Sep 11, 2010

ராகு கேது பெயர்ச்சி பலன் சிம்மம்

ராகு பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும், கேது பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், இன்று (அக். 27) காலை 9.15 மணிக்கு பெயர்ச்சியாகிறார்கள். இவர்கள் 5.6.2011 வரை இந்த ராசிகளில் சஞ்சரிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது

மகம், பூரம், உத்திரம் - 1

(60/100) சுமார்
செயலை வெற்றியாக்க கடுமையாக உழைக்கும் சிம்மராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் ராகுவும், பதினொன்றாம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு 7, 3ம் இடத்தில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே ராசியிலும் ராசிக்கு ஒன்பதாம் இடத்திலும் பதிகிறது. ராகு கேது பெயர்ச்சியில் கேது பகவான் ஆதாய பலன் தரும் வகையில் உள்ளார். ராகு சிறு துன்பம் தந்தாலும் சஞ்சாரத்தின் பிற்பகுதியில் நற்பலன் தருவார். துவங்கும் செயல்களை தெய்வ நம்பிக்கையுடன் திருப்திகரமாக நிறைவேற்றுவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். பேச்சில் நிதானமும், சாமர்த்தியமும் கலந்திருக்கும். வீடு, வாகனத்தில் தேவையான பராமரிப்பு பணி மேற்கொள்வது நலம் தரும். புத்திரர்கள் ஆடம்பர சிந்தனையுடன் செயல்படுவர். அவர்களுடன் பேசுவதில் கனிவான வார்த்தைகளை உபயோகியுங்கள். கண்டிப்புடன் பேசுவதால் புத்திரர் மனத்தளர்ச்சி கொள்ளவும், பெற்றோரை கண்டுகொள்ளாமல் செயல்படுவதுமான சூழ்நிலை ஏற்பட்டுவிடும். முன்யோசனையுடன் நடந்துகொள்ளுங்கள். நிலுவைக்கடனை நேர்செய்வீர்கள். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொள்வதால் மட்டுமே குடும்ப மகிழ்ச்சி குறைவற்ற தன்மையில் வளரும். தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சியும் கூடுதல் பணவரவும் கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பில் எதிர்பார்ப்பைவிட தாராள பணவரவு கிடைக்கும்.
தொழிலதிபர்கள்: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மின்னணு சாதனங்கள், அழகு சாதனப்பொருள், கண்ணாடி, பீங்கான், பிளாஸ்டிக் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், ஸ்டீல் பொருட் கள், சமையலறை சாதனங்கள், சோலார் மின்கலம், எரிவாயு அடுப்பு, தீப்பெட்டி, பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் கூடுதல் உற்பத்தி இலக்கை எட்டுவர். தாராள பணவரவும் சமூகத்தில் கூடுதல் அந்தஸ்தும் கிடைக்கும். பெட்ரோல் பங்க், மர அறுவை மில், அரிசி, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, சாய தொழிற்சாலை நடத்துபவர்கள் தொழில் சிறந்து முன்னேற்றம் பெறுவர்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், கேமரா, பொம்மை, அலங்கார பொருட்கள், பர்னிச்சர், வாசனை திரவியங்கள், ஷாம்பு, சோப்பு, பாத்திரங்கள், கைவினை பொருட்கள், மாவு, பால் பொருட்கள், தோல், ரப்பர், பிளாஸ்டிக், வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் வாடிக்கையாளர் கிடைத்து வியாபாரத்தில் அபிவிருத்தி காண்பர். மற்றவர்களுக்கும் ஆதாய பணவரவும் சமூகத்தில் புதிய மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். உபதொழில் துவங்கும் எண்ணம் சிலருக்கு நிறைவேறும். குடும்பத் தேவைகளை பெருமளவில் நிறைவேற்றுவீர்கள்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தமக்குள்ள திறமையை முழுவதும் பயன்படுத்தி பணிக்கு சிறப்பு சேர்ப்பர். பதவி உயர்வு, வெகுநாள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சாய தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள், கொதிகலன் இயக்குபவர்கள், இயந்திர பணியில் உள்ளவர்கள் பணிபுரியும் நேரத்தில் விழிப்புணர்வுடன் செயல்படுவதால் சிரமம் தவிர்க்கலாம். சக பணியாளர்களிடம் சிறு அளவிலான கருத்து வேறுபாடு ஏற்படும். பின்வரும் நாட்களில் நட்பு வளரும். பணச்செலவில் சிக்கனம் பின்பற்றி எதிர்கால தேவைக்கு சேமிப்பை உருவாக்குவீர்கள். உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும்.
பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியிடத்தில் சுமூக சூழ்நிலை அமைந்து பணி இலக்கை பூர்த்தி செய்வர். பணச்சலுகை, பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் எளிதில் கிடைக்கும். குடும்பப் பெண்கள் குடும்பத் தேவைகளை நிறைவேற்ற தாராள பணவசதி கிடைக்கப்பெறுவர். இருப்பினும் கணவரிடம் மனஸ்தாபமும் அதனால் வீண் வாக்குவாதமும் ஏற்படும். பொறுமையுடன் செயல்படுவதால் வாழ்க்கை நற்பலன் தருவதாக மாறும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணி செய்வர். வியாபாரம் சிறந்து லாபவிகிதம் அதிகரிக்கும்.
மாணவர்கள்: மருத்துவம், விவசாயம், நிர்வாகம், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அனிமேஷன், ஆடிட்டிங், வியாபார மேலாண்மை, போட்டோ, வீடியோகிராபி, இசை, ஓவியம், அழகுக்கலை, ஆராய்ச்சி படிப்புகள், கடல்சார் பயிற்சி மாணவர்கள் ஆர்வமுடன் படித்து உயர்ந்த தரதேர்ச்சி காண்பர். மற்ற துறையிலுள்ளவர்கள் இவர்களை விட சிறப்பாகப் படிப்பர். படிப்புக்கான பணவசதி தாராளமாக கிடைக்கும். ஆன்மிக வழிபாட்டு முறைகளை அறிந்துகொள்வதில் விருப்பமுடன் செயல்படுவீர்கள். பெற்றோரிடம் பாசம் அதிகரிக்கும். சக மாணவர்களிடம் படிப்பு நீங்கலான பிற விஷயங்களில் கருத்து பரிமாற்றம் செய்யக்கூடாது.
அரசியல்வாதிகள்: உங்களின் சமூக சேவைக்கு கூடுதல் அங்கீகாரம் கிடைக்கும். ஆதரவாளர்களின் தேவையை நிறைவேற்றுவதில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். தெய்வ நம்பிக்கை மனதில் கூடுதல் துணையாக இருக்கும். பதவி பொறுப்பு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். உங்கள் மீது பொறாமை கொண்ட சிலர் பொய்யாக பழி சுமத்துவர். இதனால் மனவருத்தம் ஏற்பட்டாலும் நியாயம் உங்களுக்கு சாதகமாக செயல்படும். தொழில் நடத்துபவர்கள் கூடுதல் வியாபாரம் அமைந்து தாராள பணவரவு பெறுவர். புத்திரரை அரசியல்பணிக்கு அளவுடன் பயன்படுத்துவது நல்லது.
விவசாயிகள்: பயிர் வளர்ப்புக்கு தேவையான ஏற்பாடுகளை முன்யோசனையுடன் நிறைவேற்றுவீர்கள். தாராள மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் கூடுதல் செலவு ஏற்படும். நிலம் தொடர் பான விவகாரம் நல்ல தீர்வுக்கு வரும்.
பரிகாரம்: துர்க்கை அம்மனுக்கு ராகுகால பூஜை செய்வதால் பல நன்மைகள் ஏற்படும்.
பரிகார பாடல்
கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்
எண்டிசை யோகி இறைவி பராசக்தி
அண்டமோடு எண்திசை தாங்கும் அருட்செல்வி
புண்டரி கத்தினுள் பூசனையாளே

No comments:

Post a Comment