பணத்திற்கும் பகட்டான வாழ்க்கைக்கும் மயங்காத உங்களை, பகடைக்காயாக உருட்டினாலும் கொண்ட கொள்கையிலிருந்து மாறுபட மாட்டீர்கள். நீதி, நியாயம் பற்றிப் பேசும் நீங்கள், அடிபட்டவர்களை அரவணைப்பீர்கள். இதுவரை குரு பகவான் 4ம் வீட்டிலும், 5ம் வீட்டிலும் மாறிமாறி நின்று கொஞ்சம் தடுமாற்றத் தையும், கொஞ்சம் மகிழ்ச்சியையும் கொடுத்தார். இப்பொழுது 21.11.2010 முதல் 5ம் வீட்டிற்குள் நுழைந்து 7.5.2011 வரை நீடிப்பதால் உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவார்.
எதிர்பாராத திடீர் யோகங்கள் உண்டாகும். இழுத்துப் பறித்துக் கொண்டிருந்த சில காரியங்கள் உடனே முடியும். கு டும்பத்தில் வீசி வந்த புயல் விலகும். உண்மையைப் பேசி பொல்லாதவர்கள் ஆனீர்களே, வீட்டிற்குள் நுழைந்தாலே என்ன நடக்குமோ என்ற படபடப்பு இருந்ததே, இனி அந்த அவல நிலையெல்லாம் மாறும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வசதி வாய்ப்புகள் இருந்தும் துள்ளி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என்று ஏங்கித் தவித்த தம்பதியருக்கு வாரிசு உருவாகும்.
பழைய சொத்தை விற்று புதுச் சொத்து வாங்குவீர்கள். குரு உங்கள் ராசியை பார்ப்பதால் விரக்தி, இனம்புரியாத கவலையிலிருந்து விடுபடுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். உள்ளத்தில் தெளிவு பிறக்கும். குரு பகவான் தனது 5ம் பார்வையால் உங்களின் 9ம் வீட்டைப் பார்ப்பதால் அப்பாவுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தந்தை வழிச் சொத்துகள் கைக்கு வந்து சேரும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். நாடாளுபவர்கள், சமூக அந்தஸ்துள்ளவர்கள் உதவுவார்கள். அதிக சமூக சேவைகளில் ஈடுபடுவீர்கள்.
குரு பகவான் தனது 7ம் பார்வையால் உங்களுடைய லாப வீட்டைப் பார்ப்பதால் மூத்த சகோதரர், சகோதரிகளுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கி பாசமழை பொழிவார்கள். வாகன வசதி பெருகும். இழுபறியான வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பழுதான டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினை மாற்றுவீர்கள். தங்க ஆபரணம், ரத்தினங்கள் சேரும். பழைய கடன் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள்
21.11.2010 முதல் 2.1.2011 வரை:
இந்த காலகட்டங்களில் உங்களின் தன, பூர்வ புண்யாதிபதியான குரு பகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி 4ம் பாதத்தில் செல்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வீண் விவாதங்கள் நீங்கும். வெகுநாட்களாக தள்ளிப்போய்க் கொண்டிருந்த கல்யாணம் கூடி வரும். சீமந்தம், காதுகுத்து என வீடு களை கட்டும். ஷேர் மூலம் பணம் வரும். வெளிமாநில புண்ணிய நதிகளில் நீராடுவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.
3.1.2011 முதல் 13.3.2011 வரை:
மேற்கண்ட நாட்களில் தைரிய, சுகாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல் வதால் இளைய சகோதர வகையில் அடிக்கடி இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டு. ஆலயத்தை புதுப்பிக்க உதவுவீர்கள். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடம் கருத்து மோதல்கள் வெடிக்கும்.
14.3.2011 முதல் 7.5.2011 வரை:
இந்த காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் அஷ்டம லாபாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட முறை முயன்றுதான் எந்த வேலையையும் முடிக்க வேண்டி வரும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். ஒரு சொத்தை காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண் டியது வரும். மூத்த அண்ணன் உதவுவார். சில நாட்களில் வருங்காலம் குறித்த கவலைகளால் தூக்கம் குறையும். வெளிநாட்டுப் பயணங்கள் தேடி வரும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.
வியாபாரிகளே, சந்தை நிலவரம் அறிந்து லாபத்தை பெருக்குவீர்கள். கொடுக்கல், வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் புதிய முதலீடுகளைப் போடுவதுடன் கடையை விரிவுபடுத்தி போட்டியாள ர்களை திகைக்கச் செய்வீர்கள். அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்கள் இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். புது வேலையாட்களையும் பணியில் அமர்த்துவீர்கள். வெகுநாட்களுக்குப் பிறகு பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அரிசி, எண்ணெய், மருந்து, ரசாயன வகைகள், ஏற்றுமதி இறக்குமதி வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும்.
உத்யோகஸ்தர்களே, உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு இனி பதிலடி கொடுப்பீர்கள். உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். வெகுநாட்களாக பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருந்தீர்களே, உங்களைவிட தகுதி குறைந்தவர்களுக்கெல்லாம் பதவி உயர்ந்ததே, இனி கவலைப்படாதீர்கள். ஏப்ரல், மே மாதங்களில் நீங்கள் எதிர்பார்த் தபடி பதவி உயர்வு கிடைக்கும். கூடவே சம்பளமும் உயரும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு கள் மறையும். அயல்நாட்டுத் தொடர்புடைய புதிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் அமையும்.
கன்னிப் பெண்களே! அடிக்கடி முகம் சோர்ந்து காணப்பட்டீர்களே, ஏதோ இனந்தெரியாத கவலை உங்களை வாட் டியதே, இனி அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தடைபட்டுக் கொண்டிருந்த கல் யாணம் இனி சிறப்பாக நடக்கும். தடைபட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வீர்கள். உங்களின் தகுதிக்கேற்ற நல்ல வேலையும் கிடைக்கும்.
மாணவர்களே! பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டியில் பரிசு, பாராட்டுகள் உண்டு. பெற்றோர் சொல்படி கேட்டு நடந்து கொள்ளுங்கள். வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனியுங்கள். அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். மொழிப் பாடங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.
கலைஞர்களே! கலைநயம் மிகுந்த உங்களின் படைப்புகள் பலராலும் பாராட்டிப் பேசப்படும். உங்களின் சம்பளம் உயரும். மூத்த கலைஞர்கள் உதவுவார்கள். அரசியல்வாதிகளே, கட்சிக்குள் இருந்த பூசல் விலகும். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். சகாக்களுக்கு மத்தியில் மதிப்பு கூடும்.
விவசாயிகளே, விளைச்சலை இரட்டிப்பாக்க நவீன யுக்திகளைக் கையாளுவீர்கள். மூலிகை, பயிறு லாபம் தரும். கடன் உதவியால் பக்கத்து நிலத்தையும் சேர்த்து வாங்கு வீர்கள். ஆக மொத்தம் இந்த குரு பெயர்ச்சி பிரச்னைகளால் சிதறிக் கிடந்த உங்களை சீர் செய்வதுடன், திடீர் யோகங்களையும், மன மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.
பரிகாரம்:
திருச்செந்தூரில் அருள்புரியும் முருகப் பெருமானையும், தட்சிணாமூர்த்தியையும் அஸ்வினி நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.
No comments:
Post a Comment