எப்பொழுதும் உழைப்பும் மகிழ்ச்சியும் வெற்றியும் உடைய உங்களுக்கு புத்தாண்டு ஓரளவு நற்பலன்களை அளிக்க வல்லதாகும் . இதுவரை வாழ்க்கையில் போராடத்துடனே வாழ்ந்து வந்த உங்களுக்கு நற்பலன்கள் தானாகவே வந்து சேரும் . எடுத்த காரியங்கள் ஓரளவு சிரமமில்லாமல் வெற்றிகரமாக முடியும் . புதிய விஷயங்களை கற்பதிலும் ஈடுபடுவதிலும் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும் .
பேச்சில் சாமர்த்தியம் கூடும் . அதே சமயம் தேவையில்லாமல் மற்றவர்களிடம் பேசுதல் கூடாது . தேவை இல்லாத பிரச்சனைகளையும் பகையையும் உண்டு பண்ணும் . ஆடை , ஆபரணங்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும் . ஆரம்ப கல்வி பயில்பவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிட்டும் .
சகோதர சகோதரிகளால் ஓரளவு நற்பலன்கள் கிட்டும் . அவர்களால் நன்மையையும் ஒரு சிலருக்கு உடன் பிறப்புகளின் சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு அமையும் . புதிய புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பதில் திறமையும் அமையும் . பகுதிநேரமாகவோ அல்லது தபால் மூலமாகவோ படிக்க வாய்ப்பு அமையும் . அடிக்கடி பிரயாணம் செய்ய வாய்ப்பு அமையும் . நேர்முகத்தேர்வில் அடிக்கடி கலந்து கொள்ளும் வாய்ப்பும் அதில் வெற்றி பெரும் அமைப்பும் ஒரு சிலருக்கு கிட்டும். எழுதுவதிலும் கலைத்துறையிலும் ஆர்வமும் திறமையும் கூடும் .
உயர்கல்வி பயில வாய்ப்பு நன்கு அமையும் . எதிர்பார்த்த மதிப்பெண் மற்றும் கல்லூரி , பல்கலை கழகங்களில் சேர வாய்ப்பு அமையும் . வீடு , மனை , இடம் , வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு கிட்டும் . கடன் வாங்கி வீடு வண்டி வாகனம் வாங்க சந்தர்ப்பம் அமையும் . அதே சமயம் போக்குவரத்து வண்டி வாகனங்களில் கவனமுடன் சென்று வரவும் . சொத்து வாங்குவதில் பத்திரம் சரியாக இருக்கிறதா என கவனித்து சொத்து வாங்கவும் . மேலும் உடல் ஆரோக்கியத்தில் மிக அதிக கவனம் தேவை . பழைய வண்டி வாகனங்கள் வாங்க ஒரு சிலருக்கு சந்தர்ப்பம் அமையும் .
குழந்தைகளால் ஒரு சிலருக்கு ஆதாயமும் அவர்களால் மன உளைச்சலும் ஏற்படும் . குழந்தை பேரு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க சந்தர்ப்பம் கிட்டும் . காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் அமையும் . அதே சமயம் ஒரு சிலருக்கு காதல் கசப்பான அனுபவமாக இருக்கும் . பங்குசந்தையில் முதலீடு ஏற்ற இறக்கமாகவே இருக்கும் . எதிர்பார்த்த லாபம் குறைந்தே காணப்படும் . கலைத்துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பணம் புகழ் செல்வம் அமையும் . அரசியலில் இருப்பவர்கள் மிக கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் . இல்லையேல் எதிர்பார்த்த வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டி வரும் . சமூக சேவைகள் புரிபவர்கள் புகழ் பெறுவர் . புதிதாக மந்திர உபதேசமும் ஒரு சிலர் பெறுவர் .
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தயோக உயர்வும் அதே சமயம் ஊதிய உயர்வும் கிட்டும் . அதே சமயம் தனியார் துறையில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்த்த நல்ல ஊதியம் அமையும். இதுவரை வேலை தேடி அலைந்தவர்களுக்கு கடுமையான போராட்டத்திற்கு பின் வேலை கிடைக்க வாய்ப்பு அமையும் . ஒரு சிலர் எதிர்பார்த்த நல்ல கம்பெனிக்கு வேலையை மாற்ற வேண்டிய சூழ்நிலை அமையும் . ஒரு சிலருக்கு வேலையின் நிமித்தமாக வெளிநாடு வெளிமாநிலங்கள் செல்ல சந்தர்ப்பம் அமையும் . கடன் வாங்க சந்தர்ப்பம் அமையும் . கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும் . அதிக அளவு வட்டியும் கட்ட நேரிடும் . வழக்குகளில் வெற்றி கிட்டினாலும் இழுத்துக் கொண்டே போகும் . உடலில் அடிவயிறு , முழங்கால் , பாதம் , கல்லீரல் , கணையம் இவற்றில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும் நல்ல மருத்துவரிடம் காண்பித்தல் வேண்டும் .
இதுவரை நடக்காமல் தள்ளிப் போன திருமணம் நடக்க வாய்ப்பு அமையும் . சுயதொழில் தொடங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் . ஏற்றுமதி இறக்குமதி தொழில் தொடங்க வாய்ப்பு அமையும் . உடன் பணிபுரிபவர்களால் எதிர்பார்த்த நன்மையும் அதே சமயம் அவர்களால் எதிர்பாராத பிரச்சனைகளும் ஏற்படும் . ஒரு சிலருக்கு அசிங்கம் அவமானம் ஏற்பட சந்தர்ப்பம் அமையும் . இதுவரை தள்ளிப்போன விசா கிடைக்க பெற்று வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும் . அடிக்கடி கோவில் மற்றும் தெய்வ தரிசனம் செய்ய வாய்ப்பு அமையும் .
மருத்துவம் , பொறியியல் , நீதி , சட்டத்துறையில் பணி புரிபவர்கள் , போக்குவரத்து , செய்தி ,தகவல் தொடர்பு மற்றும் ஆசிரியர் துறையில் பணிபுரிபவர்கள் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் துறையில் இருப்பவர்கள் உற்பத்தி துறையில் இருப்பவர்கள் , அதை விற்பவர்கள் ஏற்றம் பெறுவர் .
சிறுதொழில் , சுயதொழில் புரிபவர்கள் ஆரம்பத்தில் நஷ்டம் ஏற்பட்டாலும் இறுதியில் லாபம் ஈட்டுவர் . ஜவுளி , ஆடை , ஆபரண தொழில் , ரியல் எஸ்டேட் துறை , எலெக்ட்ரிக்கல் , எலெக்ட்ரானிக்ஸ் துறையில் இருப்பவர்கள் ஓரளவு நல்ல லாபம் அடைவர் . ரோட்டோரம் வியாபாரம் செய்பவர்கள் , அரசியல்வாதிகள் சுமாரான பலனை அனுபவிப்பர் . கலைத்துறை , விஞ்ஞானம் , ஆராய்ச்சி இவற்றில் இருப்பவர்கள் நன்மை அடைவர் . மதகுருமார்கள் , மதபோதகர்கள் , ஜோதிடர்கள் , ஆச்சாரியர்கள் , அந்தணர்கள் பெயர் , புகழ் பெறுவர் .
எம்பெருமான் திருச்செந்தூர் முருகனையும் ஸ்ரீ மகாலெஷ்மியையும் வணங்கி வர எதிர்பார்த்த நற்பலன்கள் கூடும் . எண்ணிய எல்லாம் நல்லனவாக நடந்தேறும்
No comments:
Post a Comment