நாளை முதல், ஏப்ரல் மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில், பணி நிமித்தமான முக்கியமான விஷயங்களில் கண்டிப்புடன் இருப்பீர்கள். வெளியில் கொடுத்திருந்த கடன்களையும் சரியாக வசூலிப்பீர்கள். உடல் நலத்தில் கவனம் செலுத்துவீர்கள். செய்தொழிலைச் சிறப்பாக நடத்துவீர்கள். புத்திசாலித்தனமாகப் பேசுவீர்கள். மறைந்து கிடந்த உங்களின் திறமைகள் வெளிப்படும். பெற்றோர்களிடம் உங்கள் உரிமைகளைக் கேட்டுப் பெறுவீர்கள். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
இந்தக் காலகட்டத்தில் ராகு பகவான், நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெற்றி கிடைக்கச் செய்வார். பிரிந்திருந்த சகோதர, சகோதரிகள் உங்களுடன் இணைவார்கள். இழந்த செல்வாக்கை மீட்டுவிடுவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வீர்கள். பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு சிறிய லாபத்தையும் காண்பீர்கள்.
கேது பகவான், பெரியோரிடம் நட்பை ஏற்படுத்திக் கொடுப்பார். குடும்பத்தில் அமைதி நிலவும்; மகிழ்ச்சி தாண்டவமாடும். அனுபவசாலிகளின் உதவியுடன் தொழிலில் புதிய நுட்பத்தைப் புகுத்துவீர்கள். தொழிலை விரிவுபடுத்துவதற்காக நண்பர்களுடன் இணைந்து பயணங்களை மேற்கொள்வீர்கள். பழைய தோல்விகளைப் பொருட்படுத்தாமல் புதிய பாதையில் உழைப்பீர்கள்.
இந்த ஆண்டு மே மாதம் முதல், டிசம்பர் மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். உங்கள் செயல்களில் புதிய உத்வேகம் காணப்படும். அமைதியாக இருந்து உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். கடன் தொல்லைகள் விலகும். உங்கள் தொழிலை மற்ற ஊர்களிலும் நடத்தி லாபத்தை அள்ளுவீர்கள். மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டேனும் காப்பாற்றிவிடுவீர்கள். அதேநேரம் எவருக்கும் கேட்காமல் அறிவுரை கூற வேண்டாம்.
ராகு பகவான், மனதில் தேவையற்ற சஞ்சலத்தை உண்டாக்குவார். நேர்வழியில் நடக்காதவர்கள், உங்களுக்கு நண்பர்களாகும் சூழ்நிலை உருவாகும். சமூகத்தில் உயர்ந்தவர்களுடன் சிறு மனஸ்தாபங்களும் உண்டாகும். அதனால் 'கொக்குக்கு ஒன்றே மதி' என்கிற ரீதியில் செயல்படுவது நல்லது.
அதே நேரம், இந்தக் காலகட்டத்தில் கேது பகவான், மனதில் நல்ல சிந்தனைகளை ஏற்படுத்துவார். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரித்து, ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். இதனால் தேவையற்ற பயங்கள் நீங்கும். மேலும் புறம் கூறுபவர்களை நம்ப வேண்டாம். எதிர்பாராத இடத்திலிருந்து பணம் கை வந்து சேரும். ஆனால் உங்களிடம் தேவையான பணம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ள வேண்டாம்.
உத்யோகஸ்தர்கள், அனைத்து வேலைகளையும் திருப்திகரமாகச் செய்து முடிப்பீர்கள். கொடுத்த வேலைகளை நிதானமாகச் செய்யவும். வருடத்தின் முற்பகுதியில் சிறிது அதிகமாக உழைக்க வேண்டி வரும். வருடத்தின் பிற்பகுதியில் பண வரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். உங்கள் உழைப்பு வீண் போகாது. சிலருக்கு நிம்மதி தரும் இடமாற்றங்கள் ஏற்படும். சக ஊழியர்களின் அன்பும், ஆதரவும் இருப்பதால் எடுத்த காரியங்கள் அனைத்தும் பிரச்சினையின்றி முடியும். மேலதிகாரிகளிடம் எளிதில் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.
வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு முழுவதும் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் அனைத்தும் சீராக இருக்கும். கூட்டாளிகளால் சில இடையூறுகள் ஏற்பட்டாலும் சாதுர்யமாக அவற்றை சமாளிப்பீர்கள். இருப்பினும் அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்கவும்.
விவசாயிகள், தங்கள் கடமைகளைச் சரியாக செய்து முடிப்பீர்கள். கையிருப்புப் பொருட்கள் மீது கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். போட்டிக்குத் தகுந்தாற்போல் விளை பொருட்களை விற்பனை செய்து நல்ல லாபம் காண்பீர்கள். நீர்ப்பாசன வசதிகளுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நிறைவான பலனளிக்கும். கால்நடைகளால், எதிர்பார்த்ததற்கும் மேல் வருமானம் கிடைக்கும். புதிய கால்நடைகளையும் வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள், தங்கள் செயல்களில் வெற்றிகளைக் காண்பீர்கள். தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் உங்கள் செல்வாக்கு உயரும். நண்பர்களால் உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். உடல் சோர்வைப் பொருட்படுத்தாமல் கட்சிப் பணிகளில் ஈடுபடுவீர்கள். தகுதிக்கேற்ற பொறுப்புகளைப் பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கு நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். சக கலைஞர்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்குவீர்கள். பழைய ஒப்பந்தங்களில் செய்த சிறு தவறுகளைத் திருத்திக்கொண்டு புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடுவீர்கள்.
பெண்மணிகள், குடும்பத்தில் நிறைந்த சந்தோஷத்தைக் காண்பீர்கள். கணவரைப் புரிந்து கொண்டு நடப்பீர்கள். உற்றார், உறவினர்களின் நன்மதிப்புக்குப் பாத்திரமாவீர்கள். குழந்தைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவீர்கள். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
மாணவமணிகளுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோரின் நல்லாதரவைப் பெறுவீர்கள். கல்வியில் நன்கு வளர்ச்சியடைவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டிய நேரமிது. உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
பரிகாரம்: சிவபெருமானையும், மஹா விஷ்ணுவையும் வழிபட்டு முன்னேற்றமடையுங்கள்.
No comments:
Post a Comment