குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு டிசம்பர் 15, இரவு 11.32 மணிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2010 டிசம்பர் 3 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.
மூலம், பூராடம், உத்திராடம் 1
+ உறவினர் ஒத்துழைப்பு
- சுமாரான பணநிலை
நினைத்ததை முடிக்கும் ஆற்றல் பெற்ற தனுசு ராசி அன்பர்களே!
குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு மூன்றாம் இடமான கும்பத்தில் அமர்வு பெறுகிறார். தனது 5,7,9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 7,9,11-ம் இடங்களை பார்க்கிறார். ஏற்கனவே சனியின் தாக்கமும் இருக்கும் வேளையில், இந்த குருபெயர்ச்சியும், சில எதிர்மறை பலன்களை தரும் வகையில் உள்ளது. இருப்பினும் குருவின் பார்வை பெறுகிற நட்பு பிதா, பாக்ய, ஆதாய ஸ்தானங்களின் வழியாக ஓரளவு பலன் பெறுவீர்கள். பேச்சில் கடுமை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் நற்பெயர் பெற இயலாது. வீடு, வாகன வகையில் புதிதாக வசதி செய்ய நினைத்தால், பணநிலை ஒத்துழைக்காது. இருப்பதைத் தக்க வைத்தாலே போதும். வாகனம் ஓட்டும்போது மிதவேகம் அவசியம். புத்திரர்கள் நன்றாகப் படிப்பர். சிலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். பூர்வ சொத்தில் சுமாரான வருமானம் கிடைக்கும். உடல்நல ஆரோக்கியம் சீராக இருக்கும். பிறருக்காக எந்தவகையிலும் பொறுப்பு ஏற்கக்கூடாது. எதிரிகளிடம் இருந்து விலகுவது நல்லது.
கணவன், மனைவி அன்புடன் நடந்து குடும்பநலம் பேணுவர். நண்பர்களிடம் இணக்கமான நட்பு இருக்கும். தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாடு வேலை வாய்ப்பில் அதிக வருமானம் கிடைக்காது. வெளிநாட்டுக்குச் செல்ல விரும்புவோருக்கும் அவ்வளவு அனுகூலமான சூழல் இல்லை.
தொழில்: தொழில் சார்ந்த வகையில் அக்கறையுடன் செயல்படுவதால் மட்டுமே இருப்பதையாவது தக்க வைக்கலாம். ஜவுளி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், பர்னிச்சர், கட்டுமானப்பொருள், காகிதம், வாகனம், எண்ணெய் ஆலை, கல்வி, நிதிநிறுவனம், அச்சகம், டிராவல் ஏஜன்ஸி, ரியல் எஸ்டேட், லாட்ஜ், ஓட்டல், ஆஸ்பத்திரி நடத்துவோருக்கு சுமாரான லாபமே கிடைக்கும். மற்ற தொழில் செய்வோருக்கு ஓரளவுக்கு பரவாயில்லை. பணியாளர்களிடம் இனிய அணுகுமுறையுடன் நடந்து கொள்வதால் பொருள் உற்பத்தி அதிகரிக்கும்.
வேலை: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள், கவனக்குறைவு காரணமாக அதிகாரிகளின் கண்டனத்துக்கு ஆளாகலாம். ஒழுங்கு நடவடிக்கை, பணியிட மாற்றம் போன்றவை ஏற்படவும் வாய்ப்புண்டு. சகபணியாளர்கள் நட்புடன் இருப்பர். சலுகைகள் ஓரளவுக்கு கிடைக்கும்.
வியாபாரம்: ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், கட்டுமான பொருட்கள், ஜவுளி, பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், புத்தகம், பலசரக்கு, எண்ணெய், வாசனை திரவியம், தோல், பிளாஸ்டிக் பொருள் விற்பவர்களுக்கு எதிர்பார்த்த வளர்ச்சியும், பணவரவும் கிடைக்கும். மற்றவர்களுக்கு சுமாரான லாபம் கிடைக்கும். சரக்கு வாகன பராமரிப்புச் செலவு கூடும். பழைய கடன்கள் வசூலாகும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் கவனச்சிதறல் காரணமாக அதிகாரிகளின் கண்டனக்கணைக்கு ஆளாவர். சலுகைகளை கேட்டுப்பெறுவதில் நிதானம் நல்லது. விண்ணப்பித்த கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு பணியிட மாற்றம் வரும். குடும்பப் பெண்கள், கணவரின் அன்பையும், பாசத்தையும் நிறைவாகப் பெறுவர். குடும்பச்செலவுக்கு சிரமமாக இருக்கும். தந்தைவழி உறவினர்கள் உதவி செய்வர். நகைகளைப் பாதுகாப்பதில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் கடன் வாங்க வேண்டிய நிலை வந்தாலும், அதை அடைக்குமளவு வியாபாரம் இருக்கும். பொருட்களை ரொக்கத்திற்கு விற்பனை செய்வது நல்லது.
படிப்பு: வணிகவியல், வங்கியியல், ஆடிட்டிங், தகவல் தொழில்நுட்பம், சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மருத்துவம், கேட்டரிங், விவசாயம், ஆசிரியர் பயிற்சி, இதழியல் துறை மாணவர்கள் சுமாராக படிப்பர். மற்றவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் படித்தால் மட்டுமே தரத்தேர்ச்சி பெற இயலும். சக மாணவர்கள் படிப்பில் உறுதுணை புரிவர். தாயின் கண்டிப்பையும், தந்தையின் அரவணைப்பையும் பெறுகிற கிரகநிலை உள்ளது. படிப்புக்கான பணவசதி சீராக கிடைக்கும்.
அரசியல்: அரசியல்வாதிகள் நல்லமுறையில் சேவை புரிந்தாலும், உங்கள் செயல்களை குறைசொல்வதற்கு சிலர் வருவர். ஆதரவாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பணம் அதிகமாகச் செலவாகும். வழக்கு விவகாரங்கள் தொல்லை கொடுக்கும். விவசாயம்: விவசாயிகள் பயிர்வளர்ப்பில் உரிய பாதுகாப்பு நடைமுறையை மேற்கொள்வது அவசியம். கால்நடை வளர்ப்பு எதிர்பார்த்த பணவரவைத் தரும். மகசூல் சுமாராகவே இருக்கும். சொத்து ஆவணங்களை பிறரிடம் ஒப்படைக்க கூடாது.
வணங்க வேண்டிய தெய்வம்: கிருஷ்ணர்
பரிகாரப் பாடல்
உலகம் உண்ட பெருவாயா!
உவப்பில் கீர்த்தி யம்மானே!
நிலவும் சுடர் சூழொளி மூர்த்தி
நெடியாய் அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற
திருவேங்கடத்து எம்பெருமானே!
சூழத்தொல்லடியேன் உன் பாதம்
கூறுமாறு கூறாயே!
No comments:
Post a Comment