Jan 13, 2011

குருபெயர்ச்சி
அதிகம் ஆசைப்படாமல் அடுத்தவர் சொத்து மீது கண் வைக்காமல், உதிக்கும்போது விதிக்கப்பட்டதை உணர்ந்து வாழ்பவர்களே!
வாக்குவாதம் என வந்து விட்டால் வரிந்துகட்டி வாதாடுபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஒன் பதாம் வீட்டில் கொஞ்சகாலம் இருந்து பணப்புழக்கத்தையும், பத்தாம் வீட்டில் கொஞ்சகாலம் இருந்து மனப்போராட்டத்தையும் மாறிமாறித் தந்த குரு பகவான், இப்பொழுது 21.11.2010 முதல் 7.5.2011 வரை பத்தாவது வீ ட்டிற்குள் நின்று பலன் தரப்போகிறார்.

பத்தாம் இடமென்றால் பதவி ஸ்தானமாச்சே! பதவி, புகழெல்லாம் பறிபோய்விடுமே என்று பதட்டப்படாதீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதி
களான சனி பகவானின் நட்சத்திரத்தில் 3.1.2011 முதல் 13.3.2011 வரையிலும், புதனின் நட்சத்திரத்தில் 14.3.2011 முதல் 7.5.2011 வரையிலும் குரு பகவான் செல்ல இருப்பதால் ஓரளவு நல்ல பலன்களே உ ண்டாகும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் உங்களின் 2ம் வீட்டை பார்ப்பதால் பேச்சிலிருந்த தடுமாற்றம், பயம் நீங்கும். வரவேண்டிய பணம் வரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார், கெட்டவர் யார் என்பதை உணருவீர்கள். வி.ஐ.பிகள் தக்க நேரத்தில் உங்களுக்கு உதவுவார்கள். பல வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். என்றாலும் நேரம் கடந்து சாப்பிடுவதை தவிர்க்கப் பாருங்கள். வாகனங்களில் செல்லும்போது வேக த்தை குறைத்துச் செல்லுங்கள். அவசரம் தவிர வேறு சமயங்களில் இரவு நேரப் பயணத்தை தவிர்ப்பது நல்லது.

குரு தனது ஏழாம் பார்வையால் உங்களின் சுக வீடான 4ம் வீட்டைப் பார்ப்பதால் தாயுடன் அவ்வப்போது இருந்து வந்த கருத்துமோதல்கள் விலகும். அவரின் உடல்நிலையும் சீராகும். தாய்வழிச் சொந்த பந்தங்கள் உதவுவார்கள். ஆனாலும் குரு உங்களுக்கு பாதகாதிபதி என்பதால் அவ்வப்போது வீண் கலக்கம், மன உளைச்சல், தண்டச்செலவு கள், கணவன் மனைவிக்குள் கருத்துமோதல்கள் என தொடரும். உங்களுக்குள் எப்போதும் மூன்றாம் நபர் தலையீ ட்டை தவிர்ப்பது நல்லது.

பிள்ளைகளின் பொறுப்பில்லாத போக்கை நினைத்து வருந்துவீர்கள். அவர்களின் போக்கிலேயே சென்று திருத்தப் பாருங்கள். அவர்களின் எதிர்காலம் குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்களின் 6ம் வீட்டை குரு பகவான் தனது 9ம் பார்வையாக பார்ப்பதால் பழைய கடனை அடைப்பதற்கு புது வழி பிறக்கும். இழுபறியாக இருந்த வழக்கிலும் வெற்றியுண்டு.

வெகுநாட்களாக தள்ளிப்போய்க் கொண்டிருந்த பிரார்த்தனைகளை இப்போது நிறைவேற்றுவீர்கள். எங்கேயாவது அவசரமாக சென்றபோதெல்லாம் உங்கள் வண்டி சதி செய்ததே. அடிக்கடி செலவும் வைத்ததே. இனி நவீனரக வாகனத்தை வாங்குவீர்கள். கௌரவத்தை காப்பாற்றுவதாக நினைத்து வீண் செலவுகளை செய்யாதீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள்

21.11.2010 முதல் 2.1.2011 வரை:

இந்த காலகட்டங்களில் உங்கள் பாதகாதிபதியான குரு பகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4ம் பாதத்தில் செல்வதால், உத்யோகத்தில் மறைமுக இடையூறுகள், மேலதிகாரியுடன் உரசல்போக்கு வரக்கூடும். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், கருத்து மோதல், சிறு சிறு விபத்துகள் வரக்கூடும். சிலர் உங்களைப் பற்றிய தவறான வதந்திகளையும் பரப்பி விடுவார்கள். கொஞ்சம் உஷாராக இருங்கள். லேசாக கால்வலி, உடல் அசதி, செரிமானக்கோளாறு வந்து நீங்கும். அவ்வப்போது ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

3.1.2011 முதல் 13.3.2011 வரை:

மேற்கண்ட நாட்களில் உங்களின் அஷ்டம, பாக்யாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் வெகுநாட்களாக வராமலிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். திட்டமிட்டபடி வெளிமாநில புண்ணியதலங்கள் சென்று வருவீர்கள். வருங்காலத்திற்காக சேமிப்பீர்கள். என்றாலும் வீடு, வாகன பராமரிப்புச் செலவு என்று ஒருபக்கம் அதிகரிக்கத்தான் செய்யும். உடன்பிறந்தவர்களுடன் மனக்கசப்பு வரக்கூடும். அவ்வப்போது விரக்தி, சோர்வு வந்து நீங்கும்.

14.3.2011 முதல் 7.5.2011 வரை:

இந்த காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் ராசிநாதனும், சுகாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல் வதால் சோம்பல் நீங்கி சுறு
சுறுப்படைவீர்கள். குடும்ப வருமானம் உயரும். தங்க ஆபரணம் சேரும். பணப் பற்றாக்குறையால் பாதியிலேயே நின்றுபோன வீட்டை லோன் மூலம் முழுமையாக கட்டி முடிப்பீர்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த கல்யாணம் முடியும்.

வியாபாரிகளே, தொழிலில் புதிது புதிதாக வந்த போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே! இனி அவர்களுக்கெல்லாம்
பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். நவீன யுக்திகளை பயன்படுத்தி வியாபாரத்தை தழைக்கச் செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி இறக்குமதி வகைகளால் நல்ல லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழில் செழிக்கும். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

உத்யோகஸ்தர்களே, இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டியது வரும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாதீர்கள். அலு வலகத்தில் சொந்த விஷயங்களை அதிகமாகப் பேசாதீர்கள். அலுவலக ரகசியங்களை வெளியிடாதீர்கள். முக்கிய கோப்புகளை கவனமாகக் கையாளுங்கள். அடிக்கடி விடுப்புகள் எடுக்காதீர்கள். மார்ச், ஏப்ரல் மாதங்களில் நிம்மதியுண்டு. அதிக சம்பளத்துடன் பெரிய பதவி வந்தால் பலமுறை யோசித்து ஏற்பது நல்லது. மேலதிகாரியின் பாராட்டு மழையில் நனை வீர்கள்.

கன்னிப் பெண்களே, உயர்கல்வியில் அலட்சியம் வேண்டாம். பெற்றோரின் ஆலோசனையில்லாமல் எந்த முடிவையும் எடுக்காதீர்கள். ஒற்றைத் தலைவலி, மாதவிடாய்க் கோளாறு வரக்கூடும். மாணவர்களே! விளையாட்டு விளையாட்டு என்று படிப்பில் கோட்டை விட்டதெல்லாம் போதும். இனிமேல் படிப்பைத் தவிர மற்றதில் கவனம் செலுத்த வே ண்டாம்.

கலைஞர்களே! நாளுக்கு நாள் உங்களைப் பற்றிய வீண் வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனந்தளராமல் இருங்கள். புதிய வாய்ப்புகளில் சம்பள கெடுபிடி காட்டாதீர்கள். அரசியல்வாதிகளே, ஆதாரமில்லாமல் யாரையும் விமர்சிக்க வேண்டாம். தலைமைக்கு
கட்டுப்படுங்கள். சகாக்களுக்கு மத்தியில் உங்கள் செல்வாக்கைக் காட்ட கைக்காசை போட்டு செலவு செய்ய வேண்டியது வரும்.

விவசாயிகளே, விளைச்சலை அதிகப்படுத்த நவீன ஒட்டுரக விதைகளை பயன்படுத்துங்கள். மரப்பயிர்கள், காய்கறி வகைகளால் ஆதாயமுண்டு. அரசால் அனுகூலம் உண்டு. இந்த குரு மாற்றம் பணத்தின் அருமையை உணர்த்துவதுடன், மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றியை தருவதாக அமையும்.

பரிகாரம்:

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகேயுள்ள அச்சிறுப்பாக்கம் ஆட் சீஸ்வரரையும், அத்தல தட்சிணாமூர்த்தியையும் அனுஷம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். மரக்கன்று நட்டு பராமரியுங்கள்.

No comments:

Post a Comment