பவையெல்லாம் ஆண்டவன் செயல் என விட்டுவிடுங்கள். கமிஷன், காண்ட்ராக்ட் ஆகியவற்றில் நல்ல லாபம் கிடைக் கும். வெளியூர் பயணங்களால் நன்மைகளும் பண வரவும் உண்டாகும். தொழில் நிறுவனத்திற்கு நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள்.

5-ஆம் இடத்தைச் சனி பார்ப்பதால் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளுக்குப் படிப்பில் ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகும். படிப்பினால் பாராட்டும் பரிசும் பெறுவார்கள். பிள்ளைகளைக் கண்டு பெற்றோர் பெருமைப்படுவார்கள். பொருளா தார வசதியும் கூடும். மகளிரால் நன்மையும் உதவியும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் நல்ல லாபத்துக்கு விற்க வாய்ப்புண்டு. தொழிலில் போட்டிகள், எதிர்ப்புகள் இருந்தாலும் அதையெல்லாம் முறியடித்து வெற்றி காண்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் திருப்தியான போக்கு உண்டாகும். சிலருக்கு வீடு கட்டுவதற்கான திட்டங்களுக்குக் கடன்பெற வழிவகை உண்டாகும். பழைய கடன் பிரச்சினைகள் யாவும் தீரும். ஆலயங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். தாயாருக்கு அவ்வப்போது உடல்நிலை சிறிது பாதிக்கும். தாயார் எங்கு பேசினாலும் கவனமாகப் பேசவேண்டும். இல்லையெனில் பேச்சால் கஷ்டங்களும் சிரமங்களும் உண்டாகும். தந்தைக்குத் தொழிலில் பதவியும் அந்தஸ்தும் உயரும்.

சனிபகவான் 4-ஆம் இடத்துக்கு 8-ல் வருவதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கலாம். அசௌகரியங்களும் சோர்வும் மந்தத் தன்மையும் உண்டாகும். வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். அதனால் அலைச்ச லும் அதிகரிக்கும். ஒரு காரியத்தை ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யும் சூழ்நிலை உண்டாகும். மனதில் ஒருவித பயமும் கலக்கமும் உண்டாகும். போட்டிகள், பொறாமைகள் பலவும் இருந்தாலும் அதையும் மீறி வெற்றி காண்பீர்கள்.

சனிபகவான் ஏழாம் பார்வையாக உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத் தைப் பார்ப்பதால் பூர்வீகச் சொத்துக்களால் லாபமும் நன்மையும் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர் கள். கௌரவமும் அந்தஸ்தும் உயரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பிள்ளைகள் விரும்பியதைச் செய்து கொடுப்பீர்கள். பணப் புழக்கம் தாராளமாக இருக்கும். பூமி, நிலம், அசையா சொத்துக்கள் வாங் கும் யோகம் உண்டாகும். சனிபகவான் பத்தாம் பார்வையாக ஆயுள் ஸ்தானத்தைப் பார்ப்பதால் ஆயுள் விருத்தி உண்டு. மரணபயம் இல்லை. உடல்நலனில் சிறிது பாதிப்பு உண்டாக வாய்ப்புண்டு. ஆயுஷ் ஹோமமும் தன்வந்திரி ஹோமமும் செய்து கொள்ளலாம். தந்தைக்கு உடல் நலக் குறைவும் அதனால் மருத்துவச் செலவுகளும் செய்யவேண்டிய சூழ்நிலை உண்டாகும். என்றாலும் செலவுகளைச் சமாளிக்கத் திடீர் தனவரவும் உண்டாக வாய்ப்புண்டு. ஆயுள் குற்றம் வராது. முற்பகுதியில் கஷ்டங்கள் இருந்தாலும் பிற்பகுதி யோகத்தைத் தரும்.

உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2009- செம்படம்பர் முதல் பத்து மாதகாலம் விருச்சிக ராசிக்கு 10-க்குடைய சூரியன் நட்சத்திரத்தில் (உத்திரம்) சனி சஞ்சாரம் செய்வார். அரசு உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கண்டிப்பும் வெறுப் பும் உண்டாகலாம். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு நிர்வாகத்தினரின் பாராட்டும் ஊதிய உயர்வும் உண்டாகும். தொழிலதிபர்களுக்கு சுய தொழில் முன்னேற்றமும் யோகமும் தாராளமான வரவு- செலவும் பணப் புழக்கமும் உண்டாகும். தந்தைவழி நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2010- ஜூலை முதல் 14 மாதகாலம் விருச்சிக ராசிக்கு 9-க்குடைய சந்திரன் சாரத்தில் சனி சஞ்சாரம் செய்வார். இக்காலம் குலதெய்வ வழிபாடும் தெய்வ ஸ்தல யாத்திரையும் பூஜை கைங்கரியங்களும் உண்டாகும். தாய்வழி நன்மைகளை எதிர்பார்க்கலாம். சுபமங்கள காரியங்கள் கைகூடும். பெண்களால் அனுகூலம், ஆதாயம் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை அமையும்.

சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சார பலன்

2011- செம்படம்பர் முதல் ஆறு மாதகாலம் ராசிநாதன் செவ்வாயின் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் இக்காலம் உங்கள் திறமைக்கேற்ற பெருமை சேரும். புதிய தொழில் யோகம் அமையும். பகை விலகும். வேலைவாய்ப்புகளும் நல்ல வருமானமும் சேமிப்பும் உண்டாகும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சமூகப்பணிகள் தொடர்பான ஈடுபாடுகள் அதிகரிக்கும். கடன்களும் உண்டாகும். அவை சுபக்கடனாகி பொன், பொருள், பூமி, வாகனம், வீடு அமைப்புகள் போன்றவை உண்டாகும். சகோதர வகையில் நிலவிய சச்சரவுகள் விலகும்.

விசாக நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப்பெயர்ச்சி குடும்ப சுகம் பெருகும். சுபமங்கள செலவுகள், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் வகுத்த திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் வகையில் நல்லவை நடடக்கும். தாராளமான வரவு செலவும் பழைய கடன்கள் அடைபடுதலும் சேமிப்பு உருவாகுதலும் உண்டாகும்.

அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப்பெயர்ச்சி எடுத்த காரியங்களில் வெற்றி, லாபம், பெருமையைத் தரும். வழக்குகள் வெற்றியடையும். பூமி, ரியல் எஸ்டேட் துறையில் லாபம் ஏற்படும். இதுவரை அனுபவித்த கஷ்டங்கள் விலகி சுகம் உண்டாகும்.
கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப்பெயர்ச்சி ஆரம்பத்தில் சோதனை, வேதனை, ஏமாற்றம், இழப்பு, நஷ்டங்களைத் தந்து, பிறகு சாதனை, வெற்றி, லாபம், அனுகூலம் ஆகிய நற்பலன்களைத் தரும். வரவும் செலவும் சமஅளவில் காணப்படும். கடன் சுமை குறையும்.

பரிகாரம்

அறந்தாங்கி அருகில் (புதுக்கோட்டை ரோட்டில்) அழியாநிலை என்ற ஊரில் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. அங்கு சென்று சிறப்புப் பூஜை செய்யலாம்.

No comments:

Post a Comment