நாளை முதல், ஏப்ரல் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலை ஆர்வத்துடன் வெற்றிகரமாக நடத்துவீர்கள். சோம்பேறித்தனத்தை விட்டொழித்துவிட்டு சுறுசுறுப்புடன் பணிபுரியும் அளவிற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்வீர்கள். சிலருக்கு தந்தையுடன் சேர்ந்து தொழில் செய்யும் வாய்ப்பு ஏற்படும். இல்லத்தில் சுப காரிய முயற்சிகள் வெற்றி பெறும். அதேநேரம் மனதில் சிறிது அமைதியின்மை காணப்படும். ஆனால் உடல் ஆரோக்யத்தில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. குடும்பத்தினருக்கும் மருத்துவச் செலவுகள் உண்டாகாது. புதிய வாய்ப்புகளைத் தேடி அடைவீர்கள். சகோதர, சகோதரிகளிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்வீர்கள். குழந்தைகளை மேற்படிப்பிற்காக வெளியூர் அல்லது வெளிநாட்டிற்கு அனுப்புவீர்கள்.
இந்தக் காலகட்டத்தில் கேது பகவான் உங்களுக்கு மறைமுக ஆதாயத்தை அவ்வப்போது ஏற்படுத்தித் தருவார். நுணுக்கமான விஷயங்களையும் சுலபமாகப் புரிந்து கொண்டுவிடுவீர்கள். செலவுகளைத் திட்டமிட்டுச் செய்வீர்கள். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். பழைய நீதிமன்ற வழக்குகள் நல்லபடியாக முடிவுக்கு வரும்.
ராகு பகவானால் குல தெய்வ வழிபாடு செய்யும் யோகம் உண்டாகும். நல்லவர்களிடம் புதிய பாடங்களைக் கற்பீர்கள். இந்த ஆண்டு மே மாதம் முதல், ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் முடிவெடுக்க முடியாமல் தவித்த விஷயங்களில் சுமுகமான முடிவைக் காண்பீர்கள். தடைபட்டிருந்த திருமணம் கைகூடும். கடன்களை அடைக்க முடியாமல் வட்டியை மட்டுமே கட்டியவர்கள், மொத்தக் கடன்களையும் திருப்பி அடைத்துவிடுவார்கள். வெளிவட்டாரத்தில் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தினர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வார்கள். அதிர்ஷ்டவசமாகக் கிடைக்கும் புதிய வாய்ப்புகளால் மகிழ்ச்சியடைவீர்கள். செய்தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். குடும்பத்தாருடன் விருந்து, கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். உங்கள் காரியங்களில் முழு திருப்தியை அடைவீர்கள்.
ராகு பகவான், உங்கள் தாயின் உடல் நலத்தில் சிறிது பாதிப்பை ஏற்படுத்துவார். வீடு, வாகனம் ஆகியவற்றுக்காகப் பராமரிப்புச் செலவுகள் செய்ய நேரிடும். மற்றபடி பயணங்களால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.
இந்தக் காலகட்டத்தில் கேது பகவான், தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கச் செய்வார். அதேநேரம் கெüரவத்திற்காக சில செலவுகளைச் செய்ய நேரிடும். இக்காலகட்டத்தில் தனித்து இயங்குவதைவிட, கூட்டு முயற்சிகளே சிறந்தவை. போட்டி, பந்தயம் மற்றும் ஷேர்மார்க்கெட் துறையில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மற்றபடி உங்கள் மீது அபாண்டமாக பழி போட்ட நண்பர்கள், மனம் மாறி நட்புடன் பழகுவார்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும்.
உத்யோகஸ்தர்கள் இந்த ஆண்டின் முற்பகுதியில் எதிர்வரும் இடையூறுகளை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். காலதாமதம் ஏற்பட்டாலும் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் நல்லபடியாக முடியும். என்றாலும் சக ஊழியர்களிடம் எந்த உதவியையும் எதிர்பார்க்க முடியாது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு இரண்டும் தேடி வரும். அலுவலகத்தில் வீட்டுக் கடன் கிடைக்கும். புதிய அலுவலகப் பயிற்சிகளை வெளியூருக்குச் சென்று மேற்கொள்வீர்கள்.
வியாபாரிகளுக்கு, கூட்டாளிகளுடன் சிறிய பிரச்சினைகள் உண்டாகும். அரசாங்க விஷயங்களில் எடுக்கும் முயற்சிகளில் தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்களை நல்லபடியாக முடித்துவிடுவீர்கள். வருடத்தின் முற்பகுதியில் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க வேண்டாம். ஆயின் வருடத்தின் பிற்பகுதியில் புதிய முயற்சிகளை நல்லபடியாகச் செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள்.
விவசாயிகள் சுமாரான வருமானத்தைப் பெற்றாலும், உங்களின் கெüரவத்திற்குக் குறைவு வராது. புதிய குத்தகைகளை தேடிச் சென்று அடைவீர்கள். அதோடு மகசூல் அதிகரிக்க நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும். பூச்சிக்கொல்லி மருந்துக்கு சிறிது செலவு செய்ய நேரிடும். கடன் விவகாரங்களால் சிலர், வழக்குகளைச் சந்திக்க நேரிடலாம். ஆனால் பயப்படும்படி எதுவும் நேராது.
அரசியல்வாதிகளுக்கு, கட்சி நிர்வாகிகளுடன் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். கட்சித் தலைமையிடம் நல்ல முறையில் நடந்து கொண்டு உங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். ஆண்டின் பிற்பகுதியில் உங்களின் செல்வாக்கு படிப்படியாக உயரத் தொடங்கும். அப்போது சந்தோஷம் தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். தொண்டர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.
கலைத்துறையினருக்கு சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்து முடிப்பீர்கள். உயர்ந்தவர்களைச் சந்தித்து உற்சாகம் அடைவீர்கள். புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். அதேநேரம் பிறரிடம் பேசும் போது கவனமாக இருக்கவும்.
பெண்மணிகளை பொறுத்தவரை கணவரின் ஆதரவுடன் புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். உங்களின் பக்குவமான பேச்சினால் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
மாணவமணிகள், படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பெற்றோர்களையும், ஆசிரியரையும் அனுசரித்துச் சென்று உங்களின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்து மனப்புழுக்கத்திலிருந்து விடுபடுங்கள்.
பரிகாரம் : சிவபெருமானையும், அம்பாளையும் வழிபட்டு சிறப்படையுங்கள்.
No comments:
Post a Comment