இந்த மாதம் மிகவும் சந்தோஷகரமான மாதமாகும் . மகளுடைய விருப்பம் , எண்ணம் , ஆசை ,அபிலாசை பூர்த்தியாகும் மாதமாகும் . உத்தியோகத்தில் ஊதிய உயர்வும் , பதவி உயர்வும் ஏற்படும் . புதிய வேலை கிடைக்க வாய்ப்பு நன்கு அமையும் . எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும் . எதிர்பார்த்த செய்திகள் சற்று தாமதமானாலும் நமக்கு சாதகமாக வந்து சேரும் . புதிய முயற்ச்சிகளில் ஈடுபட அவை நமக்கு வெற்றிகரமாக அமையும் . ஆடை , ஆபரணங்கள் வாங்க வாய்ப்பு ஏற்படும் . உடன் பிறப்புகளால் நன்மையும் ஆதரவும் கிட்டும் . பங்குச் சந்தையில் பெரிய அளவில் லாபம் ஏற்படும். காதல் விஷயங்கள் பெரிய அளவில் மகிழ்ச்சிகரமாக இராது . குழந்தைகளால் விரையமும் அதே சமயம் அவர்களால் நன்மையும் ஏற்படும் . கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும் . அரசாங்கத்தால் நன்மை ஏற்படும் . அரசியலில் பெயர், புகழ் ஏற்படும் . கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக அமையும் . உடன் பணிபுரிவோர்களால் நன்மை ஏற்படும் . சிறு தொழிலில் சுய தொழில் லாபகரமாக அமையும் . எதிர்பாராத தன வரவு பொருள் வரவு ஏற்படும் . தாயாரால் பணவரவு கிட்டும் . ஆலய மற்றும் தெய்வ தரிசனம் கிட்டும் . குறுகிய மற்றும் நீண்ட தூர பயணம் அமையும். அதனால் சாதகமான நற்பலன்கள் ஏற்படும் . நண்பர்களால் ஆதாயம் ஏற்படும் . அத்ரிஷ்ட எண் : 1,3,5,6,8,9 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை , சிவப்பு , பச்சை , கருப்பு .
பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் ஸ்ரீ தட்சுனாமூர்த்தியை வணங்கி வர நன்மை ஏற்படும் . மேலும் ஸ்ரீ விநாயகர் மற்றும் நாக தேவதைகளை வணங்க அல்லது மனதில் தியானிக்க அதனால் சகல சௌபாக்கியமும் கிட்டும் .
பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் ஸ்ரீ தட்சுனாமூர்த்தியை வணங்கி வர நன்மை ஏற்படும் . மேலும் ஸ்ரீ விநாயகர் மற்றும் நாக தேவதைகளை வணங்க அல்லது மனதில் தியானிக்க அதனால் சகல சௌபாக்கியமும் கிட்டும் .
No comments:
Post a Comment