Jan 3, 2011

புத்தாண்டு பலன்கள் - 2011 தனுசு





நாளை முதல்,​​ ஏப்ரல் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் ஆற்றல் பெருகும்.​ அதிகாரம் தரும் பதவிகள் தேடி வரும்.​ உங்களின் பெயர் பிரபலமாகும்.​ உங்கள் செயல்களை வேகத்துடனும்,​​ விவேகத்துடனும் செய்வீர்கள்.​ பண வரவில் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வீர்கள்.​ ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.​ தர்ம காரியங்களிலும்,​​ ஆலயத் திருப்பணிகளிலும் ஈடுபடுவீர்கள்.​ புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள்.​ வீண் வம்பு செய்பவர்களிடம் நேருக்கு நேர் மோதுவீர்கள்;​ வெற்றியும் காண்பீர்கள்.
​ ​ ​ இந்தக் காலகட்டத்தில் ராகு பகவான் உங்களின் சுயமரியாதையை அதிகப்படுத்துவார்.​ பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பீர்கள்.​ மறைமுக எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சமாட்டீர்கள்.​ வாழ்க்கை வசதிகள் பெருகும்.​ விலகிச் சென்ற நண்பர்கள் திரும்ப வந்து நட்பு பாராட்டுவார்கள்.​ அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.​ அதேநேரம் எவரிடமும் மனதில் உள்ளதை முழுமையாக வெளிப்படுத்த வேண்டாம்.​ ​ ​ ​ ​ ​ ​
​ ​ ​ ​ ​ ​ கேது பகவானால் உங்களின் ஞாபக சக்தி வளரும்.​ உங்கள் செயல்களில் பெருந்தன்மையுடன் ஈடுபடுவீர்கள்.​ சிக்கலான விஷயங்களுக்கும் சிறப்பான தீர்வு காண்பீர்கள்.​ உங்கள் மனசாட்சியை மதித்து நடப்பீர்கள்.
​ ​ ​ ​ இந்த ஆண்டு மே மாதம் முதல்,​​ டிசம்பர் மாதம் வரையில் குடும்பத்தில் ​ குதூகலம் நிறைந்திருக்கும்.​ உங்களிடம் தைரியமும்,​​ புத்திசாலித்தனமும் கொடி கட்டிப் பறக்கும்.​ வெளிவட்டாரத்தில் உங்கள் முக்கியத்துவம் அதிகரிக்கும்.​ வழக்குகளில் உங்கள் தரப்பு வாதங்களை ஆதாரத்துடன் எடுத்துக் கூறி வெற்றி பெறுவீர்கள்.​ சிலர் சொந்த வீட்டிற்குக் குடிபெயர்வார்கள்.
​ ​ ​ ​ ​ ராகு பகவான்,​​ உங்களைப் பொழுதுபோக்கு விஷயங்களிலும் மகிழ்வுடன் ஈடுபடச் செய்வார்.​ ​
​ பெரிய திட்டங்களைச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படுத்துவீர்கள்.​ அதேசமயம் மனதில் உறுதியும்,​​ சகிப்புத் தன்மையும் தேவை.
​ ​ ​ ​ இந்தக் காலகட்டத்தில் கேது பகவான் உங்களின் உழைப்புக்கு ஏற்ற பலன்களை அள்ளிக் கொடுப்பார்.​ சமூகத்தில் மதிப்பு,​​ மரியாதை உயரும்.​ புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள்.​ வருமானம் நன்றாக இருக்கும்.​ உங்களைச் சார்ந்தவர்களுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும்.​ எந்தச் சூழ்நிலையிலும் குறிக்கோளை விட்டு நீங்க மாட்டீர்கள்.​ அதேநேரம் உங்களுக்கு உரிமை இல்லாத இடத்தில் தலையிட்டு 'பஞ்சாயத்து' பண்ண வேண்டாம்.
​ ​ ​ ​ ​ உத்யோகஸ்தர்கள்,​​ தங்கள் வேலைகளைக் குறித்த காலத்திற்குள் முடித்து,​​ நற்பெயரைச் சம்பாதிப்பீர்கள்.​ புதிய ஆற்றலைப் பெறுவீர்கள்.​ வருடத்தின் முற்பகுதியில் மேலதிகாரிகள் பெரிதாக உதவாவிட்டாலும் உங்களுக்குத் தொல்லை தர மாட்டார்கள்.​ மற்றபடி ஆண்டின் பிற்பகுதியில் உங்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும்.​ சக ஊழியர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.​ அலுவலக ரீதியான பயணங்களை வெற்றிகரமாக மேற்கொள்வீர்கள்.​ ​
​ ​ ​ ​ ​ வியாபாரிகள்,​​ புதிய முறைகளைப் பின்பற்றி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.​ கடையை அழகாகச் சீரமைப்பீர்கள்.​ புதிய வாடிக்கையாளர்கள் உங்களின் கடையை நோக்கி வரத் தொடங்குவார்கள்.​ ஆண்டின் முற்பகுதியை விடப் பிற்பகுதியில் கூட்டாளிகள் சிறப்பான ஒத்துழைப்பை நல்குவார்கள்.​ சமுதாயத்தில் உங்கள் பெயரும்,​​ புகழும் வளரும்.
​ ​ ​ ​ விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும்.​ விவசாயப் பணிகளில் சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் அவை தானாகவே விலகிவிடும்.​ நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்;​ மாற்றுப் பயிர்களையும் பயிரிடுவீர்கள்.​ கால்நடைகளை நல்ல முறையில் பராமரிப்பீர்கள்.​ புதிய உபகரணங்களை வாங்கி விளைச்சலைப் பெருக்குவீர்கள்.
​ ​ ​ அரசியல்வாதிகள்,​​ அதிகாரமுள்ள பதவிகளைப் பெறுவீர்கள்.​ உங்களின் பணியாற்றும் திறனைக் கட்சி மேலிடம் ​ நேரில் பாராட்டும்.​ இதனால் உற்சாகம் ஊற்றெடுக்கும்.​ தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.​ எடுத்த காரியங்கள் அனைத்தையும் முடிக்கும் வரை ஓய மாட்டீர்கள்.​ தேவையில்லாத அலைச்சல்கள் இந்த ஆண்டு ஏற்படாது.
​ ​ ​ கலைத்துறையினரின் விடா முயற்சிகள் அனைத்தும் பெருத்த வெற்றியைத் தேடித் தரும்.​ உங்களின் திறமைகளை முழுமையாகச் செயல்படுத்திப் பாராட்டு மழையில் நனைவீர்கள்.​ பண வரவு நன்றாக இருந்தாலும் மனதில் ஏனோ மகிழ்ச்சி குறைவாகவே இருக்கும்.​ உங்கள் நல்ல பெயரைத் தக்க வைத்துக்கொள்ளக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.​ கடவுளை வழிபடுங்கள்!​ கவலைகள் நீங்கும்!
​ ​ ​ பெண்மணிகளுக்குக் கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும்.​ ஆன்மீக பலத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்.​ அதேநேரம் உடல் நலத்தில் கவனம் தேவை.​ சகோதர,​​ சகோதரிகளிடம் விரோதங்கள் ஏற்படலாம்.​ எனவே யாரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம்.
​ ​ ​ மாணவமணிகள் கடுமையாக உழைத்து அதற்கேற்ற பலனைப் பெறுவீர்கள்.​ கல்வியில் உயர்ந்த இடத்தைப் பெறுவதற்கு உகந்த ஆண்டாக இது அமைகிறது.​ மற்றபடி வெளிவிளையாட்டுகளில் கவனத்துடன் ஈடுபடவும்.
பரிகாரம்:​ ​ சனி பகவானுக்கு எள் தீபமேற்றி வழிபடவும்.​ 'ராம,​​ ராம' என்று தினசரி 108 முறையாவது கூறி,​​ அனுமனை மகிழ்ச்சிப்படுத்துங்கள்!​ ஆனந்தம் தேடி வரும்.

No comments:

Post a Comment