Sep 11, 2010

ராகு கேது பெயர்ச்சி பலன்கும்பம்

ராகு பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும், கேது பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், இன்று (அக். 27) காலை 9.15 மணிக்கு பெயர்ச்சியாகிறார்கள். இவர்கள் 5.6.2011 வரை இந்த ராசிகளில் சஞ்சரிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது

அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3
(70/100) நலம்
உயர்வு தாழ்வை சமமாக கருதும் மனோதிடம் கொண்ட கும்பராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் ராகுவும், ஐந்தாம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே ராசியிலும், ராசிக்கு ஒன்பதாம் இடத்திலும் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு 7, 3ம் இடத்தில் பதிகிறது. ராகு-கேது பெயர்ச்சியில் ராகு உங்களுக்கு ஆதாய நற்பலன்களை அள்ளித்தரும் வகையில் உள்ளார். மனதில் உற்சாகமும் செயல்களில் புதிய பரிமாணமும் உருவாகப் பெறுவீர்கள். பேச்சில் இனிமை சேர்ப்பதால் உங்கள் மீதான நற்பெயர் வளரும். சமூகப்பணியில் குறைந்த அளவு ஆர்வம் கொள்வீர்கள்.
வீடு, வாகன வகையில் மனம் விரும்பிய வளர்ச்சி மாற்றம் செய்து மகிழ்வீர்கள். தாயின் தேவையை சிறப்புற நிறைவேற்றி அன்பும், ஆசியும் அதிகம் பெறுவீர்கள். புத்திரரின் பிடிவாதமான செயல்கள் மனவருத்தத்தை தரும். விட்டுக்கொடுத்து தகுந்த புத்திமதி சொல்வதால் அவர்களின் நடவடிக்கையில் படிப்படியாக நல்மாற்றம் ஏற்படும். பூர்வ சொத்தில் சராசரியை விட அதிக வருமானம் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு திருப்திகரமாக நிறைவேற்றுவீர்கள். தம்பதியர் குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு மிகுந்த அன்பு, பாசத்துடன் நடந்துகொள்வர். நண்பர்களின் உதவி நடைமுறை வாழ்வில் புதிய உற்சாகம் தரும். தொழில் சார்ந்த வகையில் உத்வேகத்துடன் செயல்புரிந்து திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை எளிதில் பெறுவீர்கள். ஆதாய பணவரவும் குடும்பத்தில் சுபநிகழ்ச்சியும் இனிதாக நிறைவேறும். வெளிநாடு வேலைவாய்ப்பில் அனுகூல பலன் உண்டு.
தொழிலதிபர்கள்: இரும்பு. காகதிம், டெக்ஸ்டைல்ஸ், தோல், நட்சத்திர ஓட்டல் நடத்துபவர், ரியல் எஸ்டேட், லாட்ஜ், கல்வி நிறுவனம், மருத்துவமனை நடத்துபவர்கள், இறைச்சி ஏற்றுமதியாளர், விவசாய கருவிகள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், கிரானைட், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், பட்டுத்துணி வகைகள், குளிர்பானம் உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் கூடுதல் மூலதனத்துடன் உற்பத்தி திறன் வளர்க்க புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவர். தாராள பணவரவும் தொழிலில் கூடுதல் அந்தஸ்தும் கிடைக்கும். மற்றவர்களுக்கும் ஓரளவு லாபம் உண்டு. சமூக அந்தஸ்துள்ள பதவி தேடிவரும். ஆனால், இதனால் செலவு கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நிறைவேறும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, கட்டுமானப் பொருட்கள், குளிர்பானங்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், பேக்கரி பொருட்கள், உணவு தானியங்கள், உரம், விவசாய கருவிகள், கடல்சார், தென்னை சார்ந்த பொருட்கள், தோல், ரப்பர் பொருட்கள், பர்னிச்சர் வியாபாரம் செய்பவர்கள் சந்தையில் போட்டி குறைந்து அனுகூலத்தன்மை பெறுவர். மற்றவர்களுக்கும் ஓரளவு லாப விகிதம் அதிகரிக்கும். சரக்கு வாகனம் கூடுதல் வருவாயைப் பெற்றுத்தரும். வியாபாரத்தில் கூட்டுசேர அழைக்கும் நண்பர்களின் யோசனையை தவிர்க்கவும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் சுமூக சூழ்நிலை திகழும். பணி இலக்கை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவீர்கள். பதவி உயர்வு, சலுகை கிடைக்கும். உணவு பண்டங்கள் தயாரிப்பு, மருத்துவமனை, கட்டட கட்டுமானம், தனியார் புலனாய்வு துறை சார்ந்த பணியாளர்கள் தமது திறமையின் காரணமாக கூடுதல் வேலைவாய்ப்பு, தாராள பணவரவு, பாராட்டு ஆகிய சிறப்பு பலன் பெறுவர். சக பணியாளர்களுடன் கருத்து பரிமாற்றத்தில் நிதானம் அவசியம். முக்கிய தேவைகளுக்கு மட்டும் பணம் செலவிடுவது நன்மையைத்தரும்.
பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் உத்வேகத்துடன் செயல்பட்டு தமக்குள்ள பணி இலக்கை நிறைவேற்றுவர். நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் வாழ்வியல் நடைமுறைக்கேற்ப கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். குடும்பத்தின் நடைமுறை செலவுகளுக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள் அன்பு, பாசத்துடன் நடந்துகொள்வர். சுயதொழில் புரியும் பெண்கள் சந்தையில் புதிய வரவேற்பு பெற்று வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி காண்பர். எதிர்கால வளர்ச்சி திட்டங்களுக்காக பணம் சேமிக்கும் வகையில் கிடைக்கும்.
மாணவர்கள்: விவசாயம், சட்டம், மருத்துவம், கேட்டரிங், ஆசிரியர் பயிற்சி, அரசு நிர்வாகம், பிரிண்டிங் டெக்னாலஜி, கம்ப்யூட்டர், சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல், நிதி மேலாண்மை, தணிக்கையியல், புள்ளியியல் துறை மாணவர்கள் பொறுப்பை உணர்ந்து படிப்பில் அக்கறையுடன் செயல்படுவர். மற்ற துறையினர் இவர்களை விட சிறப்பாகப் படித்து தரதேர்ச்சியும் தகுந்த பாராட்டும் பெறுவர். படிப்புக்கான பணவசதி பெறுவதில் அனுகூலம் வளரும். உடல்நலத்திலும் விளையாட்டு பயிற்சியிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பெற்றோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அக்கறையுடன் செயல்படுவீர்கள்.
அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் இருந்த சிரமங்களை சரிசெய்வதில் கவனம் கொள்வீர்கள். ராகுவின் அமர்வு அரசியலில் வளம்பெற உங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கித்தரும். ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். புத்திரரை அரசியல்பணிக்கு அதிகம் பயன்படுத்த வேண்டாம். வெளியூர் பயணங்களில் அறிமுகமாகும் புதியவர்களிடம் நிதானமுடன் பழகுவது மட்டுமே சிரமம் தவிர்க்க உதவும். தொழில் நடத்துபவர்கள் சீரான முன்னேற்றமும் எதிர்பார்த்த பணவரவும் பெறுவர்.
விவசாயிகள்: பயிர் வளர்ப்பில் மகசூல் முன்பைவிட அதிகம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் முன்னேற்றமும் தாராள பணவரவும் கிடைக்கும். விவசாய நிலம் கூடுதலாக வாங்கும் யோகம் உண்டு.
பரிகாரம்: விநாயகரை பூஜிப்பதால் வாழ்வில் சகல வளமும் கிடைக்கும்.
பரிகார பாடல்
வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப்
பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
ஞானமத ஐந்துகர மூன்றுவிழ நால்வாய்
யானைமுகனைப் பரவி அஞ்சலி செய்கிற்போம்

No comments:

Post a Comment