Jan 13, 2011

குருபெயர்ச்சி





ஏமாளிகள் மற்றும் அப்பாவிகளுக்காக பரிந்து பேசுபவர்களே, கரடுமுரடாக வாழ்க்கை அமைந்தாலும் சரி ளக்காமல் பயணிப்பவர்களே, ஓயாத உழைப்பால் சாதனை பட்டியலில் இடம் பிடிப்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் அமர்ந்து படாதபாடு படுத்தியும், 11ம் வீட்டில் கொஞ்ச காலம் இருந்து ஓரளவு பணவரவையும் கொடுத்து வந்த குரு பகவான், இப்பொழுது 21.11.2010 முதல் லாப வீட்டிற்குள் நுழைந்து 7.5.2011 வரை நீடிப்பதால் பதுங்கியிருந்த நீங்கள் வெளிச்சத்திற்கு வருவீர்கள். சாதாரண வேலையைக்கூட முடிக்க முடியாமல் திணறினீர்களே! வரவேண்டிய பணமும் வராமல் தவித்தீர்களே! இனி எல்லாம் மாறும். பழைய கடன் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

வீட்டில் தள்ளிப்போன சுபகாரியங்கள் இனி அடுத்தடுத்து நடக்கும். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குலதெய்வக் கோயிலை புதுப்பிப்பீர்கள். அலைச்சல் ஒருபுறம் இருந் தாலும் ஆதாயமும் உண்டு. உங்கள் ராசிக்கு 3ம் வீட்டை குரு பகவான் தனது 5ம் பார்வையால் பார்ப்பதால் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். இளைய சகோதரர் வகையில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தங்கைக்கு நல்லவிதத்தில் திருமணம் முடியும்.

குரு தனது 7ம் பார்வையால் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால் குழந்தை இல்லையே என்று கோயில் கோயிலாக ஏறி இறங்கிய தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகனின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். பணப் பற்றாக்குறையினால் பாதியிலே நின்ற வீடு கட்டும் வேலையை முழுமையாக முடிப்பதற்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும். வி.ஐ.பிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். பூர்வீகச் சொத்தை தொட்டாலே பிரச்னைகள் வெடித்ததே, இனி அதற்கான தீர்வு கிடைக்கும். தாய்வழி சொந்தங்களால் ஆதாயமுண்டு.

குரு பகவான் 9ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7ம் வீட்டை பார்ப்பதால் சோர்வு, விரக்தி விலகும். புது தெம்பு பிறக்கும். கடினமான வேலையைக்கூட இனி எளிதாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். அடிமனதிலிருந்த பய உணர்வு நீங்கும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேர்வீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களை தாக்கிப் பேசியவர்கள் இனி புகழ்வார்கள். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நின்றீர்களே! இனி முதல் மரியாதை கிடைக்கும். பழுதான எலக்ட்ரிக்கல் சாதனங்களை தூர எறிந்துவிட்டு புதியது வாங்குவீர்கள். உங்களின் வெளிப்படையான பேச்சால் தடைபட்ட சில வேலைகள் விரைந்து முடியும்.

குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள்

21.11.2010 முதல் 2.1.2011 வரை:

இந்த காலகட்டங்களில் உங்களுக்கு அஷ்டம லாபாதிபதியான குரு பகவான், தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத் திரத்தின் 4ம் பாதத்தில் செல்வதால் வீண் செலவு, மனக்கவலை, ஏமாற்றம், அலைச்சல், திடீர் பயணங்கள், சகோதர ருடன் மனத்தாங்கல், சிறு சிறு விபத்துகள் என வரக்கூடும். அரசுக் காரியங்களில் அவசர முடிவுகள் வேண்டாம். சிறுநீரக நோய்த்தொற்று, சருமத்தில் நமைச்சல் வரக்கூடும். குடும்பத்தில் ஏற்படும் வீண்விவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள். யாருக்கும் அவசரப்பட்டு வாக்குறுதி தரவேண்டாம்.

3.1.2011 முதல் 13.3.2011 வரை:

மேற்கண்ட நாட்களில் உங்களின் பாக்ய, ஜீவனாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம் வரும். வீண் பயம், தாழ்வுமனப்பான்மை விலகும். திருமணம், கிரகப் பிரவேசம் சிறப்பாக முடியும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். சொத்து சேரும். உடல் ஆரோக்யம் மேம்படும். சொந் தமாக வீடு கட்டுவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். வேலை கிடைக்கும். வழக்கு வெற்றியடையும். ஷேர் மூலம் பணம் வரும். அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும்.

14.3.2011 முதல் 7.5.2011 வரை:

இந்த காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் தன, பூர்வ புண்யாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் யோகம், பணவரவு உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி கிட்டும். சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். பிள்ளை களின் கல்வி, திருமணம், உத்யோகம் திருப்திகரமாக அமையும். தந்தையாரின் உடல்நிலை சீராகும். வெளிமாநில பு ண்ணியதலங்கள் சென்று வருவீர்கள். வேற்று மொழிக்காரர்களால் அனுகூலம் உண்டு.

வியாபாரிகளே, தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். செய்ய முடியாமலிருந்த சில மாற்றங்களை இப்போது செய்வதுடன், புதிய முதலீடுகளும் செய்வீர்கள். இடவசதியில்லாமல் தவித்தீர்களே! கடையை விசாலமான இடத்திற்கு மாற்றுவீர்கள். புதுப்புது சலுகைகளை அறிவிப்பீர்கள். எலக்ட்ரானிக்ஸ், ஏற்றுமதி இறக்குமதி, இரும்பு வகைகளால் லாபமடைவீர்கள். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வரவேண்டிய பாக்கித் தொகையும் வசூலாகும். கூட்டுத்தொழிலில் பிரச்னை தந்த பங்குதாரர்களை மாற்றி அனுபவம் மிகுந்தவர்களை சேர்ப்பீர்கள்.

உத்யோகஸ்தர்களே, உங்களை கசக்கிப் பிழிந்து, உருகுலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். தள்ளிப்போன பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும். வேலைச்சுமை குறையும். தலைமை பொறுப்புக்கு நீங்கள் தகுதியானவர் என்பதை நிரூபிப்பீர்கள். சக ஊழியர்களிடம் செல்வாக்கு கூடும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வேறு நிறுவனங்களிலிருந்து அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும். அயல்நாட்டிலிருந்தும் சில வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பீர்கள். உங்கள் ரசனைக்கேற்ற வாழ்க்கைத்துணை அமையும். மாணவர்களே! நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர்கல்வியில் எதிர்பார்த் தபடி அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவீர்கள். கவிதை, கட்டுரை, இலக்கியப் போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தி பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள்.

கலைஞர்களே! வீண் வதந்திகளும், அவப்பெயர்களுமே வந்ததே. இனி உங்களின் படைப்புகளுக்கு ரசிகர் கூட்டம் அதிகரிக்கும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளே, தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத் திற்கு தெரிவியுங்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். உங்களின் பொறுப்புணர்வை மேலிடம் பாராட்டும்.

விவசாயிகளே, வாய்க்கால், வரப்புச் சண்டைகளுக்கெல்லாம் சுமுகமான தீர்வு கிடைக்கும். அடகில் வைத்திருந்த பத் திரத்தை மீட்பீர்கள். வங்கியில் கடன் கிடைக்கும். பழுதான மோட்டார் பம்புசெட்டை புதிதாக மாற்றுவீர்கள். இந்த குரு மாற்றம் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவதுடன், வருங்கால நிம்மதிக்கான வசதி வாய்ப்புகளையும் அமைத்துத் தரும்.

பரிகாரம்:

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூர்பேட்டையில் இருந்து 2 கி.மீ. தொலைவில், உளுந் தாண்டார் கோயிலில் அருள்பாலிக்கும் மாஷபுரீஸ்வரரையும், அத்தல தட்சிணாமூர்த்தியையும் பூசம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். முதியோருக்கு கம்பளி வாங்கிக் கொடுங்கள்.

No comments:

Post a Comment