Jan 3, 2011

புத்தாண்டு பலன்கள் - 2011 கும்பம்





கும்பம்
நாளை முதல்,​​ ஏப்ரல் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் உழைப்பிற்குத் தகுந்த நற்பலன்களை நிறைவாகப் பெறுவீர்கள்.​ உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.​ நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் கூட்டு முயற்சிகளால் லாபம் பெருகும்.​ 'ஷேர் மார்க்கெட்' போன்ற 'ஸ்பெகுலேஷன்' துறைகளில் ஈடுபட்டும் வருமானத்தைக் காண்பீர்கள்.​ உயர் பதவிகளில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.​ உற்றார்,​​ உறவினர்களின் ஆதரவு நன்றாக இருக்கும்.​ குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.​ எதிர்பாராத வகையில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும்.​ ​ பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடிந்து உங்களுக்குரிய நியாயமான பங்கு கிடைக்கும்.
​ ​ ​ ​ இந்தக் காலகட்டத்தில் கேது பகவான்,​​ உங்களை உதாசீனப்படுத்துபவர்களிடம் சண்டை போடத் தூண்டுவார்.​ ஆனாலும் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு அவர்களின் ஆதரவைப் பெற முயலுங்கள்.​ 'எல்லார்க்கும் நன்றாம் பணிதல்' என்ற வள்ளுவர் வாக்கை மறவாதீர்கள்.​ விற்க முடியாமல் உங்களைத் தவிக்க வைத்த சொத்துக்களை இந்தக் காலகட்டத்தில் விற்றுவிடுவீர்கள்.
​ ​ ​ ​ ராகு பகவான் உங்களைத் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளச் செய்வார்.​ உங்களுக்கு விருப்பமில்லாதவர்களுக்கு உதவி செய்யும்படியான சூழ்நிலையும் உருவாகும்.​ அதேசமயம் உங்களின் கொள்கைகளுக்காக எதையும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள்.​ ​ மூத்த சகோதர,​​ சகோதரிகளை அனுசரித்து நடந்துகொண்டால் அவர்களின் மூலம் சில ​ நன்மைகளைப் பெறலாம்.
​ ​ ​ ​ இந்த ஆண்டு மே மாதம் முதல்,​​ டிசம்பர் மாதம் வரையில் உள்ள கால கட்டத்தில் உங்களுடைய கடவுள் பக்தி அதிகரிக்கும்.​ ஆலய உழவாரப் பணிகளில் ஈடுபடுவீர்கள்.​ தேவையற்ற வேலைகளில் இருந்து ஒதுங்கிக் கொள்வீர்கள்.​ சில முயற்சிகளை சகோதர,​​ சகோதரிகளையும் இணைத்துக்கொண்டு செய்தால் நலம் உண்டாகும்.​ பழைய கனவுகளை நினைவாக்கத் தேவையான முயற்சிகளைச் செய்வீர்கள்.
​ ​ ​ ​ ராகு பகவான்,​​ உங்களின் கொள்கைப் பிடிப்புகளை சிறிது தளர்த்திக் கொள்ளச் செய்வார்.​ எனவே செய்தொழிலில் எடுக்கும் முடிவுகளை ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.
​ ​ ​ ​ கேது பகவான்,​​ உங்களின் சுக சௌகர்யங்களை அதிகப்படுத்துவார்.​ குல தெய்வப் பூஜைகளைச் செய்து மன நிம்மதியடைவீர்கள்.​ விருந்து,​​ கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.​ நண்பர்களும்,​​ குடும்பத்தினரும் உங்களை அனுசரித்து நடந்து கொள்வார்கள்.​ உங்களை சந்தேகக் கண்ணுடன் முன்பு பார்த்தவர்கள்,​​ தற்போது உங்களைப் புரிந்து கொள்வார்கள்.​ அதேநேரம் உங்களின் எண்ணங்களை உறவினர்களிடம் வெளிப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
​ ​ ​ ​ உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.​ அலுவலகத்தில் சிறு இடையூறுகள் தோன்றினாலும் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.​ பணியில்,​​ எதிர்பார்த்த நிம்மதி ஏற்படும்.​ மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள்.​ சிலருக்கு அலுவலக விஷயமாக வெளியூர் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.​ சக ஊழியர்களுக்குத் தக்க நேரத்தில் உதவிகளைச் செய்வீர்கள்.
​ ​ ​ ​ வியாபாரிகளைத் தேடிப் பல வகையிலும் லாபம் வரும்.​ வியாபாரத்தில் இருந்த முட்டுக் கட்டைகள் சிதறும்.​ கொடுக்கல்,​​ வாங்கல் விஷயங்கள் சிறப்பாகவே முடியும்.​ சரக்குகளை விற்பதிலேயே கவனம் செலுத்தி உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள்.​ வாடிக்கையாளர்களைக் கவரும்வண்ணம் திட்டங்களைத் தீட்டுவீர்கள்.
​ ​ ​ விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும்.​ மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு வருமானத்தைக் கூட்டிக் கொள்ளவும்.​ உங்கள் பணியாளர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.​ இல்லத்தில் சுப காரியங்களை நடத்துவீர்கள்.​ புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.​ அதேநேரம் வீண் சஞ்சலங்களைத் தவிர்க்கவும்.
​ ​ ​ அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.​ அதேசமயம் முக்கியப் பிரச்சினைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்.​ தொண்டர்களின் ஆதரவு நன்றாக இருப்பதால் உங்களுடைய பணிகளில் தொய்வு ஏற்படாது.​ அரசு அதிகாரிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.​ கவனத்துடன் செயல்பட்டு கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
​ ​ ​ கலைத்துறையினர்,​​ பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதற்கான அறிகுறிகளைக் காண்பீர்கள்.​ உங்கள் திறமைக்குச் சவால்கள் ஏற்படும்.​ எனவே தீவிர யோசனைகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும்.​ முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் உங்கள் நலம் விரும்பிகளிடம் ஆலோசனை பெறவும்.​ மற்றபடி ரசிகர்களின் ஆதரவு சிறப்பாகத் தொடரும்.
​ ​ ​ பெண்மணிகள் இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள்.​ கணவரிடம் ஒற்றுமையாக இருப்பீர்கள்.​ சரளமான பண வரவால் ஆடை,​​ ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.​ குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.​ குழந்தைகளுடன் விருந்து,​​ கேளிக்கைகளில் கலந்துகொண்டு உற்சாகம் அடைவீர்கள்.
​ ​ மாணவமணிகள் படிப்பில் கூடுதலான மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.​ உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் பெற்றோர்களால் நிறைவேறும்.​ வருங்காலத்திற்காக செய்யும் பயிற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
பரிகாரம்:​​ 'நமசிவாய' என்று காலையிலும் மாலையிலும் 108 முறையாவது ஜபித்து,​​ மனதை உற்சாகத்துடன் வைத்துக் கொள்ளவும்.

No comments:

Post a Comment