இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதம் ஆகும் . பார்க்கும் வேலையில் எதிர்பாராத ஊதிய உயர்வும் உத்தியோக உயர்வும் ஏற்படும் . புதிய வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் . புதிய முயற்சிகளில் சிறு தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றியே கிட்டும் . போக்குவரத்துகள் வண்டி வாகனங்கள் எச்சரிக்கையாக சென்று வரவும் . புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் திறமையும் மேலோங்கி நிற்கும் . உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் மனக்குலாபம் ஏற்பட்டாலும் அவர்களால் நன்மையே ஏற்படும் . யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுதல் கூடாது . தாயாரின் உடல் ஆரோக்கியம் மிகவும் பாதிகப்படும் .அதன்காரணமாக வைத்திய செலவுகள் மிகும் . ஆடை , ஆபரணம் , பொன், பொருள் வாங்க வாய்ப்பு அமையும் . சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிட்டும் . காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும் . பங்குச் சந்தையில் பெரிய அளவில் முதலீடு செய்தல் கூடாது . ஒரே கம்பெனியில் முதலீடு செய்யாமல் பல கம்பெனிகளில் பிரித்து முதலீடு செய்யவும் . குழந்தைகளால் மகிழ்ச்சியும் , சுப விரையமும் ஏற்படும் . கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும் . தந்தையாரால் மனக்கசப்பும் மன வருத்தமும் மிகும் . சிறு பிரயாணங்களால் பிரச்சனைகளையும் அதே சமயம் லாபகரமாக அமையும் . நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு மன கசப்புகள் ஏற்பட்டு விலகும் . சுய தொழில் சிறு தொழில் பெரிய அளவில் லாபம் இராது . அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : நீலம் .
பரிகாரம்:வியாழக்கிழமை தோறும் நவகிரகத்தில் இருக்கும் குரு பகவானை வணங்கி வர நன்மை ஏற்படும் . மேலும் ஸ்ரீ சண்டிகேஸ்வரரையும் நந்தியையும் பெருமாளையும் வணங்கி வர மகிழ்ச்சி கூடும் .எதிர்பார்த்த காரியம் கைகூடும் . சந்தோஷகரமான வாழ்க்கை அமையும் .
பரிகாரம்:வியாழக்கிழமை தோறும் நவகிரகத்தில் இருக்கும் குரு பகவானை வணங்கி வர நன்மை ஏற்படும் . மேலும் ஸ்ரீ சண்டிகேஸ்வரரையும் நந்தியையும் பெருமாளையும் வணங்கி வர மகிழ்ச்சி கூடும் .எதிர்பார்த்த காரியம் கைகூடும் . சந்தோஷகரமான வாழ்க்கை அமையும் .
No comments:
Post a Comment