Mar 1, 2011

மகரம் 01.01.2011 முதல் 31.12.2011 வரை









விடா முயற்சியும் அதில் வெற்றியையும் காணும் உங்களுக்கு புத்தாண்டு நற்பலன்களையே அதிக அளவில் வழங்க உள்ளது .இதுவரை இருந்த போராட்டங்கள் எல்லாம் நீங்கி எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் . தனித்தன்மை கூடும் . புதிய உற்சாகமும் சுறு சுறுப்பும் அதிகரிக்கும் நினைத்தை முடிக்கும் ஆற்றலும் அதற்கேற்ற சுழலும் அமையும் .

கஷ்டப்பட்டு உழைக்கும் பணம் நல்ல நிலையில் அதை முதலீடு செய்ய வாய்ப்பு அமையும் .பேசுவதில் ஆர்வமும் திறமையும் கூடும் .ஆடை ,ஆபரண சேர்க்கை ஏற்படும் . ஆரம்பகல்வி பயில்பவர்கள் ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்று மகிழ்ச்சியடைய சந்தர்ப்பம் அமையும் . நேரம் தவறாமல் உண்ண சந்தர்ப்பம் கிட்டும்.

புதிய புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும் . எப்பொழுதும் ஏதாவது ஒன்றை கற்று கொண்டே இருக்க காலம் கனிந்திடும் .தபால் மூலமாகவோ , பகுதி நேரமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ ஏதாவது கற்றும் எதையாவது தேடியும் நேரம் போய்க் கொண்டிருக்கிறோம் .கதை , கட்டுரை , கவிதை , புத்தகம் , புத்தகம் எழுவதில் ஓவியம் வரைவதிலும் கலை துறையிலும் ஆர்வமும் மகிழ்ச்சியும் கூடும் . உடன் பிறப்புகளால் நன்மை ஏற்படும். உறவினர்களால் நன்மையும் அன்பும். அதிகரிக்கும் அடிக்கடி இடமாற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு மன மாற்றமும் ஊர் மாற்றமும் அமையும். அடிக்கடி பயணம் அமையும்.ஒரு சிலர் வெளிநாடு , வெளிமாநிலம் செல்ல சந்தர்ப்பம் அமையும் .

வீடு ,இடம் , மனை வாங்குவதற்கு வாய்ப்பு அமையும். அதிகளவில் சொத்துக்களில் முதலீடு செய்ய சந்தர்ப்பம் அமையும் . தாயாரின் அன்பும் ஆதரவும் நன்கு திருப்திகரமாக இருக்கும். வீடு , வீட்டு உபயோகப் பொருட்கள் வண்டி வாகனங்கள் வாங்க காலம் கனிந்துவரும் . விவசாயத்தில் நல்ல லாபம் ஏற்படும் . புதுப்புது வகைகளைப் பயிர் செய்ய காலம் அமையும் . நல்ல கல்வியும் எதிர்பார்த்த மதிப்பெண்ணும் அதற்க்கேற்ற கல்லூரியும் அமைய வாய்ப்பு கிடைக்கும் .ஒரு சிலர் தாய்,தந்தையரை விட்டு சிறிது காலம் பிரிந்திருக்க வாய்ப்பு அமையும்.

பங்கு சந்தையில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும் . இதுவரை குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு நல்ல பெயரும் , புகழும் , பணமும் அமையும் . ஒரு சிலர் உல்லாச பொழுது போக்க வெளியூர் சுற்றுலா செல்ல சந்தர்ப்பம் அமையும் . அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருத்தல் வேண்டும் .இல்லையேல் வெற்றி என்பது கனவாகிவிடும் . இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் விட்டில் நடக்க வாய்ப்பு அமையும் . சமுக சேவை செய்பவர்கள் பொது நல வாதிகள் நல்ல பெயரும் , புகழும் அடைவர் .

உடல் ஆரோக்கியத்தில் மிக அதிக அளவில் கவனம் தேவை . தோள்பட்டை , முதுகு , கால் , அடி வயிறு இவற்றில் நோய் இல்லாதவாறு கவனித்து கொள்ளல் வேண்டும் . குறிப்பாக நரம்புத்தளர்ச்சி , ரத்த கொதிப்பு வயிற்றில் புண் ஏற்படாதவாறு பார்த்து கொள்ளல் வேண்டும் . இதுவரை வேலையில்லாமல் அலைந்து திரிந்தவர்களுக்கு வேலை கிடைக்க சந்தர்ப்பம் கை கூடும் . வேலையில் இருப்பவர்களுக்கு வேறு நல்ல கம்பெனிக்கு செல்ல நேரம் வாய்க்கும் . உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் ஏற்படும் . கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும் . கொடுத்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும் . போட்டி தேர்வு மற்றும் பந்தய தேர்வு , நேர்முக தேர்வுகளில் எதிர்பார்த்த நற்பலன் அமையும் . வழக்குகளை தவிர்த்தல் வேண்டும் . இல்லையேல் வழக்குகள் இழப்பறியே அமையும்.

தாமதமாகி வந்த திருமணம் சீக்கிரம் நடக்க சந்தர்ப்பம் அமையும் .ஏற்றுமதி,இறக்குமதி தொழில் புரிபவர்கள் நல்ல லாபம் பெறுவர் . உயர் அதிகாரிகளிடமும் , சக ஊழியர்களிடமும் கவனமாக பேசுதல் வேண்டும் . இல்லையேல் பகையும்,மனக்கசப்பும் வந்து சேரும்.தந்தையாரின் உடல் நலத்தில் மிக அதிக கவனம் தேவை .

அடிக்கடி வெளியூர் செல்ல சந்தர்ப்பம் கை கூடி வரும் . நீண்ட தூர ஸ்தலயாத்திரை செய்ய வாய்ப்பு கிட்டும் . உயர் கல்வி பயிலவும் உயர் படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு படிக்கவும் வாய்ப்பு அமையும் . ஒரு சிலருக்கு உயர் கல்வி பயிலுபவர்தற்க்காக வெளிநாடு செலும் யோகமும் கை கூடி வரும் . செய்யும் தொழிலில் நல்ல லாபம் ஏற்படும். நண்பர்களால் நல்ல நட்பும் அவர்களால் ஆதாயமும் ஏற்படும். பெரிய அளவில் சொத்துக்களில் முதலிடு செய்ய சந்தர்ப்பம் அமையும். பழைய கார் போன்ற வாகனங்களை வாங்குவதை தவிர்த்து புதிய கார் வாங்க சந்தர்ப்பம் கை கூடி வரும் .

கலை துறையில் இருப்பவர்கள் , பத்திரிக்கை , செய்தி , தகவல் தொடர்பு , போக்குவரத்து , எலெக்ட்ரிக்கல் , எலெக்ட்ரானிக்ஸ் , சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் துறையில் இருப்பவர்கள் , மத சம்பந்தமான ஆசாரியர்கள் ,ஆசிரியர்கள் ,மத குருமார்கள் , போதகர்கள் , குருக்கள் , அந்தனர்கள் , வேதவிற்பன்னர் , ஜோதிடர்கள் ஏற்றம் பெறுவர் .

ஆடை, ஆபரணம் , ஜவுளி , அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் மற்றும் விற்பவர்கள் ஓட்டல் , லாட்ஜ் , கமிஷன் ,ஏஜென்சி , ப்ரோக்கர்ஸ் தொழில் புரிபவர்கள் . நடை வியாபாரிகள் , தெரு வோரம் வியாபாரம் செய்பவர்கள் நற்பலன் அடைவர் . மருத்துவம் மற்றும் பொறியியல் துறையில் இருப்பவர்கள் இராசயனம் மற்றும் வெடி மருந்து , வெடி பொருள் உற்பத்தி செய்பவர்கள் , அணு ஆராயிச்சி நிபுணர்கள் சற்று கவனமுடன் இருப்பது நலம் . பால் , பூ , பழம் , காய்கறிகள் , பால் பண்ணை பொருட்கள் , தோட்ட தொழிலாளர்கள் , மீன் தொழில் புரிபவர்கள் நல்ல வளமான ஏற்றம் பெறுவர் .

ஸ்ரீ மகா லெட்சுமியை வணங்கி வரவும்.மேலும் மதுரை ஸ்ரீ சொக்கநாதரை வணங்கி வர எதிர்பார்த்த நற்பலன்கள் மேலும் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment