Mar 23, 2010

குருபெயர்ச்சி பலன்கள் -மீனம்
குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு டிசம்பர் 15, இரவு 11.32 மணிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2010 டிசம்பர் 3 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.


பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி
+ உடல்நிலையில் முன்னேற்றம்
- பேச்சால் சிரமம்
வாய்ப்புகளை தவறவிடாத மீன ராசி அன்பர்களே!
குருபகவான் பெயர்ச்சியாகி, உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடமான கும்பத்தில் அமர்வு பெறுகிறார். தனது 5,7,9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 4,6,8ம் இடங்களைப் பார்க்கிறார். இந்த குருபெயர்ச்சி உங்கள் எண்ணத்தில் சில மாற்றங்களையும், கூடுதல் பணத்தேவையையும் உருவாக்கும். பேச்சில் தடுமாற்றமும், பிறர் ஏற்றுக் கொள்ளாத வகையிலான கருத்துக்களும் வெளிப்படும் வாய்ப்பு உண்டு. எனவே பேச்சைக் குறையுங்கள். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பயணங்களால் அதிக செலவு உண்டாகும். புத்திரர்கள் பெற்றோரின் நிலையறிந்து பொறுப்புடன் நடந்து கொள்வர். பூர்வ சொத்தில் வருமானம் குறையும். எதிரிகளின் தொல்லை குறைந்துவிடும். அலட்சியமான செயல்பாடுகளால் சிரமத்தை அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது. கவனம். உடல்நலம் படிப்படியாக முன்னேறும். சில தேவைகளுக்காக கடன்பட நேரிடும்.
கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்களிடம் கொடுக்கல், வாங்கலில் நிதானம் பின்பற்றவும். தந்தை வழி உறவினர்கள் ஆதரவு மனப்பான்மையுடன் நடந்து கொள்வர். வெளிநாடு வேலைவாய்ப்பில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
தொழில்: தொழில் சார்ந்த வகையில் மந்தமான சூழ்நிலை இருக்கும். சிலர் தொழிலை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், இரும்பு, டெக்ஸ்டைல்ஸ், தோல், பிளாஸ்டிக், தண்ணீர், விவசாயகருவிகள், கட்டுமானப் பொருள், வாகனம் சார்ந்த தொழில் செய்பவர்கள் உற்பத்தி இலக்கை எட்ட பல தடைகளைக் கடந்து கடுமையாக பாடுபட வேண்டியிருக்கும். இதர தொழிலில் உள்ளவர்களுக்கு பரவாயில்லை என்ற நிலை இருக்கும். நிர்வாகச்செலவு அதிகரிக்கும். பணியாளர்களை அனுசரித்து சென்றால் ஓரளவு நற்பலன் உண்டு.
வேலை: அரசு, தனியார்துறையில் பணிபுரிபவர்கள், பணியில் ஏற்படும் குளறுபடிகளை சரிசெய்ய காலதாமதம் ஏற்படும். சலுகைகளை அவ்வளவு எளிதில் பெற இயலாது. வேலைப்பளு இப்போதிருப்பதை விட இன்னும் கூடும். எரிச்சல் உணர்வை இன்னும் ஓராண்டுக்கு விட்டு விடுங்கள்.
வியாபாரம்: நகை, காகிதம், ஸ்டேஷனரி, தானியம், எண்ணெய், அழகுசாதனப் பொருட்கள், மளிகை, பிளாஸ்டிக், ரப்பர் பொருட்கள், ஆடை, தோல், அலங்கார பொருட்கள், கட்டுமானப் பொருள், கடல்சார் பொருட்கள் விற்பவர்கள், சுமாரான வியாபாரமும், அதற்கேற்ற லாபமும் பெறுவர். மற்றவர்களுக்கு போட்டி குறைவு காரணமாக தற்போதைய வியாபாரத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். சரக்கு வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் வேலைப்பளு காரணமாக கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். அதிகாரிகளின் அனுசரணையைப் பெறுவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். தற்போதைய சலுகைகளுக்கு மேல் அதிகமாக எதிர்பார்க்க இயலாது. குடும்பப் பெண்கள் வீட்டுச் செலவுக்கு திண்டாட நேரிடும். தாய்வழி உறவினர்கள் உதவுவர். மனதில் குழப்பமும், கவலையும் ஏற்படலாம். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள், சுமாரான வியாபாரமும், அளவான லாபமும் காண்பர். அதிக மூலதனம் தேவைப்படும்.
படிப்பு: ஆசிரியர், வங்கியியல், பிசினஸ் மேனேஜ்மென்ட், ஓட்டல் மேனேஜ்மென்ட், ஜர்னலிசம், ஆடிட்டிங், நிதிநிர்வாகம், விவசாயம், சட்டம், மரைன், ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் படிப்பு, தகவல் தொழில்நுட்பம் துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள், குழப்பமான நிலையில் செயல்படும் தன்மை உள்ளது. மற்ற துறை
மாணவர்கள் ஓரளவு நன்றாகப் படிப்பர். படிப்புக்கான பணத்துக்கு தட்டுப்பாடு வரும். சக மாணவர்கள் உறுதுணையாக நடந்து கொள்வர். பெற்றோரின் எண்ணங்களை புரிந்து நடப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் தழைக்கும்.
அரசியல்: அரசியல்வாதிகள் முக்கிய ஆதரவாளர்களின் ஆதரவை இழக்க நேரிடும். எதிரிகளால் இருந்த தொந்தரவு படிப்படியாக குறையும். புத்திரர்கள் ஓரளவுக்கு உதவுவர். பதவிகள் கிடைப்பது சிரமமே.
விவசாயம்: விவசாயிகள் பயிர் வளர்க்க கூடுதல் பணத்தேவைக்கு உட்படுவர். அளவான மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் வரும் லாபத்தால் ஓரளவு குடும்பத்தை நடத்தலாம்.
வணங்க வேண்டிய தெய்வம்: நரசிம்மர்
பரிகாரப் பாடல்
உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை
ஒளிமதி செஞ்சடையாளை
வஞ்சகர் நெஞ்சடையாளை
தயங்கும் நுண்ணூல் இடையாளை
எங்கள் பெம்மான் இடையாளை
இங்கு என்னை இனி படையாளை
உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே!

No comments:

Post a Comment