Mar 23, 2010

குருபெயர்ச்சி பலன்கள் -துலாம்
குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு டிசம்பர் 15, இரவு 11.32 மணிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2010 டிசம்பர் 3 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.


சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3
+ வீடு வாங்கலாம்
- எதிரிகள் ஜாக்கிரதை
தர்மம் தவறாமல் நடக்க விரும்பும் துலாம் ராசி அன்பர்களே!
குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடமான கும்பத்தில் அமர்வு பெறுகிறார். தனது 5,7,9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 9,11 மற்றும் ராசியை பார்க்கிறார்.
இந்த குருபெயர்ச்சி உங்கள் வாழ்வில் பல முன்னேற்ற பலன்களை அள்ளித்தரும். மனதில் நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் பெறுவீர்கள். குருவின் பார்வை பெறுகிற ஸ்தானங்கள் பாக்கியங்களை அள்ளித்தருவதாகவும், திருமணம், புதுவீடு குடி புகுதல் உள்ளிட்ட மங்கல நிகழ்ச்சிகளை நடத்தி வைக்கும் நிலையிலும் உள்ளது. பேச்சில் அன்பு கூடும்.
இளைய சகோதரர்கள், உங்களின் சொல்லை வேதமென கருதி நடந்து கொள்வர். வீடு, வாகனத்தில் வளர்ச்சி மாற்றம் செய்து மகிழ்வீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் திட்டமும் நிறைவேறும்.தாய்வழி உறவினர்கள் விரும்பி வந்து சொந்தம் கொண்டாடுவர். பூர்வ சொத்தின் வழியாக அதிக வருமானம் கிடைக்கும். புத்திரர்களுக்கு படிப்பில் உயர்ந்த தேர்ச்சியும், பாராட்டு, விருதும் கிடைக்கும். எதிரிகள் உங்களிடம் பாசத்துடன் நடப்பது போல் நடித்து கவிழ்க்க நினைக்கலாம். கவனமாக இருங்கள். உடல்நலம் பலமுடன் இருக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பண
வரவு நன்றாக இருக்கும் என்பதால் பழைய கடன்களை அடைப்பீர்கள். கணவன், மனைவி ஒற்றுமை வளரும். நண்பர்களின் உதவி தாராளமாக கிடைக்கும். கடந்த காலங்களில் பெறவேண்டிய ஆதாய பலன்கள் தேடி வரும். வாழ்க்கை வசதி அதிகரிக்கும். வெளிநாடு வேலைவாய்ப்பிலும் அனுகூலம் உண்டு.
தொழில்: தொழில்சார்ந்த வகையில் உங்களின் எதிர்பார்ப்பு பெருமளவில் நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, காகிதம், தோல், கட்டுமானப்பொருள், பிளாஸ்டிக், தண்ணீர் சார்ந்த தொழில் செய்வோர், ரியல் எஸ்டேட், டிராவல் ஏஜென்சி, லாட்ஜ், மருத்துவமனை சார்ந்த தொழில் செய்பவர்கள் தாராள பணவரவு காண்பர். மற்றவர்களுக்கும் லாபத்திற்கு பஞ்சமில்லை. பணியாளர்கள் நம்பிக்கையுடன் பணிபுரிந்து நிறுவனத்திற்கு கூடுதல் நற்பெயர் உருவாக்குவர். வேலை: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்திடம் நற்பெயர் பெறும் வகையில் பணியாற்றுவர். பதவி உயர்வு, சம்பள உயர்வு, விரும்பிய இடத்துக்கு மாற்றம் ஆகிய சலுகைகள் எளிதாக கிடைக்கும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு நல்குவர்.
வியாபாரம்: ஜவுளி, நகை, பலசரக்கு, கண்கண்ணாடி, தண்ணீர் சார்ந்த பொருட்கள், அழகுசாதனங்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், அலங்காரப் பொருள், வலை, மீன், தானியம், ரப்பர், தோல் பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள், அபரிமிதமான லாபம் பெறுவர். புதிய கிளைகள் துவங்கும் முயற்சி நிறைவேறும். சரக்கு வாகனங்களால் நிறைந்த பணவசதி கிடைக்கும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள், அதிகாரிகளிடம் நற்பெயர் பெறும் வகையில் பணி செய்வர். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகை எளிதாக கிடைக்கும். குடும்பப் பெண்கள், கணவரின் நல்அன்பை பெற்று மகிழ்ச்சியுடன் இருப்பர். நகை, ஆடம்பரப் பொருட்கள் வாங்க யோகமுண்டு. புத்திரப்பேறு தாமதமானவர்களுக்கு சுபபலன் உண்டு. தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பர். லாபவிகிதம் அதிகமாகும். அபிவிருத்தி பணிகள் சிறப்புற நிறைவேறும்.
படிப்பு: மருத்துவம், சட்டம், விவசாயம், ஏரோநாட்டிக்கல், மரைன், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், ஆசிரியர் பயிற்சி, கேட்டரிங் துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள், படிப்பில் சிறந்துசாதனை நிகழ்த்துவர். மற்ற துறையினரும் சிறப்பாகவே படிப்பர். படிப்பு தொடர்பான கூடுதல் பயிற்சிக்காக வெளியூர்களுக்கு சென்று பயனடைவீர்கள்.
அரசியல்: அரசியல்வாதிகள் சமூகப்பணியில் கூடுதல் முன்னேற்றம் காண்பர். ஆதரவாளர்கள் உங்கள் செயல்களுக்கு மதிப்பு தருவர். அதிகாரிகளிடமும் ஆதரவு கிடைக்கும். புத்திரர்களும், அரசியலில் பிரகாசிக்க நல்வாய்ப்பு கிடைக்கும்.
விவசாயம்: விவசாயிகளுக்கு மகசூல் உயரும். கால்நடை வளர்ப்பிலும் முன்னேற்றம் உண்டு. கூடுதல்நிலம் வாங்க யோகம் வரும்.
வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரப் பாடல்
அல்லல் போம் வல்வினை போம்
அன்னை வயிற்றிற் பிறந்த
தொல்லை போம் போகாத்துயரம்
போம்- நல்ல குணமதிகமாம்
அருணைக் கோபுரத்தில்
வீற்றிருக்கும் கணபதியை
கை தொழுதக் கால்.

No comments:

Post a Comment