எப்பொழுதும் உழைப்பையும் வெற்றியையும் மட்டுமே நோக்கமாக கொண்டு வாழும் உங்களுக்கு புத்தாண்டு நற்பலன்களை அளிக்க வல்லதாகும் . இதுவரை வாழ்க்கையில் முன்னேற இருந்த தடை அனைத்தும் நீங்கி எதிர்பார்த்த வெற்றி கிடைக்க வாய்ப்பு ஏற்படும் . பெயர் , புகழ் , பணம் இவைகள் எதிர்பார்த்த அளவில் கிடைக்க சந்தர்ப்பம் அமையும் .
பேச்சில் சாமர்த்தியம் கூடும் . பேச்சின் மூலம் ஆதாயம் அடைய சந்தர்ப்பம் அமையும் . ஆரம்பகல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் . ஆடை , ஆபரண , சேர்க்கை கூடும் . ஒரு சிலருக்கு கை ரொக்கயிருப்பு அதிகரிக்கும் . உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். ஒரு சிலருக்கு உடன்பிறப்புகளால் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் உடன் பிறப்புகளுக்கு இதுகாறும் தள்ளிப்போன சுபகாரியங்கள் உடனடியாக நடந்தேறும் . நெருங்கிய உறவினர்களை இழக்க நேரிடும் . புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும் . எப்பொழுதும் ஏதாவது ஒன்றிற்காக முயற்சி செய்து கொண்டிருக்க வாய்ப்பு அமையும் . அடிக்கடி பிரயாணம் செய்ய சந்தர்ப்பம் அமையும் போக்குவரத்தில் மிக கவனம் தேவை . மிகவும் அதிக அளவில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் .
இடம் , பொருள் , வீடு வாங்குவதில் தடை ஏற்பட்டு பின் வாங்க சந்தர்ப்பம் அமையும் . எதிர்பார்த்த மதிப்பெண்ணும் கல்லூரியும் அமையப் பெரும். மேலும் உயர்கல்வி பயில சந்தர்ப்பம் அமையும் . அடிக்கடி உடல் ஆரோக்கியம் கெடும் . அதிக கவனம் தேவை . தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை . தாயாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் .
குழந்தைப் பேரு இல்லாதவர்களுக்கு மக்கட் செல்வம் அமைய சந்தர்ப்பம் அமையும் . நீண்ட நாட்களாக வீட்டில் தள்ளிப்போன சுபகாரியங்கள் அனைத்தும் நல்ல விதமாக நடந்தேறும் . காதல் விஷயங்கள் ஆரம்பத்தில் மகிழ்ச்சியும் பின் பிரச்சனைகளும் இறுதியில் சுமூகமாக முடியும் . பங்குச்சந்தையில் ஆரம்பத்தில் நல்ல லாபம் ஏற்படும் . அத்துடன் பெரிய அளவில் முதலீடு செய்யாமல் இருப்பதை கொண்டு முதலீடு செய்யவும் . கலைத்துறையில் இருப்பவர்கள் நல்ல பெயர் , புகழ் , வருமானம் ஏற்படினும் வருட மத்தியில் பிரச்சனைகளும் போராட்டங்களும் சந்திக்க நேரிடும் . அரசியல் வாழ்க்கையும் ஆரம்பத்தில் நற்பலனும் மத்தியில் கடுமையான போட்டியும் போராட்டங்களையும் சந்திக்க நேரிடும் . ஒரு சிலர் விருந்து கேளிக்கைகளில் அதிக அளவில் ஈடுபட்டு பெயர் புகழை கெடுத்து கொள்ள வாய்ப்பு அமையும் . உல்லாசமாக வெளியூர் செல்ல சந்தர்ப்பம் கிட்டும் .
வருட ஆரம்பத்தில் வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும் . புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களும் வேறு கம்பெனிக்கு மாற ஆசைப் படுபவர்களின் விருப்பமும் பூர்த்தியாகும் . உத்தியோகத்தில் ஊதிய உயர்வும் , உத்தியோக உயர்வும் கிட்டும் . ஒரு சிலருக்கு பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறு நல்ல கம்பெனிக்கு செல்ல யோகம் அமையும் . ஒரு சிலருக்கு வேலையின் நிமித்தமாக வெளியூர் , வெளிமாநிலம் , வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும் . கொடுத்த பணம் திரும்ப பகுதி பகுதியாக வந்து சேரும் . புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைக்க நேரிடும் . கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும் . போட்டித் தேர்வு , எழுத்துத் தேர்வு , நேர்முகத் தேர்வில் வருட ஆரம்பத்திலேயே வெற்றி கிட்டும் . இதயம் , அடிவயிறு , முழங்கால் ஆகிய உடல் பகுதிகளில் உடல் உபாதைகள் ஏற்பட்டு விலகும் .
இதுவரை தள்ளிப்போன திருமணம் இனிதே நடந்தேறும் . அழகான கணவன் அல்லது மனைவி அமைய சந்தர்ப்பம் அமையும் . வழக்குகள் இழுத்துக் கொண்டே போகும் . உடன் பணிபுரிபவர்கள் மேலதிகாரிகளிடம் மிகவும் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் . தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட கூடாது . கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு பார்ட்னரால் பிரச்சனை ஏற்படும் . அதனால் தொழிலில் பின்னடைவு நிகழும் . ஒரு சிலருக்கு சுயதொழிலில் பெரிய போட்டி ஏற்பட்டு பிரச்சனை ஏற்படும் . ஏற்றுமதி இறக்குமதி தொழில் புரிபவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல் பட வேண்டும் .
உயர்கல்வி பயில சந்தர்ப்பம் அமையும் . ஒரு சிலருக்கு உயர்கல்வி பயில வெளிநாடு செல்லும் யோகம் அமையும் . நீண்ட தூர ஸ்தல யாத்திரை செய்ய சந்தர்ப்பம் அமையும் . ஒரு சிலருக்கு தொழிலை மாற்றி செய்ய வாய்ப்பு கிட்டும் . ஒரு சிலருக்கு அரசு வேலையை விட்டு விட சூழ்நிலை ஏற்படும் . பெரிய அளவில் முதலீடு செய்யாமல் ஓரளவு முதலீடு செய்து லாபம் பார்க்கவும் .
ஆடை , ஆபரண , ஜவுளி மற்றும் ரியல் எஸ்டேட் , போக்குவரத்து , தகவல் தொடர்பு , சாப்ட்வேர் துறையில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவர் . சிறுதொழில் புரிபவர்கள் ரோட்டோரம் வியாபாரம் செய்பவர்கள் , கமிஷன் , ஏஜென்சி , ப்ரோக்கர்ஸ் , கன்சல்டன்சி , ஓட்டல் துறையில் இருப்பவர்கள் நல்ல லாபம் அடைவர் .
மருத்துவம் , பொறியியல் , ஆசிரியர்கள் , சட்டம் மற்றும் நீதித்துறையில் இருப்பவர்கள் பள்ளி கல்லூரி பல்கலைகழகங்களில் பணிபுரிபவர்கள் ஏற்றம் பெற்றாலும் மிகவும் கவனமுடன் செயல்படுதல் வேண்டும் . தோல் ரப்பர் , பிளாஸ்டிக் , இரும்பு , பட்டாசு துறைகள் எதிர்பார்த்த நல்ல லாபம் ஏற்படும் . விவசாயத்தில் இருப்பவர்கள் நல்ல லாபம் அடைவர் . காய்கறி , பழம் , பூ , வியாபாரிகள் நல்ல லாபம் அடைவர் .
" திருக்கடையூர் " சென்று அன்னை அபிராமியை வணங்கி வர நற்பலன் ஏற்படும் . மேலும் மதுரை ஸ்ரீ சொக்கநாதரை வணங்கி வர நற்பலன் ஏற்படும் .
No comments:
Post a Comment