Mar 23, 2010

குருபெயர்ச்சி பலன்கள் -மகரம்




குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு டிசம்பர் 15, இரவு 11.32 மணிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2010 டிசம்பர் 3 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.


உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2
+ கோடி நன்மை
- நற்குணமே பலவீனம்
மனசாட்சிக்கு முக்கியத்துவம் தரும் மகர ராசி அன்பர்களே!
குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான கும்பத்தில் அமர்வு பெறுகிறார். தனது 5,7,9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 6,8,10ம் இடங்களை பார்க்கிறார். அஷ்டமத்து சனி, ஜென்ம ராகு, ஜென்ம குரு என்ற மோசமான நிலையில் சிக்கியிருந்த நீங்கள், சிறையில் இருந்து விடுபட்டது போல, இந்த குரு பெயர்ச்சி காலத்தில் சுதந்திர உணர்வு பெறுவீர்கள். எதிலும் வெற்றி கிடைக்கும். பணவரவு அபரிமிதமாக இருக்கும். உங்களின் பேச்சை பிறர் மதித்து கேட்கும் நன்னிலை உண்டு. உடன்பிறந்தவர்கள் பாசத்துடன் நடந்து கொள்வர். அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.
வீட்டிற்கு வரும் நல்லவர்கள், உறவினர்களின் வருகையால் சந்தோஷம் நிறைந்திடும். புதிய வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரர்கள் சிறப்பாக படிப்பதுடன் ஒழுக்கமாகவும் நடந்து கொள்வர். பூர்வ சொத்தில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். எதிரிகளின் தொந்தரவு குறையும். வழக்கு விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். கணவன், மனைவி ஒற்றுமை மனதுடன் நடந்து குடும்பத்தின் நன்மதிப்பை உயர்த்துவர். திட்டமிட்ட சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும். நண்பர்களும் உதவி செய்வர். நீங்கள் எவ்வளவு தான் நல்லவிதமாக நடந்துகொண்டாலும், அதை பலவீனமாகக் கருதி உங்களைத் தொல்லை செய்யும் உறவினர்களைக் கண்டு எரிச்சல் ஏற்படும். வெளிநாடு வேலை வாய்ப்பில் முன்னேற்றமும், எதிர்பார்ப்பும் நிறைவேறும்.
தொழில்: தொழில் சார்ந்த வகையில் அபரிமிதமான வளர்ச்சியும், தாராள பணவரவும் கிடைக்கும். எலக்ட்ரிக்கல். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், டெக்ஸ்டைல்ஸ், கட்டுமானப்பொருள், தோல், பிளாஸ்டிக், குளிர்பானம், இரும்பு, வாகனம் சார்ந்த தொழில் செய்பவர்கள் வளர்ச்சியும் மிக அதிக லாபமும் பெறுவர். மருத்துவமனை, பால்பண்ணை, அரிசி, மாவு ஆலை, டிராவல்ஸ், ஓட்டல், லாட்ஜ், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும் தாராள லாபம் கிடைக்கும். மற்றவர்கள் இவர்களை விட நல்ல லாபம் அடைவர். அபிவிருத்தி பணிகள் நிறைவேறும். கடந்த காலங்களில் ஏற்பட்ட நஷ்டம் சரியாகும்.
வேலை: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மிகச்சிறப்பாக பணியாற்றி அதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவர். சக பணியாளர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். தாராளமான வருமானம் கிடைக்கும்.
வியாபாரம்: வாகன உதிரிபாகங்கள், கட்டுமானப் பொருட்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், ஜவுளி,நகை, பலசரக்கு, பால் பொருட்கள், மீன், அழகுசாதனப் பொருட்கள், பாத்திர வியாபாரிகள் தாராள விற்பனையும் கூடுதல் லாபமும் கிடைக்கப் பெறுவர். போட்டி பெருமளவில் குறைந்துவிடும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் வேகமாகப் பணிகளை முடித்து அதிகாரிகளிடம் "சபாஷ்' பெறுவர். பதவி உயர்வு மற்றும் சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் நன்மதிப்பை பெறும் வகையில் அன்றாடப் பணிகளை திறம்பட நிறைவேற்றுவர். மாங்கல்ய ஸ்தானத்தை குருபகவான் பார்ப்பதால் கணவரின் உடல்நலமும், ஆயுள் பலமும் அதிகரிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை கிடைக்கும். தொழில் வியாபாரம் நடத்தும் பெண்கள் அதிக வியாபாரமும், சேமிக்கும் அளவில் தாராள பணவரவும் காண்பர். போட்டி குறையும்.
படிப்பு: மருத்துவம், இதழியல், கேட்டரிங், பாங்கிங், மரைன், ஏரோநாட்டிக்கல், கம்ப்யூட்டர் அனிமேஷன், மூலிகை வளர்ப்பு, எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிகல், சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், ஓட்டல் மேனேஜ்மென்ட் துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்துவர். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக கிடைக்கும். வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு சாதகமான நிலை உள்ளது. பெற்றோரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும்.
அரசியல்: அரசியல்வாதிகள் குழப்பங்கள் நீங்கி உற்சாகத்துடன் பணி புரிவர். ஆதரவாளர்கள், நல் எண்ணத்துடன் நடந்து கொள்வர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். எதிரிகள் விலகிச்செல்வர். வாழ்க்கைத் தரம் உயரும்.
விவசாயம்: விவசாயிகளுக்கு சாகுபடி செலவுக்கு தட்டுப்பாடு வராது. மகசூல் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பினாலும் பலன் ஏற்படும். நிலம் தொடர்பான சிரமம் இருந்தால் சரியாகும்.
வணங்க வேண்டிய தெய்வம்: நடராஜர்
பரிகாரப் பாடல்
பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
இமையாது உயிராய் இருந்தாய் போற்றி
கானத்தீ ஆடல் உகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி!

No comments:

Post a Comment