Sep 11, 2010

ராகு கேது பெயர்ச்சி பலன்மகரம்


ராகு பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும், கேது பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், இன்று (அக். 27) காலை 9.15 மணிக்கு பெயர்ச்சியாகிறார்கள். இவர்கள் 5.6.2011 வரை இந்த ராசிகளில் சஞ்சரிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது

உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2
(80/100) லாபம்
ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்ட மகர ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் ராகுவும், ஆறாம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு 2, 10ம் இடத்தில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு 8, 4ம் இடத்தில் பதிகிறது. ராகு-கேது பெயர்ச்சியில் கேதுவின் அமர்வு பலவித ஆதாய பலன்களை வழங்கும். சராசரி அன்புடன் பழகிய நண்பர்கள், உறவினர்களிடம் கூட நீங்கள் சுயகவுரவத்துடன் பழகுவதை விரும்புவீர்கள். இதனால் உங்களை கர்வம் பிடித்தவர் என்று சொல்லும் நிலை ஏற்படும். சமூகப்பணியிலும் ஈடுபடுவீர்கள். இளைய சகோதரரால் நன்மை உண்டு.
புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. வீட்டில் அபிவிருத்தி பணிகளும் நிறைவேறும். புத்திரர்கள் திறமையை வளர்த்து படிப்பிலும் பொது அறிவிலும் சிறந்து விளங்குவர். பூர்வ சொத்தில் பெறுகிற வருமானம் வளர்ச்சியடையும். உடல்நல ஆரோக்கியம் பலம்பெற்று மனதிலும் செயலிலும் புத்துணர்வு பிறக்கும். எதிரியின் செயல்களை உரிய வகையில் எதிர்கொண்டு வெல்வீர்கள். கடன் பாக்கிகளை அடைப்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான நவீன வீட்டு சாதன பொருட்களை வாங்குவீர்கள். தம்பதியர் ஒருவருக்கொருவர் கூடுதல் அன்பு பாசத்துடன் நடந்து குடும்பத்தின் மகிழ்ச்சியை பேணுவர்.
வெளியூர் பயணம் கூடுதலாக சென்றுவரும் சூழ்நிலை ஏற்படும். நண்பர்கள் உதவுவதும் உதவி பெறுவதுமான வகையில் நடந்துகொள்வர். சுக சவுகர்ய வாழ்க்கை வசதி திருப்திகரமாக இருக்கும். தந்தைவழி உறவினர்கள் ஆதரவுடன் நடந்துகொள்வர். தொழில் சார்ந்த வகையில் உங்களின் செயல்பாடு திருப்திகரமாக அமைந்து அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுத்தரும். ஆதாய பணவரவுகளை பெறும்போது சந்தோஷ மனநிலையில் சுபகாரியங்களுக்கு செலவு செய்வீர்கள். வெளிநாடு வேலைவாய்ப்பு நல்லவிதமாக அமையும்.
தொழிலதிபர்கள்: இரும்பு, தோல், காகிதம், டெக்ஸ்டைல்ஸ், கம்ப்யூட்டர், பால் பொருட்கள், இசைக்கருவிகள், பாத்திரங்கள், பீங்கான் பொருட்கள், அலங்கார பொருட்கள், கேமரா, மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் திறமை மிகு பணியாளர்களின் உதவியால் தாராள உற்பத்தியும் தரமான பொருட்களும் கிடைக்கப்பெறுவர். பணவரவு அதிகரிக்கும். மற்றவர்களுக்கும் லாபமான நேரமே. புதிய கிளை துவங்கும் முயற்சி இனிதாக நிறைவேறும். உற்பத்தியில் புதிய தொழில்நுட்பம் புகுத்த தகுந்த பயிற்சி, அனுபவம் பெறுவீர்கள். பணசேமிப்பு உயரும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உற்சாக மனதுடன் செயல்பட்டு பணி இலக்கை சிறப்பாக நிறைவேற்றுவர். நிர்வாகத்திடம் பாராட்டு, பணி உயர்வு, விரும்பிய பணக்கடன் போன்ற நற்பலன் கிடைக்கும். மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், பால் பொருட்கள் உற்பத்தி, இயந்திர தொழிற்சாலை பணியாளர்கள், கூடுதல் வேலை வாய்ப்பும், அதிக பணவருமானமும் பெறுவர். சக பணியாளர்கள் உறுதுணையாக நடந்துகொள்வர். குடும்பத்தின் முக்கிய தேவைகளை பொறுப்புடன் நிறைவேற்றுவீர்கள். சுயதொழில் துவங்க முயற்சிப்பவர்கள்களுக்கு அனுகூலம் உண்டு.
வியாபாரிகள்: நகை, மளிகை, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், நவீன பர்னிச்சர், ஜவுளி, காலணி, தோல் பொருட்கள், பாத்திரங்கள், பருத்தி ஆடை, கட்டுமானப்பொருள், சோப்பு, அழகு சாதனப் பொருட்கள், மாவு, பால் பொருட்கள், காகித வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் வியாபாரம் நடந்து தாராள பணவரவு காண்பர். மற்றவர்கள் இவர்களை விட அதிக லாபமடைவர். புதிய கிளை துவங்கவும் அனுகூல வாய்ப்பு உருவாகும். சரக்கு வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். அனுபவம் இல்லாத புதிய வியாபாரத்தில் ஈடுபடக்கூடாது.
பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் சுயதிறன் வளர்த்து பணி இலக்கை செவ்வனே பூர்த்திசெய்வர். பணி உயர்வு, விரும்பிய இடமாற்றம் எளிதில் கிடைக்கும். குடும்ப பெண்கள், கணவரின் நல் அன்பும், தாராள பணவசதியும் பெற்று சந்தோஷ வாழ்வு நடத்துவர். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. மகப்பேறு தாமதமானவர்களுக்கு விரும்பிய அனுகூலம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் தாராள பணச்செலவில் அபிவிருத்தி பணியை மேற்கொள்வர். தொழில் சிறந்து ஆதாய பணவரவு கிடைக்கும். கைவினை, எந்திர தொழில்நுட்ப தொழிலில் உள்ளவர்கள் திறமை வளர்க்க கூடுதல் பயிற்சி பெறுவர்.
மாணவர்கள்: சிவில், தகவல் தொழில்நுட்பம், அனிமேஷன், மருத்துவம், விவசாயம், சட்டம், மாடலிங், சினிமா தொழில்நுட்பம், மரைன், ஏரோநாட்டிக்கல், ஜர்னலிசம், ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங், மார்க்கெட்டிங் துறையில் பயிற்சிபெறும் மாணவர்கள் ஒருமுகத்தன்மையுடன் படித்து உயர்ந்த தரதேர்ச்சி பெறுவர். மற்ற துறையினர் இவர்களை விட சிறப்பாகப் படிப்பர். படிப்புக்கான பணச்செலவுக்கு தாராள பணவசதி கிடைக்கும். சக மாணவர்கள் படிப்பிற்கு உறுதுணையாக உதவுவர். பெற்றோரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். சிலருக்கு விருது வாங்கும் அளவிற்கு அதிர்ஷ்டகரமான பலன் நடக்கும்.
அரசியல்வாதிகள்: உங்களின் சமுதாயப்பணி முன்பைவிடவும் பரிமளித்து சிறப்பாக செயல்படுவீர்கள். புகழும் பதவியும் கிடைக்கும். ஆதரவாளர்கள் அதிக நம்பிக்கை கொள்வர். அரசு தொடர்பான காரியம் எளிதாக நிறைவேறும். எதிரி களால் இருந்த தொந்தரவு குறையும். புதிய சொத்துக்களை திறம்பட பேசி வாங்குவீர்கள். அரசியல் பணியில் புத்திரரும் ஈடுபட்டு புகழ்பெற இது உகந்த காலம். தொழில் நடத்துபவர்கள் நம்பிக்கை உள்ள பணியாளர்களின் உதவியால் தொழில் சிறந்து ஆதாய பணவரவை பெறுவர்.
விவசாயிகள்: விவசாயப்பணிகள் சிறப்பாக நிறைவேறி தாராள மகசூல் பெறுவீர்கள். கால்நடை பெருக்கமும் அதனால் கூடுதல் பணவரவும் கிடைக்கும். புதிய நிலம் வாங்கும் யோகம் உண்டு.
பரிகாரம்: அபிராமி அம்மனை வழிபடுவதால் மகிழ்ச்சி மேலும் கூடுதலாகும்.
பரிகாரப்பாடல்
விழிக்கே அருளுண்டு
அபிராமவல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபடநெஞ்சுண்டு எமக்கு அவ்வழிகிடைக்கப்
பழிக்கே சுழன்று
வெம்பாவங்களேசெய்து
பாழ்நரகக்குழிக்கே
அழுந்தும் கயவர்தம்மோடு
என்னகூட்டு இனியே

No comments:

Post a Comment