Sep 11, 2010

ராகு கேது பெயர்ச்சி பலன்துலாம்

ராகு பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும், கேது பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், இன்று (அக். 27) காலை 9.15 மணிக்கு பெயர்ச்சியாகிறார்கள். இவர்கள் 5.6.2011 வரை இந்த ராசிகளில் சஞ்சரிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது

சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3
(75/100) சாதகம்
உழைப்பையே முழுமையாக நம்பும் துலாம் ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராகுவும், ஒன்பதாம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு 5 மற்றும் ராசியில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு 11, 7ம் இடத்தில் பதிகிறது. ராகு கேது பெயர்ச்சியில் ராகு உங்களுக்கு அபரிமிதமான நற்பலன்களை வழங்குவார். கேதுவின் அமர்வினால் எதிர்வரும் சிரமங்கள் உரிய தெய்வ வழிபாட்டினால் அனுகூலம் தரும் வகையில் மாற்றம் பெறும். மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். திட்டங்களை புதிய கோணத்தில் வடிவமைப்பீர்கள். வெற்றியும் பணவரவும் எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க பலமான யோகம் உண்டு. பூர்வ சொத்தில் இருந்த அதிக பயன் தராத பொருட்களை கூடுதல் விலைமதிப்பில் வாங்க வேண்டாம். எதிரியாக செயல்பட்டவர் இடம்மாறிப் போகிற நன்னிலை உண்டு. உறவினர் இல்ல சுபநிகழ்ச்சியில் உரிய கவுரவம் கிடைக்கும்.
கணவன், மனைவி பொறுப்புணர்வுடன் செயல்படுவதால் மட்டுமே குடும்பத்தின் வாழ்வியல் நடைமுறை சிறப்பு தருவதாக இருக்கும். மனைவியின் உடல்நலத்திற்கு சீரான சிகிச்சை உதவும். நண்பர்களுக்கு முக்கிய தேவைகளுக்கு உதவுவதால் தேவையற்ற பணக்கடன் ஏற்படும். தந்தைவழி உறவினர் உங்களுக்கு சொல்லும் அறிவுரையை பக்குவ மனதுடன் ஏற்றுக்கொள்வதால் எதிர்காலத்தில் வளம் நிறைந்த வாழ்வு பெறுவீர்கள். தொழில் சார்ந்த வகையில் இருந்த குறையை சரிசெய்து முன்னேற்றமும் தாராள பணவரவும் காண்பீர்கள். வெளிநாடு வேலை வாய்ப்பில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும்.
தொழிலதிபர்கள்: டெக்ஸ்டைல்ஸ், பீங்கான், பிளாஸ்டிக் பொருட்கள், படகு, வலை, மோட்டார் வாகனம் உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் உற்பத்தி பெருக்கமும் சந்தையில் கூடுதல் விற்பனை வாய்ப்பும் பெறுவர். மற்றவர்களுக்கு ஆதாய வரவு இன்னும் கூடுதலாக இருக்கும். இது மூலதனமாகவும் சேமிப்பாகவும் மாறும். பணியாளர்களுடன் நல்லுறவு பலம்பெறும். வீடு, வாகனம், சொத்து சேர்க்கை கிடைக்கும். சமூகப்பணி சிறந்து கவுரவமான பதவி, பொறுப்பு தேடிவரும். குடும்பத்தின் முக்கிய தேவைகளை தாராள பணச்செலவில் நிறைவேற்றுவீர்கள். தொழில்வளர கூடுதல் அபிவிருத்தி பணியையும் மேற்கொள்வீர்கள். நம்பகத்தன்மை இல்லாதவர்களிடம் புதிய தொழிலில் கூட்டுசேரக்கூடாது.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சிறப்புடன் செயல்புரிந்து பணி இலக்கை நிறைவேற்றுவர். நிர்வாகத்தின் பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வு, விரும்பிய பணியிட மாற்றம் போன்றவை பெறலாம். சக பணியாளர்களுடன் நல்அன்பு வளரும். உங்கள் நடைமுறை வாழ்வில் ஆடம்பர செலவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நடை, உடை, பாவனையில் புதுப்பொலிவு ஏற்படும். சிலருக்கு சுயதொழில் துவங்க அனுகூலம் உண்டு. குடும்பத்தினருடன் இனிய சுற்றுலா பயணம் மேற்கொள்வீர்கள்.
வியாபாரிகள்: நகை, வாசனை திரவியங்கள், ஜவுளி, மளிகை, அழகு சாதனப் பொருட்கள், மோட்டார் உதிரிபாகங்கள், தானியம், எண்ணெய், சோப்பு, கட்டுமானப் பொருள், பர்னிச்சர், வீட்டு அலங்காரப் பொருட்கள், குளிர்பானம், மினரல் வாட்டர், காய்கறி, பழவகைகள், மலர், காகித பொருட்கள், மூலிகை எண்ணெய், வண்ண மீன்கள் உட்பட பல்வேறு பொருட்களை வியாபாரம் செய்பவர்கள் தொழில் சிறந்து தாராள பணவரவு காண்பர். வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்ய எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். சரக்கு வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். சமூக அந்தஸ்து உயரும்.
பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி பணி இலக்கை சிறப்பாக நிறைவேற்றுவர். பணி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தகுதிக்கு மீறிய வகையில் பிறருக்கு பணம் கொடுப்பதும் பொறுப்பேற்பதும் கூடாது. குடும்ப பெண்கள் குடும்ப செலவுகளுக்கான பணவரவில் தாராள நிலை காண்பர். கணவரின் குணநலன் உணர்ந்து செயல்படுவதால் மட்டுமே குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் சந்தை வாய்ப்பு கிடைத்து வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவர். லாபவிகிதம் அதிகரிக்கும்.
மாணவர்கள்: சட்டம், மருத்துவம், விவசாயம், சிவில், தகவல் தொழில்நுட்பம், ஒட்டல் மேனேஜ்மென்ட், சினிமா தொழில்நுட்பம், அழகுக்கலை, ஓவியம், ஜர்னலிசம், மரைன், ஏரோநாட்டிக்கல் துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள் உயர்ந்த தேர்ச்சி பெறுவர். வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாகும். பெற்றோர் கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்துகொள்வர். சக மாணவர்களுடன் நட்பில் முன்னேற்றம் உண்டு.
அரசியல்வாதிகள்: நீதி, நேர்மையை காக்க தியாக மனதுடன் செயல்படுவீர்கள். எதிர்வரும் குறுக்கீடு பொடிப்பொடியாகும். ஆதரவாளர்கள் கூடுதல் நம்பிக்கை கொள்வர். எதிரிகளும் வியப்புறும் வகையில் காரியம் ஆற்றி பதவி, பொறுப்பு பெறுவீர்கள். புத்திரரின் சிறந்த ஆலோசனை உங்களை அரசியலில் பிரகாசிக்க வைக்கும். நீண்டகால வழக்கில் சாதகமான தீர்வு கிடைக்கும். தொழில் நடத்துபவர்கள், வியாபாரம் சிறந்து ஆதாய பணவரவு பெறுவர். உறவினருக்கு பணஉதவி செய்வதில் கூடுதல் கவனமுடன் செயல்படவும்.
விவசாயிகள்: விவசாயம் சிறந்து பயிர் மகசூல் செழிக்கும். கால்நடை வளர்ப்பிலும் ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை தாராள பணச்செலவில் நிறைவேற்றுவீர்கள். கூடுதல் விவசாய நிலம் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு.
பரிகாரம்: ராமபிரானை வழிபடுவதால் வாழ்க்கை சிறந்து செயல் வெற்றியாகும்.
பரிகார பாடல்
மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய், செம்பொன்சேர்
கன்னிநன் மாமதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!

No comments:

Post a Comment