Apr 27, 2010

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்-கன்னி

உத்திரம் - 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2
நண்பர்களின் உதவி, - ஏராளமான செலவு


வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்த தெரிந்த கன்னிராசி அன்பர்களே!
உங்கள் ராசியில் சனி, நான்கில் ராகு, 10ல் கேது என்ற வகையில் கிரக அமர்வு இந்த ஆண்டு முழுவதும் உள்ளது. குருபகவான் மட்டும் அதிசார கதியாக ராசிக்கு 7ம் இடமான மீனத்தில் சித்திரை 19 (மே 2) முதல் ஐப்பசி 21 (நவ. 7) வரை மிகுந்த அனுகூலமாக பிரவேசம் செய்கிறார்.
உங்கள் செயலில் தடுமாற்றம் உண்டாகும். ஆனாலும் விசுவாசம் மிக்க நண்பர்கள் சரியான நேரத்தில் உதவி செய்வர். இடம், பொருள் அறிந்து பேசுவது நன்மை தரும். தேவையற்ற விவாதங்களில் ஈடுபடுதல் கூடாது. கடினமாக உழைத்தால் மட்டுமே உங்கள் தேவைகளை நிறைவேற்ற முடியும். பணவரவு மிகவும் குறைவாகவே இருக்கும். சகோதரர்கள் பாசத்துடன் நடந்துகொள்வர். சமூகத்தின் பார்வையில் உங்கள் மதிப்பு உயரும். வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவுக்காக அதிக பணம் செலவழிக்க வேண்டி வரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கலாம். தக்க மருத்துவ ஆலோசனையை பெறுவது நல்லது. புத்திரர் உங்கள் சொல் கேட்டு நடப்பர். படிப்பிலும் விளையாட்டிலும் முன்னேற்றம் காண்பர். பூர்வீக சொத்தில் பெறுகிற வருமானம் பராமரிப்பிற்காக செலவிட நேரிடும். இஷ்ட தெய்வ வழிபாடு மனதிற்கு ஆறுதலைத் தரும். பணியிடங்களில் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. குறிப்பாக நெருப்பு சம்பந்தமான பணியில் இருப்போர் கவனமாக இருக்க வேண்டும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வகைகளை உண்பது கூடாது. உடற்பயிற்சி, மருத்துவ ஆலோசனை ஆகியவற்றை பின்பற்றினால் உடல்நலம் மேம்படும். தம்பதியர் விட்டுக்கொடுத்து பாசத்துடன் நடந்துகொள்வர். நண்பர்களுக்கு உதவி செய்வதும், அவர்களிடம் உதவி பெறுவதும் மனதிற்கு நிறைவைத் தரும். இளம் வயதினருக்கு திருமணம் நடத்த வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி மாதங்கள் அனுகூலமான சூழ்நிலை உள்ளது. தொழில் சார்ந்த வகையில் சீர்திருத்த நடைமுறைகளை பின்பற்றி வளர்ச்சி பெறுவீர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பில் அதிகப்படியான அலைச்சலும் குறைந்த அனுகூலமும் உண்டாகும்.
தொழிலதிபர்கள்: கட்டுமான பொருள், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, தோல், பிளாஸ்டிக், தண்ணீர், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், விவசாய இடுபொருட்கள், இரும்பு, எண்ணெய், காகிதம் சார்ந்த தொழில் செய்பவர்கள், கல்வி, நிதி நிறுவனம், லாட்ஜ், ஓட்டல் நடத்துபவர்கள் சுமாரான லாபம் பெறுவர். மற்றவர்களுக்கு இவர்களை விட சற்று அதிகமான லாபம் கிடைக்கும். கணக்கு வழக்குகளை முறையாக பராமரிப்பது நல்லது. அரசின் விதிமுறைகளை பின்பற்றுவது எதிர்கால நலனுக்கு உகந்தது. பணியாளர்கள் வகையிலும் இயந்திரங்களை பராமரிப்பதிலும் கூடுதல் செலவு உண்டாகும். கூட்டுச் சேரும் முயற்சியை தாமதப்படுத்துவது நல்லது. குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் நிலுவைப்பணம் வசூலாகும்.
வியாபாரிகள்: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஸ்டேஷனரி, அழகு சாதன பொருட்கள், கட்டுமான பொருட்களை, நகை, ஜவுளி, பலசரக்கு, எண்ணெய், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மருந்து, விளையாட்டு சாதனங்கள், காகிதம், காய்கனி, தானிய வியாபாரிகள் சுமாரான லாபம் பெறுவர். பிற வியாபாரிகள் இவர்களை விட சற்று அதிக லாபம் காண்பர். பொருட்களை ரொக்கத்திற்கு விற்பது நல்லது. சரக்கு வாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் கூடுதல் விற்பனையும் உபரி வருமானமும் கிடைக்கும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தேவையற்ற தடங்கல்களை சந்திப்பர். நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகைகளில் ஒருசில மட்டுமே கிடைக்கும். உங்கள் பணிகளை நீங்களே செய்வது வேண்டாத சிரமங்களை தவிர்க்கும். பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கை ஆகியவற்றிற்கு இடமுண்டு. சக பணியாளர்களின் நட்புறவு மனதிற்கு ஆறுதலை தரும். பணியிடங்களில் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். குறிப்பாக பண பரிவர்த்தனை பணியில் இருப்பவர்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும். கல்விப்பணி சார்ந்தவர்களுக்கு அதிர்ஷ்டகரமான பலன் உண்டாகும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் வேலையில் சிறு தடைகளை எதிர்கொள்வர். சலுகைகள் பெறுவதிலும் இடைஞ்சல் இருக்கும். இந்த காலகட்டத்தில் பொறுமை மிக தேவை. குடும்பப் பெண்கள் வீட்டுச் செலவுக்கு சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும். குழந்தைகளின் ஒத்துழைப்பு மனநிறைவைத் தரும். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் சுமாரான வியாபாரம் காரணமாக குறைந்த லாபமே பெறுவர். கடன்தொகை வசூலாகும். நிலுவைப் பணவரவு குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் முயற்சி இல்லாமலேயே வந்து சேரும். சுயதொழில் புரியும் பெண்கள் வியாபாரத்தை தக்கவைத்துக் கொள்ள சிரமப்பட வேண்டியிருக்கும்.
மாணவர்கள்: மார்க்கெட்டிங், ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங், கம்ப்யூட்டர், வங்கியியல், தணிக்கையியல், தொழில்நுட்பம், மாடலிங், ஆசிரியர் பயிற்சி, ஜர்னலிசம், மரைன், ஏரோநாட்டிக்கல், மெக்கானிக்கல், சிவில் இன்ஜினியரிங், ரசாயனம், பவுதிகம், மருத்துவம், விவசாயத்துறை மாணவர்கள் அக்கறையுடன் படிப்பதால் மட்டுமே தேர்ச்சி பெறமுடியும். படிப்பு செலவைத்தவிர மற்ற ஆடம்பர விஷயங்களில் மனதை திசைதிருப்புதல் நல்லதல்ல. அனுபவம் இல்லாத, சக்திக்கு மீறிய விஷயங்களை தவிர்ப்பது எதிர்கால நலனுக்கு உகந்தது. கருத்து வேற்றுமையால் பிரிந்த நண்பர்கள் குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் உங்களிடம் வலியவந்து பழகுவர்.
அரசியல்வாதிகள்: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வருட முற்பகுதியில் விரும்பிய பதவி, பொறுப்பு கிடைக்கும். ஆதரவாளர்கள் நம்பிக்கை மனதிற்கு தைரியத்தை தரும். புதியவர்களும் உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவர். எதிரிகளால் இருந்து வந்த சிரமங்களை உரிய நடவடிக்கைகளால் சரிசய்து கொள்வீர்கள். அரசியல் பணிக்கு புத்திரர்கள் இயன்ற அளவில் உதவுவர். அரசியலோடு தொழில் நடத்துபவர்களுக்கு ஓரளவே லாபம் உண்டு.
விவசாயிகள்: விவசாயப் பணிகளை நிறைவேற்ற அதிக உடல் உழைப்பு தேவைப்படும். மகசூல் சிறந்து எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் சுமாரான லாபம் உண்டு. நிலம் தொடர்பான பிரச்னையில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் : ஆஞ்சநேயர்
பரிகார பாடல்
புத்தியும் பலமும் தூய புகழோடு துணிவும் நெஞ்சில் பக்தியும்
அச்சமிலாப் பணிவும் நோய் இல்லா வாழ்வும்உத்தம ஞானச்சொல்லின்
ஆற்றலும் இம்மை வாழ்வில் அத்தனை பொருளும் சேரும்
அனுமனை நினைப்பவர்க்கே!

No comments:

Post a Comment