Jan 13, 2011

குருபெயர்ச்சி




சுயமரியாதையின் சொந்தக்காரர்களே, படிப்பறிவைக் காட்டிலும் பட்டறிவு அதிகமுள்ளவர்களே, சபையாக இருந்தாலும், சத்திரமாக இருந்தாலும் ஒரே மாதிரியாக நடந்து கொள்பவர்களே. இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டி லும் விரய வீட்டிலும் மாறி மாறி இருந்தாலும் பணவரவுக்கு குறைவில்லாமலும், வசதி வாய்ப்புகளையும், பிரபலங்களின் நட்புறவையும் ஏற்படுத்திக் கொடுத்த குரு பகவான், 21.11.2010 முதல் 7.5.2011 வரை நீடிப்பதால் கட்டி முடிக்கப்படாமல் இருந்து வந்த வீட்டை இனி முழு மூச்சுடன் முடிப்பீர்கள்.

புது வீட்டில் குடிபுகுவீர்கள். அடிக்கடி காசைக் கரைய வைத்த வாகனத்தையும் இனி மாற்றுவீர்கள். உற்றார், உறவினரிடம் கைமாற்றாக வாங்கியிருந்த பண த்தை தந்து முடிப்பீர்கள். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். பழமை வாய்ந்த வெளிமாநில புண்ணிய
தலங்கள் சென்று வருவீர்கள்.

வீண் வறட்டுக் கௌரவத்திற்காக செலவு செய்து சேமிப்புகளை கரைத்துவிடாதீர்கள். மனைவியின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். கர்ப்பப்பைக் கோளாறு, ரத்த அழுத்தம் வரக்கூடும். பிள்ளைகளை அடித்துத் திருத்தாமல் அனுசரணையாகப் பேசி அவர்களை நல்வழிப்படுத்தப் பாருங்கள். மகளின் கல்யாணத்தில் அலைச்சல் கூடுதலாகவே இருக்கும். ஆனால், நல்லவிதத்தில் திருமணத்தை முடிப்பீர்கள்.

குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் உங்களின் 4ம் வீட்டை பார்ப்பதால் உடம்பில் ஏதோ பெரிய நோய் இ ருக்கிறது என்றிருந்த பயம் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். குரு தனது 7ம் பார்வையால் உங்களின் 6ம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். சண்டைக்கு வந்தவர்களைக்கூட சமாதானமாகப் பேசி நண்பர்க ளாக்கி விடுவீர்கள். வீண் குழப்பங்கள், மன உளைச்சல் நீங்கும்.

குரு தனது 9ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8வது வீட்டைப் பார்ப்பதால் திட்டமிடாத பயணங்களும், வீண் செலவுகளும் அதிகரிக்கும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களாலும், அந்நிய நாட்டினராலும் உதவியுண்டு. அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடுமாற்றங்கள் நீங்கும். குலதெய்வக் கோயிலை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள்.

குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள்

21.11.2010 முதல் 2.1.2011 வரை:

இந்த காலகட்டங்களில் உங்களின் பாக்யாதிபதியான குரு பகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4ம் பாதத்தில் செல்வதால் வரவேண்டிய பணம் கைக்கு வந்துசேரும். பழைய வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சிலர் நகருக்கு அருகில் வீட்டு மனை வாங்கும் வாய்ப்புள்ளது. லோன் கிடைக்கும். மகளின் கல்யாணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வேலை அமையும். தந்தைவழி உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வழக்கில் வெற்றியுண்டு. பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள்.

3.1.2011 முதல் 13.3.2011 வரை:

மேற்கண்ட நாட்களில் உங்களின் ஜீவன, லாபாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் மூத்த சகோதரர் உதவுவார். சுபச் செலவுகள் வரும். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீர்ப்பீர்கள். ஆனாலும், சனி பகவான் உங்களுக்கு பாதகாதிபதியாக இருப்பதால் திடீர் இழப்புகள், ஏமாற்றங்கள், விரக்தி, குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, சோர்வு, உடல் வலி வந்து செல்லும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்து போடாதீர்கள்.

14.3.2011 முதல் 7.5.2011 வரை:

இந்த காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் தைரிய, நோய் ஸ்தானாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செ ல்வதால் உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த ஊரில் மற்றவர்கள் மதிக்கும்படியாக பொது காரியங்களை முன்னின்று செய்வீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். புதுக் கடன் வாங்குவீர்கள். வாகன விபத்து, வீண் பகை, பழிச்சொல்லுக்கு ஆளாவீர்கள். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். நெஞ்சுவலி, முதுகுவலி வந்து நீங்கும். புது நண்பர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க
வேண்டாம்.

வியாபாரிகளே, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்காமல் புதுவிதமாக யோசியுங்கள். போட்டியாளர்களை முறியடிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். வெகுநாட்கள் ஆகியும் வசூலாகாமல் இருந்த பாக்கிகளெல்லாம் இனி வசூலாகும். கொடுக்கல்&வாங்கலில் நிம்மதி ஏற்படும். பலவகையில் கடன் வாங்கி புது முதலீடுகளைப் போட்டு கடையை விரிவுபடுத்துவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள்.
வேலையாட்கள் நெருக்கமாக இ ருந்தாலும் வியாபார ரகசியங்களைக் காப்பது நல்லது. ஹோட்டல், கமிஷன், பார்மஸி வகைகளால் லாபமடைவீர்கள்.

டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவு வார்கள். கூட்டுத்தொழில் கொஞ்சம் அப்படியும் இப்படியுமாகத்தான் இருக்கும். வளைந்து கொடுத்துப் போகப்பாரு ங்கள். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

உத்யோகஸ்தர்களே, பொறுப்புகள் அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வே ண்டியது வரும். மேலதிகாரிகளிடம் கோபப்படாதீர்கள். மறைமுக எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வேலைச்சுமை குறையும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் அனாவசியமாக மூக்கை நு ழைக்காதீர்கள். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நிதானிப்பது நல்லது.

கன்னிப் பெண்களே! ஆசை வார்த்தைகளைக் கேட்டு காதலில் சிக்காதீர்கள். மேல்படிப்பில் அக்கறை காட்டுங்கள். பெற்றோரின் ஆலோசனையின்றி எந்த முடிவையும் எடுக்காதீர்கள். ஒற்றைத் தலைவலி, வயிற்றுவலி வரக்கூடும்.

மாணவர்களே! விளையாடியது போதும். படிப்பில் கவனம் செலுத்துங்கள். வகுப்பறையில் அநாவசியப் பேச்சு வே ண்டாம். கணிதம், அறிவியல் சம்பந்தப்பட்ட பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். கலைஞர்களே! கிசுகிசுக்கள், வீண் வதந்திகள் என்று உங்களை தொடர்ந்ததல்லவா, இனி கொஞ்சம் ஓயும். உங்களின் படைப்புகளுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். இருந்தாலும் மூத்த கலைஞர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

அரசியல்வாதிகளே, கட்சித் தலைமையின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக செயல்படாதீர்கள். சிலர் உங்களைப் பற்றி தவறான வதந்திகளை மேலிடத்திற்கு கொண்டு செல்லக்கூடும். விழிப்புடன் இருங்கள். தேர்தலில் வெற்றியுண்டு. விவசாயிகளே, கூட்டுறவு வங்கியில் லோன் கிடைக்கும். பழைய கடனை அரசு தள்ளுபடி செய்யும். நெல், கரும்பு உற்பத்தியால் லாபமடைவீர்கள். வீட்டில் விசேஷம் நடக்கும்.

மொத்தத்தில் இந்த குரு மாற்றம் சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிய வைப்பதுடன், வாழ்க்கையில் வெற்றி பெற கொஞ்சம் வளைந்து கொடுக்க வேண்டுமென்பதை உணர வைக்கும்.

பரிகாரம்:

தஞ்சாவூர் திருவையாறுக்கு அருகேயுள்ள திருப்பூந்துருத்தியில் அருள்பாலிக்கும் புஷ்பவனநாதரையும், வீணா தட்சிணாமூர்த்தியையும் புனர்பூசம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். அன்னதானம் செய்யுங்கள்.

No comments:

Post a Comment