Jan 3, 2011

புத்தாண்டு பலன்கள் - 2011 கன்னி




நாளை முதல்,​​ ஏப்ரல் மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் உங்கள் எண்ணங்கள் அனைத்தும் பூர்த்தியாகும்.​ இதுவரை செய்யாமல் இருந்த வேலைகளை புதிய கோணத்தில் யோசித்துச் செய்வீர்கள்.​ சிலருக்கு புதிய வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.​ மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும்.​ மனதிற்குப் பிடித்த நண்பர்களுடன் வெளியில் சென்று மகிழ்ச்சிகரமாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.​ எதிர்காலத்திற்கான சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள்.​ பொறுமை காத்தவர்களுக்கு அதற்குப் பலனாய் இரட்டிப்புச் சந்தோஷம் கிடைக்கும்.
​ ​ ​ ​ இந்தக் காலகட்டத்தில் ராகு பகவான்,​​ உத்யோகம் தொடர்பான இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவார்.​ குடும்பத்தில் இருந்த இடையூறுகள் மறையும்.​ புதிய போட்டிகளைச் சமாளிக்கத் தயாராக இருப்பீர்கள்.​ உங்கள் பழக்க வழக்கங்களை சூழ்நிலைக்குத் தக்கவாறு மாற்றி அமைத்துக் கொள்வீர்கள்.​ உங்களின் சிந்திக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.
​ ​ ​ ​ கேது பகவான்,​​ உங்களுக்கு ஏற்பட்டுள்ள கடன் தொல்லைகளைத் தீர்த்து வைப்பார்.​ நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.​ புதிய மொழிகளைக் கற்கும் ஆர்வம் மேலோங்கும்.​ பேச்சையே மூலதனமாகக் கொண்டு தொழில் செய்பவர்கள்,​​ நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.​ பணப் புழக்கம் சீராக இருக்கும்.
​ ​ ​ ​ இந்த ஆண்டு மே மாதம் முதல்,​​ ஆண்டு இறுதி வரையில் உள்ள காலகட்டத்தில் அதிக சிரத்தையுடன் செயல்களை செய்ய வேண்டும்.​ எவருக்கும் வாக்கு கொடுப்பதோ,​​ முன் ஜாமீன் போடுவதோ கூடாது.​ குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும்.​ வெளியில் கொடுத்திருந்த பணத்தைப் பொறுமையாகப் பேசி வசூலிக்கவும்.​ மற்றபடி அரசாங்கத்திடம் இருந்து உதவிகள் கிடைக்கும்.​ உடல் ஆரோக்யம் சீராக இருக்கும்.​ யோகா,​​ ப்ராணாயாமம் போன்றவற்றை செய்வீர்கள்.
​ ​ ​ ​ கேது பகவானால் தாயின் வழியில் வில்லங்கமான உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள்.​ அவர்களிடம் மனம் கோணாமல் பேசி,​​ கழற்றிவிடவும்.​ மற்றபடி இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.
​ ​ ​ ராகு பகவான்,​​ உங்களுடன் குதர்க்கமாகப் பேசும் நண்பர்களை உங்களை விட்டு விலக்கிவிடுவார்.​ சிறு தூரப் பயணங்களின் மூலம் நன்மை அடைவீர்கள்.​ சகோதர,​​ சகோதரிகள் உங்களைத் தேடி வந்து உதவி செய்வார்கள்.​ தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.​ வழக்குகளில் சாதகமான தீர்ப்பைக் காண்பீர்கள்.​ சமூகத்தில் பாராட்டுகளும்,​​ கெüரவங்களும் உங்களைத் தேடி வரும்.​ பெரியோர்களின் உதவியால் உங்களின் வாழ்க்கையில் திருப்புமுனைகள் ஏற்படும்.
​ ​ ​ ​ உத்யோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் திட்டமிட்டது போல் முடியும்.​ உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும்.​ மேலதிகாரிகள் உங்களிடம் அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.​ சக ஊழியர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்து பெருமை அடைவீர்கள்.​ விரும்பிய இடமாற்றத்தையும்,​​ எதிர்பாராத ஊதிய உயர்வையும் பெறுவீர்கள்.​ அதேநேரம் வருடத்தின் பிற்பகுதியில் கடினமாக உழைக்க வேண்டி வரும்.
​ ​ ​ ​ வியாபாரிகளுக்கு கொடுக்கல்,​​ வாங்கல் விஷயங்கள் சீராக இருந்தாலும்,​​ கூடுதல் அக்கறையோடு வியாபாரம் செய்யவும்.​ அதோடு மறைமுக எதிர்ப்புகள் உருவாக வாய்ப்பு இருப்பதால் புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடவும்.​ நண்பர்களிடம் கவனமாக இருக்கவும்.​ போட்டிக்கு ஏற்றவாறு விலையை நிர்ணயித்துப் பொருட்களை விற்பனை செய்து லாபம் ஈட்ட உறுதியான வாய்ப்புகள் தோன்றும்.​ ​
​ ​ ​ ​ விவசாயிகள்,​​ கூடுதல் விளைச்சலைக் காண்பீர்கள்.​ குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள்.​ கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த நற்பலனை அடைவீர்கள்.​ புதிய குத்தகைகளை நாடிச் செல்லலாம்.​ வழக்குகளில் உங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பாகும்.​ நீர்வரத்தும் அதிகமாக இருப்பதால்,​​ புதிய மாற்றுப் பயிர்களை ஊடுபயிராகப் பயிர் செய்து பலனடைவீர்கள்.
​ ​ ​ அரசியல்வாதிகளுக்கு,​​ ஆண்டின் பிற்பகுதியில் கட்சி மேலிடத்துடன் சாதகமற்ற சூழ்நிலை ஏற்படும்.​ அதனால் உங்கள் திட்டங்களை அவர்களின் அனுமதி பெற்ற பின்பே நடைமுறைப்படுத்தவும்.​ அனாவசியப் பயணங்களையும் தள்ளிப் போடவும்.​ தொண்டர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும்.​ இவை ஒரு புறமிருக்க,​​ உங்களின் ரகசியத் திட்டங்கள் அனைத்தும் வெற்றிப்பாதையை நோக்கிச் செல்லும்.
​ ​ ​ ​ கலைத்துறையினர்,​​ திறமைக்குத் தகுந்த அங்கீகாரத்தைப் பெறுவீர்கள்.​ புதிய நட்புகளால் சந்தோஷம் அடைவீர்கள்.​ புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.​ சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு ஒப்பந்தங்களை அதிகரித்துக்கொள்ளுங்கள்;​ வரவு அதிகரிக்கும்!​ ரசிகர்களிடம் அமோக ஆதரவைப் பெறுவீர்கள்.
​ ​ ​ ​ பெண்மணிகளுக்கு,​​ பண வரவு அதிகரிக்கும்.​ உங்களின் கோரிக்கைகளை குடும்பத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.​ புதிய ஆடை,​​ அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள்.​ ஆன்மீகச் சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.​ தந்தை வழி உறவினர்களால் நன்மை அடைவீர்கள்.
​ ​ ​ ​ மாணவமணிகளை பொறுத்தவரை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடுவீர்கள்.​ படிப்பிலும் அக்கறையோடு ஈடுபடுவீர்கள்.​ கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் நாட்டம் அதிகரிக்கும்.​ நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.
பரிகாரம் :​​ குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு நன்மை அடையுங்கள்.

No comments:

Post a Comment