Oct 12, 2010

கன்னி ராசி அன்பர்களே சனி பெயர்ச்சி

..
கன்னி ராசியில் பிறந்த நீங்கள் நல்ல நடத்தையும், நல்ல பழக்க - வழக்கங்களையும் கைக் கொள்வீர்கள். வசீகரத் தோற்றம் கொண்டிருப்பீர்கள். யாவரிடமும் சகஜமாகப் பழகுவீர்கள். அளந்து பேசுவீர்கள். அகம்பாவம் இராது. நீங்கள் கற்றதை மற்றவர்களிடம் கூறிப் பாராட்டு பெறுவீர்கள். மற்றவர்களைக் கவர்ந்து விடுவீர்கள். பிறர்க்கு கல்வி புகட்டுவது, ஓவியம் வரைவது, மொழி மாற்றம் செய்வது போன்றவை பிடித்தவையாக இருக்கும். அதுவே தொழிலாகவும் அமையலாம். சகோதர பாசம் உண்டு. குடும்பத்திற்கு முதல் குழந்தையாக நீங்கள் பிறக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. அதிக உழைப்பு உங்களுக்குப் பிடிக்காது. மூளையை அதிகம் பயன்படுத்தி தொழில் செய்வீர்கள். தூரதேச பயணம் பிடிக்காது. ஆனால் கடல் கடந்து போகும் சூழ்நிலை ஏற்படும். பயந்த சுபாவம் கொண்டி ருப்பீர்கள். எதையும் மதி நுட்பத்தால் அதன் சூட்சமத் தைப் புரிந்து கொள்வீர்கள். எவரிடமும் சகஜமாகப் பழகுவீர்கள். நேர்வழியில் பணம் சம்பாதிக்க வேண் டும் என்ற எண்ணமுடையவர். தாய்ப்பாசம் மிகக் கொண்டவர். தாயின் ஆதரவும் அன்பும் ஆசியும் உங்கள் முன்னேற்றத்திற்கு உற்ற துணையாக இருக்கும். சுகமான வாழ்க்கையையே விரும்புவீர்கள். எவ்வளவு துன்பம் வந்தாலும், பண நெருக்கடி வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். வசதி குறையாது. பேராசை கொள்ள மாட்டீர்கள்.

சுயமான வீடு, வாகனம், நல்ல வாழ்க்கைத் துணை அமையும். குழந்தைகள் பிறந்ததும் வசதி ஏற்படும். வீடு சிறிதாக இருப்பினும் எல்லா வசதிகளும் பெற்று சுகபோகமாக வாழலாம்! எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகம் இருக்கும். எதிர்காலம் பற்றி பலவிதமான கேள்விகள் மனதில் எழும். அவற்றை மற்றவர்களிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்வீர்கள். பள்ளியில் படிப்பதைவிட நூல் நிலையங்களில் அதிக படிப்பைப் பெறுவீர்கள். படித்ததைக் குறித்து வைத்துக் கொள்வீர்கள். பொது அறிவு நிரம்பப் பெற்றவராவீர்கள். புத்தகமும் கையுமாக அறிவு ஆராய்ச்சியில் கருத்தை செலுத்திக் கொண்டிருப்பீர்கள். நீண்ட ஆயுளுடன் இருப்பீர்கள். துணிச்சலான காரியங்களில் அடிக்கடி ஈடுபடுவீர்கள். தூக்கத்திலும் உங்களுக்கு விழிப்பு உண்டு. ஞாபகசக்தி அதிகம் கொண்டிருப்பீர்கள். எளிதில் யாரிடமும் ஏமாறமாட்டீர்கள். ஆனால் புகழ்ச்சிக்கு மயங்குவீர்கள். புராதன பொருள், புத்தகம் மற்றும் கலைப் பொருள் வாங்குவதில் ஆர்வம் இருக்கும். பலனை எதிர்பாராமல் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

தர்ம காரியங்கள் மற்றும் புண்ணிய ஸ்தலங்கள் செல்வீர்கள். கோவில் திருப்பணிகள் செய்வீர்கள்.

உங்களுடைய ராசிக்கு பன்னிரன்டாம் இடத்தில் விரயச் சனியாக இருந்த ஸ்ரீ சனி பகவான் கடந்த காலங்களில் உங்களுக்குப் பிரச்சினைகளையும் சிறுசிறு விபத்துக்களையும் கொடுத்தார். மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பால் கல்வியில் தேர்ச்சி பெறமுடியாத நிலையும் உண்டானது. எதிலும் மந்தத் தன்மையும் ஏற்பட்டது. எக்காரியத்தையும் விரைவாக முடிக்க முடியாதபடி தடைகளும் குறுக்கீடுகளும், உடலில் சோர்வும் தளர்வும் உண்டானது. கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடும் மனக் கசப்புகளும் சிலசமயம் ஏற்பட்டாலும் பிறகு சமாதானம் ஆகிவிடும். சிலர் விவகாரத்து பெறும் அளவிற்கு நிலைமை மோசமடையும்.

இனி சனி பகவான் உங்களுடைய ராசியில் அமர்ந்து ஜென்மச் சனியாகச் செயல்படுவார். 30 வயதிற்கு மேற்பட்டோர்க்கு இந்தச் சுற்று இரண்டாவது சுற்று- பொங்கு சனியாகச் செயல்படும். அதிக நற்பலன் உண்டாகும். 30 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்கும் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும் சிரமங்களை உண்டாக்கலாம்! திருமணத்தில் பிரச்சினைகளும் திருமணத்தடையும் உண்டாகும். கடன் தொல்லை அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவியில் உள்ளவர்களுக்குப் பிரச்சினைகளும் சிக்கல்களும் உருவாகும். திடீர் திடீரென பிரச்சினைகள் உருவாகி உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாகச் செல்ல வேண்டும். சிலருக்கு விபத்துகளும், ஆயுளுக்கு ஒப்பான கண்டங்களும் ஏற்படக்கூடிய வாய்ப்புண்டு. பரிகாரம் செய்து கொள்ளவும். தாய்வழி சொந்தங்களால் தொல்லைகளும் இடையூறுகளும் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுங்கள். நண்பர்களால் தீய பழக்க - வழக்கங்களைக் கற்றுக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். அதனால் போதை வஸ்துகளுக்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்ளவும். மனதில் தன்னம்பிக்கை குறையும். உங்களுக்கு மனதில் இனம்புரியாத பயம் இருந்து கொண்டிருக்கும். குறிப்பாக உடல்நிலை பற்றிய பயமும் சந்தேகமும் உண்டாகும். அதனால் மருத்துவச் செலவு உண்டாகும். நண்பர்கள், உறவினர்களை நம்பி எக்காரியத்திலும் இறங்க வேண்டாம். அது உங்களுக்கு ஆபத்தாகவே முடியும். சகோதர - சகோதரிகள் நம்பிக்கைத் துரோகமும் செய்வார்கள். சொன்ன வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகும். நண்பர்கள்தான் காப்பாற்றுவார்கள். பணத்தட்டுப்பாடு இருக்கும்.

கேட்ட இடத்தில் பணம் கிடைக்க தாமதமாகும். குடும்பத்தில் புதுப் புது சிக்கல்கள் உருவாகும். ஒரு பிரச்சினை தீருவதற்குள் அடுத்த பிரச்சினைகள் உருவாகிவிடும். குடும்பத்தில் ஏதாவது பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும். எக்காரியத்தையும் கஷ்டப்பட்டுதான் செய்து முடிக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் விருப்பம் இல்லாமல் சதா ஊர் சுற்றிக் கொண்டே இருப்பார்கள். கடனை அடைக்க மிகவும் சிரமப்படுவீர்கள். இதனால் கடன் கொடுத்தவர்கள் உங்களை அவமானப் படுத்துவார்கள். மேற்படிப்பு படிக்க முயல்பவர்களுக்கு அதில் தடை உண்டாகும். விடா முயற்சி தேவை! சிலசமயம் சில காரியங்களில் சொந்தங்களும் நண்பர்களும் ஒதுங்கி நிற்பதால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள்! வம்பு, வழக்கு ஆகியவை வரும். மூத்த சகோதரர்களால் தொல்லைகளும் சங்கடங்களும் அதிகரிக்கும். செய்தொழிலில் ஏற்ற - இறக்கமான பலனே உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும்.

தந்தைக்குச் சிறப்பான பலனைத் தரும். தந்தைக்கு தொழிலில் லாபமும் கௌரவமும் கூடும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் உடன் மறையும். வாகனத்தில் கோளாறுகள் ஏற்பட்டு உங்களுக்குச் செலவுகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சலும் சோர்வும் உண்டாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. பூர்வீகச் சொத்துக்களில் பிரச்சினைகளும் வில்லங்கமும் ஏற்படும். செய்யும் தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். இளைய சகோதரர்களுக்கு கௌரவமும் மரியாதையும் கூடும். சமயத்தில் உங்களது பேச்சை யாரும் கேட்டு நடக்கமாட்டார்கள். உங்களை எதிர்த்துப் பேசும் சூழ்நிலை உண்டாகும். யாருக்காகவும் பொறுப்பேற்கக்கூடாது. எக்காரியத்திலும் அவசரமில்லாமல் நிதான மாகச் செயல்படுவது உசிதம். இதயம் சம்பந்தமான கோளாறுகள் உண்டாக வாய்ப்புண்டு.

இரும்பு, மின்சாரம், மிஷினரி போன்ற தொழில் ஈடுபாடு உண்டாகும். நேரடிக் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் மரியாதை குறையும். அவப்பெயரும் உண்டாகும். யாருடனும் சண்டையிடாமல் அனுசரித்துச் செல்வதே நல்லது. மேலதிகாரிகளிடம் கவனமாகப் பேச வேண்டும். இல்லையென்றால் வேலையிலிருந்து விலகவோ அல்லது தண்டனைக்கோ உள்ளாவீர்கள். சிலருக்கு வீடோ அல்லது அலுவலகமோ இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும். குல தெய்வ வழிபாட்டில் பங்காளிகளால் நிம்மதி குறைந்து காணப்படும். சில மனக்கசப்பான சம்பவங்களும் நடைபெறும்.

தெய்வ வழிப்பாட் டில் முழு நம்பிக்கையோடு மனதைச் செலுத்தினால் தெய்வ அருளால் பிரச்சினைகள் யாவும் குறைய வாய்ப்புண்டு.

சனி பகவான் மூன்றாம் பார்வையாக உங்களது தைரிய, வீரிய ஸ்தானத்தைப் பார்ப்பதால், சிலநேரம் உங்களது தைரியமும் வீரியமும் குறைந்து காணப்படும். இளைய சகோதர- சகோதரிகளுக்கு அவ்வப் போது உடல்நிலை பாதிக்கும். மிகவும் சோர்வுடன் காணப்படுவார்கள். அவர்களிடம் எந்த உதவியும் எதிர்பார்க்க முடியாது. தீயவர்களின் சேர்க்கை உண்டாகும்.

சனி பகவான் ஏழாம் பார்வையாக உங்களுடைய களஸ்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால் இதுவரை திருமணமாகாமல் இருந்தவர் களுக்குத் திருமணம் நடக்கும். நண்பர்களால் உதவியும் இருக்கும்; தொல்லையும் இருக்கும். கூட்டுத் தொழிலில் நல்ல முன்னேற்றமும் லாபமும் இருக்கும். கணவன் - மனைவி இடையே இருந்து வந்த பிணக்குகள் தீர்ந்து சந்தோஷமாக இருப்பார்கள். மனைவியின்பேரில் தொழில் ஆரம்பிக்கலாம்! அவர்கள் வகையில் ஓரளவு உதவி கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்! புதிய வாகனம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.

சனி பகவான் பத்தாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழிலில் மந்தத் தன்மை இருந்தாலும் கெடாது! வளர்ச்சி உண்டாகும். தொழில் அபிவிருத்திக்காக அடிக்கடி வெளியூர் சென்று வரும் சூழ்நிலை உருவாகும். வாழ்க்கையில் படிப்படியாக வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டு. தொழில் - கடன் சம்பந்தமாக சில சமயம் வாக்கைக் காப்பாற்ற முடியாத சூழ்நிலை உண்டாகும். ஆனாலும் தெய்வ பூஜை, வழிபாட்டால் நாணயம் காப்பாற்றப்படும். வியாபாரத்தில் சிறிது மாற்றம் ஏற்படும். ஆனால் ஒரு கதவு அடை பட்டால் இன்னொரு கதவு திறக்கும். தொழிலைக் காப்பாற்றலாம்.

உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2009- செப்டம்பர் முதல் பத்து மாத காலம் கன்னி ராசிக்கு விரயாதிபதி யான சூரியன் சாரத்தில் உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம். இக்காலம் பெரும் பகுதி செலவினமாகவே அமையும். தொழில், குடும்பம் இதற்காகச் செலவுகள் அடுக்கடுக்காக வந்துகொண்டே இருக்கும். பிள்ளைகளின் கல்வி அல்லது சுபச்செலவு, குடும்பத்தினரின் வைத்தியச் செலவு, சிப்பந்திகளின் செலவு என்று வரிசையாக வந்தாலும் அவற்றைச் சரிக்கட்டுமளவு வரவும் அமையும்.

அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2010- ஜூலை முதல் 14 மாதகாலம் கன்னி ராசிக்கு லாபாதிபதியான சந்திரன் சாரத்தில் அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சரிப்பார். செலவுக்குப் பின் வரவு என்ற மாதிரி கடந்த பத்து மாதம் ஏற்பட்ட செலவுகளை கடன் வாங்கிச் சமாளித்தீர்கள். இனி 14 மாத காலம் தொழில் லாபம், வரவு, சேமிப்பு உண்டாகி அந்தக் கடன்களை அடைக்கும் யோகம் உண்டாகும். அதாவது கிணற்றில் ஊற ஊற நீரை இறைக்க வேண்டும். குறிப்பாக எந்தச் சொத்துக்களையும் பொருள்களையும் அழித்தோ விற்றோ கடனை அடைக்காமல், லாபம் வரவு வந்து கடன்களை அடைக்கலாம். அதுவே யோகம்தானே!

சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2011- செப்டம்பர் முதல் ஆறு மாத காலம் சனி பகவான் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். அது செவ்வாயின் நட்சத்திரம்! கன்னி ராசிக்கு செவ்வாய் 2, 7-க்குடையவர். ஆகவே இக்காலமும் உங்களுக்கு தனவரவு, தொழில் லாபம், மனைவி, மக்கள் ஆதரவு, உதவி போன்ற எல்லா வகையிலும் கை கொடுக்கும். 7-ஆம் இடம் உபதொழில் ஸ்தானம். தொழில் விருத்தியும் சைடுபிசினஸ் வரவும் உண்டாகும். கவலையில்லை. குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிகளும் சுபச் செலவுகளும் ஏற்பட்டு மகிழ்ச்சியை அனுபவிக்கலாம்.
உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி உங்கள் வாழ்க்கை, தொழில் ஆகியவற்றில் முன்னேற்றத்தையும் சேமிப்பையும் உண்டாக்கும். பழைய கடன்களை அடைத்து சுமையைக் குறைத்துவிடலாம். சிலநேரம் வைத்தியச் செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. பொருளாதார வசதியிருப்பதால் எல்லாப் பிரச்சினைகளும் எளிமையாகத் தோன்றும்.

அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி லாபத்தையும் வெற்றியையும் தரும். எங்கும் வெற்றி எதிலும் வெற்றி என்று சங்கே முழங்கு என்று பூரிப்படைய லாம். ஆனாலும் மனதில் மட்டும் ஒரு நிறைவு ஏற்படாது. காரணம் புரியாத கவலை இதயத்தில் படரும்.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி சிக்கல், சிரமம், தடை, தாமதங்களை ஏற்படுத் தும். சனிப் பெயர்ச்சித் தொடக்கத்தில் கடன்களையும் போட்டி, பொறாமைகளையும் எதிர்ப்பு, இடையூறுகளையும் தந்தால் பிற்பகுதியில் யோகத்தையும் நன்மைகளையும் தரும். சனிப் பெயர்ச்சி முற்பகுதியில் நன்மைகளைத் தந்துவிட்டால் பிற்பகுதியில் கஷ்டங் களைக் கொடுக்கும். அவரவர் அனுபவத்தையொட்டி அறிந்து கொள்ளலாம்.

பரிகாரம்

நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி போகும் பாதையில் உள்ள சுசீந்திரத்தில் தாணுமாலயன் கோவிலில் ஆஞ்சனேயர் சந்நிதி உண்டு. அவருக்கு வடைமாலை சாற்றி வழிபடவும்.

No comments:

Post a Comment