Jan 13, 2011

குரு பெயர்ச்சி





மண்ணின் மைந்தர்களான நீங்கள் வெளிப்படையாக மற்றவர்களை விமர்சிப்பீர்கள். ஆரம்பத்தில் அந்தரத்தில் கோட்டை கட்டும் நீங்கள், பிற்காலத்தில் ஆள்பவர்களுக்கு நெருக்கமாவீர்கள். உங்கள் சுக ஸ்தானாதிபதியான குரு பகவான் கடந்த ஓராண்டு காலமாக 6ம் வீட்டிலும் 7ம் வீட்டிலும் மாறிக் கொண்டே இருந்ததால் கொஞ்சம் கூட ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருந்திருக்கும்.

குடும்பத்தினருடன் கலகலப்பாக பேசி சிரித்தே வெகுநாட்கள் ஆகிப் போனதே... மனைவி, பிள்ளைகளின் சின்னச் சின்ன ஆசைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் போனதே, இப்பொழுது குரு பகவான் 21.11.2010 முதல் 7.5.2011 வரை ஏழாம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால் குழம்பிக்கிடந்த உங்கள் மனம் இனி தெளிவடையும். குடும்பத்தினர் மீது ஈடுபாடு அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும்.
வீட்டில் தடைபட்ட சுப காரியங்கள் உடனே முடியும்.

குரு பகவான் உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்ப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த கணவன் மனைவி இனி ஒன்று சேருவீர்கள். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. நெடுநாட்களாக பிள்ளையில்லாமல் தவித்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். மகனை உயர்கல் விக்காக அயல்நாட்டிற்கு அனுப்பி வைப்பீர்கள்.

மகளின் திருமணத்தை உறவினர்கள் மெச்சும்படி நடத்துவீர்கள். கே ட்ட இடத்தில் பணம் கிடைக்காமல் பாதியிலேயே வீடுகட்டும் வேலை நின்றுபோனதே, இனி தேவையான அளவு பணம் வரும். வீட்டை முழுமையாகக் கட்டி முடிப்பீர்கள். சொத்துப் பிரச்னை தீரும். மூத்த சகோதரி பண உதவி செய்வார். இளைய சகோதரர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் தொட்ட காரியம் துலங்கும். ஷேர் மூலம் பணம் வரும். வீடு, வாகன வசதி பெருகும். விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். வெளிமாநில பு ண்ணியதலங்கள் சென்று வருவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். மூத்த சகோதரர் பாசமழை பொழிவார். இனி கோபப்படாமல் பேசுவீர்கள். பழைய கசப்பான சம்பவங்களை மறப்பீர்கள்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் உங்களின் 3ம் வீட்டைப் பார்ப்பதால் கௌரவ பதவிகள் தேடிவரும். வி.ஐ.பிகளின் வீட்டு விசேஷங்களில் தனி மரியாதை கிடைக்கும். சொந்த ஊர் கோயில் திருவிழாவை முன்னின்று நடத்துவீர்கள்.

குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள்

21.11.2010 முதல் 2.1.2011 வரை:

இக்காலகட்டங்களில் உங்களின் சுக, சப்தமாதிபதியான குரு பகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4ம் பாதத்தில் செல்வதால் தடைகள் நீங்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். பூர்வீகச் சொத்தில் இருந்த சிக்கல் தீரும். வழக்குகளில் இருந்த தேக்கநிலை மாறும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் குறையும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த உரசல் போக்கு மாறும். அரசாங்கத்தால் அனுகூலமுண் டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம்அடைவீர்கள்.

3.1.2011 முதல் 13.3.2011 வரை:

மேற்கண்ட நாட்களில் உங்களின் பூர்வ புண்ய மற்றும் சத்ரு ஸ்தானாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட் சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், வீட்டில் தள்ளிப்போய்க் கொண்டிருந்த கல்யாணம், காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகள் உடனே முடியும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பணவரவு ஓரளவு நிம்மதி தருவதாக இருந்தாலும் செலவுகள் துரத்தும். பழைய கடனை போராடி பைசல் செய்வீர்கள். கனவுத் தொல்லை, தூக்கமின்மை விலகும்.

14.3.2011 முதல் 7.5.2011 வரை:

இக்காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல் வதால் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உடல் சோர்வு, அசதி, கைகால் மூட்டு வலி வந்து நீங்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். இடவசதியில்லாத வீட்டிலிருந்து விசாலமான வீட்டில் குடி புகுவீர்கள். சிலர் புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். சகோதரி உதவுவார். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள்.

வியாபாரிகளே, முடங்கிக் கிடந்த நீங்கள் புத்துயிர் பெறுவீர்கள். டிசம்பர், மார்ச் மாதங்களில் வியாபாரத்தை விரிவு படுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். புதிய ஏஜென்ஸி எடுப்பீர்கள். வராது என்றிருந்த பழைய பாக்கிகள் வந்துசே ரும். புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். படித்த, அனுபவமுள்ள வேலையாட்களை கூடுதலாக நியமிப்பீர்கள். ரியல் எஸ்டேட், உணவு விடுதி, வாகன உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். கூட்டுத்
தொழிலில் எதற்கெடுத்தாலும் நிலவி வந்த பிரச்னைகள் இனி ஓயும். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.

உத்யோகஸ்தர்களே! ஓடி ஓடி வேலை பார்த்தும் கெட்ட பெயர்தானே கிடைத்தது. இனி அந்த அவலநிலை மாறும். மேலதிகாரியின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். உங்களின் பன்முகத் திறமையை புரிந்து கொண்டு பாராட்டுவார். மறைமுக எதிர்ப்புகள், வீண்பழி, வேலைச்சுமை நீங்கும். எதிர்பார்த்திருந்த சம்பள பாக்கி கைக்கு வரும். உடன் பணிபுரிபவர்களை விமர்சித்துப் பேசவேண்டாம். மார்ச், ஏப்ரல் மாதங்களில் நினைத் தபடி பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் புதிய வாய்ப்புகளும் தேடிவரும்.

கன்னிப்பெண்களே! தடைபட்ட கல்யாணம் இனி கூடி வரும். காதல் கைகூடும். தாயாருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். நல்ல வேலையும் கிடைக்கும். இ துவரை எதிர்பார்த்திருந்த வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் வாய்ப்பு வரும். மாணவர்களே மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். விரும்பிய பாடப் பிரிவில் இடம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளே, தலைமையின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள். உங்கள்மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்குகள் தள்ளுபடியாகும். கலைஞர்களே! பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களை தேடி வரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். உங்களின் படைப்புகளை அரசு கௌரவிக்கும். எப்பொழுதோ எழுதிய நூல்களுக்கு இப்போது புதிய பாராட்டுக்கள் கிடைக்கும்.

விவசாயிகளே! விளைச்சல் அதிகரிக்கும். பக்கத்து நிலத்தையும் வாங்குமளவிற்கு வரு மானம் உயரும். பழைய பம்பு செட்டை மாற்றுவீர்கள். கிணற்றில் நீர் சுரக்கும். இந்த குரு பெயர்ச்சி சமூகத்தில் மதிப்பு, மரியாதை தருவதுடன் எதிர்பாராத திடீர் திருப்பங்களையும் அமைத்துத் தரும்.

பரிகாரம்:

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரரையும் அத்தலத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியையும் அனுஷம் நட்சத்திர நாளில் நெய் விளக்கேற்றி வணங்குங்கள். புற்றுநோய் பாதித்தவர்களுக்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment