Jan 3, 2011

கடக லக்கனம் :மாத பலன் 1. 1.2011

கடக லக்கனம் :மாத பலன் 1. 1.2011

இந்த மாதம் மிகவும் மகிழ்ச்சிகரமான மாதமாகும் . தெய்வ தரிசனம் , ஆலய தரிசனம் நன்கு அமையும் . குறுகிய மற்றும் நீண்ட தூர பிரயாணம் செய்ய வாய்ப்பு அமையும் . ஆடை , ஆபரண , பொன் , பொருள் வாங்க வாய்ப்பு அமையும் . மேலும் வண்டி வாகனங்கள் வீடு , மனை , வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும் . புதிய முயற்ச்சிகள் எதிர்பார்த்த பலனை நல்கும் . வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு அமையும் . வேலை பார்ப்பவர்கள் தங்கள் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடுதல் கூடாது . தாயாரால் மிகவும் ஆதாயம் ஏற்படும் . பார்க்கும் வேலையில் உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் ஏற்படும் . பங்குச் சந்தையில் பெரிய அளவில் முதலீடு கூடாது. குழந்தைகளால் சுப விரையம் ஏற்படும் . கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும் . எதிர்பாராத தன வரவும் , பொருள் வரவும் ஏற்படும் . தந்தையாரால் சகாயமும் , ஆதாயமும் கிட்டும் . மேலும் நண்பர்களால் பெரிய அளவில் உதவியும் ஆதரவும் கிட்டும் . உடன் பணிபுரிபவர்களால் ஆதாமும் அன்பும் கிட்டும் . அரசியல் வாழ்க்கை பெரிய அளவில் முன்னேற்றத்துடன் காணப்படும் . அதிர்ஷ்ட எண் : 3,5,8,9 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் , பச்சை , கருப்பு , சிவப்பு .

பரிகாரம்: சனிகிழமை தோறும் நவகிரகத்தில் இருக்கும் சந்திர பகவானை வணங்கி வர நன்மை ஏற்படும் . மேலும் ஸ்ரீ காமாட்சி அம்மனை வணங்கி வர சந்தோஷமும் , மகிழ்ச்சியும் நன்கு கிட்டும் .

No comments:

Post a Comment