Sep 11, 2010

ராகு கேது பெயர்ச்சி பலன் மேஷம்.27 . 10 .2009 .முதல் . 05 .06 .2011 .வரை

ராகு பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும், கேது பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், இன்று (அக். 27) காலை 9.15 மணிக்கு பெயர்ச்சியாகிறார்கள். இவர்கள் 5.6.2011 வரை இந்த ராசிகளில் சஞ்சரிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி 12 ராசிகளுக்கும்

மேஷம்
அசுவினி, பரணி, கார்த்திகை 1
(85/100) மிக மிக நன்று
தன்னலத்தையும், பிறர் நலத்தையும் சமமாக நோக்கும் மேஷ ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் ராகுவும், மூன்றாம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு 11, 7ம் இடத்தில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு 5ம் இடத்திலும் ராசியிலும் பதிகிறது. ராகு கேது பெயர்ச்சியில் கேது பகவான் அளப்பரிய நற்பலன்களை உங்களுக்கு வழங்கும் விதத்தில் உள்ளார். அதே நேரம் ராகு சிறு அளவிலான சிரமமும், கூடுதல் பணச்செலவையும் ஏற்படுத்துவார். மனதில் ஆன்மிக நம்பிக்கை வளரும். வாழ்வில் வளமான தன்மை பெற புதியவர்களிடம் ஆலோசனை பெறுவீர்கள். பேச்சில் இருந்த தயக்கம் விலகும். குறிப்பாக பெண் குழந்தைகள் வியத்தகு சாதனை புரிந்து பெற்றோருக்கு பெருமை தேடித்தருவர்.
பூர்வ சொத்துகளில் வளர்ச்சியும் பணவரவும் அதிகரிக்கும். எதிரிகளால் இருந்த தொல்லை குறையும். வழக்கு விவகாரத்தில் வெற்றி உண்டு. இஷ்ட தெய்வ அருளும், முருகப்பெருமானின் திருவருளும் பரிபூரணமாக துணைநிற்கும். உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும். பலரும் வியக்கும் வகையில் உங்கள் வாழ்வு சிறப்பு தருவதாக மாறும். கடன் பாக்கியை பெருமளவு அடைப்பீர்கள். வாகன பயணத்திலும், உபகரண உதவியால் பணிபுரிபவர்களும் தகுந்த பாதுகாப்புடன் செயல்படுவது நல்லது. வெளிநாடு வேலைவாய்ப்பில் அனுகூலம் உண்டு.
தொழிலதிபர்கள்: மோட்டார் வாகனம், தங்கநகை, ஸ்டீல் பொருட்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கிரானைட் கற்கள், கட்டட, கட்டுமானப் பொருட்கள், நவீன பர்னிச்சர், உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் தமது தொழிலில் வளர்ச்சியும் அதிக உற்பத்தியும் தாராள பணவரவும் கிடைக்கப்பெறுவர். ரியல் எஸ்டேட், நவீன மருத்துவமனை, தங்கும் விடுதிகள், பொறியியல் கல்லூரி நடத்துபவர்கள், மலைத்தோட்ட பயிர் உற்பத்தி செய்பவர்கள் கூடுதல் வளர்ச்சியும், உபதொழில் துவங்குவதுமான நன்னிலை பெறுவர். மற்றவர்களுக்கும் லாபமான நேரமே. புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, உணவு தானியம், மளிகைப் பொருட்கள், சமையலறை சாதனங் கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், இறைச்சி, விவசாய இடுபொருட்கள், மருந்து, எண்ணெய், அழகு சாதனப் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், காய்கறி, குளிர்பான வகைகள் வியாபாரம் செய்பவர்கள் வியாபாரத்தில் கூடுதல் வரவேற்பை பெறுவர். பணவரவு அதிகரிக்கும். மற்ற வியாபாரிகளுக்கு இவர்களை விட லாபம் அதிகமாக இருக்கும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் திறமையுடன் செயல்புரிந்து பணித்தரம் உயர்த்துவர். சலுகை, பதவி உயர்வு, பணக்கடன் எளிதாக கிடைக்கும். தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் ஒருமுகத்தன்மையுடன் பணியாற்றி இலக்குகளை நிறைவேற்றுவர். கூடுதல் வேலைவாய்ப்பும் சம்பள உயர்வும் கிடைக்கும். குடும்பத்தின் தேவைகளை மன உவகையுடன் நிறைவேற்றுவீர்கள். திட்டமிட்ட சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும். நண்பர்கள் நல்மனதுடன் அன்பு பாராட்டுவர். எதிர்கால தேவைக்கு கொஞ்சம் சேமிப்பீர்கள். உடல்நலம் ஆரோக்கியம் பலம்பெறும்.
பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் சுய திறமையை தகுந்த சமயத்தில் பணியில் வெளிப்படுத்துவர். திட்டமிட்ட இலக்கு சிறப்புற நிறைவேறும். பதவி உயர்வு, விண்ணப்பித்த கடன் போன்ற சலுகை எளிதாக கிடைக்கும். குடும்ப பெண்கள் தமக்குள்ள பொறுப்பை உணர்ந்து செயல்படுவதால் மட்டுமே வாழ்வியல் நடைமுறை மகிழ்ச்சி தருவதாக அமையும். கணவரிடம் தேவையற்ற விஷயங்களில் சச்சரவை தவிர்க்கவும். சேமிக்கும் அளவில் பணவரவு திருப்திகரமாகும்.
மாணவர்கள்: மருத்துவம், விவசாயம், தகவல் தொழில்நுட்பம், வணிகவியல், வங்கியியல், ஓட்டல் மேனேஜ்மென்ட், மாடலிங், ஜர்னலிசம் பயிற்சி பெறும் மாணவர்கள் திறம்பட செயல்பட்டு நல்ல தரதேர்ச்சி பெறுவர். பயிற்சி முடித்தவர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு கிடைக்கும். மற்ற துறை மாணவர்களும் சிறப்பாகவே படிப்பர்.
அரசியல்வாதிகள்: அரசியல் பணியில் உங்கள் சேவையை பெருமளவில் நிறைவேற்றுவீர்கள். ஆதரவாளர்களிடம் ஆதரவும் நம்பிக்கையும் வளர்ச்சி பெறும். விசுவாசமாக உழைத்துவிட்டு பதவி, பொறுப்பு கிடைக்கவில்லையே என எதிர்பார்த்திருப்பவர்களுக்கு உரிய பதவி கிடைக்கும். எதிரியாக செயல்பட்டவர்களின் நடவடிக்கை குறையும்.
விவசாயிகள்: விவசாயம் செழித்து அபரிமிதமான மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் முன்னேற்றம் உண்டு. புதிய நிலம் வாங்க அனுகூலம் வளரும். நிலப்பிரச்னையில் சுமுக தீர்வு ஏற்படும்.
பரிகாரம்: தெட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் சகல வளமும் ஏற்படும்.
பரிகார பாடல்
சீதளப்பளிக்கு மேனியும் பளிக்குச்
செழுமலை பதித்த துப்பன்ன
பாதமும் செவ்வாய் மலரும் முக்கண்ணும்
பங்கயச் செங்கரம் நான்கும்
வேதபுத்தகமும் அமுதகும்பமும் தன்
விழிமணி வடமும் மெய்ஞ்ஞான
போத முத்திரையும் தரித்ததோர் தனிமைப்
போதன்முன் தாழ்ந்தெழுந்தேத்தா

No comments:

Post a Comment