Mar 1, 2011

விருச்சிகம் 01.01.2011 முதல் 31.12.2011வரை


எப்பொழுதும் சுறுசுறுப்பும் தலைமை தாங்கும் யோகமும் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் உங்களுக்கு இவ்வாண்டு ஓரளவு நற்பலன்கள் நடந்தேறும் .எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் . பெயர் , புகழ் ,செல்வம் , செல்வாக்கு அதிகரிக்கும் . உங்களது தனித்தன்மை கூடும் . எப்பொழுதும் வெற்றியை மட்டுமே நினைத்து காரியம் ஆற்றுவீர்கள் .

பேச்சில் சாமர்த்தியம் கூடும் .உழைத்து சம்பாத்தியம் பொருள் நல்லபடியாக கைக்கு வந்து சேரும் , ஆடை ,ஆபரணம் ,விட்டு உபயோக பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும் . ஆரம்ப கல்வியில் நல்ல மதிப்பெண் பெற வாய்ப்பு அதிகரிக்கும் . எதிர்பாராத தனவரவு ,பொருள்வரவு அமையும்.

புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் , திறைமையும் அதிகரிக்கும் . எப்பொழுதும் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் . எழுதுவதில் , கலை துறையில் ஆர்வமும் , திறைமையும் அதிகரிக்கும் . உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் நன்மைகள் அதிகரிக்கும். அவர்கள் பிரியமுடன் நடந்து கொள்வர் . அடிக்கடி பிரயாணம் செய்ய வாய்ப்பு ஏற்படும்.தபால் மூலமாகவோ , பகுதி நேரமாகவோ , ஆன்லைன் மூலமாகவோ புதிய விஷயங்களை கற்பதில் இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி கல்வி தொடர வாய்ப்பு அமையும். உறவினர்களால் நன்மை ஏற்படும் . வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். புதிய தொழில் தொடங்க முயற்சி எடுத்து அதில் வெற்றி கிடைக்க பாடுபடுவீர்கள் இருப்பினும் எப்பொழுதும் ஒரு மனச்சலத்துடனே காணப்படுவதை தவிர்க்க வேண்டும் . இல்லையேல் நாம் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியாமல் போகும்.

உயர் கல்வி பயில நல்ல சந்தர்ப்பமும் வாய்ப்பும் அமையும் நல்ல மதிப்பெண்ணுடன் எதிர்பார்த்த கல்லூரியும் எதிர்பார்த்த துறையும் அமையும் . ஒரு சிலர்க்கு விடு , வண்டி , வாகனங்கள் வாங்க சந்தர்ப்பம் கிட்டும் . தாயாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் .அசையும் மற்றும் அசையா சொத்துக்களால் ஒரு சிலருக்கு நல்ல லாபம் ஏற்படும். அதே சமயம் உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை . உடலில் தேம்பல் , காய்ச்சல் , மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வராமல் பாதுகாத்து கொள்ளல் வேண்டும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இதுவரை வீட்டில் தள்ளி போன சுபகாரியம் இனிதே நிறைவேற சந்தர்ப்பம் அமையும். உல்லாசமாக பொழுது போக்க ஒரு சிலர் வெளியூர் , வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் கிட்டும் . காதல் விஷயங்கள் ஆரம்பத்தில் மத்திமமாயும் பின் போராட்டமும் அதன் பின் ஆசை அபிலாசையும் புர்த்தியும் அமையும். குழந்தைகளால் எதிர்பார்த்த லாபமும் அன்பும் ஏற்படும் . குழந்தைகளின் சுப காரியங்கள் நல்ல படியாக நடந்தேறும் . பங்கு சந்தையில் ஓரளவு நல்ல லாபம் கிடைக்கும் . கலைத்துறையில் இருப்பவர்கள் குறிப்பாக சின்ன த்திரை , பெரிய திரையில் இருப்பவர்கள் பெயர்,புகழ் பெறுவர் .ஆனால் எதிர்பார்த்த பணம் வந்து சேராது . விளையாட்டில் அதிக ஈடுபாடு ஏற்படும். சமுக சேவை செய்பவர்கள் . நல்ல புகழ் பெறுவர் . பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் சற்று கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும் . இல்லையேல் அசிங்கம் , அவமானம் , பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் .

வேலை இல்லாமல் வேலை தேடுபவர்களுக்கு கடும் போராட்டத்திற்கு பின் வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும் . பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விடுதல் கூடாது .ஒரு சிலருக்கு அரசு வேலையில் தாமதமானாலும் கண்டிப்பாக கிடைக்கும் . கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள் வேறு கம்பெனிக்கு மாறுவதை சற்று தள்ளி போடவும் .உடல் ஆரோக்கியத்தில் மிக அதிக கவனம் தேவை .தலை , அடி வயிறு , கண் ,ஜனன உறுப்புகளில் பிரச்சனை ஏற்பட்டால் நல்ல மருத்துவரை உடனே பார்த்துவிடவும் . வழக்குகள் இழுத்துக் கொண்டிருந்தாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும் . கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும் .புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைக்க நேரிடும் .

இதுவரை தள்ளி போன திருமணம் நடந்தேற சந்தர்ப்பம் அமையும் . சுய தொழில் அல்லது கூட்டாளியுடன் ஒரு சிலர் தொழில் செய்ய சந்தர்ப்பம் கூடிவரும் . மிகவும் கவனமுடன் செயல்படவும் . தந்தையாரின் உடல் நலத்தில் மிக அதிக கவனம் தேவை . ஒரு சிலருக்கு எதிர்பாராத தனவரவு பொருள்வரவு அமையும் .

உயர் கல்வி பயில சந்தர்ப்பம் கூடி வரும் . ஒரு சிலருக்கு உயர் கல்வி பயில வெளிநாடு செல்லும் யோகம் அமையும். இதுவரை தள்ளி போன விசா கிடைக்கும் .அடிக்கடி ஆலய தரிசனம் மற்றும் தெய்வ தரிசனம் அமையும். வேலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும்.

அரசியலில் இருப்பவர்கள் மிக கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் . விவசாயத் துறையில் இருப்பவர்கள் நல்ல வருமானம் ஈட்டுவர் ,அரசு துறை மற்றும் தனியார் துறையில் இருப்பவர்கள் வேலையில் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் .

எலெக்ட்ரிக்கள் , எலெக்ட்ரானிகஸ் , சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் , செய்தி , போக்குவரத்து , தகவல் தொடர்பு துறையில் பணிபுரிபவர்கள் ஏற்றம் பெறுவர் . ஓட்டல் , ரியல் எஸ்டேட் , கமிஷன் , ஏஜென்சி , ப்ரோகர்ஸ் நல்ல லாபம் அடைவர் . பத்திரிகை , விளம்பரத்துறை , அழகுகலையில் இருப்பவர்கள் பெயர் புகழ் பெறுவார்கள் . ஆடை , ஆபரணம் , பூ , காய்கறிகள் , பழங்கள் விற்பனை செய்வோர் , சிறுதொழில் , குறுந்தொழில் புரிவோர் ஓரளவு லாபம் அடைவர் .

பார்வதி தேவியை அல்லது அம்பாள் சன்னதி சென்று வணங்கவும் மேலும் சரஸ்வதி தேவியை வணங்கி வர எதிர்பார்த்த நற்பலன் கூடும் .

No comments:

Post a Comment