Jan 13, 2011

குரு பெயர்ச்சி


மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்பவர்களே! தனக்கென எதையும் எடுத்து வைத்துக் கொள்ளாதவர்களே! மூட நம்பிக்கைகளில் மூழ்காமல் அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர்களே! உங்கள் ராசிக்கு 12வது வீட்டிலும், ராசிக்குள்ளும் அமர்ந்து வீண்பழி, விரக்தி, விரயச் செலவு என்று உங்கள் நிம்மதியை குலைத்த குரு பகவான் இப்பொழுது 21.11.2010 முதல் 7.5.2011 வரை ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்ம குருவாக மட்டும் நீடிப்பதால் மன உளைச்சல், டென்ஷன், வேலைச்சுமை என அதிகரிக்கும்.

சில நேரங்களில் பெரிய நோய்கள் இருப்பது போன்ற பயம் வந்துபோகும். அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். பெரிய முடிவுகள் எடுக்கும்போது உணர்ச்சிவசப்பட வேண்டாம். குடும்பத்தில் நடக்கும் சின்ன சின்ன சண்டை சச்சரவுகளை எல்லாம் பெரிதாக்க வேண்டாம். அவசரப்பட்டு யாருக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம். குறுக்கு வழிகளைத் தவிர்ப்பது நல்லது. சொந்த பந் தங்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

குரு பகவான் 7ம் வீட்டையும் பார்ப்பதால் கணவன் மனைவிக்குள் அன்பு குறையாது. வீட்டில் தாமதமான திரு மணம் நல்ல விதத்தில் முடியும். சோர்ந்து கிடந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. குரு பகவான் தனது 5ம் பார்வையால் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால் குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்து நல்ல முடிவெடு ப்பீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்திலேயே வேலை கிடைக்கும். மகளின் கல்யாணம் தடபுடலாக நடந்து முடியும்.

பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். வழக்குகள் சாதகமாக அமையும். உடன்பிறந்தவர்களுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததே, இனி பாசமாகப் பேசுவார்கள். ஆனாலும் அவர்களால் கொஞ்சம் செலவுகளும் இருக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிப்பீர்கள்.
குரு பகவான் தனது 9ம் பார்வையால் உங்களின் 9ம் வீட்டைப் பார்ப்பதால், வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

தந்தையாருடன் இருந்த மனக் கசப்புகள் நீங்கும். அவரின் உடல்நிலையும் சீராகும். தந்தை வழி பாட்டன் சொத்துகள் வந்து சேரும். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். ஆன்மிகவாதிகள், சித்தர்களின் ஆசி கிட்டும். அக்கம்பக்கம் வீட்டார்கள் அன்பாக பேசுகிறார்களே என்று குடும்ப அந்தரங்க விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள்

21.11.2010 முதல் 2.1.2011 வரை:

இக்காலகட்டங்களில் உங்களின் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குரு பகவான் தன்னுடைய நட்சத்திரமான பூரட் டாதி நட்சத்திரத்தின் 4ம் பாதத்தில் செல்வதால் எந்த வேலையையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். கடன் வாங்கிய இடத்தில் பணத்தை திரும்பத் தந்து முடிப்பீர்கள். வயிற்றுவலி, சைனஸ் தொந்தரவு குறையும். முடிவெடுப்பதில் இருந்த தடுமாற்றம் நீங்கும். உத்யோகத்தில் கௌரவப்பதவி வரும். சம்பளம் உயரும். வி.ஐ.பிகள் நண்பராவார்கள்.

3.1.2011 முதல் 13.3.2011 வரை:

மேற்கண்ட நாட்களில் உங்களின் லாப, விரயாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் தடைகள் நீங்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். அரைகுறையாக நின்றுபோன கட்டிட வேலைகளை முழுமையாக முடிப்பீர்கள். வீடு வாங்க, கட்ட லோன் கிடைக்கும். மூத்த சகோதரர்,சகோதரி பண உதவி செய்வார். ஷேர் மூலம் பணம் வரும். நீண்டகாலமாக தொய்வில் இருந்த வழக்கு சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். விசேஷங்களால் வீடுகளை கட்டும். வெகுநாட்களுக்குப் பிறகு பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

14.3.2011 முதல் 7.5.2011 வரை:

இக்காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் சுக, சப்தமாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் நண் பர்கள் உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். புதன் பாதகாதிபதியாக இருப்பதால் தாயாரின் உடல்நலத் தில் கவனம் தேவை. மனைவியுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உடல்நிலை பாதிக்கும். அவ்வப்போது வரும் முன்கோபத்தால் சிலரின் நட்பை இழப்பீர்கள். வழக்கு விவகாரங்களில் அனுசரித்துப் போங்கள். சிறு சிறு விபத்துகள், வீண் செலவுகள் வந்து நீங்கும்.

வியாபாரிகளே, போட்டியாளர்களை எதிர்கொள்வதாக எண்ணிக் கொண்டு பெரிய முதலீடுகளை போடாதீர்கள். பாக்கிகளை வசூலிப்பதில் கொஞ்சம் தாமதமாகும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்ளுங்கள். வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். அனுபவமில்லாத புதுத் துறையில் கால் பதிக்க வேண்டாம்.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையே செலுத்தப் பாருங்கள். உணவு, கமிஷன், ஷேர் மூலம் லாபமுண்டு. கூட்டுத்தொழிலில் பங்கு தாரர்கள் அவ்வப்போது பிரச்னை செய்தாலும் இறுதியில் உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவார்கள்.

உத்யோகஸ்தர்களே, மேலதிகாரியுடன் இருந்து வந்த சிறு சிறு பிரச்னைகள் மறையும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வேலைச்சுமை அதிகமாக இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். மேலதிகாரியின் பாராட்டு மழையில் நனைவீர்கள். உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்கள் இனி மதிப்பார்கள். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்.

கன்னிப் பெண்களே! முடிவெடுப்பதில் அவசரம் வேண்டாம். புதிய நண்பர்களை நம்ப வேண்டாம். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள். மாதவிடாய் கோளாறு, மன உளைச்சல் வந்துபோகும். தடைபட்ட கல்வியை முழுமையாக முடிக்கப் பாருங்கள்.

மாணவர்களே! விளையாட்டுத்தனத்தைக் குறைத்துக் கொண்டு பாடத்தில் கவனம் செலுத்துங்கள். பின் வரிசையில் அமராதீர்கள்.
கலைஞர்களே! வீண் கிசுகிசுக்கள் வந்துபோகும். கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மூத்த கலைஞர்களின் ஆலோசனை கிடைக்கும். அரசியல்வாதிகளே, தலைமையிடம் சின்ன சின்ன மனத்தாங்கல் வரத்தான் செய்யும். சகாக்களுக்காக கை காசை செலவு செய்வீர்கள். தனிநபர் விமர்சனத்தை தவிர்த்து விடுங்கள். கட்சியின் முக்கிய கூட்டங்களில் முன்னணி வகிப்பீர்கள்.

விவசாயிகளே, மகசூலை அதிகப்படுத்த நவீனரக உரங்களை கையாளுவீர்கள். நெல்லைவிட கரும்பால் அதிக லாபம் கிடைக்கும். வற்றிய கிணறு சுரக்கும். இந்த குரு பெயர்ச்சி வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை கற்றுத் தருவதுடன், அவ்வப்போது வெற்றியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:

மதுரை மீனாட்சியையும் - சுந்தரேஸ்வரரையும் அத்தலத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியையும் மகம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். சாலைப் பணியாளர்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள்.

No comments:

Post a Comment