தெய்வ சிந்தனையும் ஆன்மிக பலமும் உடைய உங்களுக்கு இவ்வாண்டு பெயர் , புகழ் , செல்வாக்கு ஓரளவு அதிகரிக்கும் .எப்பொழுதும் சுறு சுறுப்பும் ஊக்கமும் உடையவர்களாக விளங்குவீர்கள் . எடுத்த காரியங்களில் வெற்றி பெற கடுமையாக போராடி இறுதியில் வெற்றி பெறுவீர்கள் .
ஆரம்பகல்வி பயிலுபவர்கள் ஓரளவு நல்ல மதிப்பெண் பெற சந்தர்ப்பம் அமையும் . ஒரு சிலருக்கு ஆடை , ஆபரணங்கள் அடிக்கடி வாங்க வாய்ப்பு அமையும் . பேச்சில் மிக அதிக கவனம் தேவை . தேவையில்லாமல் மற்றவர்களுடன் பேசுவதைத் தவிர்த்தல் வேண்டும் . உடன் பணிபுரிபவர்களிடமும் உயர் அதிகாரிகளிடமும் கவனமாக பேசிப் பழகுதல் வேண்டும் . கஷ்டப்பட்டு உழைக்கும் பணம் கையில் கணிசமாக மிச்சமாகும் . அதன் மூலம் எண்ணிய எண்ணம் ஓரளவு ஈடேறும் .
உடன் பிறந்த சகோதர சகோதிரிகளால் பிரச்சனையும் அதே சமயம் அவர்களால் எதிர்பாராத நற்பலன்களும் ஏற்படும் . நெருங்கிய உறவினர்களை இழக்க வேண்டி வரும் . எடுத்த காரியங்களில் முயற்சியும் புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் , திறமையும் அதிகரிக்கும் . எப்பொழுதும் சதா எதையாவது முயற்சி செய்து கொண்டோ அல்லது படித்து கொண்டோ இருக்க வாய்ப்பு ஏற்படும் . எழுவதில் , கலைத்துறையில் ஆர்வமும் , திறமையும் அதிகரிக்கும் . போட்டித்தேர்வு , நேர்முகத்தேர்வில் வெற்றி ஏற்படும் . அடிக்கடி பயணம் செய்ய வாய்ப்பு அமையும் . பயணங்கள் ஒரு சில சமயங்களில் வெற்றியும் சில சமயங்களில் தோல்வியும் ஏற்படும் . போக்குவரத்து வண்டி வாகனங்களில் மிக அதிக கவனம் தேவை . தாயாரின் உடல் நலத்தில் மிக அதிக கவனம் தேவை .
உயர் கல்வியில் நல்ல மதிப்பெண் பெறவும் எதிர்பார்த்த கல்லூரி கிடைக்க வாய்ப்பு ஏற்படும் . இடம் , மனை , வீடு நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும் . பழைய வண்டி வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்க வாய்ப்பு அமையும் . வேலை பிடிக்காமல் அடிக்கடி கம்பெனி மாறுவதைத் தவிர்த்தல் நல்லது . உற்பத்தி சார்ந்த தொழில் புரிபவர்கள் உற்பத்தியான பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க பெறுவர் .
பங்கு சந்தையில் இருப்பவர்கள் பெரிய அளவில் முதலீடு செய்வதைக் குறைத்து கால சூழ் நிலைக் கேற்றப்படி முதலீடு செய்வது நல்லது . இதுவரை குடும்பத்தில் நடக்காமல் தள்ளிப்போன சுப காரியங்கள் இனி நடக்க வாய்ப்பு கூடும் . குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்திற்கு அனுகூலம் கிட்டும் . காதல் விஷயங்களில் மகிழ்ச்சிகரமாக அமையும். ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும் , கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பெயர், புகழ் , வருமானம் கிட்டும் . ஒரு சிலருக்கு வாழ்க்கையில் போராட்டங்களும் அவமானங்களும் அடைய நேரிடும் . வேலையில் இருப்பவர்கள் அடிக்கடி விடுமுறை போட வேண்டிவரும் . எனவே மிக அதிக கவனம் தேவை . தேவையில்லாமல் விடுப்பு எடுத்தல் கூடாது . இதுவரை கிடைக்காமல் தள்ளிப்போன விசா சீக்கிரம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் .
வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும் . கிடைத்த வேலையிலும் திருப்தி இராது இருப்பினும் கிடைத்த வேலையில் மிக அதிக கவனம் செலுத்தவும் . நல்ல கம்பெனிக்கு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சற்று காலம் தாழ்த்தி நல்ல கம்பெனி அமையும் . ஒரு சிலருக்கு வேலையின் காரணமாக அடிக்கடி பயணம் செய்ய வாய்ப்பு அமையும் . போட்டித்தேர்வு , பந்தயத்தேர்வில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும் . ஒரு சிலருக்கு அரசாங்க உதவி மற்றும் உதவிப் பணம் கிடைக்கப் பெறும் . கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும் . கொடுத்த பணம் தவணை முறையில் வந்து சேரும் தலை , கண் , மார்பு , அடிவயிறு , முழங்கால் போன்ற உடல் பாகங்களில் நோய் ஏற்பட்டு விலகும் . எனவே உடல் ஆரோக்யத்தில் மிக அதிக கவனம் தேவை . ஒரு சிலருக்கு கடன் வாங்கி , வீடு , வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு அமையும் .
இதுவரை தள்ளிப்போன திருமணம் நடக்க வாய்ப்பு ஏற்படும் . சுய தொழில் புரிபவர்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட தொழில் செய்ய வாய்ப்பு அமையும்.ஓரளவு எதிபார்த்த லாபம் அமையும் . வழக்குகள் வெற்றிகரமாக அமைந்தாலும் அதில் எதிர்பார்த்த திருப்தி இராது . ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்ய ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் .
மனைவியின் மூலம் தனவரவு அல்லது முன்னோர்களின் முலமாக பொருள்வரவு எதிர்பாராத விதமாக அமையும். ஒரு சிலருக்கு அரசாங்கத்தால் தண்டிக்கப்பட வாய்ப்பு ஏற்படும் . அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் . ஆனால் கடுமையாகப் போராடியே அந்த வெற்றி கிட்டும் . விவசாயத் தொழில் புரிபவர்களுக்கு அரசின் ஆதரவும் எதிர்பார்த்த நல்ல லாபமும் ஏற்படும்.
மருத்துவம் ,பொறியியல் , நீதித்துறை மற்றும் நிதித்துறை அரசு ஊழியர்கள் ஏற்றம் பெறுவர் . செய்தி , போக்குவரத்து , தகவல் தொடர்பு , சாப்ட்வேர் ,ஹார்டுவேர் , எலெக்ட்ரிக்கல் , எலெக்ட்ரானிக்ஸ் ,ஓட்டல் , ரியல் எஸ்டேட் ,கமிஷன் ,ஏஜென்சி தொழிலில் இருப்பவர்கள் வாழ்க்கையில் ஏற்றம் பெறுவர் .
ஆடை, ஆபரணத் தொழில் ,பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்பவர்கள் . வாகன ஓட்டுனர்கள் , வாகன உரிமையாளர்கள் தொழிலில் கவனம் தேவை . பழம் , பூ , காய்கறி மற்றும் உணவுப் பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்வோர் , சிறு மற்றும் குறுந் தொழில் புரிபவர்கள் , தெருவோரம் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த அளவு ஏற்றம் பெறுவர் .
ஸ்ரீ புவனேஸ்வரியையும் , யோக நரசிங்கப் பெருமாளையும் வணங்கி வர வாழ்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்பட்டு வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும் , சந்தோஷகரமாகவும் அமையும்.
No comments:
Post a Comment