Jan 13, 2011

குருபெயர்ச்சி


கடமை உணர்வு கொண்ட நீங்கள் எல்லாவற்றையும் காதலிப்பவர்கள். பிறர் உங்களைக் குற்றம், குறை கூறி கு தர்க்கமாகப் பேசினாலும் மனம் தளரமாட்டீர்கள். தொலைநோக்குச் சிந்தனையால் சாதிப்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 8ம் வீட்டிலும், 9ம் வீட்டிலும் மாறி மாறி அமர்ந்து எதையும் முழுசாக செய்யவிடாமல், பலவிதங்களில் உங்களை டென்ஷனாக்கிய குரு பகவான், இப்பொழுது 21.11.2010 முதல் 7.5.2011 வரை உங்கள் ராசிக்கு பாக்ய வீடான 9ம் வீட்டில் அமர்வதால் உங்களின் திட்டங்கள் யாவும் வெற்றியடையும்.

‘ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு’ என்ற பழமொழிக்கேற்ப உங்களின் அடிப்படை வசதிகளும், அந்தஸ்தும் உயரும். எடுத்த வேலையை முடிக்க முடியாமலும், அடுத்த வேலையை தொடங்க முடியாமலும் தத்தளிக்க வைத்த குரு, இனி தொட்டதையெல் லாம் துலங்க வைப்பார். சாதுர்யமான பேச்சால் பல வேலைகளை சாதிக்க வைப்பார். செய்யும் தொழிலுக்கு இணையாக வேறொரு இணை தொழிலையும் தொடங்குவீர்கள்.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால் முகச் சுருக்கம் நீங்கி தேஜஸ் கூடும். எவ்வளவு காசு வந்தாலும் அவசரத்திற்கு எதுவும் இல்லாமல் தவித்தீர்களே! இனி நாலு காசு சேமித்து வைக்கும் அளவிற்கு வருமானம் கூடும். எப்போதும் பரபரப்பாக இருப்பதைப்போல காணப்பட்டாலும், தன் காரியத்தை சாதிக்க முடியாமல் தத்தளித்தீர்களே அந்த அவல நிலை மாறும். அதிக வட்டிக்கு கடனை வாங்கி அவஸ்தைப்பட்டீர்களே, அந்தக் கடனை அடைப்பீர்கள். இதுவரை சேமிப்பே இல்லாமல் இருந்த நீங்கள் இனி சேமிக்கத் தொடங்குவீர்கள்.

வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய திட்டங்களைத் திட்டுவீர்கள். இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த உறவினர்கள் தேடிவந்து உறவாடுவார்கள். குடும்பத்தினருடன் கூட ஒட்டாமல் ஒதுங்கி இருந்தீர்களே, இனி கலகலப்பான சூழல் ஏற்படும். வெகுநாட்களாக வீட்டில் தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்களெல்லாம் இனி அடுத்தடுத்து நடக்கும். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். மனைவி வழி உறவினர்களும் ஒத் தாசையாக இருப்பார்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கூடாப்பழக்கம் விலகும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். கல்யாணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். வீடு, வாகன வசதிகள் பெருகும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் உங்களின் 3ம் வீட்டை பார்ப்பதால் வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். நல்லது சொல்லப் போன உங்களை அதிகப்பிரசங்கி என்று அவமானப்படுத் தினார்களே! இனி உங்கள் ஆலோசனைகளை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். வெகுநாட்களாக குலதெய்வக் கோயிலுக்குப் போய் வரவேண்டுமென்று நினைத்தும் தடங்கலானதே, இப்பொழுது குடும்பத்துடன் சென்று நேர்த் திக்கடனை நிறைவேற்றுவீர்கள். பாகப்பிரிவினை மற்றும் சொத்துப் பிரச்னைகளில் இருந்துவந்த இழுபறி நிலை மாறும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றியடைவீர்கள்.

குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள்

21.11.2010 முதல் 2.1.2011 வரை:

மேற்கண்ட காலகட்டங்களில் உங்களின் பாக்யாதிபதியான குரு பகவான், தன் நட்சத்திரமான பூரட்டாதி 4ம் பாதத் தில் செல்வதால் திடீர் யோகம், பணவரவு எல்லாம் உண்டு. பழைய சொத்தை மாற்றிவிட்டு புதுச்சொத்து வாங்கு வீர்கள். மகளுக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். புது வேலை தேடி அலைந்தீர்களே, இனி நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். புது முயற்சிகளில் வெற்றியுண்டு.

3.1.2011 முதல் 13.3.2011 வரை:

மேற்கண்ட நாட்களில் உங்களின் சப்தம, அஷ்டமாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டு. கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஆனால், பிப்ரவரி மாதத்திலிருந்து சின்னச் சின்ன மனஸ்தாபங்களும், வீண் செலவுகளும், அலைச்சலும் வந்துபோகும். காலில் அடிபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விலை உயர்ந்த நகைகள், ரத்தினங்களை கவனமாகக் கையாளுங்கள். வி.ஐ.பிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

14.3.2011 முதல் 7.5.2011 வரை:

இக்காலகட்டத்தில் குரு பகவான் உங்களின் தைரிய ஸ்தானாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் வெகுநாட்களுக்குப் பிறகு பழைய நண்பர்கள், உறவினர்களின் சந்திப்பு நிகழும். அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். இளைய சகோதரர் பாசமாக இருப்பார். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும். ஷேர் மூலம் பணம் வரும். அடிக்கடி பழுதாகிக் கொண்டிருந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ஆன்மிக காரியங்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள்.

வியாபாரிகளே, பல்முனைப் போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே, இனி புது யுக்திகளைக் கையாளுவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். இணையதள விளம்பரம் மூலம் வாடிக்கையாளர்களை அதிகப்படுத் துவீர்கள். உங்களின் அதிரடியான செயல்களைக் கண்டு சக வியாபாரிகளும் திகைப்பார்கள். பொறுப்பில்லாமல் இருந்த வேலையாட்கள் இனி பம்பரமாகச் சுழல்வார்கள். ரியல் எஸ்டேட், கம்ப்யூட்டர் உதிரி பாகம், எலெக்ட்ரானிக்ஸ், கெமிக்கல் வகைகளால் லாபம்அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் ஆதாயமுண்டு. அடிக்கடி வேலையாட்கள் விடுப்பில் சென்று வெறுப்பேற்றினார்களே, இனி தொடர்ந்து ஒத்துழைப்பார்கள்.

உத்யோகஸ்தர்களே, எப்போதும் உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த மேலதிகாரி இனி புகழாரம் பாடுவார். முடிக்காமல் கிடப்பில் போடப்பட்ட வேலைகளையெல்லாம் இனி பரபரப்பாக செயல்பட்டு முடிப்பீர்கள். காத்திருந் தபடி பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உண்டு. சக ஊழியர்கள் உங்களை சண் டைக்காரர்களாக பார்த்தார்களே! இனி சிரித்துப் பேசுவார்கள். கன்னிப் பெண்களே! தடைபட்டுக் கொண்டிருந்த கல்யாணம் கூடி வரும். முகப்பரு, தேமல் நீங்கி முகம் ஜொலிக்கும். மாதவிடாய்க் கோளாறு, தூக்கமின்மை நீங்கும். தடைபட்ட கல்வியை தொடருவீர்கள்.

மாணவர்களே! விளையாட்டில் முதலிடம் பிடிப்பீர்கள். பரிசு, பாராட்டு எல்லாம் உண்டு. அதே ஆர்வத்தை படிப்பிலும் காட்டுங்களேன். கலைஞர்களே! பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும். கிசுகிசுக்கள் ஓயும். சம்பளப்பாக்கி கைக்கு வரும். அரசியல்வாதிகளே, தலைமையிடம் அனுசரித்துப் போங்கள். வீண் விமர்சனங்களை தவிர்த்து, செயலில் அக்கறை காட்டுங்கள்.

விவசாயிகளே, வரப்பு வாய்க்கால் பிரச்னைகள் எல்லாம் முடிவுக்கு வரும். உற்பத்தியை இரட்டிப்பாக்குவீர்கள். தானிய வகைகளால் ஆதாயமுண்டு. இந்த குரு மாற்றம் ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒரு கால் என்று அவதிப்பட்ட உங்களை கோபுரமாக மிளிர வைக்கும்.

பரிகாரம்:

விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு விருத்தகிரீஸ்வரரையும், விபசித்து முனிவர் மற்றும் தட்சிணாமூர் த்தியையும் மூலம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். ஏழைப்பெண்ணின் திருமணத்திற்கு மாங்கல்யம் வாங்கிக் கொடுங்கள்.

No comments:

Post a Comment