Jan 3, 2011

புத்தாண்டு பலன்கள் - 2011 விருச்சிகம்




நாளை முதல்,​​ ஏப்ரல் மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் கடினமாக உழைத்து நல்ல வருமானத்தைப் பெறுவீர்கள்.​ உண்மையைப் பேசி உங்களின் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.​ வழக்குகளில் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு சாதகமானத் தீர்ப்பைப் பெறுவீர்கள்.​ குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும்.​ புதிய ஆடை,​​ அணிகலன்கள் கிடைக்கும்.​ முன்னேற்றப் பாதையில் இருந்த தடைகள் நீங்கும்.​ தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றுவீர்கள்.
​ ​ ​ ​ இந்தக் காலகட்டத்தில் கேது பகவான்,​​ நீங்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவார்.​ இல்லத்தில் இருந்த வாஸ்து குறைபாடுகளைக் களைவீர்கள்.​ இதற்கான பரிகார பூஜைகளைச் செய்வீர்கள்.​ உங்களை மறைமுகமாகக் குறை கூறுபவர்களைக் கண்டு கொள்ள மாட்டீர்கள்.
​ ​ ​ ​ ​ வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் உண்டாகலாம்.​ எனவே உணவு விஷயங்களில் கவனமாக இருக்கவும்.
​ ​ ​ ராகு பகவான்,​​ உங்களின் சொல்வாக்கை செல்வாக்காக மாற்றுவார்.​ இடத்திற்கு ஏற்றாற்போல் சமயோஜிதமாகப் பேசுவீர்கள்.​ தந்தையின் தொழிலைக் கற்க முற்படுவீர்கள்.​ தந்தை வழி உறவினர்களின் ஆதரவைத் தக்க சமயத்தில் பெறுவீர்கள்.​ வறட்டு கௌரவத்திற்காகவும்,​​ மற்றவர்கள் கண்டு பொறாமைப்படுவதற்காகவும் தேவையில்லாத பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கவும்.
​ ​ ​ ​ இந்த ஆண்டு மே மாதம் முதல்,​​ ஆண்டு இறுதி வரை உள்ள காலத்தில் செய்தொழிலில் கவனமாக இருப்பீர்கள்.​ வர வேண்டிய பணம் கை வந்து சேரும்.​ செலவு செய்யும் நேரத்தில் ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பீர்கள்.​ எதிர்ப்பவர்களுடன் மோதாமல் ஒதுங்கிச் செல்வீர்கள்.​ பொது வாழ்வில் பிரபலமடைவீர்கள்.​ நூதன ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள்.​ ஆயின் கடன் வாங்கிய இடங்களில் கெடுபிடிகளைச் சந்திக்க நேரிடும்.
​ ​ ​ ​ கேது பகவான்,​​ உங்களின் வேலைகளை உடனுக்குடன் முடித்து வைப்பார்.​ குடும்பத்தில் அமைதி உண்டாகும்.​ மனதில் சுதந்திர சிந்தனைகள் சிறகடிக்கும்.​ நெருக்கடியான விஷயங்கள்,​​ கடைசி நிமிடத்தில் நிம்மதியாக முடிவடையும்.​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​
​ ​ ​ ​ இந்தக் காலகட்டத்தில் ராகு பகவானால் விருது,​​ பட்டங்கள் பெறும் வாய்ப்பு,​​ சிலருக்குக் கிடைக்கும்.​ உங்களை வெறுத்து ஒதுக்கிய சகோதர,​​ சகோதரிகள் சமரச உணர்வுடன் உங்கள் இல்லம் தேடி வருவார்கள்.​ நெடுநாட்களாகத் துன்புறுத்திய உடல் உபாதை,​​ இந்தக் காலகட்டத்தில் நீங்கும்.
​ ​ ​ ​ உத்யோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும்.​ மேலதிகாரிகளிடம் கொண்டுள்ள நட்புறவு படிப்படியாக உயரும்.​ வருமானம் அதிகரிக்கத் தொடங்கும்.​ நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த இடமாற்றம் கிடைக்கும்.​ வருடத்தின் பிற்பகுதியில் அதிகமாக உழைக்க நேரிடும்.​ வீடு,​​ வாகனம் வாங்கக் கொடுத்திருந்த கடன் விண்ணப்பங்கள்,​​ உங்களுக்கு சாதகமாகப் பைசலாகும்.​ எனவே பதற்றப்படாமல் நிதானமாகப் பணியாற்றுங்கள்.
​ ​ ​ ​ வியாபாரிகள் கொடுக்கல்,​​ வாங்கல் விஷயங்களில் அனுகூலமானத் திருப்பங்களைக் காண்பீர்கள்.​ கூட்டாளிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள்.​ உங்களை நம்பிப் புதிய முதலீடுகளைச் செய்யப் பலர் சம்மதிப்பார்கள்.​ போட்டிகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள்.​ கடையை அழகுபடுத்தி,​​ வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
​ ​ ​ ​ விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும்.​ புழு,​​ பூச்சிகளால் ஏற்பட்ட பாதிப்பு குறையும்.​ வெளியில் கொடுத்திருந்த கடன்கள் வசூலாகும்.​ அதோடு செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டுப் பலன் பெறலாம்.​ உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் மீது அக்கறை காட்டினால் மேலும் நன்மை அடையலாம்.
​ ​ ​ அரசியல்வாதிகளின் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும்.​ உங்களின் கடமைகளை முழுமையாக நிறைவேற்றுவீர்கள்.​ கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது கவனமாக இருப்பது அவசியம்.​ எதிர்கட்சியினரும் உங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள்.​ தொலை தூரத்திலிருந்து சாதகமான செய்தி வந்து சேரும்.
​ ​ ​ ​ கலைத்துறையினருக்கு திருப்திகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.​ வருமானம் எதிர்பார்த்த அளவு இருக்கும்.​ வருடத்தின் பிற்பகுதியில் கடுமையாக உழைக்க வேண்டிவரும்.​ மற்றபடி,​​ ஏற்கெனவே உள்ள புகழைத் தக்க வைத்துக் கொள்வதில் சிரமம் இருக்காது.​ சக கலைஞர்களின் ஆதரவுடன் கலைப்பயணங்களைச் செய்வீர்கள்.​ சிலருக்கு விழாக்களில் சிறப்பு விருந்தினர் அந்தஸ்து கிடைக்கும்.
​ ​ ​ பெண்மணிகள் ஆடை,​​ ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.​ நிதானமாக நடந்துகொள்வீர்கள்.​ மிகுந்த பொறுப்புடன் செயல்படுவீர்கள்.​ கணவருடன் விருந்து,​​ விழாக்களில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள்.​ இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.​ மணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.​ ​
​ ​ ​ மாணவமணிகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும்.​ அதிக மதிப்பெண்களைப் பெற்று முதல் மாணவராகத் திகழ்வீர்கள்.​ உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உற்சாகத்தைப் பெறுவீர்கள்.​ அதேநேரம் வருடத்தின் பிற்பகுதியில் பெற்றோரின் ஆதரவு குறைய நேரிடலாம் என்பதால்,​​ 'மூத்தோர் சொல் அமுதம்' என்பதை மனதில் பதிய வையுங்கள்.​ ​
பரிகாரம்:​​ அர்ச்சுனனுக்கு தேரோட்டிய ஆபத்பாந்தவனாகிய பார்த்தஸக்ஷ்ரதி பெருமாளை அவ்வப்போது சிந்தித்திருப்பதே உயர்ந்த பரிகாரம்.

No comments:

Post a Comment