Mar 1, 2011

தனுசு 01.01.2011 முதல் 31.12.2011 வரை


வீட்டில் சுபகாரியம் நடக்க சந்தர்ப்பம் கூடும் . இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைச் செல்வம் அமைய சந்தர்ப்பம் கூடும் . பங்குச்சந்தையில் ஈடுபடுவோர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் . கலைத்துறையில் ஈடுபடுவோர்களுக்கு நல்ல பெயரும் புகழும் கிட்டும் . எதிர்பார்த்த லாபம் ஏற்படும் . காதல் விஷயங்களில் ஈடுபடுவோர்களுக்கு காதல் கணிந்து வெற்றி அடையும் . ஒரு சிலருக்கு திருமணத்தில் முடியும் .

இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும் . ஒரு சிலருக்கு புதிய கம்பெனிக்கு வேலைக்கு செல்ல வாய்ப்பு அமையும் . வேலையில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வும் , ஊதிய உயர்வும் கிட்டும் . புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைக்க நேரிடும் . உடல் ஆரோக்கியத்தில் மிக அதிக கவனம் தேவை . உடலில் கண் , தோள்பட்டை , அடிவயிறு , கால் பாதங்களில் நோய் ஏற்பட்டு விலகும் . போட்டி தேர்வு நேர்முகத் தேர்வில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் .

இதுவரை நடக்காமல் தள்ளிப்போன திருமணம் நடக்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் . சுயதொழில் புரிவோர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் செய்ய வாய்ப்பு அமையும் . கோர்ட் வழக்குகள் எதிர்பார்த்த வெற்றியை தருவதில் இழுப்பறி இருந்து கொண்டே இருக்கும் . உயர் அதிகாரிகளிடம் மிக கவனமாக பழகுதல் வேண்டும் . இல்லையேல் வேலையில் பிரச்சனை ஏற்படும் .

தந்தையாரின் உடல் நலத்தில் மிக அதிக கவனம் தேவை. ஒரு சிலருக்கு முன்னோர்கள் சொத்து அல்லது மனைவியின் மூலம் தனவரவு , பொருள்வரவு அமையும் . அதே சமயம் அதிக அளவு கடன் வாங்கி வட்டி கட்டவும் ஒரு சிலருக்கு அமையும் .

உயர் கல்வி பயில நல்ல சந்தர்ப்பம் ஆன காலம் இது .இதுவரை விசா கிடைக்காமல் தாமதமாக இருந்த நிலை மாறி விசா கிடைத்து வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் அமையும். ஒரு சிலருக்கு வேலையின் நிமித்தமாக வெளிநாடு செல்ல யோகம் ஏற்படும். ஆலய மற்றும் தெய்வ தரிசனம் செய்ய வாய்ப்பு அமையும்.செய்யும் தொழிலில் நல்ல பெயர் , புகழ் வாங்குவதில் கடுமையாகவும் உண்மையாகவும் உழைக்க வேண்டிவரும் .

நண்பர்களால் ஆதாயமும் அவர்களால் நற்பலனும் ஏற்படும் .அதே சமயம் அவர்களால் ஒரு சில மன வருத்தங்களும் ஏற்பட்டு விலகும் . உறவினர்களால் நன்மை ஏற்படும்.

அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்கள் கட்சி மாறுவதாக இருந்தால் மிக அதிக கவனம் தேவை . வெற்றி பெறுவதற்கும் கடுமையாக போராட வேண்டிவரும் . விவசாயம் எதிர்பார்த்த அளவு ஓரளவு சாதகமாக அமையும்.

நிதி,நீதி ,சட்டத்துறை ,இன்சூரன்ஸ் ,ஆசிரியர் தொழிலில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவர் .மருத்துவம் ,பொறியியல் , இராணுவம் , மற்றும் காவல்த்துறையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருத்தல் அவசியம் .

செய்தி ,தகவல் தொடர்பு ,போக்குவரத்து ,ஓட்டல் ,எலெக்ட்ரிக்கள், எலெக்ட்ரானிகஸ் ,கம்ப்யூட்டர் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் துறையில் இருப்பவர்கள் ,அரசு துறையில் பணிபுரிபவர்கள் மேன்மை அடைவார்கள்.சிறு தொழில் புரிபவர்கள் சுய தொழில் புரிபவர்கள் ஏற்றுமதி,இறக்குமதி தொழில் புரிபவர்கள் நல்ல லாபம் அடைவர் .கமிஷன் , ஏஜென்சி ,ப்ரோக்கர் ,பங்கு சந்தையில் இருப்பவர்கள் லாபமும் ,நஷ்டமும் கலந்து அனுபவிப்பர் .

நாகப்பட்டினம் " நீலாயுதாஷி " அம்மன் வணங்கி வருவதன் மூலமும் ஸ்ரீ மகா லெட்சுமியை வணங்குவதன் மூலமும் நற்பலன் அதிகரிக்கும் எண்ணிய எல்லாம் நல்லதே நடக்க வாய்ப்பு அமையும் .

No comments:

Post a Comment