Jan 13, 2011

குரு பெயர்ச்சி



வெகுளித்தனமான பேச்சால் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் நீங்கள், தலையை அடகு வைத்தாவது சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். தவறு செய்தால், தலைவனாக இருந்தாலும் தட்டிக் கேட்கத் தயங்கமாட்டீர்கள். இது வரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிலும், 6ம் வீட்டிலும் மாறி மாறி அமர்ந்து உங்களை பலவிதங்களிலும் சிரமப்படுத்திய குரு பகவான், இப்பொழுது 21.11.2010 முதல் 7.5.2011 வரை 6ம் வீட்டிற்குள் நீடிப்பதால் சந்தோஷத்தையும், சங்கடங்களையும் கலந்து தருவார். இந்த அமைப்பு சகட குரு ஆயிற்றே என்று பயப்படாதீர்கள்.

உங்களின் பிரபல யோகாதிபதிகளான சனி பகவான் மற்றும் புதனின் நட்சத்திரத்தில் குரு செல்வதால் அவ்வப்போது உங்களுக்கு யோகப் பலன்களையும் அள்ளித் தருவார். குரு 6ல் அமர்வதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உங்களைப் பற்றி சிலர் அவதூறாகப் பேசுவார்கள். சில காரியங்களை பலமுறை அலைந்து முடிக்க வேண்டி வரும். குடும்பத்தில் சாதாரணமாகப் பேச, அது சண்டையில் போய் முடிய வாய்ப்பிருக்கிறது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. இரவு நேரப் பயணங்களை தவிர்த்துவிடுங்கள்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் உங்களின் குடும்ப ஸ்தானமான 2ம் வீட்டைப் பார்ப்பதால், பேச்சில் இருந்த கடுமை குறையும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உங்கள் குடும்ப விஷயங்களை வெளியாளிடம் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகளால் தொல்லைகள்தானே மிஞ்சியது. இனி அவர்கள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பார்கள். உயர் கல்வியில் வெற்றி பெற்று உங்களை தலைநிமிரச் செய்வார்கள். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னைகள் எல்லாம் ஓயும். சகோதர, சகோதரிகள் உறுதுணையாக இருப்பார்கள்.

குரு தனது 5ம் பார்வையால் உங்களின் 10ம் வீட்டைப் பார்ப்பதால் புதிய வேலை கிடைக்கும். அரைகுறையாக நின்று போன கட்டிடப் பணிகள் முழுமையடையும். வீட்டில் தள்ளிப்போய்க் கொண்டிருந்த கல்யாணம் சிறப்பாக நடந்து முடியும். உங்களை உதறித் தள்ளிய சொந்த பந்தங்கள் இனி வலிய வந்து பேசுவார்கள். இயக்கம், சங்கம் இவற்றில் சேருவீர்கள். முக்கிய பதவிகள் கிடைக்கும்.

சூழ்ச்சியால் உத்யோகத்தில் பதவி உயர்வை இழந்தீர்களே! இனி சம்பளம் உயரும். பதவியும் உயரும். அலுவலக சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி கிடைக்கும். குரு தனது 7ம் பார்வையால் உங்களின் 12ம் வீட்டை பார்ப்பதால் வீண் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் பாக்கியம் கிட்டும்.

குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள்

21.11.2010 முதல் 2.1.2011 வரை:

இந்த காலகட்டங்களில் உங்களின் தைரிய ஸ்தானாதிபதியான குரு பகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத் திரத்தின் 4ம் பாதத்தில் செல்வதால் எதிர்பாராத பயணங்கள், சுபச் செலவுகள், அலைச்சல் என வந்துபோகும். திட் டமிட்டபடி சில காரியங்களை செய்ய முடியாமல் போகும். சில நேரங்களில் இனந்தெரியாத கவலைகள், விரக்தி, வேலைச்சுமை, பொருள் இழப்பு, மருத்துவச் செலவு வந்து செல்லும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்து போடாதீர்கள். வீணாக சந்தேகப்பட்டு நல்லவர்களை இழக்க வேண்டி வரும்.

3.1.2011 முதல் 13.3.2011 வரை:

மேற்கண்ட நாட்களில் உங்களின் சுக, பூர்வ, புண்யாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் மனதிலிருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் நிலவி வந்த பூசல்கள் மறையும். பிரிந் தவர்கள் ஒன்று சேருவீர்கள். மகளுக்கு வேலை கிடைக்கும். திருமணமும் நல்ல விதத்தில் முடியும். உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகள் வெளிநாடு செல்வார்கள். குழந்தை பாக்யம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். தாயாருக்கு இருந்த மூட்டுவலி, முழங்கால் வலிகளெல்லாம் நீங்கும். சிலருக்கு அயல்நாடு சென்று வரும் வாய்ப்பு உண்டாகும்.

14.3.2011 முதல் 7.5.2011 வரை:

இந்த காலகட்டத்தில் குரு பகவான் உங்களின் பாக்ய, விரய ஸ்தானாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செ ல்வதால் நினைத்த வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் தக்க சமயத்தில் கைக்கு வரும். கடனாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். தந்தை வழியில் உதவியுண்டு. உறவினர்கள், நண்பர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். கௌரவப் பதவிகள் தேடிவரும். சோம்பல், விரக்தி, தூக்கமின்மை விலகும். பழைய நண்பர்களால் ஆதாயமுண்டு. ஓட்டை உடைசலாக இருந்த வாகனத்தை மாற்றிவிட்டு புது வண்டியில் வலம் வருவீர்கள்.

வியாபாரிகளே, தேங்கிக்கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வரவேண்டிய பழைய பாக்கிகளெல்லாம் வசூலாகும். கடையை கொஞ்சம் அழகுபடுத்துவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலையாட்கள் சில நேரங்களில் நன்றி மறந்து பேசுவார்கள். வாடிக்கையாளர்களை கனிவாக நட த்துங்கள். நவீன யுக்திகளை பயன்படுத்தி வியாபாரத்தை பெருக்கப் பார்ப்பீர்கள். உணவு, கமிஷன், ரியல் எஸ்டேட், மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்து நீங்கும்.

உத்யோகஸ்தர்களே, காலநேரம் பார்க்காமல் உழைக்க வேண்டியது வரும். என்றாலும் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். எப்போது பதவி உயரும் என காத்திருந்தீர்களே, மார்ச், ஏப்ரல் மாதங்களில் சம்பள உயர்வுடன் பதவி உயர்வும் உண்டு. சக ஊழியர்களிடம் சொந்த விஷயங்களை பேசாமல் இருப்பது நல்லது.

கன்னிப் பெண்களே! தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கசந்த காதல் இனிக்கும். மறதி, மந்த நிலையிலிருந்து விடுபடுவீர்கள். மாதவிடாய்க் கோளாறு, ஒற்றைத் தலைவலி, கண் எரிச்சல் நீங்கும். கல்யாணம் கூடிவரும்.

மாணவர்களே! விளையாட்டை குறைத்து உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நினைவாற்றலை அதிகப்ப டுத்த விடைகளை எழுதிப் பாருங்கள். விடியற்காலையில் எழும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்களே! வெகுநாட்களாக தடைபட்ட வாய்ப்பு இனி கூடி வரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். வெளிநாட்டு புது நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.

அரசியல்வாதிகளே, தலைமைக்கு நெருக்கமாவீர்கள். பொதுக் கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். தனிநபர் விமர்சனத் தை தவிர்த்து விடுங்கள். சகாக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். எதிர்க்கட்சியினர் சிலர் விமர்சனம் செய்வார்கள். கவலை வேண்டாம்.

விவசாயிகளே, சிறு சிறு பிரச்னைகளுக்கெல்லாம் கோர்ட், கேஸ் என்று போகாமல் சுமுகமாகப் பேசி முடிக்கப் பாருங்கள். மகசூலை அதிகப்படுத்த மாற்றுப் பயிரிடுங்கள். எண்ணெய் வித்துகளால் ஆதாயமுண்டு. இந்த குரு மாற்றம் ஏழரைச் சனியின் தாக்கத்தை ஓரளவு குறைப்பதுடன், மாறுபட்ட அனுபவங்களையும், சில வெற்றிகளையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரையும், அத்தலத்திலேயே அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியையும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். வாய் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment