Jan 3, 2011

ஜனவரி 2011 மாத பலன்கள்


மேஷ லக்கனம் :1.1 . 2011

இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதம் ஆகும் . எடுத்த காரியங்களில் வெற்றியும் புகழும் அந்தஸ்து கீர்த்தியும் ஏற்படும். புதிய முயற்சிகள் நமக்கு சாதகமாக அமையும் . புதிய செய்திகள் நமக்கு சாதகமாக வந்து சேர காலதாமதம் ஏற்படும் . ஆடை , ஆபரங்கள் ,வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும் . இடம் , மனை ,வீடு , வண்டி வாகனங்கள் இவற்றில் பெரிய அளவில் முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்படும் . சகோதர சகோதரிகளில் உண்மையான அன்புடனும் பாசத்துடனும் விளங்குவர் . காதல் விஷயங்கள் சுமாராக இருக்கும் . பங்குச் சந்தையில் பெரிய அளவில் முதலீடு செய்ய வாய்ப்பு அமையும் . ஆனால் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சுணக்கம் ஏற்படும் .புதிய வேலை தேடுவதை சற்று தள்ளி வைக்கவும் .கணவன் மனைவி உறவு சுமாராக அமையும் . போக்குவரத்து வண்டி வாகனங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் போய் வருவது நல்லது . குறுகிய தூரம் மற்றும் நீண்ட தூர பிரயாணங்கள் ஏறபடும் காலமிது . சுப காரியங்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிட்டும் . பார்க்கும் உத்தியோகத்தை விட வேண்டாம் . புதிய உத்தியோகம் அமைவதில் சற்று காலதாமதமாகும் . தந்தையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் . உடன் பணிபுரிவோர்களால் பிரச்சனைகளும் போராட்டங்களுமாய் காலம் கழியும் . நண்பர்களால் ஆதாயமும் மகிழ்ச்சியும் பெருகும் . நண்பர்கள் உண்மையாயும் விஷ்வாஷ்மாயும் விளங்குவர் . சிறுதொழில் சுயதொழில் சிறப்பாக அமையாது .அதிர்ஷ்ட எண் : 3,4,5 அதிர்ஷ்ட நிறம் : நீலம் , மஞ்சள் , பச்சை .

பரிகாரம்:வெள்ளி கிழமை தோறும் துர்கையை வணங்கி வர நற்பலன்கள் ஏற்படும் . மேலும் சாதுக்கள் சந்நியாசிகள் மகான்களை தரிசிக்க சிறப்பான பலன்கள் ஏற்படும் .

No comments:

Post a Comment