Jan 3, 2011

2011 புத்தாண்டு பலான்கள் மீனம்





ஆங்கிலப்
புத்தாண்டான 2011ஆம் வருடம்,​​ விசாக நட்சத்திரம்,​​ 4ஆம் பாதம்,​​ விருச்சிக ராசி,​​ கன்னி லக்னத்தில் பிறக்கிறது. ​​ ​ ​ ​ இந்த ஆங்கிலப் புத்தாண்டு,​​ சனிக் கிழமையன்று,​​ பிரதோஷ தினத்தில் பிறக்கிறது.​ அன்று 'சனிப் பிரதோஷம்' என்பது கூடுதல் சிறப்பு.​ பரமேஸ்வரன் விஷம் அருந்திய நாள் சனிக் கிழமை.​ அவர் ஆனந்தத் தாண்டவம் ஆடியது திரயோதசி நாளாகும்.​ இரண்டும் சேர்ந்து வருவதுதான் 'சனி மகா பிரதோஷம்.' ​ ​ ​ ​ சனிக் கிழமையன்று செய்யும் மகா பிரதோஷ தரிசனத்தால் 5 வருடங்கள் சிவாலயம் சென்ற பலன் கிடைக்கும்.​ அடுத்தடுத்து இரண்டு சனி பிரதோஷங்களை அனுசரித்தால் 'அர்த்தநாரி' பிரதோஷமாகும்.​ இதனால் பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள்.​ திருமணத் தடைகள் விலகும்;​ தவறவிட்ட செல்வம் மீண்டும் கை வந்து சேரும்.​ பிரதோஷ தினத்தன்று கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்தால் சிவன் -​ ​ ​ பார்வதியுடன் முருகப் பெருமானின் அருளும் கிடைக்கும்.​ இதனை 'ஸ்கந்த பிரதோஷம்' என்று கூறுவார்கள். ​ ​ 'விஷம்'​​ என்பது பிறவித் துன்பம்.​ பிரதோஷ தரிசனத்தால் அத்துன்பம் நீங்கும்.​ அதுவும் மிகுந்த சிறப்புடைய சனி பிரதோஷ தினத்தில் தோன்றும் இந்த ஆங்கிலப் புத்தாண்டு,​​ வாசகர்களுக்கு எல்லா வளங்களையும் வாரி வழங்க வேண்டுமென்று வாழ்த்துகிறோம்.​ இனி ராசி ரீதியாகப் பலன்களைக் காண்போம்.​​ இனி ராசி வாரியாக புத்தாண்டு வருடப் பலன்களைக் காண்போம்.


புத்தாண்டு பலன்கள் - 2011


மீனம்
நாளை முதல்,​​ ஏப்ரல் மாதம் வரையில் உள்ள கால கட்டத்தில் உங்களின் எண்ணங்கள் அனைத்தும் நல்லபடி ஈடேறும்.​ நம்பிக்கை பலப்படும்.​ பொருளாதார ரீதியில் நிம்மதி நிலவும்.​ முக்கியப் பணிகளைத் தள்ளிப் போடாமல் உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள்.​ பயணங்களாலும் நன்மைகளை அடைவீர்கள்.​ திட்டங்களைச் சரியாகத் தீட்டி நல்லபடியாக நிறைவேற்றுவீர்கள்.​ தேக ஆரோக்யம் சிறப்பாக இருக்கும்.​ பெற்றோர் உடல் நலனிலும் குறை ஏற்படாதென்பதால் மருத்துவச் செலவுகளும் குறையும்.​ பொதுக் காரியங்களில் ஈடுபட்டு நற்பணிகளைச் செய்வீர்கள்.​ நேர்மையான பாதையில் உங்கள் வாழ்க்கையை நடத்துவீர்கள்.​ பெரியோர்களின் நல்லுரைகளைக் கேட்டு,​​ அதன்படி செயலாற்றுவீர்கள்.
​ ​ ​ ​ இந்தக் காலகட்டத்தில் கேது பகவான் உங்களுக்குத் தலைமை தாங்கும் பண்பை வழங்குவார்.​ புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.​ உங்களைச் சுற்றி உள்ளவர்களிடம் ஆரோக்யமான நட்பை உருவாக்கிக் கொள்வீர்கள்.​ மனிதாபிமான அடிப்படையில் உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு உதவி செய்வீர்கள்.​ உங்களின் பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள்.​ அதேநேரம் உடல் நலத்தைப் பற்றித் தேவையில்லாத பயம் உருவாகும்;​ அதை உதறித் தள்ளுங்கள்!
​ ​ ​ ​ ராகு பகவான்,​​ சுய கௌரவம் பாதிக்கப்படாமல் உங்களை செயல்பட வைப்பார்.​ நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.​ பல தரப்பட்ட துறைகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.​ மறைமுகப் போட்டி,​​ பொறாமைகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள்.​ அதேநேரம் கடுமையாக உழைக்கும் காலகட்டமிது.
​ ​ ​ ​ இந்த ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் நீங்கள் தினந்தோறும் ஏதோ ஒரு வகையில் புதிய விஷயங்களைக் கற்று அறிவீர்கள்.​ அனைத்துக் காரியங்களிலும் உங்கள் அனுபவ அறிவு கைகொடுக்கும்.​ உற்றார்,​​ உறவினர்களுடன் சுமுகமாக நடந்து கொள்வீர்கள்.​ அதேநேரம் அவ்வப்போது சிறு மன சஞ்சலங்களும் உருவாகும்.
​ ​ ​ ராகு பகவானால் கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று பொருளீட்டும் வாய்ப்பும் சிலருக்குக் கிடைக்கும்.​ கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.​ அதேநேரம் விரும்பத்தகாத நபர்களின் தொடர்பும்,​​ நீங்கள் எதிர்பாராத வகையில் ஏற்பட்டுவிடும்.​ எனவே புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் கவனமாக இருக்கவும்.
​ ​ ​ ​ ஆயினும் இந்தக் காலகட்டத்தில் கேது பகவான் உங்களை விவேகத்துடன் செயல்பட வைப்பார்.​ நீங்கள் எப்போதோ செய்த முயற்சிகளுக்கு இந்தக் காலத்தில் நல்ல பலன்கள் விளையும்.​ உங்களின் நண்பர்கள் உங்களுக்கும் உங்கள் சகோதர,​​ சகோதரிகளுக்கும் இடையே இருந்த சச்சரவுகளைத் தீர்த்து வைப்பார்கள்.
​ ​ ​ ​ ​ உத்யோகஸ்தர்கள்,​​ அலுவலக வேலைகள் அனைத்தையும் சாதுர்யத்துடன் செய்து முடிப்பீர்கள்.​ மேலும் சக ஊழியர்களின் ஆதரவால் வேலைப் பளு குறையும்.​ உங்கள் ஆற்றல் அதிகரிக்கும்.​ சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள்.​ மேலதிகாரிகளை மதித்து நடந்துகொள்வீர்கள்.​ பண வரவு அதிகரிக்கும்.​ விரும்பிய இடமாற்றங்களையும் இந்த ஆண்டு பெறுவீர்கள்.
​ ​ வியாபாரிகளுக்கு சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும்.​ கடையை நவீனப்படுத்தி ​ வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள்.​ கொடுக்கல்,​​ வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும்.​ புதிய முதலீடுகளுக்கான முயற்சிகளும் வெற்றியைக் கொடுக்கும்.​ வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன்களைப் பெறுவீர்கள்.​ கூட்டாளிகள் உங்கள் சொல்கேட்டு நடப்பார்கள்.​ போட்டிகளிலும் வெற்றி காண்பீர்கள்.​ ​
​ ​ ​ விவசாயிகள்,​​ தானிய விற்பனையை லாபகரமாகச் செய்து முடிப்பீர்கள்.​ போட்டிகளுக்குத் தகுந்தவாறு நடவடிக்கைகளை எடுப்பீர்கள்.​ வருமானம் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகக் கிடைக்கும்.​ அதே சமயம் கால்நடைகளுக்காகவும்,​​ பூச்சி மருந்துக்காகவும் அதிகம் செலவு செய்ய நேரிடும்.​ கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.​ ​
​ ​ ​ அரசியல்வாதிகளுக்குப் பெயரும்,​​ புகழும் அதிகரிக்கும்.​ கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள்.​ தொண்டர்களின் ஆதரவினால் பெரும் சாதனைகளைச் செய்வீர்கள்.​ கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும்.​ எதிர்கட்சியினரையும் உங்கள் வாக்கு சாதுர்யத்தால் கவர்வீர்கள்.​ உங்கள் செயல்கள் அனைத்தும் வெளிப்படையாகவே இருக்கும்.
​ ​ கலைத்துறையினர்,​​ புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித் தங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள்.​ நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் பெரும் வெற்றிகளைக் கொடுக்கும்.​ இந்த ஆண்டு அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள்.​ சிலருக்கு விருது பெறும் யோகமும் உண்டாகும்.​ கலை சம்பந்தமாக வெளிநாட்டுப் பயணங்களைச் செய்து,​​ அதனால் கணிசமான வருமானத்தையும் காண்பீர்கள்.
​ ​ பெண்மணிகளைப் பொறுத்தவரை கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும்.​ அதோடு குடும்பத்தினரோடு விட்டுக் கொடுத்து நடந்துகொண்டால் குழப்பங்களைத் தவிர்க்கலாம்.​ மற்றபடி குழந்தைகள் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள்.​ ஆகார விஷயங்களில் கவனமாக இருந்து வயிறு சம்பந்தமான உபாதைகளிலிருந்து காத்துக் கொள்ளவும்.
​ ​ ​ மாணவமணிகள்,​​ விளையாட்டில் ஈடுபடும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு கல்வியில் மட்டுமே நாட்டம் செலுத்தவும்.​ இதனால் கடுமையாக உழைத்து சராசரிக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.​ புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும்.​ ​
பரிகாரம்:​​ முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.தினசரி ஏதேனும் ஒரு 'திருப்புகழ்' பாராயணம் ​ செய்தால் தீவினைகள் மாண்டு,​​ நல்லனவே நடக்கும்!​ ​


No comments:

Post a Comment