Oct 12, 2010

கும்ப ராசி அன்பர்களே! சனி பெயர்ச்சி

கும்ப ராசியில் பிறந்த நீங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்வீர்கள். பொறுமைசாலி. சதா ஏதாவது சிந்தினையுடன் இருப்பீர்கள். பிறரை எளிதில் எடைபோடுவீர்கள். சொந்த காரியங்களுக்குச் செலவு செய்யும் நேரத்தைவிட பிறர் காரியங்களுக்கு தான் அதிக நேரத்தைப் பயன்படுத்துவீர்கள். நண்பர் களுக்காக எதையும் செய்யும் உண்மையான அன்பு கொண்டிருப்பீர்கள். உள்ளத்தில் தோன்றியதை ஒளிவு மறைவு இல்லாமல் வெளியிடுவீர்கள். நயந்து குழைந்து மெல்லிய குரலில் பேசத் தெரியாது.

எதற்கும் விட்டுக் கொடுக்காத நீங்கள் மனைவி வந்தபின் வீண் பிடிவாதத்தைக் குறைக்கும் மனப்பக்கு வத்தை அடைவீர்கள். மிடுக்கான தோற்றம், பெருந் தன்மை, உண்மை, நேர்மை ஆகியவற்றைக் கொண்டி ருப்பீர்கள். தேவை வரும்போது எவ்வளவு பெரிய தொகையானாலும் ஏதேனும் ஒரு வழியில் சமாளித்து விடுவீர்கள். எவ்வளவு வருமானம் வந்தாலும் அவசரத்திற்கு அடுத்தவர் உதவியை நாடுவீர்கள்.

உடன் பிறந்தோர் எண்ணிக்கை குறைவாக இருக் கும். சகோதர ஆதரவு பெறமுடியாது. உங்களுடைய உழைப்பும் முயற்சியும் அடுத்தவர்களுக்கே பயன்படும். உங்களுக்குப் பயன் இல்லை. தாயாரின் அன்பும் பாசமும் உண்டு. ஆனால் அவருக்கு அடிக்கடி நிரந்தர பிணியும் ஏற்படும். உங்களை உங்கள் தகப்பனாரும் மனைவியும் புரிந்த அளவு, சகோதர- சகோதரிகளும் தாயாரும் புரிந்துகொள்வது கடினம்.

பழைய வீடுகளையும் வாகனங்களையும் புதுப் பித்து வாழ்வீர்கள். இளமைக் காலத்தில் வறுமையும் கஷ்டமும் அனுபவித்தாலும், பிறகு உங்கள் சுய முயற்சியால் நடுத்தர வயதிற்குமேல் சுய வீடு, வாகனம், ஆடம்பர வசதியும் பெற்று மேன்மையுடன் வாழ்வீர்கள். அப்பொழுது கூட பழையதை நினைத்துப் பார்ப்பீர்கள். பிறக்கும்போது குடிசையில் பிறந்தாலும் கோபுரமாக உயர வாய்ப்பு பெற்றவர். உங்களுக்குக் கிடைத்த அனுபவத்தை மற்றவர்க்கு எடுத்துரைப்பீர்கள். நீங்கள் யாரையும் அவ்வளவு எளிதில் நம்பமாட்டீர்கள். பலமுறை யோசித்துப் பார்த்து உங்களுக்கு அனுசரணையாகவோ அல்லது பிடித்ததுபோல் நடந்துகொண்டால் மட்டுமே நம்புவீர்கள். உங்கள் செயல்திறனால் பின்வரும் சந்ததியினரும் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

இசையிலும் சங்கீதத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பீர்கள். அரசியலில் நுழைந்தால் விடாமுயற்சி கொண்டு பெரும் பதவியை அடைவீர்கள். தொழில் துறையில் ஈடுபட்டாலும் பெரும் தொழிலதி பர் ஆவீர்கள். பொதுவாக நீங்கள் எப்படி வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறீர்களோ, எந்த லட்சியத்தை அடைய நினைத்து விடா முயற்சியுடன் ஈடுபடுகிறீர்களோ, அதை நிச்சயம் அடைவீர்கள் என்பதில் எவ்வித சந்தேகமம் இல்லை. எப்பொழுதும் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் கண்டச்சனியாக இருந்த சனி பகவான் உங்களுக்கு அலைச்சலையும் மனதில் நிம்மதியில்லாத நிலையையும் தந்தார். எந்தக் காரியத்தையும் முழுமையாகச் செய்ய முடியாமல் பாதியிலேயே விடும் நிலை உண்டானது. குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளும் பிரச்சினைகளும் ஏற்பட்டது. பணப்பற்றாக் குறை உண்டானது. பேச்சால் பிரச்சினை உண்டானது. வம்பு வழக்குகளைச் சந்திக்கும் நிலை உண்டானது.

இனி உங்களது ராசிக்கு எட்டாமிடத்திற்குப் பெயர்ச்சியாகி அஷ்ட மச் சனியாக செயல்படுவார். இதனால் உடல்நிலை அடிக்கடி பாதிக்கும். நரம்பு சம்பந்தமான கோளாறுகள் உண்டாக வாய்ப்புண்டு. மனதில் குழப்பங்களும் கவலைகளும் குடிகொள்ளும். குடும்பத்தில் பிரச்சினை தோன்றி மறையும். மனதில் பயம் இருந்துகொண்டே இருக்கும். இளைய சகோதரர்களால் பிரச்சினையும் கஷ்டங்களும் உண்டாகும். பதவியில் எதிர் பாராத திருப்பங்களும், சிக்கல்களும் உண்டாகும். மனதில் பல திட்டங் களை வகுத்திருப்பீர்கள். எவற்றையுமே செயல்படுத்த முடியாமல் போகும்.

இளைய சகோதரர்களின் உதவியை எதிர்பார்க்காமல் நீங்களே எந்த ஒரு காரியத்தையும் செய்யும் சூழ்நிலை உண்டாகும். மனதில் தேவையற்ற விபரீத கற்பனைகள் உண்டாகும். நண்பர்களில் ஒரு சிலரே உங்களிடம் உண்மையான அன்புடன் இருப்பார்கள். அவர்களில் ஒருவரே உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து உங்களுடன் அனுசரணையாக இருப்பார். மற்ற சில நண்பர்கள் உங்களுக்கு எதிரி யாகும் சூழ்நிலையும் உண்டாகும். கௌரவ பாதிப்புகளும் இழப்பு களும் உண்டாக வாய்ப்புண்டு. செய்தொழிலில் சில கௌரவ குறைவு கள் ஏற்பட்டாலும் பிறகு சரியாகிவிடும். தொழிலில் அன்னியர்களின் தலையீடு உண்டாகும். அவற்றைத் தடுக்க வேண்டும்.

மாணவர்கள் கல்வியில் ஆர்வமில்லாமல் பொழுதுபோக்கு நிகழ்ச்சி களில் கலந்துகொண்டு நேரத்தை வீணடிப்பார்கள். இதனால் வெளியிடங் களில் மதிப்பு குறைந்து காணப்படும். நீங்கள் யாருக்கும் வாக்குறுதி அளிப்பதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. உறவினர்களா லும் தாய்வழி சொந்தங்களாலும் உங்களுக்குத் தொல்லைகளே உண்டாகும். தாயாரின் உடல்நிலையில் பிற்போக்கான நிலை உண்டா கும். வீடு, வண்டி வாகனம் ஆகியவற்றில் வீண் செலவுகளும் சிரமங்களும் ஏற்படும். சிலர் வீடு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தால் அதிக விரயங் கள் உண்டாகும். இதனால் இரட்டிப்பு செலவுகள் ஏற்படும். சிலருக்கு வீடு அல்லது அலுவலக இடமாற்றம் உண்டாகும். அலைச்சலும் ஏற்படும். நீங்கள் செல்லும் இடம் வசதி குறைவுள்ள இடமாக இருக்கும்.

தந்தைக்குப் பாதம், கால் இவற்றில் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப் புண்டு. ஆதலால் தந்தையின் நலனில் கவனம் தேவை. தந்தைக்கு அடிக்கடி இடமாற்றங்களும் சிரமங்களும் உண்டாகும். வம்பு, வழக்கு போன்றவற்றிற்காக விரயம் செய்யும் நிலையும் தந்தைக்கு உண்டாகும். கடன் தொல்லைகளும் இருக்கும். ஒரு கடனை அடைப்பதற்குள் அடுத்த கடன் உருவாகிவிடும். தந்தைக்குக் கூட்டுத் தொழிலில் சில இழப்புகள் உண்டாகும். பண விரயமும் பொருள் விரயமும் ஏற்படும். சொந்தங்களால் தந்தைக்குச் சில அவமானங்கள் உண்டாக வாய்ப் புண்டு. ஆதலால் அவர் உறவினர்களிடம் அளவோடு நடந்து கொள்வது நல்லது. ஏற்கெனவே உறவினர்களால் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தால் அவை தற்போதும் தொடர வாய்ப்புள்ளது.

மூத்த சகோதரர்களுக்கு நிலையான தொழிலும் நன்மதிப்பும் உண்டா கும். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. வேலையில் உள்ளவர்களுக்கு சிற்சில பிரச்சினைகள் உண்டாகும். இருப்பினும் அவற்றை சமாளித்து வெற்றி பெற வாய்ப்புண்டு. கடன் கேட்ட இடத்தில் கால தாமதம் ஏற்பட்டு பிறகு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் சில பிரச்சினைகளும், பாகப் பிரிவினையில் சில குளறு படிகளும் நடக்க வாய்ப்புண்டு. இதனால் சகோதரர்களிடம் பகை உண்டா கும். ஆதலால் இந்தப் பிரச்சினைகளைப் பெரியோர் முன்னிலையில் பேசித் தீர்த்துக் கொண்டால் பிரச்சினைகள் தீர வாய்ப்புள்ளது.

உத்தியேகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளால் சில எச்சரிக்கை கள் வரும். உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்களிடமும், சக ஊழியர் களிடமும் கவனமாக நடப்பது நல்லது. இல்லையெனில் உங்களைப் பற்றி தவறான வதந்திகளை மேலதிகாரிகளிடம் கூறி உங்களுக்குக் கெட்டபெயரை உண்டாக்குவார்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாகச் செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே

வீண் வாக்குவாதங்களும் கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். உடல் நலக்குறைவுகளால் மருத்துவச் செலவுகளும் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் செய்ய வேண்டியிருக்கும்.

சனி பகவான் 3-ஆம் பார்வையாக உங்களது ராசிக்கு பத்தாமிட மான தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் செய்தொழிலில் ஏற்ற- இறக்கமான பலன் காணப்பட்டாலும் தொழிலில் பாதிப்பு ஏற்படாது. நிலையாகச் செயல்படும்! பிற்பகுதியில் லாபத்தையும் நற்பலனையும் தரும் என்று எதிர்பார்க்கலாம். தொழிலில் புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வேலையில் பாராட்டு கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் அதிக உழைப்பு தேவைபடும்.

சனி பகவான் 7- ஆம் பார்வையாக உங்களது குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் உண்டாகும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். பணப்பற்றாக்குறை இருக்காது. தேவையான பணம் சரியான நேரத்தில் வந்துசேரும். வாழ்க் கைத் துணையால் பணவரவு உண்டாகும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்காமல் உங்களது பணியை மட்டும் செய்து கொண்டிருந்தால் எந்தவிதமான வீண் பிரச்சினைகளும் ஏற்படாமல், சொல்வதை அனைவரும் கேட்டு அதன்படி செயல்படுவார்கள். இதனால் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.

சனி பகவான் 10-ஆம் பார்வையாக உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத் தைப் பார்ப்பதால் பூர்வீக சொத்துக்களில் மாற்றங்கள், சீர்திருத்தங்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகளால் சில அவமானங்களும் கௌரவக் குறைவுகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளை களால் கௌரவ இழப்புகளும் மரியாதைக் குறைவும் உண்டாகும். பிள்ளைகள் படிப்பில் நாட்டமில்லாமல் பொழுதுபோக்கு, வேடிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கல்வியில் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு சிரமங்களைக் கொடுப்பார்கள்.

உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2009- செப்டம்பர் முதல் பத்து மாத காலம் கும்ப ராசிக்கு 7-க்குடைய சூரியன் சாரத்தில் சனி சஞ்சாரம் உங்களுக்குச் சாதகமாகவே அமையும். திருமண யோகம், கணவன்- மனைவி ஒற்றுமை, பிரிந்த குடும்பம் சேர்ந்து வாழ்வது போன்ற நன்மைகளை எதிர்பார்க்கலாம். சிலருக்குப் புதிய தொழில் வாய்ப்பும் தனவருவாய் யோகமும் உண்டாகும். எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையும் தைரியமும் உருவாகும்.

அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2010- ஜூலை முதல் 14 மாத காலம் கும்ப ராசிக்கு 6- க்குடைய சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் இக்காலக்கட்டத்தில் புதிய கடன்கள் உருவாகும். சத்துரு ஜெயம் உண்டாகும். நோய் நிவர்த்தியாகும். புதிய தொழில் வாய்ப்புகளும் உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2011- செப்டம்பர் முதல் ஆறு மாத காலம் சனி பகவான் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். கும்ப ராசிக்கு 3, 10-க்குடைய செவ்வாயின் சாரம் என்பதால் சகோதரவகை சகாயமும் நன்மையும் உண்டாகும். தொழில் துறையில் முன்னேற்றமும் நண்பர்கள் உதவியும் கூட்டுத் தொழில் ஆரம்பம் போன்ற சுபப் பலன்கள் உண்டாகும்.

அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி கடினமான முயற்சிகளுக்குப் பிறகு காரிய வெற்றியையும், சோதனைகளுக்குப் பிறகு சாதனைகளையும் செயல்படுத்திக் கொடுக்கும். உடன் பிறந்தவர்கள் வகையில் மனக்கசப்பு கள் மாறி நட்பும் நல்லுறவும் மலரும். பொருளாதாரத்தில் ஏற்ற- தாழ்வுகள் இருந்தாலும் தேவைக்கேற்ற தனவரவு இருக்கும்.

சதய நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி நற்பயனைத் தருவதோடு ஆன்மிக ஈடுபாடு, கோவில் திருப்பணி, அறக்கட்டளைத் துறையில் கௌரவ பதவி, மதிப்பு, மரியாதை ஆகியவற்றை ஏற்படுத்தும். ஜோதிடம், மருத்துவம், மாந்திரீக பயிற்சியில் நாட்டமும் ஈடுபாடும் உண்டாகும். ஆன்மிகப் பயணம் ஆத்மாவுக்கு நிறைவு ஏற்படுத்தும்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி தொடக்கத்தில் கடன்களையும் போட்டி- பொறாமைகளையும் எதிர்ப்பு- இடையூறுகளையும் தந்தாலும், வாழ்க் கைத் தரமும் தொழில்துறையும் பாதிக்காத அளவில் செயல்படும். வரவுக்கு மீறிய செலவுகளை ஏற்படுத்தும். அதைப் பயனுள்ள பலன்தரும் செலவுகளாக மாற்றிக் கொள்வது உங்கள் பொறுப்பு.

பரிகாரம்

பரமக்குடி அருகில் நயினார்கோவில் என்ற ஊரில் நாகநாத சுவாமி கோவிலில் சனீஸ்வரர் தனியாக இருக்கிறார். அவரை வழிபடலாம்.

No comments:

Post a Comment