Jan 3, 2011

விருச்சிக லக்கனம் மாத பலன் 1.1 .2011

விருச்சிக லக்கனம் மாத பலன் 1.1 .2011

இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதமாகும் . எதிர்பாராத பண வரவும் . பொருள் வரவும் ஏற்படும் . பார்க்கும் வேலையில் கவனமுடன் இருத்தல் வேண்டும் . பார்க்கும் வேலையில் உயர்வு ஏற்படும் . அரசாங்கத்தால் தொல்லைகளும் பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும் . உடல் ஆரோக்கியத்தில் மிக கவனம் தேவை. ஆடை , ஆபரண சேர்க்கை ஏற்படும் . வண்டி வாகனங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு கிட்டும் . சகோதர சகோதரிகளால் நன்மையும் , ஆதரவும் பெருகும் . புதிய முயற்சிகள் எளிதில் வெற்றி அமையும் . அதே சமயம் வலுவான போராட்டத்திற்கு பின் வெற்றி கிட்டும் . மேலும் புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் , திறமையும் , கைகூடி வரும் . எதிர்பார்த்த செய்திகள் தகவல்கள் உங்களுக்கு சாதகமாகவும் வந்து சேரும் . அதே சமயம் அந்த செய்திகளால் நமக்கு ஆதாயமும் நற்பலனும் ஏற்படும் . குறுகிய மற்றும் நீண்ட தூர பிரயாணங்கள் செய்ய வாய்ப்பு அமையும் ஆலய மற்றும் தெய்வ தரிசனம் கிட்டும் . தாயாரின் பண வரவும் , பாசமும் கிட்டும் . காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும் . கோலாந்தைகளால் சுப விரையம் ஏற்படும் . பங்குச் சந்தையில் பெரிய அளவில் நமக்கு சாதகமாக இருக்கும் . சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் . சக ஊழியர்களால் மகிழ்ச்சியும் ஆதரவும் ஏற்படும் . கணவன் மனைவி உறவு சந்தொஷகரமாக அமையும் . எதிரிகள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும் . யாருக்கும் ஜாமீன் போடுதல் கூடாது. தந்தையால் பணவரவும் பொருள் வரவும் பாசமும் கிட்டும் . நண்பர்களால் மிகப் பெரிய ஆதரவும் மகிழ்ச்சியும் அமையும் . அடிவயிறு கால்பாகம் இவற்றில் நோய் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளவும் . சுய தொழில் லாபகரமாகும் திருப்திகரகவும் இருக்கும் .

பரிகாரம்: செவ்வாய் கிழமை தோறும் நவகிரகத்தில் இருக்கும் சனி பகவானுக்கு வில்வ இலை மல்லிகை பூவால் அர்ச்சனை செய்யவும் . மேலும் ஸ்ரீ யோக நரசிம்மரை வணங்கி வரவும் .

No comments:

Post a Comment