இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதம் ஆகும் . எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும் . உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் அமையும் . புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு நன்கு அமையும் . சகோதர சகோதரிகளால் ஆதாயமும் அவர்களால் நன்மையும் ஏற்படும் . எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும் . புதிய வேலைக்கு முயற்சி செய்ய வேலை வாய்ப்பு உத்திரவாதம் அமையும் . தாயாரின் உடல் நலத்தில் மிக மிக கவனம் தேவை . காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் குதூகலமாகவும் அமையும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அவர்களின் தன வரவும் ஏற்படும் .பங்குச் சந்தையில் பெரிய முதலீடு செய்ய வட்டியுடன் சேர்ந்து நல்ல லாபம் தரும் . உத்தியோகத்தில் உடன் பணிபுரிவோர்களிடம் சற்று கனமுடன் நடந்து கொள்ள வேண்டும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் நன்கு கிட்டும் . தகப்பனாரால் ஆதாயமும் அதே சமயம் அவரது உடல் ஆரோக்கியத்தால் மன வேதனையும் அமையும் . நண்பர்களால் பணவரவும் மகிழ்ச்சியும் கிட்டும் . உறவினர்களால் எதிர்பார்த்த நற்பலன்கள் அமையும் . அடிவயிறு , இதயம் , முனங்கால் பகுதிகளில் பிரச்சனைகள் தோன்றி மறையும் மிக கவனம் தேவை .
ஆதிர்ஷ்ட எண் : 3,5,8 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் ,சிவப்பு , கருப்பு .
பரிகாரம்: புதன்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வணங்கி வர நன்மை ஏற்படும் . முன்னோர்களுடைய சமாதி அல்லது சித்தர் வழிபாடு சிறப்பான பலன்களை நல்கும் .
ஆதிர்ஷ்ட எண் : 3,5,8 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் ,சிவப்பு , கருப்பு .
பரிகாரம்: புதன்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வணங்கி வர நன்மை ஏற்படும் . முன்னோர்களுடைய சமாதி அல்லது சித்தர் வழிபாடு சிறப்பான பலன்களை நல்கும் .
No comments:
Post a Comment