எப்பொழுதும் வெற்றியையும் அதை அமையும் வழி வகைகளைப் பற்றியுமே எப்பொழுதும் சிந்திக்கும் உங்களுக்கு புத்தாண்டு ஓரளவு நற்பலன்களையே அளிக்க வல்லதாகும் . எதிர்பார்த்த காரியங்களை சற்று தடை ஏற்பட்டாலும் இறுதியில் நல்ல படியாக நடந்தேறும் . பெயர் , புகழ் , கீர்த்தி கூடும்.அரசு அரசாங்கத்தால் ஓரளவு எதிர்பார்த்த நற்பலன் அதிகரிக்கும் .
ஆரம்பக்கல்வி பயில்பவர்கள் நல்ல மதிப்பெண் மற்றும் நல்ல பள்ளி கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு அதிகரிக்கும் . பேச்சில் சாமர்தியம் கூடும் . ஒரு சிலருக்கு ஆடை , ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும் . நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அதிகரிக்கும் . மேலும் கஷ்டப்பட்டு உழைக்கச் சம்பாதிக்கும் பணம் நல்ல வழியில் முதலீடு செய்ய வாய்ப்பு அமையும் .
எடுத்த காரியங்களில் எதிர்பார்க்கும் நற்பலன்கள் மிகுந்து காணப்படும் . புதிய விஷயங்களை கற்பதிலும் புதிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வமும் அதிகரிக்கும் . போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த லாபம் கிட்டும் . உடன் பிறந்த சகோதர சகோதிரிகளால் நன்மை ஏற்படும் . உறவினர்களால் எதிர்பார்க்கும் பலன் அமையும் . அடிக்கடி பிராயணம் செய்ய சந்தர்ப்பம் கிட்டும் . பழைய இடத்தைக் கொடுத்துவிட்டுப் . புதிய இடம் , மனை வாங்க வாய்ப்பு அமையும் . எதிர்பார்த்த செய்திகள் தகவல்கள் சாதகமாக வந்து சேரும் . அதே சமயம் உடல் ஆரோக்யத்தில் மிக அதிக கவனம் தேவை போக்குவரத்து வண்டி வாகனங்களில் மிக அதிக கவனம் தேவை .
இடம் , வீடு , மனை வாங்க சந்தர்ப்பம் அமையும் . ஒரு சிலருக்கு மதிப்பு மிக்க இடங்களில் சொத்து வாங்க வாய்ப்பு கூடும் . மேலும் வேலையில் கவனமுடன் இருத்தல் வேண்டும் . இல்லையேல் அடிக்கடி வேலையில் மாற்றம் ஏற்படும் . மேலும் தாயாரால் ஒரு யோகம் கிட்டும் . அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் மிக அதிக கவனம் தேவை . உயர் கல்வி பயில்வதில் நன்மை ஏற்படும் . எதிர்பார்க்கும் மதிப்பெண் மற்றும் கல்லூரி கிடைக்க நிறையப் போராட வேண்டி வரும் .
ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியத்தில் தடை ஏற்பட்டுப் பின் குழந்தை பிறக்கும் . குழந்தைகளால் ஒரு சிலருக்கு மன வருத்தங்களும் போராட்டங்களும் ஏற்பட்டாலும் ஒரு சிலருக்கு குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.இதுவரை காலதாமதமான சுப காரியங்கள் குடும்பத்தில் நிகழ சந்தர்ப்பம் கை கூடி வரும் . பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் சற்று கவனமுடன் இருத்தல் வேண்டும் . சமுக சேவைகள் செய்ய விருப்பம் உடையவர்கள் இதில் ஈடுபடுவதற்கு முன் நிறைய யோசனைகள் செய்வது நல்லது . பங்கு சந்தையில் ஆரம்பத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் இறுதியில் எதிர்பார்த்த லாபம் அதிகரிக்கும் . கலைத்துறையில் இருப்பவர்கள் ஏற்றமும் , புகழும் பெறுவர்.
கடன் வாங்கி சொத்து வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் . இதுவரை தள்ளிப்போன வேலை கிடைக்க சந்தர்ப்பம் கூடிவரும். வேலையில் இருப்பவர்கள் உத்யோக உயர்வும் ஊதிய உயர்வும் கிட்டும் . போட்டித்தேர்வு , பந்தயத்தேர்வு , நேர்முகத்தேர்வு , எழுத்துத்தேர்வில் வெற்றிபெற சந்தர்ப்பம் அமையும் . அதே சமயம் பார்க்கும் வேலையில் மிக அதிக கவனம் தேவை . புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைக்க நேரிடும் . கொடுத்த பணம் தேவனை முறையில் வந்து சேரும் . உடலில் மார்பு , அடி வயிறு , ஜீரண உறுப்பு , பாதங்களில் நோய் ஏற்பட்டு விலக வாய்ப்புண்டு . எனவே உடலில் சின்ன பிரச்சனை ஏற்பட்டாலும் நல்ல மருத்துவரை சென்று பார்த்தால் நலம் .
வழக்குகள் எதிர்பார்த்த அளவு வெற்றி தரும் . அதே சமயம் அந்த வெற்றியில் சோதனைகளும் ஏற்படும் . நீண்டகாலமாக தள்ளிப்போன திருமணம் நல்லவிதமாக நடந்தேறும் . ஒரு சிலருக்கு காதல் திருமணங்களும் நடக்க சந்தர்ப்பம் அமையும். உடன் பணிபுரிபவர்களிடம் மிகவும் கவனமுடன் பேசிப் பழகுதல் வேண்டும் . தேவையில்லாத விஷயங்களை பேசுதல் கூடாது .
ஒரு சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவும் தனவரவும் அமையும் . முன்னோர்கள் சொத்துக்கள் அல்லது கணவன் அல்லது மனைவி மூலம் சொத்துக்கள் அமைய வாய்ப்புண்டு . அரசாங்க விஷயங்களில் கவனமுடன் நடக்கவில்லை எனில் அரசால் தண்டிக்கப்பட நேரிடும் . எனவே அரசு விஷயத்தில் கவனம் தேவை .
ஆராய்ச்சி மற்றும் பட்ட மேற்ப்படிப்பு மற்றும் அரசாங்கத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் அதிக ஆர்வமும் விருப்பமும் ஏற்படும் . அது சம்பதமான முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பு அதிகரிக்கும் . தந்தையாரின் அன்பும் ஆதரவும் அமையும் . வெளிநாடு செல்ல இருந்த தடைகள் நீங்கி வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் . அடிக்கடி கோவில்களுக்குச் செல்ல விருப்பம் மேலோங்கும் . நண்பர்களின் அன்பும் ஆதரவும் எதிர்பார்த்த அளவிற்கு மேல் கிடைக்கும் .
ஆடை, ஆபரணம் , ஜவுளி , உணவுப் பொருட்கள் , ஓட்டல் , பழம் , பூ , காய்கறி இவற்றுடன் தொடர்பு உடையவர்கள் நல்ல லாபம் அடைவர் . சிறு தொழில் புரிபவர்கள் மற்றும் குறுந்தொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர் . உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்கள் உற்பத்திக்கு ஏற்ற லாபம் வருவதில் நிறைய தடைகள் இருப்பதால் உற்பத்தியின் அளவை குறைத்துக் கொள்ளுதல் வேண்டும் . ஆசிரியர் , நீதித்துறை , சட்டத்துறை , வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறையில் இருப்பவர்கள் மருத்துவர் மற்றும் மத சம்பந்தமான துறைகளில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருத்தல் வேண்டும் .
கமிஷன் ,ஏஜென்சி , ப்ரோக்கர்ஸ் , செய்தி , தகவல் , பத்திரிகை , சின்னத்திரை , பெரியத்திரை , சாப்ட்வேர் , ஹார்டுவேர் துறையில் இருப்பவர்கள் , ரோட்டோரம் வியாபாரம் செய்பவர்கள் , ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் லாபம் அடைவர் .
அன்னை "ஸ்ரீ சாமுண்டீஸ்வரியையும்" ஸ்ரீனிவாசப் பெருமாளையும் வணங்கி வர எதிர்பார்த்த நற்பலன் கூடி வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வளமும் அமையும் .
No comments:
Post a Comment