Sep 11, 2010

ராகு கேது பெயர்ச்சி பலன்தனுசு

ராகு பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும், கேது பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், இன்று (அக். 27) காலை 9.15 மணிக்கு பெயர்ச்சியாகிறார்கள். இவர்கள் 5.6.2011 வரை இந்த ராசிகளில் சஞ்சரிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது

மூலம், பூராடம், உத்திராடம் 1
(55/100) பிரச்னை
முயற்சி திருவினையாக்கும் என்ற நம்பிக்கையுடன் செயல்படும் தனுசுராசி அன்பர்களே!
உங்கள் ராசியில் ராகுவும், ஏழாம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு 3, 11ம் இடத்தில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு 9, 5ம் இடத்தில் பதிகிறது. ராகு கேது பெயர்ச்சி அனுகூல பலன் தரும் வகையில் இல்லை. திடமான மனதில் சிறு அளவிலான சஞ்சலம் தோன்றும். உங்கள் நலனில் அக்கறை உள்ளவர்களின் ஆலோசனை, உதவியால் வாழ்வில் உயர்ந்த நிலையை பெறுவீர்கள்.
எவரிடமும் உள்ளன்புடன் பேச விரும்புவீர்கள். ஆனால், அவர்கள் உங்களின் பேச்சை விரும்புகிறார்களா என்பதை அறிந்து பேசுவது நல்லது. சமூகத்தில் ஏற்கனவே பெற்ற நற்பெயர் உங்களின் நடைமுறை வாழ்வுக்கு உதவும். பணவரவை சீராக பெற கூடுதலாக உழைப்பில் கவனம் கொள்ள வேண்டும். வீடு, வாகன வகையில் சராசரியான அனுகூல பலன் உண்டு. தாயின் அன்பும் ஆசியும் மனதுக்கு புத்துணர்வு தரும். புத்திரரின் சேர்க்கை சகவாசம் அறிந்து வழிநடத்தவது அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சிறப்புமிக்கதாக உருவாக்கும். பூர்வசொத்தில் அளவான வருமானம் கிடைக்கும். உடல்நலத்தில் உரிய கவனம் வேண்டும். தம்பதியர் குடும்பத்தின் நலன் கருதி கூடுதல் மன ஒற்றுமை உணர்வுடன் செயல்படுவது அவசியத் தேவையாகும். தவிர்த்தால் உறவினர்களிடம் அவமானமும், விலகுதல் தன்மையும் உருவாகும். நண்பர் வகையில் தகுதிக்கு மீறிய உதவி கேட்பதும் அவர்களுக்காக பொறுப்பேற்பதும் வேண்டாம். மூத்த சகோதரரிடம் வாக்குவாதம் வராத அளவிற்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளுங்கள். வெளிநாடு வேலை வாய்ப்பு முயற்சியின் பயனால் கிடைக்கும்.
தொழிலதிபர்கள்: இரும்பு, காகிதம், டெக்ஸ்டைல்ஸ், தோல், பிளாஸ்டிக், உணவு பண்டங்கள், வாசனை திரவியம், ஸ்டேஷனரி பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் தொழிலில் கடும் போட்டியை சந்திப்பார்கள். மற்றவர்களுக்கும் குறைவான லாபமே கிடைக்கும். கல்வி நிறுவனம், நிதி நிறுவனம், தங்கும் விடுதி, அச்சகம் நடத்துபவர்கள், சராசரி வருமானமும் படிப்படியாக முன்னேற்றமும் பெறுவர். தொழிற்சாலை, நிறுவனம் ஆகிய இடங்களில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம். நிர்வாக நடைமுறை செலவு அதிகரிக்கும். உபதொழில் துவங்கும் முயற்சியை அனுகூல பொழுது வாய்க்கும் ரேநத்தில் நிறைவேற்றலாம்.
வியாபாரிகள்: ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனம், இசைக்கருவிகள், போட்டோ, நகை, ஜவுளி, மளிகை, பழம், காய்கறி, மலர் வகைகள், கட்டுமானப்பொருள், பாத்திரங்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், அளவிடும் கருவிகள், உடற்பயிற்சி சாதனம் போன்ற பல்வேறு பொருட்களை வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் வாடிக்கையாளர்களைப் பெற உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். வியாபாரம் சராசரியாக இருந்த மிதமான அளவில் பணவரவைத் தரும். சரக்கு கொள்முதலில் தேவைக்கேற்ப மூலதனம் செய்துகொள்வது நல்லது. சரக்கு வாகன பயன்பாடு சிறந்து கூடுதல் பணவரவை பெற்றுத்தரும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மனதிலும், உடலிலும் இருக்கும் சோம்பல் தன்மையை விடுத்து செயல்பட வேண்டும். பணியில் சிறு அளவிலான குளறுபடி ஏற்பட்டு நிர்வாகத்தின் கண்டிப்புக்கு உட்பட நேரிடும். மின்சாரம், நெருப்பு, வாகனம், இயந்திரம், கொதிகலன் தொடர்புடைய பணியில் உள்ளவர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை கவனமுடன் பின்பற்ற வேண்டும். சக பணியாளர்களிடம் சுமூக நட்பு கொள்வது நல்லது. சுயதொழில் துவங்க நினைப்பவர்கள் சில காலம் தாமதிப்பது நன்மை பெற உதவும்.
பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தமக்கு உள்ள பணியின் பொறுப்பை உணர்ந்து உரிய காலத்தில் இலக்கை நிறைவேற்ற வேண்டும். சிலர் நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட நேரும். குடும்ப பெண்கள் கணவரின் குணநலனுக்கு ஏற்பவும், குடும்ப வருமானத்திற்கு ஏற்பவும் வாழ்வியல் நடைமுறையில் சில மாற்றங்களை செய்துகொள்வர். உடல்நலம் சீராக தகுந்த ஓய்வும் சிகிச்சையும் உதவும். நகைகளை இரவல் கொடுப்பது, வாங்குவதை தவிர்க்கவும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பால் இருக்கும் வியாபார அனுகூலம் தக்கவைப்பர்.
மாணவர்கள்: தகவல் தொழில்நுட்பம், மெக்கானிக்கல், பயோடெக்னாலஜி, சிவில் இன்ஜினியரிங், பிரின்டிங் டெக்னாலஜி, சட்டம், மருத்துவம், சினிமா தொழில் நுட்பம், ஜர்னலிசம், மருத்துவம், விவசாயம், இசை, ஓவியம், அனிமேஷன் துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள் கடந்த காலத்தில் இருந்த தயக்கம் விலகி ஆர்வமுடன் செயல்படுவர். மற்ற துறையினர் சுமாராகப் படிப்பர். படிப்புக்கான பணவசதி ஓரளவு கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: சமூகப்பணியை நீங்கள் சரிவர செய்தாலும் குறை சொல்பவர்களின் நடவடிக்கையால் அதிருப்தி அடைவீர்கள். அரசு அதிகாரிகளிடம் உங்களின் அணுகுமுறை சிறப்பாக இருக்கும். செயல்களில் வெற்றிபெற தாமதம் ஏற்படும். எதிரியின் பார்வையில் இருந்து விலகிச் செல்வதால் பலவிதத்திலும் அனுகூலம் உண்டு. அரசியலில் புத்திரரின் உதவியை அளவுடன் பயன்படுத்துவது போதுமானதாகும்.
விவசாயிகள்: பயிர் வளர்க்க கூடுதல் பணச்செலவு பிடிக்கும். அளவான மகசூலும் சுமாரான வருமானமும் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் கிடைக்கும் பணவரவு குடும்பத்தேவைக்கு உதவும். நில விவகாரங்களில் தீர்வு ஏற்பட தாமதமாகும். பரிகாரம்: லட்சுமியை வழிபடுவதால் தொழில் சிறந்து பணவரவு கூடும்.
பரிகார பாடல்
பொன்னரசி, நாரணார்தேவி, புகழரசி
மின்னு நவரத்தினம்போல் மேனியழகுடையாள்
அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி
தன்னிரு பொற்றாளே சரண் புகுந்து வாழ்வோமே

No comments:

Post a Comment