Sep 11, 2010

ராகு கேது பெயர்ச்சி பலன்விருச்சிகம்

ராகு பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும், கேது பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், இன்று (அக். 27) காலை 9.15 மணிக்கு பெயர்ச்சியாகிறார்கள். இவர்கள் 5.6.2011 வரை இந்த ராசிகளில் சஞ்சரிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது



(60/100) கடினம்
நற்சிந்தனையுடன் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் ராகுவும், எட்டாம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு 4, 12ம் இடத்தில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு 10, 6ம் இடத்தில் பதிகிறது. ராகுகேது பெயர்ச்சி உங்கள் வாழ்வில் சில நடைமுறை மாற்றங்களை உருவாக்கும். இரு கிரக பெயர்ச்சிகளுமே அனுகூலக் குறைவாகத்தான் உள்ளது. இதனால் உங்களின் செயல்களை உரிய திட்டமிடுதலுடன் நிறைவேற்றுவது நல்லது. திருப்திகரமான பணவரவு வருபவர்களுக்கு கூட, மனம் விரக்தியாக இருக்கும். பேச்சில் நிதானம் பின்பற்ற வேண்டும். சகோதரர்களின் உதவி கிடைக்கும்.
வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு கூடும். பணவரவு குறையலாம் என்றாலும், அதைச்சரிக்கட்டும் வழிமுறைகளை ஆராய்வீர்கள். தாயின் அன்பை பெற அவருக்கு கூடுதல் பணிவிடை செய்வதால் உத்தமபலன் கிடைக்கும். புத்திரர்கள் உங்கள் சொல் கேட்டு நடந்து தகுதி, திறமையை நன்கு வளர்த்துக் கொள்வர். பூர்வ சொத்து பாதுகாப்பில் நம்பகமானவர்களை பணி அமர்த்துவது நல்லது. உடல்நலம் சுமாராக இருக்கும். பயணத்தில் மிதவேகம் நல்லது. விலை மதிப்பான பொருட்களை பாதுகாப்புடன் வைக்க வேண்டும். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
தொழிலதிபர்கள்: இரும்பு, டெக்ஸ்டைல்ஸ், காகிதம், மின்சார உபகரணம், தீப்பெட்டி, பட்டாசு, அடுப்பு, மருத்துவ உபகரணங்கள், உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் சராசரி உற்பத்தியும் அளவான பணவரவும் பெறுவர். சமையல் எரிவாயு வினியோகஸ்தர், பெட்ரோல், டீசல் பங்க் நடத்துபவர்கள், இன்ஜினியரிங் கல்லூரி, நவீன அச்சகம், ஆஸ்பத்திரி, சினிமா தயாரிப்பு, ஜவுளி உற்பத்தி தொழிலதிபர்கள் புதிய யுக்திகளை பயன்படுத்தி ஓரளவு லாபமடைவர். மற்ற தொழில் செய்வோருக்கு இவர்களை விட வருமானம் நன்றாக இருக்கும். நண்பர்களின் தூண்டுதலால் அனுபவம் இல்லாத புதிய தொழில் எதுவும் துவங்க முயற்சிக்க கூடாது. விலை மதிப்புள்ள பொருட்களை பாதுகாக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்வது உத்தமம்.
வியாபாரிகள்: நகை, ஸ்டேஷனரி, விவசாய இடுபொருள், பலசரக்கு, ஜவுளி, தானியங்கள், பூஜை பொருட்கள், மருந்து, மருத்துவ உபகரணம், இறைச்சி, பட்டாசு, எலக்ட்ரிக்கல் சாதனங்கள் வியாபாரம் செய்பவர்கள் இனிய முறையில் வாடிக்கையாளர் சேவை புரிவதால் மட்டுமே வியாபார அனுகூலத்தை தக்கவைக்க இயலும். மற்றவர்களுக்கு
சுமாரான லாபம் கிடைக்கும். அதிக மூலதனம் வேண்டாம். சரக்கு வாகன பராமரிப்பு பணச்செலவு கூடும். சக வியாபாரம் சார்ந்த நண்பர்களிடம் பெரிய அளவில் பணஉதவி கேட்பதும் கொடுப்பதும் கூடாது.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், கூடுதல் பணிச்சுமைக்கும் பணியில் குறைபாடு உருவாகும் நிலைமைக்கும் உட்படுவர். நிர்வாகத்தின் கண்டிப்பை தவிர்க்க சக பணியாளர்களின் ஒத்துழைப்புடன் செயல்படுவது நல்லது. உணவு பண்டம் தயாரிப்பு, எலக்ட்ரிக்கல், பிளம்பிங், தோல், இயந்திரங்களில் பணிபுரிபவர்கள் சிரமப்படும் சூழல் அதிகமாக இருக்கும். பிறர் பொருளை பாதுகாக்கும் பொறுப்பு ஏற்கக்கூடாது. சேமிப்பு பணம் செலவாகும். அலைச்சல் தரும் பயணங்களும் ஏற்படும். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படும்.
பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் நடைமுறை பணியில் சில குளறுபடியை எதிர்கொள்ள நேரிடும். உரிய கவனத்துடன் சரிசெய்வதால் பணி இலக்கு நிறைவேறும். தகுதிக்கு மீறிய வகையில் பணம் கொடுக்க, வாங்க கூடாது. குடும்ப பெண்கள் சராசரிக்கும் குறைவாக பணவரவு கிடைத்து செலவுகளுக்கு கஷ்டப்படுவர். உடல்நலத்திலும் தகுந்த கவனம் கொள்வது அவசியம். உறவினர் பெண்களின் குடும்ப விவகாரம் பற்றி பெரிய அளவில் பேசக்கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள் சுமாரான வியாபாரம், அளவான பணவரவும் கிடைக்கப்பெறுவர். தொழில் நடத்த கூடுதல் பணம் தேவைப்படும்.
மாணவர்கள்: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில் நுட்பம், சிவில், மெக்கானிக்கல் இன்ஜனியரிங், ரசாயனம், விவசாயம், மருத்துவம், சினிமா தொழில்நுட்பம், ஏரோநாட்டிக்கல், மரைன், அரசு நிர்வாகம், கேட்டரிங், விவசாயப் பயிற்சி பெறும் மாணவர்கள் கூடுதல் அக்கறையுடன் படிப்பதால் மட்டுமே சீரான தரதேர்ச்சி பெற இயலும். மற்ற துறை மாணவர்களுக்கும் படிப்பில் சில தடைகள் வரலாம். படிப்புக் கான பணவரவைப் பெறுவதில் தாமதம் ஏற்படும். சக மாணவர்களுடன் சுமூக உறவு பாதிக்க வாய்ப்பிருக்கிறது.
அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் ஆற்றிய பணிகளுக்கு கிடைத்த நற்பெயரை துணையாகக் கொண்டு செயல்படுவீர்கள். ஆதரவாளர்களின் தேவையை நிறைவேற்ற கடுமையாக செலவாகும். அவர்களுடன் கருத்து மோதல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் மன உணர்வுகளை புரிந்து நீங்கள் நடந்துகொள்வதால் மட்டுமே ஒற்றுமை பலம் பெறும். எதிரிகளால் பெரிய அளவில் தொந்தரவு ஏதும் வராது. உங்களின் கவனக்குறைவான நடவடிக்கை சில நேரம் சிரமம் தரும்.
விவசாயிகள்: பயிர் வளர்க்க கூடுதல் பணம் தேவைப்படும். அளவான மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் பாதுகாப்பிலும் கூடுதல் கவனம் வேண்டும். நிலம் தொடர்பான விவகாரங்களில் மென்மையான போக்கை கடைபிடிக்கவும்.
பரிகாரம்: மீனாட்சி அம்மனை வழிபடுவதால் வாழ்வில் வளம் பெறலாம்.
பரிகார பாடல்
அங்கயற்கண் அம்மையே போற்றி
ஆலால சுந்தரியே போற்றி
இமயத்து அரசியே போற்றி
கிளியேந்திய கரத்தோய் போற்றி

No comments:

Post a Comment