Jan 3, 2011

புத்தாண்டு பலன்கள் - 2011 ரிஷபம்



நாளை முதல்,​​ ஏப்ரல் மாதம் வரை செய்தொழிலில் இரு மடங்கு லாபத்தைக் காண்பீர்கள்.​ குடும்பத்தில் நிம்மதி நிலவும்.​ குடும்பத்தினரிடம் ​ சிறப்பான ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.​ வெளியூர் அல்லது வெளிநாட்டுத் தொடர்பினால் ஆதாயம் உண்டாகும்.​ உங்களுக்குச் சோதனை கொடுத்து வந்த அரசு அதிகாரிகள்,​​ தேவையான ஒத்துழைப்பை நல்குவார்கள்.​ நவீன வாகனங்களை வாங்குவீர்கள்.​ போட்டியாளர்களின் ரகசியங்களை அறிந்துகொண்டு அதற்கேற்ப யுக்திகளை மாற்றி செயலாற்றுவீர்கள்.​ உடல் ஆரோக்யம் சீராக இருக்கும்.​ முகம் பொலிவடையும்.​ ​ கடின உழைப்பை மேற்கொள்வீர்கள்.​ புதிய துறைகளில் பயிற்சி பெறுவீர்கள்.​ அனுபவஸ்தர்களை உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவீர்கள்.​ இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள்.
​ ​ ​ ​ கேது பகவான் உங்களுக்கு ஆன்மீக பலத்தைக் கொடுப்பார்.​ குடும்பத்தினருடன் புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.​ பூர்வீகச் சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.​ அவற்றிலிருந்து தொடர்ந்து வருமானம் கிடைக்கும்.​ உறவினர்கள் பகை நீங்கி உங்களுடன் வந்து இணைவார்கள்.​ அதே சமயம்,​​ சிலருக்கு ராகு பகவான் அவசியமில்லாத பயணங்களை ஏற்படுத்தித் தருவார்.​ மேலும் சிலருக்கு,​​ இருக்கும் இடத்தை விட்டு வேறொரு இடத்திற்குச் சென்று தொழில் செய்யும் சூழ்நிலை ஏற்படலாம்.
​ ​ ​ ​ இந்த ஆண்டு மே மாதம் முதல்,​​ வருட இறுதி வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் சில மன உளைச்சல்கள் உண்டாகும்.​ சுலபமாக முடிய வேண்டிய காரியங்கள்,​​ தாமதத்துடன் முடியும்.​ புதிய எண்ணங்களை நண்பர்களைக் கலந்தாலோசித்த பிறகே நிறைவேற்றுவீர்கள்.​ உங்கள் மதிப்பு,​​ மரியாதை உயரும் என்றாலும் பொதுக் காரியங்களில் கவனத்துடன் ஈடுபட வேண்டி வரும்.​ வருமானம் சீராகத் தொடர்ந்தாலும் எதிர்பாராத செலவுகளும் உண்டாகும்.​ அதேசமயம் உங்களின் அணுகுமுறையினால் போட்டியாளர்களும் உங்களுக்கு உதவி செய்வார்கள்.​ மற்றபடி குறுக்கு வழியில் எந்தக் காரியத்தையும் செய்ய வேண்டாம்.​ குழந்தைகளின் மன அமைதி குறையும் என்பதால் அவர்களிடம் அன்போடு நடந்து கொள்ளவும்.​ மற்றவர்களின் விஷயங்களில் அனாவசியமாகத் தலையிட வேண்டாம்.​ வாகனங்களுக்குப் பராமரிப்பு செலவுகள் செய்வீர்கள்.
​ ​ ​ ​ ​ உத்யோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் நட்புடன் நடந்துகொள்வார்கள்.​ உங்களுக்குத் தொல்லைகள் கொடுத்து வந்த சக ஊழியர்கள் அடங்கிவிடுவார்கள்.​ அலுவலக வேலைகளில் கவனமாக இருப்பீர்கள்.​ பதவி உயர்வு கிடைக்கும்.​ அதேசமயம்,​​ முக்கியமான உங்களது வேலைகளை சக ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.​ இதனால் வருடப் பிற்பகுதியில் வேண்டாத சிந்தனைகளுக்கு ஆட்பட நேரிடலாம்.​ அலை பாயும் மனதைக் கட்டுப்படுத்தவும்.
​ ​ ​ ​ வியாபாரிகளைத் தேடி வரவேண்டிய பணம் வரும்.​ புதிய கிளையைத் திறக்கும் வாய்ப்பும் சிலருக்கு கிடைக்கும்.​ மன உறுதியுடன் செயல்படுவீர்கள்.​ அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதிர்பார்த்த திருப்பங்கள் உண்டாகும்.​ கொடுக்கல்,​​ வாங்கல் விஷயங்கள் நன்மையாகவே முடியும்.​ எனினும் ஆண்டின் பிற்பகுதியில்,​​ கூட்டாளிகளுடன் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
​ ​ ​ ​ விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.​ விளைச்சல் எதிர்பார்த்ததைவிட அமோகமாக இருக்கும்.​ நீர்வரத்து அதிகரிப்பதால் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.​ புதிய குத்தகைகள் கிடைப்பதில் சிறிது தாமதம் உண்டானாலும் கடைசியில் அவை உங்கள் கைக்கு வந்து சேரும்.​ பூச்சிகளால் பயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படாது.​ ஆண்டின் பிற்பகுதியில் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள்.​ குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
​ ​ ​ அரசியல்வாதிகள் இந்த ஆண்டு புகழ் ஏணியில் ஏறத் தொடங்குவீர்கள்.​ கட்சி மேலிடம் உங்களின் செயல்களைப் பாராட்டும்.​ இடையிடையே ஏற்படும் சில பிரச்சினைகளைத் தொண்டர்களின் உதவியுடன் சரி செய்துவிடுவீர்கள்.​ சிலருக்கு கட்சியில் புதிய பதவிகள் கிடைக்கும்.​ அதேநேரம் ஆண்டின் பிற்பகுதியில் உங்கள் திறமைக்குச் சவால்கள் ஏற்படும்.
​ ​ கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.​ ரசிகர்களின் ஆதரவும் குறைந்தே காணப்படும்.​ எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.​ மற்றபடி இந்த ஆண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.​ உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள,​​ புதிய வழிமுறைகளைக் காண்பீர்கள்.
​ ​ ​ பெண்மணிகள் எந்த வாக்குவாதத்திலும் சிக்கிக் கொள்ளாமல் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளவும்.​ மற்றபடி இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள்.​ குடும்பத்தில் வருமானம் சீராக இருக்கும்.​ உற்றார் உறவினர்கள் உங்கள் இல்லத்திற்கு அடிக்கடி வருவார்கள்.​ ஆண்டின் பிற்பகுதியில் குழந்தைகளின் உடல் ஆரோக்யம் சிறிது பாதிக்கப்படலாம்.
​ ​ ​ மாணவமணிகளை பொறுத்தவரை உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.​ அதேசமயம் மதிப்பெண்களைப் பெறுவதற்குக் கடினமாக உழைக்க வேண்டும்.​ உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை.​ வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.
பரிகாரம்:​​ விநாயகப் பெருமானையும்,​​ ஆஞ்சநேயரையும் வழிபட்டு வரவும்.

No comments:

Post a Comment