ராகு பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும், கேது பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், இன்று (அக். 27) காலை 9.15 மணிக்கு பெயர்ச்சியாகிறார்கள். இவர்கள் 5.6.2011 வரை இந்த ராசிகளில் சஞ்சரிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்
(70/100) நன்மை
நல்ல சிந்தனைகளின் ஊற்றுக்களமான கடகராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் ராகுவும், பன்னிரெண்டாம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு 8, 4ம் இடங்களில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு 2, 10ம் இடத்தில் பதிகிறது. ராகு-கேது பெயர்ச்சியில் ராகு அளப்பரிய நற்பலன்களை உங்களுக்கு வழங்கும் விதத்தில் உள்ளார். கடந்த காலங்களில் இழந்த சொத்துக்களை மீட்க இது உகந்த காலம். கேது அனுகூலக் குறைவுடன் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளால் அல்லல்பட நேரிடும். கவனம் தேவை. புதிய வீடு, வாகனம் வாங்கி மகிழ்ச்சி பெறுவீர்கள். உங்களிடம் விலகிச்சென்ற தாய் வழி உறவினர் பாசத்துடன் நடந்துகொள்வர். பூர்வ சொத்தில் கிடைக்கும் பணவரவு அதிகரிக்கும். உடல்நலம் சிறப்புடன் இருக்கும். தம்பதியர் ஒற்றுமையுடன் செயல்புரிந்து குடும்ப மகிழ்ச்சியையும் பெருமையையும் உயர்த்துவர். திட்டமிட்ட சுபநிகழ்ச்சி கூடுதல் பணச்செலவுடன் மங்கலத் தன்மையுடன் சிறப்பாக நிறைவேறும். கண்களின் பாதுகாப்பிற்கு சீரான ஓய்வு, நித்திரை அவசியம். அத்தியாவசிய மற்றும் ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கு கூடுதல் பணவசதி ஏற்படும். தொழில் சார்ந்த வகையில் வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்வரும் குறுக்கீடுகளை சரிசெய்து தொழில் முன்னேற்றம் பெறுவீர்கள். வெளியூர் பயணம் ஆதாய பணவரவை பெற்றுத்தரும். வெளிநாடு வேலை வாய்ப்பில் அனுகூல பலன் உருவாகும்.
தொழிலதிபர்கள்: டெக்ஸ்டைல்ஸ், அரிசி ஆலை, பால்பண்ணை, வைர நகை உற்பத்தி செய்பவர், உப்பள அதிபர்கள், உழவுத் தொழில் கருவிகள், கண் கண்ணாடி, விசைப்படகு, தண்ணீர் சார்ந்த தொழிலதிபர்கள் அதிக முன்னேற்றமும் தாராள பணவரவும் பெறுவர். லாட்ஜ், டிராவல் ஏஜன்சி, ரியல் எஸ்டேட் அதிபர்கள் தொழிலில் கூடுதல் வரவேற்பு பெறுவர். அபிவிருத்தி பணிகள் சிறப்புடன் நடைபெறும். மற்றவர்களுக்கும் நல்ல காலமே. பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உத்வேகத்துடன் செயல்பட்டு பணியை சிறப்பு நிறைந்ததாக உருவாக்குவர். பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். தொழில்நுட்பம், மருத்துவத் துறை, உணவு பண்டங்கள் தயாரிப்பு, டெக்ஸ்டைல் துறை சார்ந்த பணியாளர்கள் கூடுதல் வேலைவாய்ப்பும், தாராள பணவரவும் பெறுவர்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, அழகு சாதன பொருட்கள், தானியம், எண்ணெய், தண்ணீர் சார்ந்த பொருட்கள், கண்ணாடி, பீங்கான் பொருட்கள், வலை, சோப்பு, பெயின்ட், வாசனை திரவியம், மலர், காகிதம், பால்பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் தாராள விற்பனையும் ஆதாய பணவரவும் பெறுவர். மற்றவர்களுக்கு இவர்களை விட வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். அறப்பணியிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். நிலுவை கடன் வசூலாகும்.
பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் திறமை மிகு செயல்களால் பணி இலக்கை நேர்த்தியுடன் நிறைவேற்றுவர். சிலருக்கு நிர்வாகப் பொறுப்பு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாகும். குடும்பப்பெண்கள் உற்சாக மனதுடன் செயல்பட்டு குடும்ப தேவைகளை நிறைவேற்றுவர். நடைமுறை செலவுகளுக்கான பணவரவு தாராளமாக கிடைக்கும். குடும்பத்தின் சுபநிகழ்ச்சிகளை, உறவினர்களின் பாராட்டைப் பெறும் வகையில் அழகுற நிறைவேற்றுவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் கூடுதல் சந்தை வாய்ப்பு பெறுவர். வியாபாரம் சிறந்து லாபவிகிதம் அதிகரிக்கும்.
மாணவர்கள்: வங்கியியல், ஆடிட்டிங், தகவல் தொழில்நுட்பம், வியாபார மேலாண்மை, ஓட்டல் மேனேஜ்மென்ட், ஓவியம், கேட்டரிங், அழகுக்கலை, கடல்சார் பயிற்சி, விவசாயம், மருத்துவம், லேப் டெக்னீசியன், ஏரோநாட்டிக்கல் துறை மாணவர்கள் படிப்பில் சிறந்து கூடுதல் தரதேர்ச்சி காண்பர். மற்றவர்கள் இவர்களை விட சிறப்பாகப் படிப்பர். படிப்புக்கான பணவசதி நிறைவாக கிடைக்கும். உடல்நல ஆரோக்கியம் பலம்பெறும். போட்டிகளில் பரிசு கிடைக்கும். பெற்றோரும் நண்பர்களும் கூடுதல் அன்பு பாராட்டுவர். சுற்றுலா பயணம் இனிய அனுபவம் பெற்றுத்தரும்.
அரசியல்வாதிகள்: உங்களை அரசியலில் புறக்கணித்தவர்களும் மதிப்புடன் நடத்துவர். ஆதரவாளர்களின் உதவி பலமாக கிடைக்கும். புதிய பதவி பொறுப்பு தாமாக தேடிவரும். வெகுநாள் தீராத வழக்கு, விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். புத்திரர் உங்களின் திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்து வெற்றி தேடித்தருவர். உடல்நல ஆரோக்கியம் பலம்பெறும். தொழில் நடத்துபவர்களுக்கு வளர்ச்சியும் வருமானமும் அதிகரிக்கும்.
விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான பணவசதி திருப்திகரமாக இருக்கும். அபரிமிதமான மகசூல் கிடைக்கும். கால்நடை பெருக்கமும் அதனால் கூடுதல் பணபலனும் ஏற்படும். நிலம் தொடர்பான சிரமம் இருந்தால் எளிதாக விலகும்.
பரிகாரம்: சிவபெருமானை பூஜிப்பதால் குடும்பத்தில் நன்மை அதிகரிக்கும்.
பரிகார பாடல்
போற்றி என்றும் புரண்டும், புகழ்ந்தும் நின்று
ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன்,
ஏற்று வந்துஎதிர் தாமரைத் தாளுறும்
கூற்றம் அன்னதுஓர் கொள்கை என் கொள்கையே!

No comments:
Post a Comment