உதட்டால் உளறாமல் இதயத்தால் பேசுபவர்களே! குலம், கோத்திரம் பார்க்காமல் பாசமுடன் பழகுபவர்களே! எ டுத்த வேலையை முடிக்கும் வரை அதே சிந்தனையுடன் இருப்பவர்களே! சிறந்த கலா ரசிகர்களே! இதுவரை உங்களின் ராசிக்கு 2ம் வீட்டிலும், 3ம் வீட்டிலும் மாறி மாறி அமர்ந்து ஓரளவு வசதி, வாய்ப்புகளையும், கௌரவத்தையும், அதே நேரத்தில் அலைக்கழிப்பையும், தர்மசங்கடத்தையும் கொடுத்த குரு பகவான் இப்போது 21.11.2010 முதல் ராசிக்கு மூன்றாம் வீட்டில் மறைகிறார். இந்த நிலை 7.5.2011 வரை நீடிப்பதால் அவசரப்படாமல் நீங்கள் கொஞ்சம் நிதானமாகத்தான் செயல்பட வேண்டும்.
குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் வந்து நீங்கும். மனைவியிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். உங்களுக்கு வேண்டியவர்களே உங்களுக்குள் கலகத்தை ஏற்படுத்தி பிரிக்க முயல்வார்கள். ஆனால் ராசிக்கு 7ம் வீட்டை குரு பார்ப்பதால் கணவன் -மனைவிக்குள் அன்பும், அன்யோன்யமும் குறையாது. அனாவசியமாக யாரையும் வீட்டிற்குள் அழைத்து வரவேண்டாம். இளைய சகோதரருடன் அவ்வப்போது உரசல் போக்கு வந்து நீங்கும். நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் அறிமுகம் கிடைக்கும்.
குரு பகவான் உங்களின் ஒன்பதாவது வீட்டைப் பார்ப்பதால் வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். நீங்களும் தரவேண்டிய கடனையெல்லாம் தந்து முடிப்பீர்கள். அப்பாவுடன் இருந்து வந்த பிரச்னைகள் மறையும். நெஞ்சுவலி, இடுப்பு வலியெல்லாம் நீங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மகனின் திருமணத்தை ஊரே மெச்சும்படி தடபுடலாக நடத்தி முடிப்பீர்கள். மகளை உயர்கல்விக்காக வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள். தந்தைவழி உறவினர்களிடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.
குரு பகவான் தனது 9ம் பார்வையால் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் புது முயற்சிகள் வெற்றியடையும். தி டீர் பணவரவு உண்டு. விலையுயர்ந்த ஆபரணங்கள், ரத்தினங்கள் வாங்குவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். மூத்த சகோதரர் உதவுவார். பூர்வீகச் சொத்தை விற்று வேறொரு சொத்து வாங்குவீர்கள். மனக் கு ழப்பங்கள் நீங்கும்.
குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள்
21.11.2010 முதல் 2.1.2011 வரை:
இந்த காலகட்டங்களில் உங்களின் சேவக, விரயாதிபதியான குரு பகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திர த்தின் 4ம் பாதத்தில் செல்வதால் வீடு கட்டுவது, வாங்குவது நல்ல விதத்தில் முடியும். பழைய கடன் பிரச்னைக்கு முடிவு கட்டுவீர்கள். பேச்சில் இருந்த தடுமாற்றம் நீங்கும். வீடு கட்ட லோன் வசதி கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயமுண்டு. சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாக முடியும். மூத்த சகோதர வகையில் ஆதரவு அதிகரிக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களின் உதவியுண்டு. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள்.
3.1.2011 முதல் 13.3.2011 வரை:
மேற்கண்ட நாட்களில் உங்கள் ராசிநாதனும், தனாதிபதியுமான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் எதிர்பார்த்த வகையில் உதவியுண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். இருந்தாலும் வீண் செலவுகளும் துரத்தும். நேரம் கடந்து சாப்பிடாதீர்கள். வயிற்று வலி, முதுகு வலி வந்து நீங்கும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் பிறக்கும். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவுடன் சில வேலைகளை முடிப்பீர்கள்.
14.3.2011 முதல் 7.5.2011 வரை:
இந்த காலகட்டங்களில் குரு பகவான் உங்களின் நோய் மற்றும் பாக்யாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால்
தந்தையாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். பரம்பரைச் சொத்துகள் வந்து சேரும். அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். கல்யாணம், காதுகுத்து என வீடு களை க ட்டும். கௌரவப் பதவிகள் கிடைக்கும். குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.
வியாபாரிகளே, போட்டியாளர்களுக்கு மத்தியில் ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே! இனி உங்களின் அணுகு முறையை மாற்றி அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுப்பீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். லாபத்தை பெ ருக்க நவீன விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். புதிய சலுகைகளையும் அறிமுகப்படுத்துவீர்கள்.
பணியாட்களை மாற்றியமைப்பீர்கள். அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்கள் இனி ஒழுங்காக வேலைக்கு வருவார்கள். தொழில் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள். மார்ச், ஏப்ரல் மாதங்களில் வசூல் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அவ்வப்போது குடைச்சல் கொடுக்கத்தான் செய்வார்கள். கெமிக்கல், ரியல் எஸ்டேட், ஹோட்டல் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்யோகஸ்தர்களே, உங்களின் கோபதாபங்களை உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள். சில சமயங்களில் மேலதிகாரியுடன் வீண் விவாதங்கள் வரும். ஆனாலும், உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். வெகுநாட்களாக எதிர்பார்த்தும் கிடைக்காமல் போன பதவி உயர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் கிடைக்கும். சக ஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள். வட நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புது வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னிப் பெண்களே! சினேகிதிகளுக்கெல்லாம் கல்யாணம் ஆகிவிட்டதே, நமக்கு வாய்க்கவில்லையே என்று வருந் தினீர்களே, இனி கவலை வேண்டாம். விரைவிலேயே கெட்டிமேளச் சத்தம் கேட்கும். காதல் விவகாரங்களில் அவசரம் வேண்டாம். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. தடைபட்ட உயர்கல்வியைத் தொடர்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். தலைச்சுற்றல், கண் எரிச்சல் நீங்கும். எதிர்பார்த்த நிறுவனத்திலேயே வேலை கிடைக்கும்.
மாணவர்களே! வகுப்பறையில் வீண் அரட்டை வேண்டாமே. ஆசிரியர் நடத்தும் பாடங்களை அன்றாடம் படித்து விடுவது நல்லது. கணிதம், அறிவியல் பாடங்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கிப் படியுங்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். விளையாட்டை குறையுங்கள். கலைஞர்களே! திறமைகளை வெளிப்படுத்த பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமல் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்ப டுத்திக் கொள்ளுங்கள். மூத்த கலைஞர்கள் நட்புறவாடுவார்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.
அரசியல்வாதிகளே, மேலிடத்திலிருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கும். தலைமையின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். சகாக்களும் மதிப்பார்கள். விவசாயிகளே, வங்கிக் கடனுதவி கிடைக்கும். தரிசு நிலங்களையும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள்.
பூச்சித் தொல்லை விலகும். காய்கறி, பழவகைகளால் லாபமடைவீர்கள். அடகிலிருந்த வீட்டுப் பத்திரத் தை மீட்பீர்கள். புது இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். தண்ணீர் வசதி பெருகும். இந்த குரு மாற்றம் கவலைகளை கரைப்பதாகவும், காசு பணம் தருவதாகவும், எங்கும் முதல் வரிசையில் உட்கார வைப்பதாகவும் அமையும்.
பரிகாரம்:
திருநெல்வேலியில் அருளாட்சி செய்யும் காந்திமதி அம்மையையும், நெல்லைஅப்பரையும் புனர்பூசம் நட்சத் திர நாளில் சென்று வணங்குங்கள். மனவளம் குன்றியோருக்கு உதவுங்கள்.
No comments:
Post a Comment