Jan 3, 2011

தனுசு லக்கனம்: மாத பலன் .1 .1 .2011

தனுசு லக்கனம்:

இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதம் ஆகும் . எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக வலுவான போராட்டத்திற்கு பின் அமையும் . புதிய வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும். பார்க்கும் கம்பெனியை விட்டு வேறு கம்பெனிக்கு செல்ல வாய்ப்பு ஏற்படும் . எதிர்பார்த்த செய்திகள் தகவல்கள் நமக்கு சாதகமாக இராது . புதிய முயற்ச்சிகளில் ஈடுபடுவதில் மிகவும் கவனமாக நடந்து கொள்ளவும் . வீடு , மனை , இடம் , பொருள், ஆடை , ஆபரணம் அனைத்தும் வாங்க ஓரளவுக்கு வாய்ப்பு அமையும் . உடன் பிறப்புகள் மிகவும் பிரியமுடன் நடந்து கொள்வர் . குறுகிய மற்றும் நீண்ட தூர பயணங்களில் சற்று கவனம் தேவை. தெய்வீக மற்றும் தேவாலய வழிபாடுகள் அமையும் . கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும் . புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைக்க வாய்ப்பு அமையும் . உத்தியோக உயர்வு சற்று காலதாமதமாகும் . சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் நமக்கு கிட்டும். கணவன் மனைவி உறவு நல்ல விதமாக அமையும் . பங்குச் சந்தையில் பெரிய அளவில் முதலீடு செய்வதில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுதல் வேண்டும் . காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தொசகரமாகவும் அமையும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் கிட்டும் . அதே சமயம் அவர்களால் மன வருத்தம் ஏற்படும் . நண்பர்களால் ஆதாயமும் அதே சமயம் மன வருத்தமான நிகழ்ச்சிகளும் நடந்தேறும் . உடன் பணிபுரிவோர்களிடம் கவனமாக நடந்து கொள்ளவும் .மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் ஒத்துழைப்பும் சிறப்பாக அமையும் .

பரிகாரம்: புதன் கிழமை தோறும் நவகிரகத்தில் இருக்கும் குரு பகவானை வணங்கி வர மிகவும் நற்பலன்கள் ஏற்படும் . மேலும் ஸ்ரீ வேணுகோபாலனை வணங்கி வர மகிழ்ச்சியும் நன்மையும் ஏற்படும் .

No comments:

Post a Comment