Jan 13, 2011

குருபெயர்ச்சி




அதிகம் ஆசைப்படாமல் அடுத்தவர் சொத்து மீது கண் வைக்காமல், உதிக்கும்போது விதிக்கப்பட்டதை உணர்ந்து வாழ்பவர்களே!
வாக்குவாதம் என வந்து விட்டால் வரிந்துகட்டி வாதாடுபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஒன் பதாம் வீட்டில் கொஞ்சகாலம் இருந்து பணப்புழக்கத்தையும், பத்தாம் வீட்டில் கொஞ்சகாலம் இருந்து மனப்போராட்டத்தையும் மாறிமாறித் தந்த குரு பகவான், இப்பொழுது 21.11.2010 முதல் 7.5.2011 வரை பத்தாவது வீ ட்டிற்குள் நின்று பலன் தரப்போகிறார்.

பத்தாம் இடமென்றால் பதவி ஸ்தானமாச்சே! பதவி, புகழெல்லாம் பறிபோய்விடுமே என்று பதட்டப்படாதீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதி
களான சனி பகவானின் நட்சத்திரத்தில் 3.1.2011 முதல் 13.3.2011 வரையிலும், புதனின் நட்சத்திரத்தில் 14.3.2011 முதல் 7.5.2011 வரையிலும் குரு பகவான் செல்ல இருப்பதால் ஓரளவு நல்ல பலன்களே உ ண்டாகும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் உங்களின் 2ம் வீட்டை பார்ப்பதால் பேச்சிலிருந்த தடுமாற்றம், பயம் நீங்கும். வரவேண்டிய பணம் வரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார், கெட்டவர் யார் என்பதை உணருவீர்கள். வி.ஐ.பிகள் தக்க நேரத்தில் உங்களுக்கு உதவுவார்கள். பல வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். என்றாலும் நேரம் கடந்து சாப்பிடுவதை தவிர்க்கப் பாருங்கள். வாகனங்களில் செல்லும்போது வேக த்தை குறைத்துச் செல்லுங்கள். அவசரம் தவிர வேறு சமயங்களில் இரவு நேரப் பயணத்தை தவிர்ப்பது நல்லது.

குரு தனது ஏழாம் பார்வையால் உங்களின் சுக வீடான 4ம் வீட்டைப் பார்ப்பதால் தாயுடன் அவ்வப்போது இருந்து வந்த கருத்துமோதல்கள் விலகும். அவரின் உடல்நிலையும் சீராகும். தாய்வழிச் சொந்த பந்தங்கள் உதவுவார்கள். ஆனாலும் குரு உங்களுக்கு பாதகாதிபதி என்பதால் அவ்வப்போது வீண் கலக்கம், மன உளைச்சல், தண்டச்செலவு கள், கணவன் மனைவிக்குள் கருத்துமோதல்கள் என தொடரும். உங்களுக்குள் எப்போதும் மூன்றாம் நபர் தலையீ ட்டை தவிர்ப்பது நல்லது.

பிள்ளைகளின் பொறுப்பில்லாத போக்கை நினைத்து வருந்துவீர்கள். அவர்களின் போக்கிலேயே சென்று திருத்தப் பாருங்கள். அவர்களின் எதிர்காலம் குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்களின் 6ம் வீட்டை குரு பகவான் தனது 9ம் பார்வையாக பார்ப்பதால் பழைய கடனை அடைப்பதற்கு புது வழி பிறக்கும். இழுபறியாக இருந்த வழக்கிலும் வெற்றியுண்டு.

வெகுநாட்களாக தள்ளிப்போய்க் கொண்டிருந்த பிரார்த்தனைகளை இப்போது நிறைவேற்றுவீர்கள். எங்கேயாவது அவசரமாக சென்றபோதெல்லாம் உங்கள் வண்டி சதி செய்ததே. அடிக்கடி செலவும் வைத்ததே. இனி நவீனரக வாகனத்தை வாங்குவீர்கள். கௌரவத்தை காப்பாற்றுவதாக நினைத்து வீண் செலவுகளை செய்யாதீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள்

21.11.2010 முதல் 2.1.2011 வரை:

இந்த காலகட்டங்களில் உங்கள் பாதகாதிபதியான குரு பகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4ம் பாதத்தில் செல்வதால், உத்யோகத்தில் மறைமுக இடையூறுகள், மேலதிகாரியுடன் உரசல்போக்கு வரக்கூடும். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், கருத்து மோதல், சிறு சிறு விபத்துகள் வரக்கூடும். சிலர் உங்களைப் பற்றிய தவறான வதந்திகளையும் பரப்பி விடுவார்கள். கொஞ்சம் உஷாராக இருங்கள். லேசாக கால்வலி, உடல் அசதி, செரிமானக்கோளாறு வந்து நீங்கும். அவ்வப்போது ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

3.1.2011 முதல் 13.3.2011 வரை:

மேற்கண்ட நாட்களில் உங்களின் அஷ்டம, பாக்யாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் வெகுநாட்களாக வராமலிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். திட்டமிட்டபடி வெளிமாநில புண்ணியதலங்கள் சென்று வருவீர்கள். வருங்காலத்திற்காக சேமிப்பீர்கள். என்றாலும் வீடு, வாகன பராமரிப்புச் செலவு என்று ஒருபக்கம் அதிகரிக்கத்தான் செய்யும். உடன்பிறந்தவர்களுடன் மனக்கசப்பு வரக்கூடும். அவ்வப்போது விரக்தி, சோர்வு வந்து நீங்கும்.

14.3.2011 முதல் 7.5.2011 வரை:

இந்த காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் ராசிநாதனும், சுகாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல் வதால் சோம்பல் நீங்கி சுறு
சுறுப்படைவீர்கள். குடும்ப வருமானம் உயரும். தங்க ஆபரணம் சேரும். பணப் பற்றாக்குறையால் பாதியிலேயே நின்றுபோன வீட்டை லோன் மூலம் முழுமையாக கட்டி முடிப்பீர்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த கல்யாணம் முடியும்.

வியாபாரிகளே, தொழிலில் புதிது புதிதாக வந்த போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே! இனி அவர்களுக்கெல்லாம்
பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். நவீன யுக்திகளை பயன்படுத்தி வியாபாரத்தை தழைக்கச் செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி இறக்குமதி வகைகளால் நல்ல லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழில் செழிக்கும். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

உத்யோகஸ்தர்களே, இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டியது வரும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாதீர்கள். அலு வலகத்தில் சொந்த விஷயங்களை அதிகமாகப் பேசாதீர்கள். அலுவலக ரகசியங்களை வெளியிடாதீர்கள். முக்கிய கோப்புகளை கவனமாகக் கையாளுங்கள். அடிக்கடி விடுப்புகள் எடுக்காதீர்கள். மார்ச், ஏப்ரல் மாதங்களில் நிம்மதியுண்டு. அதிக சம்பளத்துடன் பெரிய பதவி வந்தால் பலமுறை யோசித்து ஏற்பது நல்லது. மேலதிகாரியின் பாராட்டு மழையில் நனை வீர்கள்.

கன்னிப் பெண்களே, உயர்கல்வியில் அலட்சியம் வேண்டாம். பெற்றோரின் ஆலோசனையில்லாமல் எந்த முடிவையும் எடுக்காதீர்கள். ஒற்றைத் தலைவலி, மாதவிடாய்க் கோளாறு வரக்கூடும். மாணவர்களே! விளையாட்டு விளையாட்டு என்று படிப்பில் கோட்டை விட்டதெல்லாம் போதும். இனிமேல் படிப்பைத் தவிர மற்றதில் கவனம் செலுத்த வே ண்டாம்.

கலைஞர்களே! நாளுக்கு நாள் உங்களைப் பற்றிய வீண் வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனந்தளராமல் இருங்கள். புதிய வாய்ப்புகளில் சம்பள கெடுபிடி காட்டாதீர்கள். அரசியல்வாதிகளே, ஆதாரமில்லாமல் யாரையும் விமர்சிக்க வேண்டாம். தலைமைக்கு
கட்டுப்படுங்கள். சகாக்களுக்கு மத்தியில் உங்கள் செல்வாக்கைக் காட்ட கைக்காசை போட்டு செலவு செய்ய வேண்டியது வரும்.

விவசாயிகளே, விளைச்சலை அதிகப்படுத்த நவீன ஒட்டுரக விதைகளை பயன்படுத்துங்கள். மரப்பயிர்கள், காய்கறி வகைகளால் ஆதாயமுண்டு. அரசால் அனுகூலம் உண்டு. இந்த குரு மாற்றம் பணத்தின் அருமையை உணர்த்துவதுடன், மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றியை தருவதாக அமையும்.

பரிகாரம்:

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகேயுள்ள அச்சிறுப்பாக்கம் ஆட் சீஸ்வரரையும், அத்தல தட்சிணாமூர்த்தியையும் அனுஷம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். மரக்கன்று நட்டு பராமரியுங்கள்.
மேலும் இங்கே தொடர்க...

குருபெயர்ச்சி


கடமை உணர்வு கொண்ட நீங்கள் எல்லாவற்றையும் காதலிப்பவர்கள். பிறர் உங்களைக் குற்றம், குறை கூறி கு தர்க்கமாகப் பேசினாலும் மனம் தளரமாட்டீர்கள். தொலைநோக்குச் சிந்தனையால் சாதிப்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 8ம் வீட்டிலும், 9ம் வீட்டிலும் மாறி மாறி அமர்ந்து எதையும் முழுசாக செய்யவிடாமல், பலவிதங்களில் உங்களை டென்ஷனாக்கிய குரு பகவான், இப்பொழுது 21.11.2010 முதல் 7.5.2011 வரை உங்கள் ராசிக்கு பாக்ய வீடான 9ம் வீட்டில் அமர்வதால் உங்களின் திட்டங்கள் யாவும் வெற்றியடையும்.

‘ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு’ என்ற பழமொழிக்கேற்ப உங்களின் அடிப்படை வசதிகளும், அந்தஸ்தும் உயரும். எடுத்த வேலையை முடிக்க முடியாமலும், அடுத்த வேலையை தொடங்க முடியாமலும் தத்தளிக்க வைத்த குரு, இனி தொட்டதையெல் லாம் துலங்க வைப்பார். சாதுர்யமான பேச்சால் பல வேலைகளை சாதிக்க வைப்பார். செய்யும் தொழிலுக்கு இணையாக வேறொரு இணை தொழிலையும் தொடங்குவீர்கள்.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால் முகச் சுருக்கம் நீங்கி தேஜஸ் கூடும். எவ்வளவு காசு வந்தாலும் அவசரத்திற்கு எதுவும் இல்லாமல் தவித்தீர்களே! இனி நாலு காசு சேமித்து வைக்கும் அளவிற்கு வருமானம் கூடும். எப்போதும் பரபரப்பாக இருப்பதைப்போல காணப்பட்டாலும், தன் காரியத்தை சாதிக்க முடியாமல் தத்தளித்தீர்களே அந்த அவல நிலை மாறும். அதிக வட்டிக்கு கடனை வாங்கி அவஸ்தைப்பட்டீர்களே, அந்தக் கடனை அடைப்பீர்கள். இதுவரை சேமிப்பே இல்லாமல் இருந்த நீங்கள் இனி சேமிக்கத் தொடங்குவீர்கள்.

வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய திட்டங்களைத் திட்டுவீர்கள். இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த உறவினர்கள் தேடிவந்து உறவாடுவார்கள். குடும்பத்தினருடன் கூட ஒட்டாமல் ஒதுங்கி இருந்தீர்களே, இனி கலகலப்பான சூழல் ஏற்படும். வெகுநாட்களாக வீட்டில் தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்களெல்லாம் இனி அடுத்தடுத்து நடக்கும். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். மனைவி வழி உறவினர்களும் ஒத் தாசையாக இருப்பார்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கூடாப்பழக்கம் விலகும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். கல்யாணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். வீடு, வாகன வசதிகள் பெருகும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் உங்களின் 3ம் வீட்டை பார்ப்பதால் வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். நல்லது சொல்லப் போன உங்களை அதிகப்பிரசங்கி என்று அவமானப்படுத் தினார்களே! இனி உங்கள் ஆலோசனைகளை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். வெகுநாட்களாக குலதெய்வக் கோயிலுக்குப் போய் வரவேண்டுமென்று நினைத்தும் தடங்கலானதே, இப்பொழுது குடும்பத்துடன் சென்று நேர்த் திக்கடனை நிறைவேற்றுவீர்கள். பாகப்பிரிவினை மற்றும் சொத்துப் பிரச்னைகளில் இருந்துவந்த இழுபறி நிலை மாறும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றியடைவீர்கள்.

குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள்

21.11.2010 முதல் 2.1.2011 வரை:

மேற்கண்ட காலகட்டங்களில் உங்களின் பாக்யாதிபதியான குரு பகவான், தன் நட்சத்திரமான பூரட்டாதி 4ம் பாதத் தில் செல்வதால் திடீர் யோகம், பணவரவு எல்லாம் உண்டு. பழைய சொத்தை மாற்றிவிட்டு புதுச்சொத்து வாங்கு வீர்கள். மகளுக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். புது வேலை தேடி அலைந்தீர்களே, இனி நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். புது முயற்சிகளில் வெற்றியுண்டு.

3.1.2011 முதல் 13.3.2011 வரை:

மேற்கண்ட நாட்களில் உங்களின் சப்தம, அஷ்டமாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டு. கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஆனால், பிப்ரவரி மாதத்திலிருந்து சின்னச் சின்ன மனஸ்தாபங்களும், வீண் செலவுகளும், அலைச்சலும் வந்துபோகும். காலில் அடிபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விலை உயர்ந்த நகைகள், ரத்தினங்களை கவனமாகக் கையாளுங்கள். வி.ஐ.பிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

14.3.2011 முதல் 7.5.2011 வரை:

இக்காலகட்டத்தில் குரு பகவான் உங்களின் தைரிய ஸ்தானாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் வெகுநாட்களுக்குப் பிறகு பழைய நண்பர்கள், உறவினர்களின் சந்திப்பு நிகழும். அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். இளைய சகோதரர் பாசமாக இருப்பார். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும். ஷேர் மூலம் பணம் வரும். அடிக்கடி பழுதாகிக் கொண்டிருந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ஆன்மிக காரியங்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள்.

வியாபாரிகளே, பல்முனைப் போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே, இனி புது யுக்திகளைக் கையாளுவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். இணையதள விளம்பரம் மூலம் வாடிக்கையாளர்களை அதிகப்படுத் துவீர்கள். உங்களின் அதிரடியான செயல்களைக் கண்டு சக வியாபாரிகளும் திகைப்பார்கள். பொறுப்பில்லாமல் இருந்த வேலையாட்கள் இனி பம்பரமாகச் சுழல்வார்கள். ரியல் எஸ்டேட், கம்ப்யூட்டர் உதிரி பாகம், எலெக்ட்ரானிக்ஸ், கெமிக்கல் வகைகளால் லாபம்அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் ஆதாயமுண்டு. அடிக்கடி வேலையாட்கள் விடுப்பில் சென்று வெறுப்பேற்றினார்களே, இனி தொடர்ந்து ஒத்துழைப்பார்கள்.

உத்யோகஸ்தர்களே, எப்போதும் உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த மேலதிகாரி இனி புகழாரம் பாடுவார். முடிக்காமல் கிடப்பில் போடப்பட்ட வேலைகளையெல்லாம் இனி பரபரப்பாக செயல்பட்டு முடிப்பீர்கள். காத்திருந் தபடி பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உண்டு. சக ஊழியர்கள் உங்களை சண் டைக்காரர்களாக பார்த்தார்களே! இனி சிரித்துப் பேசுவார்கள். கன்னிப் பெண்களே! தடைபட்டுக் கொண்டிருந்த கல்யாணம் கூடி வரும். முகப்பரு, தேமல் நீங்கி முகம் ஜொலிக்கும். மாதவிடாய்க் கோளாறு, தூக்கமின்மை நீங்கும். தடைபட்ட கல்வியை தொடருவீர்கள்.

மாணவர்களே! விளையாட்டில் முதலிடம் பிடிப்பீர்கள். பரிசு, பாராட்டு எல்லாம் உண்டு. அதே ஆர்வத்தை படிப்பிலும் காட்டுங்களேன். கலைஞர்களே! பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும். கிசுகிசுக்கள் ஓயும். சம்பளப்பாக்கி கைக்கு வரும். அரசியல்வாதிகளே, தலைமையிடம் அனுசரித்துப் போங்கள். வீண் விமர்சனங்களை தவிர்த்து, செயலில் அக்கறை காட்டுங்கள்.

விவசாயிகளே, வரப்பு வாய்க்கால் பிரச்னைகள் எல்லாம் முடிவுக்கு வரும். உற்பத்தியை இரட்டிப்பாக்குவீர்கள். தானிய வகைகளால் ஆதாயமுண்டு. இந்த குரு மாற்றம் ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒரு கால் என்று அவதிப்பட்ட உங்களை கோபுரமாக மிளிர வைக்கும்.

பரிகாரம்:

விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு விருத்தகிரீஸ்வரரையும், விபசித்து முனிவர் மற்றும் தட்சிணாமூர் த்தியையும் மூலம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். ஏழைப்பெண்ணின் திருமணத்திற்கு மாங்கல்யம் வாங்கிக் கொடுங்கள்.
மேலும் இங்கே தொடர்க...

குரு பெயர்ச்சி


நல்லதோ, அல்லதோ... முடிவெடுத்து விட்டால் முன்வைத்த காலை பின் வைக்காமல் முடித்துக் காட்டுபவர்களே! வசதி வந்தபோதும் பழைய நட்பை மறவாதவர்களே! உங்களின் பூர்வ புண்யாதிபதியான குரு பகவான் கடந்த ஓராண்டு காலமாக 7ம் வீட்டிலும், 8ம் வீட்டிலும் மாறி மாறி அமர்ந்ததால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாமல் தடுமாறிப் போனீர்களே!

குரு வக்ரமானதால் பணப்பற்றாக்குறையாலும், சரியான தூக்கமில்லாமலும் தத்தளித்தீர்களே, இப்போது 21.11.2010 முதல் 7.5.2011 வரை எட்டாம் வீட்டிற்குள் நீடிப்பதால் முன்பு போலவே பெயர் கெடுமோ, எந்த வேலையையும் திறம்படச் செய்ய முடியாதோ என்றெல்லாம் வருந்தாதீர்கள். சரராசியில் பிறந்த உங்களுக்கு குரு பகவான் உபய வீட்டில் மறைவதுடன், தன் சொந்த வீட்டில் அமர்வதால் மேற்கண்ட காலகட்டங்களில் கெடு பலன் கள் குறைந்து நற்பலன்களே அதிகரிக்கும். எல்லா செயல்களில் இருந்த சுணக்கமும், தயக்கமும் இனி அறவே நீங்கும்.

அரைகுறையாக நின்றுபோன பல வேலைகள் இனி முழுமையடையும். வரவேண்டிய பணம் வந்துசேரும். பழைய கடனையும் பைசல் செய்வீர்கள். பூர்வீகச் சொத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உடன் பிறந்தவர்கள் மிகவும் உதவியாக இருப்பார்கள். வழக்குகள் சாதகமாகும். குரு பகவான் தனது 7ம் பார்வையால் உங்களின் 2ம் வீட்டை பார்ப்பதால் குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல் மற்றும் குழப்பங்கள் நீங்கும்.

மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீங்கள் நல்லதே சொன்னாலும் சிலர் அதை தவறாக புரிந்து கொண்டார்களே, சில சமயங்களில் சொல்ல வேண்டிய விஷயத்தை சரியாக சொல்ல முடியாமல் தடு மாறினீர்களே, அந்த அவல நிலையெல்லாம் இனி மாறும். உங்கள் ஆலோசனையை அலட்சியப்படுத்தியவர்கள் இப்போது உங்களை மீண்டும் தேடி வருவார்கள். பணம் வரத்தான் செய்கிறது. ஆனால் ஏனோ தங்கவில்லை என புலம்பினீர்களே! இனி பணத்தை சேமிக்கும் வழியை கண்டுபிடிப்பீர்கள்.

பூர்வீகச் சொத்தையும் விற்றுவிட்ட கவலையில் இருந்தீர்களே, இனி புதுச் சொத்தை வாங்கிப் போடுவீர்கள். பழுதான எலட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல் சாதனங்களை மாற்றுவீர்கள். குரு பகவான் தனது 9ம் பார்வையால் உங்களின் சுக ஸ்தானத்தை பார்ப்பதால் உடல் ஆரோக்யம் மேம்படும். மருந்து மாத்திரைகளின் அளவு இனி குறையும். வீண் அலைச்சல், டென்ஷன், களைப்பு, மன உளைச்சல் நீங்கும். தாயாருடன் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டிருந் தீர்களே, இனி பாசமாக இருப்பீர்கள். தாயார் வழிச்சொத்து கைக்கு வரும்.

தண்ணீர் வசதியில்லாத, இடவசதியில்லாத வீட்டில் தவித்துக் கொண்டிருந்தீர்களே, இனி விசாலமான வீட்டிற்கு மாறுவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்விக்காக வேறு ஊர்களுக்கு மாற்றல் கேட்டுச் செல் வீர்கள். இதுவரை மறுக்கப்பட்ட உங்கள் ஆலோசனைகளை இனி வரும் காலங்களில் ஏற்றுக் கொள்வார்கள். இயக்கம், சங்கம் இவற்றில் நல்ல பதவி கிடைக்கும்.

கொஞ்சம் மறைமுக எதிர்ப்புகளும் உங்களுக்கு இருக்கத்தான் செய்யும். விமர்சனங்கள், வதந்திகள் வரும். அதற்காக அஞ்ச வேண்டாம். உங்களிடம் இருக்கும் தலைமைப் பண்பை கண்டுபிடித்து சரியான உயர்பதவிகளில் உங்களை அமர வைப்பார்கள்.

குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள்

21.11.2010 முதல் 2.1.2011 வரை:

இந்த காலகட்டங்களில் உங்களின் பூர்வ புண்யாதிபதியான குரு பகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி 4ம் பாதத் தில் செல்வதால் உங்களின் தகுதி, அந்தஸ்து உயரும். பதவிகள் தேடி வரும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். அரசாங்க காரியங்களில் வெற்றியுண்டு. மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளின் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.

3.1.2011 முதல் 13.3.2011 வரை:

மேற்கண்ட நாட்களில் சப்தமாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் குடும்பத்தில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சில நேரங்களில் தாழ்வுமனப்பான்மை, தயக்கம் வரக்கூடும். வாகன விபத்துகள், வீண் செலவுகள், மறைமுக அவமானம், உறவினர்கள் மற்றும் பிரபலங்களுடன் பகையும் வந்து நீங்கும். விலையுயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள்.

14.3.2011 முதல் 7.5.2011 வரை:

இக்காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் தன லாபாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் தடைப ட்டுக் கொண்டிருந்த காரியங்கள் முழுமையடையும். குழந்தை பாக்கியம் கிட்டும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். சொந்த ஊர் கோயிலில் கும்பாபிஷேகச் செலவில் ஒரு பகுதியை ஏற்றுக் கொள்வீர்கள்.

வியாபாரிகளே, பழைய வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க புது திட்டம் தீட்டுவீர்கள். பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலியுங்கள். கோர்ட்டுக்கு போக வேண்டாம். கடையை வேறிடத்திற்கு மாற்றுவீர்கள். டிசம்பர், மார்ச் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இரும்பு, கெமிக்கல், ஏற்றுமதி இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டு த்தொழிலில் பங்குதாரர்களுடன் பிரச்னைகள் வெடிக்கும்.

உத்யோகஸ்தர்களே, நீங்கள் திறமைசாலி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், மூத்த அதிகாரி புரிந்து கொள் ளவில்லையே என்று வருந்துவீர்கள். சக ஊழியர்களிடையே வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சக ஊழியர்கள் சொல் கிறார்களே என்று மேலதிகாரிகளைப்பற்றி குறை சொல்லாதீர்கள். புது வேலைக்கு மாறும்போது யோசித்து செயல்படுங்கள்.

கன்னிப் பெண்களே! திட்டவட்டமான முடிவுகளை எடுக்க முடியாமல் கொஞ்சம் தடுமாற்றமாகத்தான் இ ருப்பீர்கள். தவறான நட்பை ஒதுக்கி வையுங்கள். காதல் விவகாரங்கள் இப்போதைக்கு வேண்டாம். வியாபார நு ணுக்கங்களை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.
மாணவர்களே! சதா விளையாட்டு என்றிருக்காதீர்கள். கொஞ்சம் படிப்பிலும் அக்கறை காட்டுங்கள். வகுப்பறையில் வீண் பேச்சைக் குறையுங்கள். கலைஞர்களே! கிசுகிசுக்கள், வதந்திகள் என்று ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் உங்களின் விடாமுயற்சியால் சாதித்துக் காட்டுவீர்கள்.

அரசியல்வாதிகளே, கட்சிப்பூசல், விமர்சனங்களில் தலையிடாமலிருப்பது நல்லது. சிலர் உங்களைப் பற்றி தலைமையிடம் தவறாகக் கூறுவார்கள். கொஞ்சம் கவனமாக இருங்கள். தலைமையிடமிருந்து எந்தக் கட்டளையும் வராமல் நீங்களாக எதையும் செய்யாதீர்கள். தனி நபர் விமர்சனங்களை தவிர்த்து விடுங்கள்.

விவசாயிகளே, வண்டுக்கடி, பூச்சிக்கடி, எலித் தொல்லை இருக்கும். பக்கத்து நிலத்துக்காரருடன் இருந்து வந்த உரசல் போக்கு மாறும். பழைய பம்புசெட்டை மாற்றுவீர்கள்.இந்த குரு பெயர்ச்சி வாழ்க்கை போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கான மன உறுதியை தருவதுடன் வி.ஐ.பிகளின் மனதிலும் இடம்பிடிக்க வைக்கும்.

பரிகாரம்:

நாகப்பட்டினத்தில் அருள்பாலிக்கும் காயாரோகணேஸ்வரரையும் அத்தலத்திலுள்ள தட்சிணாமூர்த்தியையும் சித்திரை நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். வெற்றி உண்டு.
மேலும் இங்கே தொடர்க...

குரு பெயர்ச்சி





மண்ணின் மைந்தர்களான நீங்கள் வெளிப்படையாக மற்றவர்களை விமர்சிப்பீர்கள். ஆரம்பத்தில் அந்தரத்தில் கோட்டை கட்டும் நீங்கள், பிற்காலத்தில் ஆள்பவர்களுக்கு நெருக்கமாவீர்கள். உங்கள் சுக ஸ்தானாதிபதியான குரு பகவான் கடந்த ஓராண்டு காலமாக 6ம் வீட்டிலும் 7ம் வீட்டிலும் மாறிக் கொண்டே இருந்ததால் கொஞ்சம் கூட ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருந்திருக்கும்.

குடும்பத்தினருடன் கலகலப்பாக பேசி சிரித்தே வெகுநாட்கள் ஆகிப் போனதே... மனைவி, பிள்ளைகளின் சின்னச் சின்ன ஆசைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் போனதே, இப்பொழுது குரு பகவான் 21.11.2010 முதல் 7.5.2011 வரை ஏழாம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால் குழம்பிக்கிடந்த உங்கள் மனம் இனி தெளிவடையும். குடும்பத்தினர் மீது ஈடுபாடு அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும்.
வீட்டில் தடைபட்ட சுப காரியங்கள் உடனே முடியும்.

குரு பகவான் உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்ப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த கணவன் மனைவி இனி ஒன்று சேருவீர்கள். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. நெடுநாட்களாக பிள்ளையில்லாமல் தவித்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். மகனை உயர்கல் விக்காக அயல்நாட்டிற்கு அனுப்பி வைப்பீர்கள்.

மகளின் திருமணத்தை உறவினர்கள் மெச்சும்படி நடத்துவீர்கள். கே ட்ட இடத்தில் பணம் கிடைக்காமல் பாதியிலேயே வீடுகட்டும் வேலை நின்றுபோனதே, இனி தேவையான அளவு பணம் வரும். வீட்டை முழுமையாகக் கட்டி முடிப்பீர்கள். சொத்துப் பிரச்னை தீரும். மூத்த சகோதரி பண உதவி செய்வார். இளைய சகோதரர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் தொட்ட காரியம் துலங்கும். ஷேர் மூலம் பணம் வரும். வீடு, வாகன வசதி பெருகும். விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். வெளிமாநில பு ண்ணியதலங்கள் சென்று வருவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். மூத்த சகோதரர் பாசமழை பொழிவார். இனி கோபப்படாமல் பேசுவீர்கள். பழைய கசப்பான சம்பவங்களை மறப்பீர்கள்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் உங்களின் 3ம் வீட்டைப் பார்ப்பதால் கௌரவ பதவிகள் தேடிவரும். வி.ஐ.பிகளின் வீட்டு விசேஷங்களில் தனி மரியாதை கிடைக்கும். சொந்த ஊர் கோயில் திருவிழாவை முன்னின்று நடத்துவீர்கள்.

குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள்

21.11.2010 முதல் 2.1.2011 வரை:

இக்காலகட்டங்களில் உங்களின் சுக, சப்தமாதிபதியான குரு பகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4ம் பாதத்தில் செல்வதால் தடைகள் நீங்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். பூர்வீகச் சொத்தில் இருந்த சிக்கல் தீரும். வழக்குகளில் இருந்த தேக்கநிலை மாறும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் குறையும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த உரசல் போக்கு மாறும். அரசாங்கத்தால் அனுகூலமுண் டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம்அடைவீர்கள்.

3.1.2011 முதல் 13.3.2011 வரை:

மேற்கண்ட நாட்களில் உங்களின் பூர்வ புண்ய மற்றும் சத்ரு ஸ்தானாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட் சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், வீட்டில் தள்ளிப்போய்க் கொண்டிருந்த கல்யாணம், காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகள் உடனே முடியும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பணவரவு ஓரளவு நிம்மதி தருவதாக இருந்தாலும் செலவுகள் துரத்தும். பழைய கடனை போராடி பைசல் செய்வீர்கள். கனவுத் தொல்லை, தூக்கமின்மை விலகும்.

14.3.2011 முதல் 7.5.2011 வரை:

இக்காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல் வதால் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உடல் சோர்வு, அசதி, கைகால் மூட்டு வலி வந்து நீங்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். இடவசதியில்லாத வீட்டிலிருந்து விசாலமான வீட்டில் குடி புகுவீர்கள். சிலர் புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். சகோதரி உதவுவார். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள்.

வியாபாரிகளே, முடங்கிக் கிடந்த நீங்கள் புத்துயிர் பெறுவீர்கள். டிசம்பர், மார்ச் மாதங்களில் வியாபாரத்தை விரிவு படுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். புதிய ஏஜென்ஸி எடுப்பீர்கள். வராது என்றிருந்த பழைய பாக்கிகள் வந்துசே ரும். புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். படித்த, அனுபவமுள்ள வேலையாட்களை கூடுதலாக நியமிப்பீர்கள். ரியல் எஸ்டேட், உணவு விடுதி, வாகன உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். கூட்டுத்
தொழிலில் எதற்கெடுத்தாலும் நிலவி வந்த பிரச்னைகள் இனி ஓயும். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.

உத்யோகஸ்தர்களே! ஓடி ஓடி வேலை பார்த்தும் கெட்ட பெயர்தானே கிடைத்தது. இனி அந்த அவலநிலை மாறும். மேலதிகாரியின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். உங்களின் பன்முகத் திறமையை புரிந்து கொண்டு பாராட்டுவார். மறைமுக எதிர்ப்புகள், வீண்பழி, வேலைச்சுமை நீங்கும். எதிர்பார்த்திருந்த சம்பள பாக்கி கைக்கு வரும். உடன் பணிபுரிபவர்களை விமர்சித்துப் பேசவேண்டாம். மார்ச், ஏப்ரல் மாதங்களில் நினைத் தபடி பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் புதிய வாய்ப்புகளும் தேடிவரும்.

கன்னிப்பெண்களே! தடைபட்ட கல்யாணம் இனி கூடி வரும். காதல் கைகூடும். தாயாருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். நல்ல வேலையும் கிடைக்கும். இ துவரை எதிர்பார்த்திருந்த வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் வாய்ப்பு வரும். மாணவர்களே மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். விரும்பிய பாடப் பிரிவில் இடம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளே, தலைமையின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள். உங்கள்மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்குகள் தள்ளுபடியாகும். கலைஞர்களே! பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களை தேடி வரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். உங்களின் படைப்புகளை அரசு கௌரவிக்கும். எப்பொழுதோ எழுதிய நூல்களுக்கு இப்போது புதிய பாராட்டுக்கள் கிடைக்கும்.

விவசாயிகளே! விளைச்சல் அதிகரிக்கும். பக்கத்து நிலத்தையும் வாங்குமளவிற்கு வரு மானம் உயரும். பழைய பம்பு செட்டை மாற்றுவீர்கள். கிணற்றில் நீர் சுரக்கும். இந்த குரு பெயர்ச்சி சமூகத்தில் மதிப்பு, மரியாதை தருவதுடன் எதிர்பாராத திடீர் திருப்பங்களையும் அமைத்துத் தரும்.

பரிகாரம்:

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரரையும் அத்தலத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியையும் அனுஷம் நட்சத்திர நாளில் நெய் விளக்கேற்றி வணங்குங்கள். புற்றுநோய் பாதித்தவர்களுக்கு உதவுங்கள்.
மேலும் இங்கே தொடர்க...

குரு பெயர்ச்சி



வெகுளித்தனமான பேச்சால் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் நீங்கள், தலையை அடகு வைத்தாவது சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். தவறு செய்தால், தலைவனாக இருந்தாலும் தட்டிக் கேட்கத் தயங்கமாட்டீர்கள். இது வரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிலும், 6ம் வீட்டிலும் மாறி மாறி அமர்ந்து உங்களை பலவிதங்களிலும் சிரமப்படுத்திய குரு பகவான், இப்பொழுது 21.11.2010 முதல் 7.5.2011 வரை 6ம் வீட்டிற்குள் நீடிப்பதால் சந்தோஷத்தையும், சங்கடங்களையும் கலந்து தருவார். இந்த அமைப்பு சகட குரு ஆயிற்றே என்று பயப்படாதீர்கள்.

உங்களின் பிரபல யோகாதிபதிகளான சனி பகவான் மற்றும் புதனின் நட்சத்திரத்தில் குரு செல்வதால் அவ்வப்போது உங்களுக்கு யோகப் பலன்களையும் அள்ளித் தருவார். குரு 6ல் அமர்வதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உங்களைப் பற்றி சிலர் அவதூறாகப் பேசுவார்கள். சில காரியங்களை பலமுறை அலைந்து முடிக்க வேண்டி வரும். குடும்பத்தில் சாதாரணமாகப் பேச, அது சண்டையில் போய் முடிய வாய்ப்பிருக்கிறது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. இரவு நேரப் பயணங்களை தவிர்த்துவிடுங்கள்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் உங்களின் குடும்ப ஸ்தானமான 2ம் வீட்டைப் பார்ப்பதால், பேச்சில் இருந்த கடுமை குறையும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உங்கள் குடும்ப விஷயங்களை வெளியாளிடம் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகளால் தொல்லைகள்தானே மிஞ்சியது. இனி அவர்கள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பார்கள். உயர் கல்வியில் வெற்றி பெற்று உங்களை தலைநிமிரச் செய்வார்கள். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னைகள் எல்லாம் ஓயும். சகோதர, சகோதரிகள் உறுதுணையாக இருப்பார்கள்.

குரு தனது 5ம் பார்வையால் உங்களின் 10ம் வீட்டைப் பார்ப்பதால் புதிய வேலை கிடைக்கும். அரைகுறையாக நின்று போன கட்டிடப் பணிகள் முழுமையடையும். வீட்டில் தள்ளிப்போய்க் கொண்டிருந்த கல்யாணம் சிறப்பாக நடந்து முடியும். உங்களை உதறித் தள்ளிய சொந்த பந்தங்கள் இனி வலிய வந்து பேசுவார்கள். இயக்கம், சங்கம் இவற்றில் சேருவீர்கள். முக்கிய பதவிகள் கிடைக்கும்.

சூழ்ச்சியால் உத்யோகத்தில் பதவி உயர்வை இழந்தீர்களே! இனி சம்பளம் உயரும். பதவியும் உயரும். அலுவலக சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி கிடைக்கும். குரு தனது 7ம் பார்வையால் உங்களின் 12ம் வீட்டை பார்ப்பதால் வீண் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் பாக்கியம் கிட்டும்.

குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள்

21.11.2010 முதல் 2.1.2011 வரை:

இந்த காலகட்டங்களில் உங்களின் தைரிய ஸ்தானாதிபதியான குரு பகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத் திரத்தின் 4ம் பாதத்தில் செல்வதால் எதிர்பாராத பயணங்கள், சுபச் செலவுகள், அலைச்சல் என வந்துபோகும். திட் டமிட்டபடி சில காரியங்களை செய்ய முடியாமல் போகும். சில நேரங்களில் இனந்தெரியாத கவலைகள், விரக்தி, வேலைச்சுமை, பொருள் இழப்பு, மருத்துவச் செலவு வந்து செல்லும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்து போடாதீர்கள். வீணாக சந்தேகப்பட்டு நல்லவர்களை இழக்க வேண்டி வரும்.

3.1.2011 முதல் 13.3.2011 வரை:

மேற்கண்ட நாட்களில் உங்களின் சுக, பூர்வ, புண்யாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் மனதிலிருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் நிலவி வந்த பூசல்கள் மறையும். பிரிந் தவர்கள் ஒன்று சேருவீர்கள். மகளுக்கு வேலை கிடைக்கும். திருமணமும் நல்ல விதத்தில் முடியும். உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகள் வெளிநாடு செல்வார்கள். குழந்தை பாக்யம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். தாயாருக்கு இருந்த மூட்டுவலி, முழங்கால் வலிகளெல்லாம் நீங்கும். சிலருக்கு அயல்நாடு சென்று வரும் வாய்ப்பு உண்டாகும்.

14.3.2011 முதல் 7.5.2011 வரை:

இந்த காலகட்டத்தில் குரு பகவான் உங்களின் பாக்ய, விரய ஸ்தானாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செ ல்வதால் நினைத்த வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் தக்க சமயத்தில் கைக்கு வரும். கடனாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். தந்தை வழியில் உதவியுண்டு. உறவினர்கள், நண்பர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். கௌரவப் பதவிகள் தேடிவரும். சோம்பல், விரக்தி, தூக்கமின்மை விலகும். பழைய நண்பர்களால் ஆதாயமுண்டு. ஓட்டை உடைசலாக இருந்த வாகனத்தை மாற்றிவிட்டு புது வண்டியில் வலம் வருவீர்கள்.

வியாபாரிகளே, தேங்கிக்கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வரவேண்டிய பழைய பாக்கிகளெல்லாம் வசூலாகும். கடையை கொஞ்சம் அழகுபடுத்துவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலையாட்கள் சில நேரங்களில் நன்றி மறந்து பேசுவார்கள். வாடிக்கையாளர்களை கனிவாக நட த்துங்கள். நவீன யுக்திகளை பயன்படுத்தி வியாபாரத்தை பெருக்கப் பார்ப்பீர்கள். உணவு, கமிஷன், ரியல் எஸ்டேட், மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்து நீங்கும்.

உத்யோகஸ்தர்களே, காலநேரம் பார்க்காமல் உழைக்க வேண்டியது வரும். என்றாலும் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். எப்போது பதவி உயரும் என காத்திருந்தீர்களே, மார்ச், ஏப்ரல் மாதங்களில் சம்பள உயர்வுடன் பதவி உயர்வும் உண்டு. சக ஊழியர்களிடம் சொந்த விஷயங்களை பேசாமல் இருப்பது நல்லது.

கன்னிப் பெண்களே! தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கசந்த காதல் இனிக்கும். மறதி, மந்த நிலையிலிருந்து விடுபடுவீர்கள். மாதவிடாய்க் கோளாறு, ஒற்றைத் தலைவலி, கண் எரிச்சல் நீங்கும். கல்யாணம் கூடிவரும்.

மாணவர்களே! விளையாட்டை குறைத்து உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நினைவாற்றலை அதிகப்ப டுத்த விடைகளை எழுதிப் பாருங்கள். விடியற்காலையில் எழும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்களே! வெகுநாட்களாக தடைபட்ட வாய்ப்பு இனி கூடி வரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். வெளிநாட்டு புது நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.

அரசியல்வாதிகளே, தலைமைக்கு நெருக்கமாவீர்கள். பொதுக் கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். தனிநபர் விமர்சனத் தை தவிர்த்து விடுங்கள். சகாக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். எதிர்க்கட்சியினர் சிலர் விமர்சனம் செய்வார்கள். கவலை வேண்டாம்.

விவசாயிகளே, சிறு சிறு பிரச்னைகளுக்கெல்லாம் கோர்ட், கேஸ் என்று போகாமல் சுமுகமாகப் பேசி முடிக்கப் பாருங்கள். மகசூலை அதிகப்படுத்த மாற்றுப் பயிரிடுங்கள். எண்ணெய் வித்துகளால் ஆதாயமுண்டு. இந்த குரு மாற்றம் ஏழரைச் சனியின் தாக்கத்தை ஓரளவு குறைப்பதுடன், மாறுபட்ட அனுபவங்களையும், சில வெற்றிகளையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரையும், அத்தலத்திலேயே அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியையும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். வாய் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள்.
மேலும் இங்கே தொடர்க...

குரு பெயர்ச்சி




பணத்திற்கும் பகட்டான வாழ்க்கைக்கும் மயங்காத உங்களை, பகடைக்காயாக உருட்டினாலும் கொண்ட கொள்கையிலிருந்து மாறுபட மாட்டீர்கள். நீதி, நியாயம் பற்றிப் பேசும் நீங்கள், அடிபட்டவர்களை அரவணைப்பீர்கள். இதுவரை குரு பகவான் 4ம் வீட்டிலும், 5ம் வீட்டிலும் மாறிமாறி நின்று கொஞ்சம் தடுமாற்றத் தையும், கொஞ்சம் மகிழ்ச்சியையும் கொடுத்தார். இப்பொழுது 21.11.2010 முதல் 5ம் வீட்டிற்குள் நுழைந்து 7.5.2011 வரை நீடிப்பதால் உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவார்.

எதிர்பாராத திடீர் யோகங்கள் உண்டாகும். இழுத்துப் பறித்துக் கொண்டிருந்த சில காரியங்கள் உடனே முடியும். கு டும்பத்தில் வீசி வந்த புயல் விலகும். உண்மையைப் பேசி பொல்லாதவர்கள் ஆனீர்களே, வீட்டிற்குள் நுழைந்தாலே என்ன நடக்குமோ என்ற படபடப்பு இருந்ததே, இனி அந்த அவல நிலையெல்லாம் மாறும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வசதி வாய்ப்புகள் இருந்தும் துள்ளி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என்று ஏங்கித் தவித்த தம்பதியருக்கு வாரிசு உருவாகும்.

பழைய சொத்தை விற்று புதுச் சொத்து வாங்குவீர்கள். குரு உங்கள் ராசியை பார்ப்பதால் விரக்தி, இனம்புரியாத கவலையிலிருந்து விடுபடுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். உள்ளத்தில் தெளிவு பிறக்கும். குரு பகவான் தனது 5ம் பார்வையால் உங்களின் 9ம் வீட்டைப் பார்ப்பதால் அப்பாவுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தந்தை வழிச் சொத்துகள் கைக்கு வந்து சேரும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். நாடாளுபவர்கள், சமூக அந்தஸ்துள்ளவர்கள் உதவுவார்கள். அதிக சமூக சேவைகளில் ஈடுபடுவீர்கள்.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் உங்களுடைய லாப வீட்டைப் பார்ப்பதால் மூத்த சகோதரர், சகோதரிகளுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கி பாசமழை பொழிவார்கள். வாகன வசதி பெருகும். இழுபறியான வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பழுதான டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினை மாற்றுவீர்கள். தங்க ஆபரணம், ரத்தினங்கள் சேரும். பழைய கடன் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள்

21.11.2010 முதல் 2.1.2011 வரை:

இந்த காலகட்டங்களில் உங்களின் தன, பூர்வ புண்யாதிபதியான குரு பகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி 4ம் பாதத்தில் செல்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வீண் விவாதங்கள் நீங்கும். வெகுநாட்களாக தள்ளிப்போய்க் கொண்டிருந்த கல்யாணம் கூடி வரும். சீமந்தம், காதுகுத்து என வீடு களை கட்டும். ஷேர் மூலம் பணம் வரும். வெளிமாநில புண்ணிய நதிகளில் நீராடுவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

3.1.2011 முதல் 13.3.2011 வரை:

மேற்கண்ட நாட்களில் தைரிய, சுகாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல் வதால் இளைய சகோதர வகையில் அடிக்கடி இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டு. ஆலயத்தை புதுப்பிக்க உதவுவீர்கள். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடம் கருத்து மோதல்கள் வெடிக்கும்.

14.3.2011 முதல் 7.5.2011 வரை:

இந்த காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் அஷ்டம லாபாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட முறை முயன்றுதான் எந்த வேலையையும் முடிக்க வேண்டி வரும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். ஒரு சொத்தை காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண் டியது வரும். மூத்த அண்ணன் உதவுவார். சில நாட்களில் வருங்காலம் குறித்த கவலைகளால் தூக்கம் குறையும். வெளிநாட்டுப் பயணங்கள் தேடி வரும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

வியாபாரிகளே, சந்தை நிலவரம் அறிந்து லாபத்தை பெருக்குவீர்கள். கொடுக்கல், வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் புதிய முதலீடுகளைப் போடுவதுடன் கடையை விரிவுபடுத்தி போட்டியாள ர்களை திகைக்கச் செய்வீர்கள். அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்கள் இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். புது வேலையாட்களையும் பணியில் அமர்த்துவீர்கள். வெகுநாட்களுக்குப் பிறகு பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அரிசி, எண்ணெய், மருந்து, ரசாயன வகைகள், ஏற்றுமதி இறக்குமதி வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும்.

உத்யோகஸ்தர்களே, உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு இனி பதிலடி கொடுப்பீர்கள். உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். வெகுநாட்களாக பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருந்தீர்களே, உங்களைவிட தகுதி குறைந்தவர்களுக்கெல்லாம் பதவி உயர்ந்ததே, இனி கவலைப்படாதீர்கள். ஏப்ரல், மே மாதங்களில் நீங்கள் எதிர்பார்த் தபடி பதவி உயர்வு கிடைக்கும். கூடவே சம்பளமும் உயரும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு கள் மறையும். அயல்நாட்டுத் தொடர்புடைய புதிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் அமையும்.

கன்னிப் பெண்களே! அடிக்கடி முகம் சோர்ந்து காணப்பட்டீர்களே, ஏதோ இனந்தெரியாத கவலை உங்களை வாட் டியதே, இனி அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தடைபட்டுக் கொண்டிருந்த கல் யாணம் இனி சிறப்பாக நடக்கும். தடைபட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வீர்கள். உங்களின் தகுதிக்கேற்ற நல்ல வேலையும் கிடைக்கும்.

மாணவர்களே! பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டியில் பரிசு, பாராட்டுகள் உண்டு. பெற்றோர் சொல்படி கேட்டு நடந்து கொள்ளுங்கள். வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனியுங்கள். அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். மொழிப் பாடங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.

கலைஞர்களே! கலைநயம் மிகுந்த உங்களின் படைப்புகள் பலராலும் பாராட்டிப் பேசப்படும். உங்களின் சம்பளம் உயரும். மூத்த கலைஞர்கள் உதவுவார்கள். அரசியல்வாதிகளே, கட்சிக்குள் இருந்த பூசல் விலகும். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். சகாக்களுக்கு மத்தியில் மதிப்பு கூடும்.

விவசாயிகளே, விளைச்சலை இரட்டிப்பாக்க நவீன யுக்திகளைக் கையாளுவீர்கள். மூலிகை, பயிறு லாபம் தரும். கடன் உதவியால் பக்கத்து நிலத்தையும் சேர்த்து வாங்கு வீர்கள். ஆக மொத்தம் இந்த குரு பெயர்ச்சி பிரச்னைகளால் சிதறிக் கிடந்த உங்களை சீர் செய்வதுடன், திடீர் யோகங்களையும், மன மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:

திருச்செந்தூரில் அருள்புரியும் முருகப் பெருமானையும், தட்சிணாமூர்த்தியையும் அஸ்வினி நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.
மேலும் இங்கே தொடர்க...

குரு பெயர்ச்சி


உங்கள் ராசி, போர்க்கருவியான வில்லைக் குறிப்பதால் நினைத்ததை போராடியாவது பெற்று விடுவீர்கள். போராட்டம் இல்லையெனில் போரடிக்கிறது என்பீர்கள். சவாலான விஷயங்களை எல்லாம் சாதாரணமாக முடிப்பீர்கள். இதுவரை மூன்றாம் வீட்டிலும், நான்காம் வீட்டிலும் அமர்ந்து, தெளிவான பாதையில் அழைத்துச் செ ல்லாமல் திணறடித்த குரு பகவான், இப்பொழுது நான்காவது வீட்டிற்குள் நுழையப் போகிறார். 21.11.2010 முதல் 7.5.2011 வரை குரு பகவான் அங்கு நீடிப்பார். அதனால் கொஞ்சம் வேலைச்சுமை அதிகமாகவே இருக்கும்.

குடும்பத்தில் சின்னச் சின்ன விவாதங்கள் கூட சண்டையில்தான் போய் முடியும். வீண் சந்தேகத்தால் கணவன் மனைவி பிரிய வேண்டியது கூட வரலாம். அதனால் விட்டுக் கொடுத்துப் போங்கள். சில விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்படாது அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். பிள்ளைகளின் கல்யாண விஷயத்தில் அவசரப்பட வேண்டாம். உயர் கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிவார்கள். நெருங்கிய உறவினர்களானாலும், நண்பர்களானாலும் வரம்பு மீறி அவர்களின் வீட்டு விவகாரங்களில் நுழைய வேண்டாம்.

நெருப்பு, மின்சாரத்தை கவனமாகக் கையாளுங்கள். வாகன விபத்துகள் நிகழக்கூடும். தாயாருக்கு மூட்டுவலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வந்து நீங்கும். ஆனாலும், குரு பகவான் உங்களின் சுக ஸ்தானத்தில் ஆட்சிபெற்று அமர்வதால் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டு. தன்னைச் சுற்றியுள்ளவர்களின் உண்மையான சுயரூபத்தை உணர்வீர்கள். அவசரப்பட்டு ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். பணத்தட்டுப்பாடு அவ்வப்போது தொடர்ந்தாலும், ஏதேனும் ஒருவழியில் அவற்றை சமாளிப்பீர்கள். பூர்வீகச் சொத்து விஷயங்களில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.

ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். பால்ய நண்பர்களாக இருந்தாலும் உதவியென்று கேட்டு விட்டால் ஒதுங்கிவிடும் நிலைமை வரும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்துப் பேசவேண்டாம். சில சமயங்களில் உங்களின் கோபதாபங்களை, கூடாப் பழக்க வழக்கங்களை உங்களின் மனைவி சுட்டிக் காட்டுவார். அதற்காக வருத் தப்படாதீர்கள். எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளையும், நேரந்தவறி சாப்பிடுவதையும் தவிர்க்கப் பாருங்கள். அல்சர், வயிற்றில் கட்டி வரக்கூடும். சொத்து வாங்குவதில் ஏதேனும் வில்லங்கம் உள்ளதா என்று பலமுறை விசாரித்து வாங்குவது நல்லது.

குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள்

21.11.2010 முதல் 2.1.2011 வரை:

இந்த காலகட்டங்களில் உங்களின் ராசிநாதனும், சுகாதிபதியுமான குரு பகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட் சத்திரத்தின் 4ம் பாதத்தில் செல்வதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். வெளியூர் பயணங்களால் கையிருப்பு கரையக்கூடும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் இரட்டிப்பாகும். சின்ன வேலையைக்கூட அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். எதிலும் ஒரு நாட்டமில்லாத நிலையும் வரக்கூடும். யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். விலையுயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.

3.1.2011 முதல் 13.3.2011 வரை:

மேற்கண்ட நாட்களில் உங்களின் தன, சேவகாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் பேச்சில் தடுமாற்றம், வீண் விவாதங்கள் வரக்கூடும். முன்கோபம், டென்ஷன் அதிகரிக்கும். தோலில் அலர்ஜி வரக்கூடும். 21.2.2011 முதல் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவிவந்த குழப்பங்கள் நீங்கி நிம்மதி உண்டாகும். பழுதான வாகனத்தை மாற்றிவிட்டு லோன் மூலம் புது வண்டியை எடுப்பீர்கள்.

14.3.2011 முதல் 7.5.2011 வரை:

இக்காலகட்டத்தில் குரு பகவான் உங்களின் சப்தம, ஜீவனாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் கணவன் மனைவிக்குள் இருந்த இடைவெளி நீங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் இனி பாசமாக நடந்து கொள்வார்கள். பழைய கடனை பைசல் செய்ய புது வழி பிறக்கும். எதிர்பார்த்தபடி நல்ல வேலை அமையும். அரசுக் காரியங்களில் வெற்றியுண்டு. நாடாளுபவர்களின் சந்திப்பு நிகழும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த ஊர் கோயில் விழாக்களை ஏற்று நடத்துவீர்கள். அயல்நாடு சென்று வர விசா கிடைக்கும்.

வியாபாரிகளே, மார்ச், ஏப்ரல் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பற்று வரவு உயரும். பெரிய முதலீடுகள் வேண்டாம். வரவேண்டிய பாக்கிகளை நாசுக்காக வசூலியுங்கள். நம்பிக்கைக்கு உரியவர்களிடம் கடையை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை செய்வீர்கள். முரண்டு பிடித்த வேலையாட்கள் இனி கச்சிதமாக வேலையை முடிப்பார்கள். ஆனாலும், அவர்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டி ருக்காதீர்கள்.

வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த புதிய யுக்திகளைக் கையாளுங்கள். வியாபாரத்தை பெருக்க புதிய விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். ரியல் எஸ்டேட், கெமிக்கல் வகைகளால் ஆதாயமுண்டு. பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போங்கள்.

உத்யோகஸ்தர்களே, வேலைப்பளு வாட்டியெடுக்கும். சக ஊழியர்களின் பணிகளையும் இழுத்துப் போட்டு பார்க்க நேரிடும். மேலதிகாரியிடம் மனஸ்தாபங்கள் அதிகரிக்கும். முக்கிய பதிவேடுகளை கவனமாகக் கையாளுங்கள். அலு வலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். பணிகளை முடிப்பதில் அலட்சியம் காட்டாதீர்கள். திடீர் இடமாற்றம் உண்டு. ஆனாலும் குரு பகவான் உங்களின் 10ம் வீட்டைப் பார்ப்பதால் சவால்களை சமாளிப்பீர்கள். மார்ச், மே மாதங்களில் நிம்மதி கிட்டும். பதவி உயர்வு, புதிய வாய்ப்புகள் என தேடி வரும்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பெற்றோரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கப் பாருங்கள். தடைபட்ட கல்வியை போராடி முடிப்பீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் தரும். கனவு த்தொல்லை, தூக்கமின்மை வரக்கூடும். மாணவர்களே! வகுப்பறையில் வீண் அரட்டையடிக்காமல் பாடத்தில் கவனம் செலுத்துங்கள். மொழிப் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். ஆசிரியரின் கருத்துக்களை கேட்டு நடங்கள்.

கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்பு எதுவாயினும் தக்க வைத்துக் கொள்ளப் பாருங்கள். சம்பளப் பிரச்னை வரும். கிசுகிசுத் தொல்லைகள் இருக்கத்தான் செய்யும். அரசியல்வாதிகளே, தலைமையோடு சிறு உரசல்போக்கு வந்து நீங்கும். ஆதாரமின்றி யாரையும் விமர்சிக்க வேண் டாம். தலைமையைப்பற்றி யாரிடமும் வீண் விமர்சனம் செய்ய வேண்டாம். கௌரவத்திற்காக வீண் செலவுகள் செய்ய நேரிடும்.

விவசாயிகளே, பயிர் காக்க நவீன ரக உரங்களை பயன்படுத்துங்கள். கூட்டுறவு வங்கிக் கடனுதவி கிடைக்கும். தானிய, பழவகைகளால் ஆதாயமடைவீர்கள். அடகிலிருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். இந்த குரு மாற்றம் அவ்வப்போது உங்களை கசக்கிப் பிழிந்தாலும் வருங்காலத்திற்கு பயனுள்ளதாக அமையும்.

பரிகாரம்:

தஞ்சாவூரில் அருள்பாலிக்கும் பெருவுடையார் பிரகதீஸ்வரரையும், அத்தலத்திலேயே அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியையும் பூரட்டாதி நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். பார்வையற்றோருக்கு உதவுங்கள்.
மேலும் இங்கே தொடர்க...

குரு பெயர்ச்சி




உதட்டால் உளறாமல் இதயத்தால் பேசுபவர்களே! குலம், கோத்திரம் பார்க்காமல் பாசமுடன் பழகுபவர்களே! எ டுத்த வேலையை முடிக்கும் வரை அதே சிந்தனையுடன் இருப்பவர்களே! சிறந்த கலா ரசிகர்களே! இதுவரை உங்களின் ராசிக்கு 2ம் வீட்டிலும், 3ம் வீட்டிலும் மாறி மாறி அமர்ந்து ஓரளவு வசதி, வாய்ப்புகளையும், கௌரவத்தையும், அதே நேரத்தில் அலைக்கழிப்பையும், தர்மசங்கடத்தையும் கொடுத்த குரு பகவான் இப்போது 21.11.2010 முதல் ராசிக்கு மூன்றாம் வீட்டில் மறைகிறார். இந்த நிலை 7.5.2011 வரை நீடிப்பதால் அவசரப்படாமல் நீங்கள் கொஞ்சம் நிதானமாகத்தான் செயல்பட வேண்டும்.

குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் வந்து நீங்கும். மனைவியிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். உங்களுக்கு வேண்டியவர்களே உங்களுக்குள் கலகத்தை ஏற்படுத்தி பிரிக்க முயல்வார்கள். ஆனால் ராசிக்கு 7ம் வீட்டை குரு பார்ப்பதால் கணவன் -மனைவிக்குள் அன்பும், அன்யோன்யமும் குறையாது. அனாவசியமாக யாரையும் வீட்டிற்குள் அழைத்து வரவேண்டாம். இளைய சகோதரருடன் அவ்வப்போது உரசல் போக்கு வந்து நீங்கும். நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் அறிமுகம் கிடைக்கும்.

குரு பகவான் உங்களின் ஒன்பதாவது வீட்டைப் பார்ப்பதால் வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். நீங்களும் தரவேண்டிய கடனையெல்லாம் தந்து முடிப்பீர்கள். அப்பாவுடன் இருந்து வந்த பிரச்னைகள் மறையும். நெஞ்சுவலி, இடுப்பு வலியெல்லாம் நீங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மகனின் திருமணத்தை ஊரே மெச்சும்படி தடபுடலாக நடத்தி முடிப்பீர்கள். மகளை உயர்கல்விக்காக வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள். தந்தைவழி உறவினர்களிடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் புது முயற்சிகள் வெற்றியடையும். தி டீர் பணவரவு உண்டு. விலையுயர்ந்த ஆபரணங்கள், ரத்தினங்கள் வாங்குவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். மூத்த சகோதரர் உதவுவார். பூர்வீகச் சொத்தை விற்று வேறொரு சொத்து வாங்குவீர்கள். மனக் கு ழப்பங்கள் நீங்கும்.

குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள்

21.11.2010 முதல் 2.1.2011 வரை:

இந்த காலகட்டங்களில் உங்களின் சேவக, விரயாதிபதியான குரு பகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திர த்தின் 4ம் பாதத்தில் செல்வதால் வீடு கட்டுவது, வாங்குவது நல்ல விதத்தில் முடியும். பழைய கடன் பிரச்னைக்கு முடிவு கட்டுவீர்கள். பேச்சில் இருந்த தடுமாற்றம் நீங்கும். வீடு கட்ட லோன் வசதி கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயமுண்டு. சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாக முடியும். மூத்த சகோதர வகையில் ஆதரவு அதிகரிக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களின் உதவியுண்டு. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள்.

3.1.2011 முதல் 13.3.2011 வரை:

மேற்கண்ட நாட்களில் உங்கள் ராசிநாதனும், தனாதிபதியுமான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் எதிர்பார்த்த வகையில் உதவியுண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். இருந்தாலும் வீண் செலவுகளும் துரத்தும். நேரம் கடந்து சாப்பிடாதீர்கள். வயிற்று வலி, முதுகு வலி வந்து நீங்கும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் பிறக்கும். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவுடன் சில வேலைகளை முடிப்பீர்கள்.

14.3.2011 முதல் 7.5.2011 வரை:

இந்த காலகட்டங்களில் குரு பகவான் உங்களின் நோய் மற்றும் பாக்யாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால்
தந்தையாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். பரம்பரைச் சொத்துகள் வந்து சேரும். அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். கல்யாணம், காதுகுத்து என வீடு களை க ட்டும். கௌரவப் பதவிகள் கிடைக்கும். குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

வியாபாரிகளே, போட்டியாளர்களுக்கு மத்தியில் ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே! இனி உங்களின் அணுகு முறையை மாற்றி அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுப்பீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். லாபத்தை பெ ருக்க நவீன விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். புதிய சலுகைகளையும் அறிமுகப்படுத்துவீர்கள்.

பணியாட்களை மாற்றியமைப்பீர்கள். அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்கள் இனி ஒழுங்காக வேலைக்கு வருவார்கள். தொழில் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள். மார்ச், ஏப்ரல் மாதங்களில் வசூல் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அவ்வப்போது குடைச்சல் கொடுக்கத்தான் செய்வார்கள். கெமிக்கல், ரியல் எஸ்டேட், ஹோட்டல் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகஸ்தர்களே, உங்களின் கோபதாபங்களை உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள். சில சமயங்களில் மேலதிகாரியுடன் வீண் விவாதங்கள் வரும். ஆனாலும், உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். வெகுநாட்களாக எதிர்பார்த்தும் கிடைக்காமல் போன பதவி உயர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் கிடைக்கும். சக ஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள். வட நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புது வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னிப் பெண்களே! சினேகிதிகளுக்கெல்லாம் கல்யாணம் ஆகிவிட்டதே, நமக்கு வாய்க்கவில்லையே என்று வருந் தினீர்களே, இனி கவலை வேண்டாம். விரைவிலேயே கெட்டிமேளச் சத்தம் கேட்கும். காதல் விவகாரங்களில் அவசரம் வேண்டாம். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. தடைபட்ட உயர்கல்வியைத் தொடர்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். தலைச்சுற்றல், கண் எரிச்சல் நீங்கும். எதிர்பார்த்த நிறுவனத்திலேயே வேலை கிடைக்கும்.

மாணவர்களே! வகுப்பறையில் வீண் அரட்டை வேண்டாமே. ஆசிரியர் நடத்தும் பாடங்களை அன்றாடம் படித்து விடுவது நல்லது. கணிதம், அறிவியல் பாடங்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கிப் படியுங்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். விளையாட்டை குறையுங்கள். கலைஞர்களே! திறமைகளை வெளிப்படுத்த பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமல் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்ப டுத்திக் கொள்ளுங்கள். மூத்த கலைஞர்கள் நட்புறவாடுவார்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

அரசியல்வாதிகளே, மேலிடத்திலிருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கும். தலைமையின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். சகாக்களும் மதிப்பார்கள். விவசாயிகளே, வங்கிக் கடனுதவி கிடைக்கும். தரிசு நிலங்களையும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள்.

பூச்சித் தொல்லை விலகும். காய்கறி, பழவகைகளால் லாபமடைவீர்கள். அடகிலிருந்த வீட்டுப் பத்திரத் தை மீட்பீர்கள். புது இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். தண்ணீர் வசதி பெருகும். இந்த குரு மாற்றம் கவலைகளை கரைப்பதாகவும், காசு பணம் தருவதாகவும், எங்கும் முதல் வரிசையில் உட்கார வைப்பதாகவும் அமையும்.

பரிகாரம்:

திருநெல்வேலியில் அருளாட்சி செய்யும் காந்திமதி அம்மையையும், நெல்லைஅப்பரையும் புனர்பூசம் நட்சத் திர நாளில் சென்று வணங்குங்கள். மனவளம் குன்றியோருக்கு உதவுங்கள்.
மேலும் இங்கே தொடர்க...

குரு பெயர்ச்சி


எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே, புரட்சிகரமான முடிவும், தொலை நோக்குச்
சிந்தனையும் கொண்டவர்களே, மந்திரியாக இருந்தாலும் மனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்களே! இதுவரையில் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாகவும், கொஞ்ச காலம் 2ம் வீட்டிலும் அமர்ந்து நல்லதையும், கெட் டதையும் கலந்து கொடுத்த குரு பகவான் இப்பொழுது 21.11.2010 முதல் 7.5.2011 வரை 2ம் வீட்டில் நீடிப்பதால் அடிமனதிலிருந்த போராட்டம் நீங்கும்.

தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உங்களிடமிருந்த சோம்பல், அலட்சியப்போக்கு மாறும். குடும்பத்தினர் உங்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருந்தார்களே, இனி அந்த நிலை மாறும். சந்தேகத்தால் பிரிந்தவர்கள் ஒன்று சேரு வீர்கள். கணவன்&மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதையும் சமாளிக்கும் வகையில் பணபலம் கூடும்.

உங்கள் ராசிக்கு 2ம் வீடான குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். தள்ளிப்போய்க் கொண்டிருந்த சுப காரியங்கள் இனிதே நடந்து முடியும். உங்களை கண்டும் காணாமல் போன உறவினர்கள் இனி தேடி வந்து உறவாடுவார்கள். செரிமானக் கோளாறு, தூக்கமின்மை, கை&கால் வலி நீங்கும். பாதி பணம் தந்து கிரயம் முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதி பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.

வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவுகள் வந்ததே! இனி அந்த அவலநிலை மாறும். வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். தேவையில்லாமல் பேசி சில நல்ல ந ட்புகளையெல்லாம் இழந்தீர்களே, இனி நிதானித்துப் பேசுவீர்கள். சகோதர, சகோதரிகளிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பாசமழை பொழிவார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயமுண்டு.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் உங்களின் ஆறாவது வீட்டைப் பார்ப்பதால் உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். மறைமுகமாக செயல்பட்டவர்களை இனங் கண் டறிந்து ஒதுக்குவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். குரு பகவான் தனது 7ம் பார்வையால் உங்களின் எட்டாவது வீட்டைப் பார்ப்பதால், வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள். திட்டமிட்டபடி அயல்நாட்டுப் பயணங்கள் கூடிவரும். உங்களால் பயனடைந்த சிலர் உங்களுக்கு உதவுவார்கள்.

குரு தனது 9ம் பார்வையால் உங்களின் பத்தாவது வீட்டையும் பார்ப்பதால் பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். அரசாங்க காரியங்களில் இருந்த தடுமாற்றம் நீங்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பழமையான புத்தகங்கள், நாவல்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். ஆன்மிக வழிபாட்டில் மனம் லயிக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். அக்கம்&பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள்.

குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள்

21.11.2010 முதல் 2.1.2011 வரை:

இக்காலகட்டங்களில் உங்களின் தன, லாபாதிபதியான குரு பகவான் தன்னுடைய நட்சத்திரமான பூரட்டாதி நட்சத் திரத்தின் 4ம் பாதத்தில் செல்வதால் வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். சுப நிகழ்ச்சிகளால் குடும்பத்தில் சந்தோஷம் பொங்கும். மனைவி வழியில் அனுகூலம் உண்டு. மூத்த சகோதரர் உதவுவார். இங்கிதமாகப் பேசி பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். பழைய சொத்துப் பிரச்னை தீர்வுக்கு வரும். வெளிநாட்டுப் பயணங்கள் திருப்திகரமாக அமையும்.

3.1.2011 முதல் 13.3.2011 வரை:

மேற்கண்ட நாட்களில் உங்களின் ராசிநாதனும், விரயாதிபதியுமான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் தடைபட்ட சில வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பழுதான டிவி., மிக்ஸி, வாஷிங் மெஷினை மாற்றுவீர்கள். சகோதர, சகோதரிகளால் அலைச்சல், செலவுகள் உண்டு. பழைய கசப்பான சம்பவங்கள் மனதை வாட்டும். உடம்பில் ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவை சரி பார்த்துக் கொள்வது நல்லது. முடிந்தவரை நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். வெளிமாநில புண்ணிய தலங்களுக்குச் செல்வீர்கள்.

14.3.2011 முதல் 7.5.2011 வரை:

இக்காலகட்டத்தில் குரு பகவான் உங்களின் பூர்வ புண்யாதிபதியும், அஷ்டமாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத் திரத்தில் செல்வதால் மகளின் கல்யாணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். அடிக்கடி தொந்தரவு தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் சுமுகமாக முடியும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். திடீர் பயணங்களால் சேமிப்புகள் கரையும். பழைய உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள்.
வியாபாரிகளே, போட்டியாளர்களை சமாளிக்கும் அளவிற்கு புதுத் திட்டங்கள் தீட்டுவீர்கள்.

வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்துகொண்டு அதற்கேற்ப சில மாற்றங்களை செய்யுங்கள். அதிக லாபம் ஈட்டுவீர்கள். விளம்பரம், ச லுகைகள் மூலம் பழைய வாடிக்கையாளர்களை மீண்டும் வரவழைப்பீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்கும். ம ருந்து, கமிஷன், மர வகைகளால் லாபமடைவீர்கள். வராமல் இருந்த பாக்கிகள் எளிதாக வசூலாகும். அனுபவம் வாய்ந்த வேலையாட்கள் வந்து சேருவார்கள். டிசம்பர், ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்யோகஸ்தர்களே, உங்களின் கடின உழைப்பையும், திறமையையும் பயன்படுத்திக் கொண்டு மற்றவர்கள் நல்ல பெயர் எடுத்தார்களே! அந்த அவலநிலை மாறும். இனி மேலதிகாரியின் கனிவுப் பார்வை உங்கள் மீது விழும். உங்களின் சம்பளம் உயரும். சக ஊழியர்கள் உங்களின் ஆலோசனைகளை ஏற்பார்கள். டிசம்பர், ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னிப் பெண்களே! மதில்மேல் பூனையாக நின்ற நிலை மாறும். காதல் தோல்வியால் துவண்டு போனீர்களே! அதிலிருந்து மீள்வீர்கள். ஆடை, அணிகலன்கள் சேரும். தள்ளிப்போய்க் கொண்டிருந்த கல்யாணம் விமரிசையாக முடியும். பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். உங்கள் தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களே! தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதாக சபதம் போட்டால் மட்டும் போதாது. அதற்காக கடின உழைப்பு வேண்டும். வகுப்பாசிரியரின் ஆதரவு கிடைக்கும்.

கலைஞர்களே! வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். உங்களின் படைப்புகள் பலராலும் பாராட்டப்படும். சம்பள பாக்கி கைக்கு வரும். மூத்த கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகளே, தலைமையுடன் நெருக்கமாக இருப்பீர்கள். பதவி கிடைக்கும். எதிர்க் கட்சியினரை ஆதாரமின்றி விமர்சித்துப் பேசாதீர்கள்.

விவசாயிகளே! இயற்கை உரம், செயற்கை உரம் என்று மாறி மாறி போட்டுப் பார்த்தும் மகசூல் இல்லாது தவித்தீர்களே, இனி மாற்றுப் பயிர் இடுவீர்கள். மகசூல் பெருகும். கடனை பைசல் செய்வீர்கள். இந்த குரு மாற்றம் எங்கும் எதிலும் முன்னேற்றத்தையும், எதிர்பாராத வெற்றிகளையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருவிடைமருதூரில் அருள்பாலிக்கும் மகாலிங்கேஸ்வரரையும், அத்தலத் தில் அருள் பெருக்கும் தட்சிணாமூர்த்தியையும் பூசம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். பசுவிற்கு அகத் திக்கீரை கொடுங்கள்.
மேலும் இங்கே தொடர்க...

குரு பெயர்ச்சி


மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்பவர்களே! தனக்கென எதையும் எடுத்து வைத்துக் கொள்ளாதவர்களே! மூட நம்பிக்கைகளில் மூழ்காமல் அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர்களே! உங்கள் ராசிக்கு 12வது வீட்டிலும், ராசிக்குள்ளும் அமர்ந்து வீண்பழி, விரக்தி, விரயச் செலவு என்று உங்கள் நிம்மதியை குலைத்த குரு பகவான் இப்பொழுது 21.11.2010 முதல் 7.5.2011 வரை ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்ம குருவாக மட்டும் நீடிப்பதால் மன உளைச்சல், டென்ஷன், வேலைச்சுமை என அதிகரிக்கும்.

சில நேரங்களில் பெரிய நோய்கள் இருப்பது போன்ற பயம் வந்துபோகும். அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். பெரிய முடிவுகள் எடுக்கும்போது உணர்ச்சிவசப்பட வேண்டாம். குடும்பத்தில் நடக்கும் சின்ன சின்ன சண்டை சச்சரவுகளை எல்லாம் பெரிதாக்க வேண்டாம். அவசரப்பட்டு யாருக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம். குறுக்கு வழிகளைத் தவிர்ப்பது நல்லது. சொந்த பந் தங்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

குரு பகவான் 7ம் வீட்டையும் பார்ப்பதால் கணவன் மனைவிக்குள் அன்பு குறையாது. வீட்டில் தாமதமான திரு மணம் நல்ல விதத்தில் முடியும். சோர்ந்து கிடந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. குரு பகவான் தனது 5ம் பார்வையால் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால் குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்து நல்ல முடிவெடு ப்பீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்திலேயே வேலை கிடைக்கும். மகளின் கல்யாணம் தடபுடலாக நடந்து முடியும்.

பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். வழக்குகள் சாதகமாக அமையும். உடன்பிறந்தவர்களுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததே, இனி பாசமாகப் பேசுவார்கள். ஆனாலும் அவர்களால் கொஞ்சம் செலவுகளும் இருக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிப்பீர்கள்.
குரு பகவான் தனது 9ம் பார்வையால் உங்களின் 9ம் வீட்டைப் பார்ப்பதால், வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

தந்தையாருடன் இருந்த மனக் கசப்புகள் நீங்கும். அவரின் உடல்நிலையும் சீராகும். தந்தை வழி பாட்டன் சொத்துகள் வந்து சேரும். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். ஆன்மிகவாதிகள், சித்தர்களின் ஆசி கிட்டும். அக்கம்பக்கம் வீட்டார்கள் அன்பாக பேசுகிறார்களே என்று குடும்ப அந்தரங்க விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள்

21.11.2010 முதல் 2.1.2011 வரை:

இக்காலகட்டங்களில் உங்களின் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குரு பகவான் தன்னுடைய நட்சத்திரமான பூரட் டாதி நட்சத்திரத்தின் 4ம் பாதத்தில் செல்வதால் எந்த வேலையையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். கடன் வாங்கிய இடத்தில் பணத்தை திரும்பத் தந்து முடிப்பீர்கள். வயிற்றுவலி, சைனஸ் தொந்தரவு குறையும். முடிவெடுப்பதில் இருந்த தடுமாற்றம் நீங்கும். உத்யோகத்தில் கௌரவப்பதவி வரும். சம்பளம் உயரும். வி.ஐ.பிகள் நண்பராவார்கள்.

3.1.2011 முதல் 13.3.2011 வரை:

மேற்கண்ட நாட்களில் உங்களின் லாப, விரயாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் தடைகள் நீங்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். அரைகுறையாக நின்றுபோன கட்டிட வேலைகளை முழுமையாக முடிப்பீர்கள். வீடு வாங்க, கட்ட லோன் கிடைக்கும். மூத்த சகோதரர்,சகோதரி பண உதவி செய்வார். ஷேர் மூலம் பணம் வரும். நீண்டகாலமாக தொய்வில் இருந்த வழக்கு சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். விசேஷங்களால் வீடுகளை கட்டும். வெகுநாட்களுக்குப் பிறகு பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

14.3.2011 முதல் 7.5.2011 வரை:

இக்காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் சுக, சப்தமாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் நண் பர்கள் உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். புதன் பாதகாதிபதியாக இருப்பதால் தாயாரின் உடல்நலத் தில் கவனம் தேவை. மனைவியுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உடல்நிலை பாதிக்கும். அவ்வப்போது வரும் முன்கோபத்தால் சிலரின் நட்பை இழப்பீர்கள். வழக்கு விவகாரங்களில் அனுசரித்துப் போங்கள். சிறு சிறு விபத்துகள், வீண் செலவுகள் வந்து நீங்கும்.

வியாபாரிகளே, போட்டியாளர்களை எதிர்கொள்வதாக எண்ணிக் கொண்டு பெரிய முதலீடுகளை போடாதீர்கள். பாக்கிகளை வசூலிப்பதில் கொஞ்சம் தாமதமாகும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்ளுங்கள். வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். அனுபவமில்லாத புதுத் துறையில் கால் பதிக்க வேண்டாம்.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையே செலுத்தப் பாருங்கள். உணவு, கமிஷன், ஷேர் மூலம் லாபமுண்டு. கூட்டுத்தொழிலில் பங்கு தாரர்கள் அவ்வப்போது பிரச்னை செய்தாலும் இறுதியில் உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவார்கள்.

உத்யோகஸ்தர்களே, மேலதிகாரியுடன் இருந்து வந்த சிறு சிறு பிரச்னைகள் மறையும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வேலைச்சுமை அதிகமாக இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். மேலதிகாரியின் பாராட்டு மழையில் நனைவீர்கள். உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்கள் இனி மதிப்பார்கள். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்.

கன்னிப் பெண்களே! முடிவெடுப்பதில் அவசரம் வேண்டாம். புதிய நண்பர்களை நம்ப வேண்டாம். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள். மாதவிடாய் கோளாறு, மன உளைச்சல் வந்துபோகும். தடைபட்ட கல்வியை முழுமையாக முடிக்கப் பாருங்கள்.

மாணவர்களே! விளையாட்டுத்தனத்தைக் குறைத்துக் கொண்டு பாடத்தில் கவனம் செலுத்துங்கள். பின் வரிசையில் அமராதீர்கள்.
கலைஞர்களே! வீண் கிசுகிசுக்கள் வந்துபோகும். கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மூத்த கலைஞர்களின் ஆலோசனை கிடைக்கும். அரசியல்வாதிகளே, தலைமையிடம் சின்ன சின்ன மனத்தாங்கல் வரத்தான் செய்யும். சகாக்களுக்காக கை காசை செலவு செய்வீர்கள். தனிநபர் விமர்சனத்தை தவிர்த்து விடுங்கள். கட்சியின் முக்கிய கூட்டங்களில் முன்னணி வகிப்பீர்கள்.

விவசாயிகளே, மகசூலை அதிகப்படுத்த நவீனரக உரங்களை கையாளுவீர்கள். நெல்லைவிட கரும்பால் அதிக லாபம் கிடைக்கும். வற்றிய கிணறு சுரக்கும். இந்த குரு பெயர்ச்சி வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை கற்றுத் தருவதுடன், அவ்வப்போது வெற்றியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:

மதுரை மீனாட்சியையும் - சுந்தரேஸ்வரரையும் அத்தலத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியையும் மகம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். சாலைப் பணியாளர்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள்.
மேலும் இங்கே தொடர்க...

Jan 3, 2011

புத்தாண்டு பலன்கள் - 2011 மேஷம்




2011ஆம் ஆண்டு,​​ ஆங்கிலப் புத்தாண்டில்,​​ ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை உங்களின் பணிகளை அதிகார தோரணையுடன் செய்து வெற்றி வாகை சூடுவீர்கள்.​ உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள்,​​ உங்களின் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.​ சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பைத் தேடிப் பெறுவீர்கள்.​ வெளிவட்டாரத்தில் உங்களின் புகழும்,​​ செல்வாக்கும் உயரும்.​ அரசாங்க அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு கிடைக்கும்.​ உடல் உபாதைகளில் இருந்து விடுபடுவீர்கள்.​ யோகா,​​ ப்ராணாயாமம் போன்றவற்றை செய்து புதிய பலம் பெறுவீர்கள்.​ ​
​ ​ ​ ​ ​ ​ தைரிய ஸ்தான கேது பகவானின் அருளால்,​​ சில சந்தர்ப்பங்களில் அசட்டுத் துணிச்சலுடன் நீங்கள் செய்யும் காரியங்களும் சரியாக முடிந்துவிடும்.​ சகோதர,​​ சகோதரிகள் மற்றும் நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.​ உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.​ ​ தத்துப்பிள்ளையாக பிறர் வீட்டிற்கு வந்தவர்களுக்குப் பிறந்த வீட்டிலிருந்து திடீரென்று சொத்துக்கள் கிடைக்கும்.
​ ​ ​ ​ ​ ​ குரு பகவானின் அருளால் வெளியூர் பயணம் செய்து நன்மைகளைப் பெறுவீர்கள்.​ அதேநேரம் இந்தக் காலகட்டத்தில் கர்வத்தை விட்டொழித்து நேர்மையாக நடந்து கொள்ளவும்.​ உற்றார்,​​ உறவினர்களிடம் கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கவும்.​ குழந்தைகளை அனாவசிய கேளிக்கைப் பழக்க வழக்கங்களில் ஈடுபடுத்த வேண்டாம்.​ அவர்கள் ஆன்மீகத்தில் நாட்டம் கொள்ளவும்,​​ பெரியோரிடம் பாராட்டுகள் பெறவும் வழிகளை ஏற்படுத்தவும்.
​ ​ ​ ​ இந்த ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் தனித்திறமை வெளிப்படும்.​ சுதந்திரமாகச் செயல்பட்டாலும் அனைவரின் எண்ணங்களுக்கும் மதிப்பு கொடுப்பீர்கள்.​ சிறிது கடினமாகப் பேசினாலும் சூழ்நிலையை அறிந்து பேசுவீர்கள்.​ பொருளாதாரம் சீராக இருக்கும்.​ சிலருக்குப் பழைய வீட்டை வாங்கி 'கிரகப் பிரவேசம்' செய்யும் பாக்கியமும் உண்டாகும்.​ சரியான முடிவுகளை எடுத்தாலும் அதைப் பற்றி அனுபவஸ்தர்களிடம் கலந்து ஆலோசிப்பீர்கள்.​ ஒரு காலத்தில் உங்களுக்கு உதவியர்களுக்கு நீங்கள் உதவும் காலகட்டம் இது.​ அதே சமயம் சிலர்,​​ சில நேரங்களில் வறட்டுப் பிடிவாதம் கொள்வீர்கள்.​ மேலும் மறைமுக எதிர்ப்புகளையும்,​​ போட்டிகளையும் சந்திக்க நேரிடலாம்.
​ ​ ​ ​ ​ ​ உத்யோகஸ்தர்களைப் பொறுத்தவரை அலுவலக வேலைகளில் முன்கூட்டியே செயல்படுவீர்கள்.​ அலுவலக ரீதியாகப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.​ எதிர்பார்த்த பதவி உயர்வுகள் உங்களைத் தேடி வரும்.​ வருமானம் திருப்திகரமாக இருப்பதால் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படாது.​ நீங்கள் வாழும் பகுதியிலேயே மனதிற்கு இனிய பணி மாற்றங்கள் கிடைக்கும்.
​ ​ ​ ​ வியாபாரிகள் கடின முயற்சிகளைச் செய்து கொடுக்கல்,​​ வாங்கலில் லாபம் அடைவீர்கள்.​ எதிரிகளின் தொல்லைகளால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள்,​​ அதிலிருந்து விடுபடுவார்கள்.​ வியாபாரத்தைப் பெருக்குவதற்காக வாகனங்களை வாங்குவீர்கள்.​ சரளமான பண வசதி இருப்பதால் புதிய பொருட்களை வாங்கி விற்க முயற்சி செய்வீர்கள்.​ கடையையும் அழகுபடுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள்.
​ ​ ​ ​ ​ விவசாயிகளுக்குத் தேவையான வருமானம் கிடைக்கும்.​ மகசூலில் எதிர்பார்த்த விளைச்சலைக் காண்பீர்கள்.​ வங்கிகளிடமிருந்து கடன்கள் கிடைக்கும்.​ அதேநேரம் பூச்சி,​​ புழுக்களால் பயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சரியான நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிக்கவும்.
​ ​ ​ ​ அரசியல்வாதிகள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள்.​ எதிரிகளும் உங்களைக் கண்டு அஞ்சுவார்கள்.​ பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்கள்.​ உங்கள் வசதி வாய்ப்புகள் பெருகும்.​ அதனால் வாழ்க்கைத் தரம் உயரும்.​ அதேசமயம் கட்சி மேலிடத்தின் ஆதரவு அவ்வப்போது குறையும் என்பதால் தொண்டர்களை அரவணைத்துச் செல்லுங்கள்.
​ ​ ​ கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.​ நிதானமாகவும்,​​ பொறுமையுடனும் நடந்துகொண்டு வெற்றிப் பாதையை எட்டுவீர்கள்.​ சிறிது தாமதம் ஏற்பட்டாலும் வர வேண்டிய பணம் வந்து சேரும்.​ அதேசமயம் இந்த ஆண்டு முழுவதும் ரசிகர்கள் உங்கள் மீது சற்று அக்கறை இல்லாமல் இருப்பார்கள்.​ அதைப் பெரிதுபடுத்த வேண்டாம்.
​ ​ ​ பெண்மணிகளுக்கு நினைத்தவை நிறைவேறும்.​ குடும்பத்தில் உங்கள் மதிப்பு,​​ மரியாதை அதிகரிக்கும்.​ உற்றார்,​​ உறவினர்களை அன்புடன் நடத்துவீர்கள்.​ உடல் ஆரோக்யம் சீராக இருந்தாலும் யோகா,​​ ப்ராணாயாமம் போன்றவற்றை செய்து,​​ மேலும் புத்துணர்ச்சி அடைவீர்கள்.​ பொருளாதாரம் ஏற்றமாக இருக்கும்.​ குல தெய்வ ப்ரார்த்தனைகளை நிறைவு செய்வீர்கள்.​ குடும்பத்துடன் மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
​ ​ ​ மாணவமணிகளின் முயற்சிகளுக்கு ஆசிரியர்களிடம் பாராட்டுகள் கிடைக்கும்.​ நல்ல மதிப்பெண்களைப் பெறக் கடுமையாக உழைப்பீர்கள்.​ புதிய மொழிகளைக் கற்கவும் ஆர்வம் உண்டாகும்.​ உற்சாகமுடன் இருக்க உடற்பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள்.​ அதே நேரம் விதண்டாவாதம் செய்யும் நண்பர்களுடன் சேர வேண்டாம்.​ போராட்டங்களிலிருந்தும் ஒதுங்கியிருங்கள்.
பரிகாரம் :​​ இந்த ஆண்டு முழுவதும் தவறாமல் பிரதோஷ வழிபாடு செய்யவும்.​ நந்தி பகவானுக்கு அருகம் புல் மாலை அணிவிக்கவும்.
மேலும் இங்கே தொடர்க...

புத்தாண்டு பலன்கள் - 2011 ரிஷபம்



நாளை முதல்,​​ ஏப்ரல் மாதம் வரை செய்தொழிலில் இரு மடங்கு லாபத்தைக் காண்பீர்கள்.​ குடும்பத்தில் நிம்மதி நிலவும்.​ குடும்பத்தினரிடம் ​ சிறப்பான ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.​ வெளியூர் அல்லது வெளிநாட்டுத் தொடர்பினால் ஆதாயம் உண்டாகும்.​ உங்களுக்குச் சோதனை கொடுத்து வந்த அரசு அதிகாரிகள்,​​ தேவையான ஒத்துழைப்பை நல்குவார்கள்.​ நவீன வாகனங்களை வாங்குவீர்கள்.​ போட்டியாளர்களின் ரகசியங்களை அறிந்துகொண்டு அதற்கேற்ப யுக்திகளை மாற்றி செயலாற்றுவீர்கள்.​ உடல் ஆரோக்யம் சீராக இருக்கும்.​ முகம் பொலிவடையும்.​ ​ கடின உழைப்பை மேற்கொள்வீர்கள்.​ புதிய துறைகளில் பயிற்சி பெறுவீர்கள்.​ அனுபவஸ்தர்களை உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவீர்கள்.​ இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள்.
​ ​ ​ ​ கேது பகவான் உங்களுக்கு ஆன்மீக பலத்தைக் கொடுப்பார்.​ குடும்பத்தினருடன் புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.​ பூர்வீகச் சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.​ அவற்றிலிருந்து தொடர்ந்து வருமானம் கிடைக்கும்.​ உறவினர்கள் பகை நீங்கி உங்களுடன் வந்து இணைவார்கள்.​ அதே சமயம்,​​ சிலருக்கு ராகு பகவான் அவசியமில்லாத பயணங்களை ஏற்படுத்தித் தருவார்.​ மேலும் சிலருக்கு,​​ இருக்கும் இடத்தை விட்டு வேறொரு இடத்திற்குச் சென்று தொழில் செய்யும் சூழ்நிலை ஏற்படலாம்.
​ ​ ​ ​ இந்த ஆண்டு மே மாதம் முதல்,​​ வருட இறுதி வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் சில மன உளைச்சல்கள் உண்டாகும்.​ சுலபமாக முடிய வேண்டிய காரியங்கள்,​​ தாமதத்துடன் முடியும்.​ புதிய எண்ணங்களை நண்பர்களைக் கலந்தாலோசித்த பிறகே நிறைவேற்றுவீர்கள்.​ உங்கள் மதிப்பு,​​ மரியாதை உயரும் என்றாலும் பொதுக் காரியங்களில் கவனத்துடன் ஈடுபட வேண்டி வரும்.​ வருமானம் சீராகத் தொடர்ந்தாலும் எதிர்பாராத செலவுகளும் உண்டாகும்.​ அதேசமயம் உங்களின் அணுகுமுறையினால் போட்டியாளர்களும் உங்களுக்கு உதவி செய்வார்கள்.​ மற்றபடி குறுக்கு வழியில் எந்தக் காரியத்தையும் செய்ய வேண்டாம்.​ குழந்தைகளின் மன அமைதி குறையும் என்பதால் அவர்களிடம் அன்போடு நடந்து கொள்ளவும்.​ மற்றவர்களின் விஷயங்களில் அனாவசியமாகத் தலையிட வேண்டாம்.​ வாகனங்களுக்குப் பராமரிப்பு செலவுகள் செய்வீர்கள்.
​ ​ ​ ​ ​ உத்யோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் நட்புடன் நடந்துகொள்வார்கள்.​ உங்களுக்குத் தொல்லைகள் கொடுத்து வந்த சக ஊழியர்கள் அடங்கிவிடுவார்கள்.​ அலுவலக வேலைகளில் கவனமாக இருப்பீர்கள்.​ பதவி உயர்வு கிடைக்கும்.​ அதேசமயம்,​​ முக்கியமான உங்களது வேலைகளை சக ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.​ இதனால் வருடப் பிற்பகுதியில் வேண்டாத சிந்தனைகளுக்கு ஆட்பட நேரிடலாம்.​ அலை பாயும் மனதைக் கட்டுப்படுத்தவும்.
​ ​ ​ ​ வியாபாரிகளைத் தேடி வரவேண்டிய பணம் வரும்.​ புதிய கிளையைத் திறக்கும் வாய்ப்பும் சிலருக்கு கிடைக்கும்.​ மன உறுதியுடன் செயல்படுவீர்கள்.​ அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதிர்பார்த்த திருப்பங்கள் உண்டாகும்.​ கொடுக்கல்,​​ வாங்கல் விஷயங்கள் நன்மையாகவே முடியும்.​ எனினும் ஆண்டின் பிற்பகுதியில்,​​ கூட்டாளிகளுடன் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
​ ​ ​ ​ விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.​ விளைச்சல் எதிர்பார்த்ததைவிட அமோகமாக இருக்கும்.​ நீர்வரத்து அதிகரிப்பதால் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.​ புதிய குத்தகைகள் கிடைப்பதில் சிறிது தாமதம் உண்டானாலும் கடைசியில் அவை உங்கள் கைக்கு வந்து சேரும்.​ பூச்சிகளால் பயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படாது.​ ஆண்டின் பிற்பகுதியில் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள்.​ குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
​ ​ ​ அரசியல்வாதிகள் இந்த ஆண்டு புகழ் ஏணியில் ஏறத் தொடங்குவீர்கள்.​ கட்சி மேலிடம் உங்களின் செயல்களைப் பாராட்டும்.​ இடையிடையே ஏற்படும் சில பிரச்சினைகளைத் தொண்டர்களின் உதவியுடன் சரி செய்துவிடுவீர்கள்.​ சிலருக்கு கட்சியில் புதிய பதவிகள் கிடைக்கும்.​ அதேநேரம் ஆண்டின் பிற்பகுதியில் உங்கள் திறமைக்குச் சவால்கள் ஏற்படும்.
​ ​ கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.​ ரசிகர்களின் ஆதரவும் குறைந்தே காணப்படும்.​ எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.​ மற்றபடி இந்த ஆண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.​ உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள,​​ புதிய வழிமுறைகளைக் காண்பீர்கள்.
​ ​ ​ பெண்மணிகள் எந்த வாக்குவாதத்திலும் சிக்கிக் கொள்ளாமல் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளவும்.​ மற்றபடி இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள்.​ குடும்பத்தில் வருமானம் சீராக இருக்கும்.​ உற்றார் உறவினர்கள் உங்கள் இல்லத்திற்கு அடிக்கடி வருவார்கள்.​ ஆண்டின் பிற்பகுதியில் குழந்தைகளின் உடல் ஆரோக்யம் சிறிது பாதிக்கப்படலாம்.
​ ​ ​ மாணவமணிகளை பொறுத்தவரை உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.​ அதேசமயம் மதிப்பெண்களைப் பெறுவதற்குக் கடினமாக உழைக்க வேண்டும்.​ உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை.​ வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.
பரிகாரம்:​​ விநாயகப் பெருமானையும்,​​ ஆஞ்சநேயரையும் வழிபட்டு வரவும்.
மேலும் இங்கே தொடர்க...

புத்தாண்டு பலன்கள் - 2011 மிதுனம்




நாளை முதல்,​​ ஏப்ரல் மாதம் வரை உங்கள் செய்தொழில் சீராக நடந்தாலும்,​​ பெரிய அளவில் சேமிக்க முடியாது.​ மற்றபடி உங்களின் எதிர்பார்ப்பிற்கும் மேலாக வாய்ப்புகள் உங்களின் கை வந்து சேரும்.​ நண்பர்களுடன் சேர்ந்து புதிய கூட்டு முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள்.​ வங்கிகளிடமிருந்து தேவையான கடன்கள் கிடைத்து,​​ தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.​ குடும்பத்தில் உற்றார்,​​ உறவினர்கள் பிரச்சினைகள் இல்லாமல் பழகுவார்கள்.​ ஆன்மீகக் காரியங்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.​ அதே நேரம் சகோதர,​​ சகோதரிகள் உறவில் குளறுபடிகள் நேரலாம்.
​ ​ ​ ​ கேது பகவானின் அருளால் திருட்டுப் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும்.​ மனதில் மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும்.​ நிம்மதியான சூழ்நிலை அமையும்.​ பொழுது போக்கு அம்சங்களை மனம் அதிகம் விரும்பும்.​ எந்தவொரு முயற்சியையும் புத்திசாலித்தனமாகவும்,​​ பொறுமையுடனும் கையாளுவீர்கள்.​ பலருக்கு எதிர்பார்த்த திருமண வாய்ப்புகள் கைகூடும்.
​ ​ ​ ​ ​ ராகு பகவான்,​​ சிலருக்கு ​ திடீர் வாகன யோகங்களை உண்டாக்குவார்.​ சவால்களை தைரியமாகச் சமாளிப்பீர்கள்.​ அதேநேரம் எவரிடமும் வீண் விரோதம் கொள்ள வேண்டாம்.​ பிறரின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
​ ​ ​ ​ இந்த ஆண்டு மே மாதம் முதல்,​​ வருட இறுதி வரை உள்ள காலகட்டத்தில் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் மூலமாக ஆதாயங்கள் கிடைக்கும்.​ வழக்குகளில் எதிர்பார்த்த திருப்பங்கள் உண்டாகும்.​ பொதுநலக் காரியங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.​ அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.​ பயணங்களால் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள்.​ குடும்பத்தில் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.​ மூத்த சகோதரர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்;​ அவர்களாலும் உதவிகளைப் பெறுவீர்கள்.
​ ​ ​ ​ இந்தக் காலகட்டத்தில் கேது பகவான் உங்களின் ஆன்மீக அறிவைத் தூண்டுவார்.​ இதனால் 'பகவத் கீதை'யில் சொன்னபடி,​​ அர்ப்பணிப்பு உணர்வோடு ​ உங்கள் கடமைகளில் கண்ணும் கருத்துமாக ஈடுபடுவீர்கள்.​ இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.​ கடன் சுமைகள் முழுவதும் அடைந்து,​​ கவலைகள் தீர்ந்துவிடும்.
​ ​ ​ ராகு பகவான் உங்களை குறிக்கோளை எட்டும் வகையில் உயர வைப்பார்.​ ​ உங்கள் எதிரிகள்,​​ உங்கள் கண்களில் படாமல் ஒதுங்கிச் செல்வார்கள்.​ நெடுநாட்களாக தடைபட்டிருந்த சில காரியங்கள் ஈடேற நல்ல சந்தர்ப்பம் கூடி வரும்.
​ ​ ​ உத்யோகஸ்தர்களுக்கு பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும்.​ மேலதிகாரிகள்,​​ உங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்.​ வருடத்தின் முற்பகுதியில் சக ஊழியர்களிடம் வீம்பாக எதையும் பேச வேண்டாம்.​ மேலும் அனாவசியப் பயணங்களையும் செய்ய நேரிடும்.​ ஆனால் வருடத்தின் பிற்பகுதியில் நீங்கள் விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள்;​ எதிர்பார்த்த ஊதியமும் கிடைக்கும்.​ இதனால் உங்கள் வேலையில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.
​ ​ ​ வியாபாரிகளுக்கு கொடுக்கல்,​​ வாங்கல் விவகாரங்கள் நலமாகவே முடியும்.​ புதிய யுக்திகளைப் புகுத்தி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.​ அதே நேரம் ஆண்டின் முற்பகுதியில்,​​ அடுத்தவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் கடன் கொடுக்க வேண்டாம்.​ கூட்டாளிகளுடன் ஒற்றுமை குறைந்தாலும் உங்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தி வெற்றியடைவீர்கள்.
​ ​ ​ ​ விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் அதிகரிக்கும்.​ புதிய கழனிகளை வாங்கி வருங்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள்.​ கையிருப்புப் பொருட்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும்.​ கால்நடைகள் வைத்துள்ளோர்,​​ பால் வியாபாரம் செய்வோர் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.
​ ​ ​ ​ அரசியல்வாதிகளுக்கு ஆண்டின் முற்பகுதியில் கட்சியில் மதிப்பு,​​ மரியாதை குறைய நேரிடலாம்.​ அதனால் கட்சி மேலிடத்தின் கண்களில் தேவையின்றி படாமல் அமைதியாகப் பணியாற்றுவீர்கள்.​ ஆயின் ஆண்டின் பிற்பகுதியில் உங்களின் மக்கள் தொண்டுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.​ இதனால் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள்.​ உங்கள் எதிரிகளின் பலம் குறையும்;​ புதிய தொண்டர்களும் கிடைப்பார்கள்.​ ​
​ ​ ​ ​ கலைத்துறையினர்,​​ கடமையை உணர்ந்து செயல்படுவீர்கள்.​ சக கலைஞர்களிடம் உதவிகளைப் பெறுவீர்கள்.​ அதேநேரம் ஆண்டின் முற்பகுதியில் கிடைக்கும் ஒப்பந்தங்கள் மனதிற்கு நிறைவு தருவதாக அமையாது.​ ஆனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் சிறப்பான வருமானத்தைப் பெறுவீர்கள்;​ ரசிகர்களின் ஆதரவும் அமோகமாக இருக்கும்.
​ ​ ​ ​ பெண்மணிகளுக்கு இந்த ஆண்டு முழுவதும் பொருளாதார நிலையில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை தென்படும்.​ உற்றார்,​​ உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.​ பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள்.​ வீட்டிற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.
​ மாணவமணிகள் கல்வியில் முன்னேறுவதற்கு மேற்கொள்ளும் பயிற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.​ ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.​ விளையாட்டில் ​ முத்திரை பதிப்பீர்கள்.​ பேச்சுப் போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடுவீர்கள்.
பரிகாரம்:​​ சக்தி வழிபாடு உங்களை உயர்த்தும்.
மேலும் இங்கே தொடர்க...

புத்தாண்டு பலன்கள் - 2011 கடகம்




நாளை முதல்,​​ ஏப்ரல் மாதம் வரை உங்களின் ஆற்றல் பன்மடங்கு பெருகும்.​ நண்பர்களுக்கும்,​​ கூட்டாளிகளுக்கும் அறிவுரை கூறுவீர்கள்.​ அவர்கள் உங்களுடன் இணக்கமாகப் பழகுவார்கள்.​ போட்டி,​​ பொறாமைகள் இருக்காது.​ அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் நல்ல அனுபவங்கள் கிடைக்கும்.​ சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்தும்,​​ கெüரவமும் உயரும்.​ பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.​ புதிய வீடு,​​ வாகனங்களை வாங்குவீர்கள்.​ குழந்தை இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும்.​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​
​ ​ ​ ​ ​ இந்தக் காலகட்டத்தில் ராகு பகவான் உங்களை 'முக்கியஸ்தர்' என்கிற அளவுக்கு உயர்த்துவார்.​ வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.​ சிலர் பகுதி நேரமாக மற்றொரு தொழிலையும் செய்யத் தொடங்குவார்கள்.​ வாழ்க்கையில் அனுகூலமான பல திருப்பங்களைக் காண்பீர்கள்.
​ ​ ​ ​ ​ கேது பகவானால் புண்ணியத் தலங்களுக்கு செல்லும் யோகம் உண்டாகும்.​ ​ சகோதர,​​ சகோதரிகள் உங்களைத் தேடி வந்து உதவி செய்வார்கள்.​ நுணுக்கமான பல கலைகளைக் கற்றுத் தேர்வீர்கள்.​ இரவு நேர சிறு தூரப் பயணங்களைத் தவிர்க்கவும்.
​ ​ ​ ​ ​ இந்த ஆண்டு மே மாதம் முதல்,​​ வருட இறுதி வரையிலான காலகட்டத்தில் தொழில் செய்ய வங்கிகளிடமிருந்தும் பழைய நண்பர்களிடமிருந்தும் பண உதவி கிடைக்கும்.​ தாய் வழி உறவுகளிடமிருந்து குறிப்பாக மாமன் வழியிலிருந்து நன்மை அடைவீர்கள்.​ சிலர் தொழிலை மற்ற ஊர்களிலும் விரிவுபடுத்துவார்கள்.​ எதிர்பாராத பண வரவால் திக்குமுக்காடிப் போவீர்கள்.​ புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள்.​ ​
​ ​ ​ ​ ​ லாபஸ்தானத்தில் அமர்ந்துள்ள கேது பகவான்,​​ அனைத்துக் காரியங்களிலும் உபரி வருமானத்தைக் கூட்டிக் கொடுப்பார்.​ குல தெய்வ வழிபாடு மற்றும் பரிகாரங்களைச் செய்வீர்கள்.​ சகோதர,​​ சகோதரிகள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.​ பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளில் சுமுகமான தீர்வு உண்டாகும்.
​ ​ ​ ​ இந்தக் காலகட்டத்தில் ராகு பகவான்,​​ உங்களை முன் யோசனையோடு செயல்பட வைப்பார்.​ தனித்துச் செய்யும் காரியங்களில் நன்மை உண்டாகும்.​ அதேசமயம் பெற்றோர் வழியில் சிறு மனக்கசப்புகள் ஏற்பட்டாலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும்.​ உங்கள் பெயரில் பிறருக்குக் கடன் வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
​ ​ ​ ​ உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு குறையும்.​ உங்கள் மேலதிகாரிகளின் மனநிலை அறிந்து சமயோஜிதமாக நடந்து கொள்வீர்கள்.​ சிறிய அளவு முயற்சிகளிலேயே நிறைவான வெற்றிகளை அடைவீர்கள்.​ உங்கள் வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்தால்,​​ சில குழப்பங்களிலிருந்து தப்பிக்கலாம்.​ சக ஊழியர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே இருப்பார்கள்.​ அதனால் அவர்களை நம்பி முக்கிய வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.
​ ​ ​ ​ வியாபாரிகள்,​​ துணிந்து புதிய முதலீடுகளைச் செய்வீர்கள்.​ இதனால் வருமானம் இரட்டிப்பாகும்.​ விநியோக விவகாரம் உட்பட அனைத்து விஷயங்களும் உங்களுக்குச் சாதகமாகவே முடியும்.​ கொடுத்திருந்த கடன்களும் திரும்பக் கை வந்து சேரும்.​ வியாபாரத்தை நல்ல முறையில் விரிவுபடுத்துவீர்கள்.​ நண்பர்களும் உதவி செய்வார்கள்.
​ ​ ​ விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும்.​ இதனால் சந்தை வியாபாரத்தில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.​ அதோடு செலவு குறைந்த மாற்றுப் பயிர்களையும் பயிரிட்டு லாபத்தை அள்ளுவீர்கள்.​ உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மேலும் நன்மைகள் அடையலாம்.​ வயல் வரப்பு பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம்.
​ ​ ​ அரசியல்வாதிகளுக்கு,​​ தீர்க்கமாக யோசித்து எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சாதகமாகவே அமையும்.​ இருப்பினும் கட்சியில் யாரிடமும் வெளிப்படையாகப் பழக வேண்டாம்.​ மக்களுக்கான நியாயமான போராட்டங்களில் மட்டுமே ஈடுபடவும்.​ மற்றபடி புதிய பொறுப்புகளைக் கவனத்துடன் கையாளுவீர்கள்;​ கட்சிப் பணிகளை புதிய யுக்தியுடன் செய்வீர்கள்.
​ ​ ​ ​ கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும்.​ புதிய வாய்ப்புகள் தேடி வரும்.​ உங்களுக்கென்று தனி இடத்தைப் பிடிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.​ உங்களின் படைப்புகள் மக்களிடம் சரியான முறையில் சென்றடைந்து வரவேற்புகளைப் பெறும்.​ வெளிநாட்டுப் பயணங்களை ரசிகர்களின் ஆதரவுடன் மேற்கொள்வீர்கள்.
​ ​ ​ பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.​ பண வரவு நன்றாக இருக்கும்.​ மற்றவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.​ குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள்.​ ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.​ தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள்.​ பழைய கசப்பான சம்பவங்களை மறந்து,​​ இன்பமாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.
​ ​ ​ மாணவமணிகள்,​​ கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.​ விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றியடைவீர்கள்.​ சோம்பேறித்தனத்தை விட்டொழித்து இந்த ஆண்டு முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.​ அனைத்து இடையூறுகளையும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் ஆதரவினால் தாண்டி வந்துவிடுவீர்கள்.
பரிகாரம் :​​ ராமர்,​​ சீதா,​​ லட்​சுமணர்,​​ அனுமனை வழிபட்டு வரவும்.
மேலும் இங்கே தொடர்க...

புத்தாண்டு பலன்கள் - 2011 சிம்மம்




நாளை முதல்,​​ ஏப்ரல் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலை ஆர்வத்துடன் வெற்றிகரமாக நடத்துவீர்கள்.​ ​ சோம்பேறித்தனத்தை விட்டொழித்துவிட்டு சுறுசுறுப்புடன் பணிபுரியும் அளவிற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்வீர்கள்.​ சிலருக்கு தந்தையுடன் சேர்ந்து தொழில் செய்யும் வாய்ப்பு ஏற்படும்.​ இல்லத்தில் சுப காரிய முயற்சிகள் வெற்றி பெறும்.​ அதேநேரம் மனதில் சிறிது அமைதியின்மை காணப்படும்.​ ஆனால் உடல் ஆரோக்யத்தில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.​ குடும்பத்தினருக்கும் மருத்துவச் செலவுகள் உண்டாகாது.​ புதிய வாய்ப்புகளைத் தேடி அடைவீர்கள்.​ சகோதர,​​ சகோதரிகளிடம் உண்மையாகவும்,​​ நேர்மையாகவும் நடந்துகொள்வீர்கள்.​ குழந்தைகளை மேற்படிப்பிற்காக வெளியூர் அல்லது வெளிநாட்டிற்கு அனுப்புவீர்கள்.
​ ​ ​ ​ இந்தக் காலகட்டத்தில் கேது பகவான் உங்களுக்கு மறைமுக ஆதாயத்தை அவ்வப்போது ஏற்படுத்தித் தருவார்.​ நுணுக்கமான விஷயங்களையும் சுலபமாகப் புரிந்து கொண்டுவிடுவீர்கள்.​ செலவுகளைத் திட்டமிட்டுச் செய்வீர்கள்.​ விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும்.​ பழைய நீதிமன்ற வழக்குகள் நல்லபடியாக முடிவுக்கு வரும்.
​ ​ ​ ​ ராகு பகவானால் குல தெய்வ வழிபாடு செய்யும் யோகம் உண்டாகும்.​ நல்லவர்களிடம் புதிய பாடங்களைக் கற்பீர்கள்.​ இந்த ஆண்டு மே மாதம் முதல்,​​ ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் முடிவெடுக்க முடியாமல் தவித்த விஷயங்களில் சுமுகமான முடிவைக் காண்பீர்கள்.​ தடைபட்டிருந்த திருமணம் கைகூடும்.​ கடன்களை அடைக்க முடியாமல் வட்டியை மட்டுமே கட்டியவர்கள்,​​ மொத்தக் கடன்களையும் திருப்பி அடைத்துவிடுவார்கள்.​ வெளிவட்டாரத்தில் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.​ குடும்பத்தினர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வார்கள்.​ அதிர்ஷ்டவசமாகக் கிடைக்கும் புதிய வாய்ப்புகளால் மகிழ்ச்சியடைவீர்கள்.​ செய்தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள்.​ குடும்பத்தாருடன் விருந்து,​​ கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள்.​ உங்கள் காரியங்களில் முழு திருப்தியை அடைவீர்கள்.
​ ​ ​ ​ ராகு பகவான்,​​ உங்கள் தாயின் உடல் நலத்தில் சிறிது பாதிப்பை ஏற்படுத்துவார்.​ ​ வீடு,​​ வாகனம் ஆகியவற்றுக்காகப் பராமரிப்புச் செலவுகள் செய்ய நேரிடும்.​ மற்றபடி பயணங்களால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.
​ ​ ​ ​ இந்தக் காலகட்டத்தில் கேது பகவான்,​​ தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கச் செய்வார்.​ அதேநேரம் கெüரவத்திற்காக சில செலவுகளைச் செய்ய நேரிடும்.​ இக்காலகட்டத்தில் தனித்து இயங்குவதைவிட,​​ கூட்டு முயற்சிகளே சிறந்தவை.​ போட்டி,​​ பந்தயம் மற்றும் ஷேர்மார்க்கெட் துறையில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.​ மற்றபடி உங்கள் மீது அபாண்டமாக பழி போட்ட நண்பர்கள்,​​ மனம் மாறி நட்புடன் பழகுவார்கள்.​ குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும்.
​ ​ ​ ​ உத்யோகஸ்தர்கள் இந்த ஆண்டின் முற்பகுதியில் எதிர்வரும் இடையூறுகளை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.​ காலதாமதம் ஏற்பட்டாலும் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் நல்லபடியாக முடியும்.​ என்றாலும் சக ஊழியர்களிடம் எந்த உதவியையும் எதிர்பார்க்க முடியாது.
​ ​ ​ ​ இந்த ஆண்டின் பிற்பகுதியில் பதவி உயர்வு,​​ ஊதிய உயர்வு இரண்டும் தேடி வரும்.​ அலுவலகத்தில் வீட்டுக் கடன் கிடைக்கும்.​ புதிய அலுவலகப் பயிற்சிகளை வெளியூருக்குச் சென்று மேற்கொள்வீர்கள்.
​ ​ ​ வியாபாரிகளுக்கு,​​ கூட்டாளிகளுடன் சிறிய பிரச்சினைகள் உண்டாகும்.​ அரசாங்க விஷயங்களில் எடுக்கும் முயற்சிகளில் தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி பெறுவீர்கள்.​ கொடுக்கல்,​​ வாங்கல் விஷயங்களை நல்லபடியாக முடித்துவிடுவீர்கள்.​ வருடத்தின் முற்பகுதியில் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க வேண்டாம்.​ ஆயின் வருடத்தின் பிற்பகுதியில் புதிய முயற்சிகளை நல்லபடியாகச் செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள்.
​ ​ ​ ​ விவசாயிகள் சுமாரான வருமானத்தைப் பெற்றாலும்,​​ உங்களின் கெüரவத்திற்குக் குறைவு வராது.​ புதிய குத்தகைகளை தேடிச் சென்று அடைவீர்கள்.​ அதோடு மகசூல் அதிகரிக்க நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும்.​ பூச்சிக்கொல்லி மருந்துக்கு சிறிது செலவு செய்ய நேரிடும்.​ கடன் விவகாரங்களால் சிலர்,​​ வழக்குகளைச் சந்திக்க நேரிடலாம்.​ ஆனால் பயப்படும்படி எதுவும் நேராது.
​ ​ ​ ​ அரசியல்வாதிகளுக்கு,​​ கட்சி நிர்வாகிகளுடன் வாக்குவாதங்கள் அதிகரிக்கும்.​ கட்சித் தலைமையிடம் நல்ல முறையில் நடந்து கொண்டு உங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும்.​ ஆண்டின் பிற்பகுதியில் உங்களின் செல்வாக்கு படிப்படியாக உயரத் தொடங்கும்.​ அப்போது சந்தோஷம் தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள்.​ தொண்டர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.
​ ​ ​ ​ கலைத்துறையினருக்கு சமூகத்தில் மதிப்பும்,​​ மரியாதையும் அதிகரிக்கும்.​ புதிய ஒப்பந்தங்களைச் செய்து முடிப்பீர்கள்.​ உயர்ந்தவர்களைச் சந்தித்து உற்சாகம் அடைவீர்கள்.​ புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள்.​ ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள்.​ அதேநேரம் பிறரிடம் பேசும் போது கவனமாக இருக்கவும்.
​ ​ ​ ​ பெண்மணிகளை பொறுத்தவரை கணவரின் ஆதரவுடன் புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.​ குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள்.​ உங்களின் பக்குவமான பேச்சினால் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள்.​ குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
​ ​ ​ ​ மாணவமணிகள்,​​ படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.​ பெற்றோர்களையும்,​​ ஆசிரியரையும் அனுசரித்துச் சென்று உங்களின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.​ உடற்பயிற்சி செய்து மனப்புழுக்கத்திலிருந்து விடுபடுங்கள்.
பரிகாரம் :​​ சிவபெருமானையும்,​​ அம்பாளையும் வழிபட்டு சிறப்படையுங்கள்.
மேலும் இங்கே தொடர்க...

புத்தாண்டு பலன்கள் - 2011 கன்னி




நாளை முதல்,​​ ஏப்ரல் மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் உங்கள் எண்ணங்கள் அனைத்தும் பூர்த்தியாகும்.​ இதுவரை செய்யாமல் இருந்த வேலைகளை புதிய கோணத்தில் யோசித்துச் செய்வீர்கள்.​ சிலருக்கு புதிய வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.​ மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும்.​ மனதிற்குப் பிடித்த நண்பர்களுடன் வெளியில் சென்று மகிழ்ச்சிகரமாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.​ எதிர்காலத்திற்கான சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள்.​ பொறுமை காத்தவர்களுக்கு அதற்குப் பலனாய் இரட்டிப்புச் சந்தோஷம் கிடைக்கும்.
​ ​ ​ ​ இந்தக் காலகட்டத்தில் ராகு பகவான்,​​ உத்யோகம் தொடர்பான இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவார்.​ குடும்பத்தில் இருந்த இடையூறுகள் மறையும்.​ புதிய போட்டிகளைச் சமாளிக்கத் தயாராக இருப்பீர்கள்.​ உங்கள் பழக்க வழக்கங்களை சூழ்நிலைக்குத் தக்கவாறு மாற்றி அமைத்துக் கொள்வீர்கள்.​ உங்களின் சிந்திக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.
​ ​ ​ ​ கேது பகவான்,​​ உங்களுக்கு ஏற்பட்டுள்ள கடன் தொல்லைகளைத் தீர்த்து வைப்பார்.​ நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.​ புதிய மொழிகளைக் கற்கும் ஆர்வம் மேலோங்கும்.​ பேச்சையே மூலதனமாகக் கொண்டு தொழில் செய்பவர்கள்,​​ நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.​ பணப் புழக்கம் சீராக இருக்கும்.
​ ​ ​ ​ இந்த ஆண்டு மே மாதம் முதல்,​​ ஆண்டு இறுதி வரையில் உள்ள காலகட்டத்தில் அதிக சிரத்தையுடன் செயல்களை செய்ய வேண்டும்.​ எவருக்கும் வாக்கு கொடுப்பதோ,​​ முன் ஜாமீன் போடுவதோ கூடாது.​ குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும்.​ வெளியில் கொடுத்திருந்த பணத்தைப் பொறுமையாகப் பேசி வசூலிக்கவும்.​ மற்றபடி அரசாங்கத்திடம் இருந்து உதவிகள் கிடைக்கும்.​ உடல் ஆரோக்யம் சீராக இருக்கும்.​ யோகா,​​ ப்ராணாயாமம் போன்றவற்றை செய்வீர்கள்.
​ ​ ​ ​ கேது பகவானால் தாயின் வழியில் வில்லங்கமான உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள்.​ அவர்களிடம் மனம் கோணாமல் பேசி,​​ கழற்றிவிடவும்.​ மற்றபடி இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.
​ ​ ​ ராகு பகவான்,​​ உங்களுடன் குதர்க்கமாகப் பேசும் நண்பர்களை உங்களை விட்டு விலக்கிவிடுவார்.​ சிறு தூரப் பயணங்களின் மூலம் நன்மை அடைவீர்கள்.​ சகோதர,​​ சகோதரிகள் உங்களைத் தேடி வந்து உதவி செய்வார்கள்.​ தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.​ வழக்குகளில் சாதகமான தீர்ப்பைக் காண்பீர்கள்.​ சமூகத்தில் பாராட்டுகளும்,​​ கெüரவங்களும் உங்களைத் தேடி வரும்.​ பெரியோர்களின் உதவியால் உங்களின் வாழ்க்கையில் திருப்புமுனைகள் ஏற்படும்.
​ ​ ​ ​ உத்யோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் திட்டமிட்டது போல் முடியும்.​ உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும்.​ மேலதிகாரிகள் உங்களிடம் அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.​ சக ஊழியர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்து பெருமை அடைவீர்கள்.​ விரும்பிய இடமாற்றத்தையும்,​​ எதிர்பாராத ஊதிய உயர்வையும் பெறுவீர்கள்.​ அதேநேரம் வருடத்தின் பிற்பகுதியில் கடினமாக உழைக்க வேண்டி வரும்.
​ ​ ​ ​ வியாபாரிகளுக்கு கொடுக்கல்,​​ வாங்கல் விஷயங்கள் சீராக இருந்தாலும்,​​ கூடுதல் அக்கறையோடு வியாபாரம் செய்யவும்.​ அதோடு மறைமுக எதிர்ப்புகள் உருவாக வாய்ப்பு இருப்பதால் புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடவும்.​ நண்பர்களிடம் கவனமாக இருக்கவும்.​ போட்டிக்கு ஏற்றவாறு விலையை நிர்ணயித்துப் பொருட்களை விற்பனை செய்து லாபம் ஈட்ட உறுதியான வாய்ப்புகள் தோன்றும்.​ ​
​ ​ ​ ​ விவசாயிகள்,​​ கூடுதல் விளைச்சலைக் காண்பீர்கள்.​ குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள்.​ கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த நற்பலனை அடைவீர்கள்.​ புதிய குத்தகைகளை நாடிச் செல்லலாம்.​ வழக்குகளில் உங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பாகும்.​ நீர்வரத்தும் அதிகமாக இருப்பதால்,​​ புதிய மாற்றுப் பயிர்களை ஊடுபயிராகப் பயிர் செய்து பலனடைவீர்கள்.
​ ​ ​ அரசியல்வாதிகளுக்கு,​​ ஆண்டின் பிற்பகுதியில் கட்சி மேலிடத்துடன் சாதகமற்ற சூழ்நிலை ஏற்படும்.​ அதனால் உங்கள் திட்டங்களை அவர்களின் அனுமதி பெற்ற பின்பே நடைமுறைப்படுத்தவும்.​ அனாவசியப் பயணங்களையும் தள்ளிப் போடவும்.​ தொண்டர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும்.​ இவை ஒரு புறமிருக்க,​​ உங்களின் ரகசியத் திட்டங்கள் அனைத்தும் வெற்றிப்பாதையை நோக்கிச் செல்லும்.
​ ​ ​ ​ கலைத்துறையினர்,​​ திறமைக்குத் தகுந்த அங்கீகாரத்தைப் பெறுவீர்கள்.​ புதிய நட்புகளால் சந்தோஷம் அடைவீர்கள்.​ புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.​ சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு ஒப்பந்தங்களை அதிகரித்துக்கொள்ளுங்கள்;​ வரவு அதிகரிக்கும்!​ ரசிகர்களிடம் அமோக ஆதரவைப் பெறுவீர்கள்.
​ ​ ​ ​ பெண்மணிகளுக்கு,​​ பண வரவு அதிகரிக்கும்.​ உங்களின் கோரிக்கைகளை குடும்பத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.​ புதிய ஆடை,​​ அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள்.​ ஆன்மீகச் சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.​ தந்தை வழி உறவினர்களால் நன்மை அடைவீர்கள்.
​ ​ ​ ​ மாணவமணிகளை பொறுத்தவரை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடுவீர்கள்.​ படிப்பிலும் அக்கறையோடு ஈடுபடுவீர்கள்.​ கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் நாட்டம் அதிகரிக்கும்.​ நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.
பரிகாரம் :​​ குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு நன்மை அடையுங்கள்.
மேலும் இங்கே தொடர்க...

புத்தாண்டு பலன்கள் - 2011 துலாம்




நாளை முதல்,​​ ஏப்ரல் மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில்,​​ பணி நிமித்தமான முக்கியமான விஷயங்களில் கண்டிப்புடன் இருப்பீர்கள்.​ வெளியில் கொடுத்திருந்த கடன்களையும் சரியாக வசூலிப்பீர்கள்.​ உடல் நலத்தில் கவனம் செலுத்துவீர்கள்.​ செய்தொழிலைச் சிறப்பாக நடத்துவீர்கள்.​ புத்திசாலித்தனமாகப் பேசுவீர்கள்.​ மறைந்து கிடந்த உங்களின் திறமைகள் வெளிப்படும்.​ பெற்றோர்களிடம் உங்கள் உரிமைகளைக் கேட்டுப் பெறுவீர்கள்.​ பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
​ ​ ​ ​ இந்தக் காலகட்டத்தில் ராகு பகவான்,​​ நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெற்றி கிடைக்கச் செய்வார்.​ பிரிந்திருந்த சகோதர,​​ சகோதரிகள் உங்களுடன் இணைவார்கள்.​ இழந்த செல்வாக்கை மீட்டுவிடுவீர்கள்.​ உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வீர்கள்.​ பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு சிறிய லாபத்தையும் காண்பீர்கள்.
​ ​ ​ ​ கேது பகவான்,​​ பெரியோரிடம் நட்பை ஏற்படுத்திக் கொடுப்பார்.​ குடும்பத்தில் அமைதி நிலவும்;​ மகிழ்ச்சி தாண்டவமாடும்.​ அனுபவசாலிகளின் உதவியுடன் தொழிலில் புதிய நுட்பத்தைப் புகுத்துவீர்கள்.​ தொழிலை விரிவுபடுத்துவதற்காக நண்பர்களுடன் இணைந்து பயணங்களை மேற்கொள்வீர்கள்.​ பழைய தோல்விகளைப் பொருட்படுத்தாமல் புதிய பாதையில் உழைப்பீர்கள்.
​ ​ ​ இந்த ஆண்டு மே மாதம் முதல்,​​ டிசம்பர் மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள்.​ உங்கள் செயல்களில் புதிய உத்வேகம் காணப்படும்.​ அமைதியாக இருந்து உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.​ கடன் தொல்லைகள் விலகும்.​ உங்கள் தொழிலை மற்ற ஊர்களிலும் நடத்தி லாபத்தை அள்ளுவீர்கள்.​ மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டேனும் காப்பாற்றிவிடுவீர்கள்.​ அதேநேரம் எவருக்கும் கேட்காமல் அறிவுரை கூற வேண்டாம்.
​ ​ ​ ​ ராகு பகவான்,​​ மனதில் தேவையற்ற சஞ்சலத்தை உண்டாக்குவார்.​ நேர்வழியில் நடக்காதவர்கள்,​​ உங்களுக்கு நண்பர்களாகும் சூழ்நிலை உருவாகும்.​ சமூகத்தில் உயர்ந்தவர்களுடன் சிறு மனஸ்தாபங்களும் உண்டாகும்.​ அதனால் 'கொக்குக்கு ஒன்றே மதி' என்கிற ரீதியில் செயல்படுவது நல்லது.
​ ​ ​ ​ அதே நேரம்,​​ இந்தக் காலகட்டத்தில் கேது பகவான்,​​ மனதில் நல்ல சிந்தனைகளை ​ ஏற்படுத்துவார்.​ ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரித்து,​​ ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள்.​ இதனால் தேவையற்ற பயங்கள் நீங்கும்.​ மேலும் புறம் கூறுபவர்களை நம்ப வேண்டாம்.​ எதிர்பாராத இடத்திலிருந்து பணம் கை வந்து சேரும்.​ ஆனால் உங்களிடம் தேவையான பணம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ள வேண்டாம்.​ ​
​ ​ ​ ​ உத்யோகஸ்தர்கள்,​​ அனைத்து வேலைகளையும் திருப்திகரமாகச் செய்து முடிப்பீர்கள்.​ கொடுத்த வேலைகளை நிதானமாகச் செய்யவும்.​ வருடத்தின் முற்பகுதியில் சிறிது அதிகமாக உழைக்க வேண்டி வரும்.​ வருடத்தின் பிற்பகுதியில் பண வரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்.​ உங்கள் உழைப்பு வீண் போகாது.​ சிலருக்கு நிம்மதி தரும் இடமாற்றங்கள் ஏற்படும்.​ சக ஊழியர்களின் அன்பும்,​​ ஆதரவும் இருப்பதால் எடுத்த காரியங்கள் அனைத்தும் பிரச்சினையின்றி முடியும்.​ மேலதிகாரிகளிடம் எளிதில் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.
​ ​ ​ ​ வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு முழுவதும் கொடுக்கல்,​​ வாங்கல் விஷயங்கள் அனைத்தும் சீராக இருக்கும்.​ கூட்டாளிகளால் சில இடையூறுகள் ஏற்பட்டாலும் சாதுர்யமாக அவற்றை சமாளிப்பீர்கள்.​ இருப்பினும் அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடனும்,​​ கவனத்துடனும் இருக்கவும்.
​ ​ ​ விவசாயிகள்,​​ தங்கள் கடமைகளைச் சரியாக செய்து முடிப்பீர்கள்.​ கையிருப்புப் பொருட்கள் மீது கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள்.​ போட்டிக்குத் தகுந்தாற்போல் விளை பொருட்களை விற்பனை செய்து நல்ல லாபம் காண்பீர்கள்.​ நீர்ப்பாசன வசதிகளுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நிறைவான பலனளிக்கும்.​ கால்நடைகளால்,​​ எதிர்பார்த்ததற்கும் மேல் வருமானம் கிடைக்கும்.​ புதிய கால்நடைகளையும் ​ வாங்குவீர்கள்.
​ ​ ​ ​ அரசியல்வாதிகள்,​​ தங்கள் செயல்களில் வெற்றிகளைக் காண்பீர்கள்.​ தொண்டர்களிடமும்,​​ பொதுமக்களிடமும் உங்கள் செல்வாக்கு உயரும்.​ நண்பர்களால் உங்கள் வாழ்க்கையில் நல்ல ​ திருப்பங்கள் ஏற்படும்.​ உடல் சோர்வைப் பொருட்படுத்தாமல் கட்சிப் பணிகளில் ஈடுபடுவீர்கள்.​ தகுதிக்கேற்ற பொறுப்புகளைப் பெறுவீர்கள்.​ ​
​ ​ ​ ​ கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.​ உங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கு நல்ல சந்தர்ப்பங்கள் அமையும்.​ சக கலைஞர்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்குவீர்கள்.​ பழைய ஒப்பந்தங்களில் செய்த சிறு தவறுகளைத் திருத்திக்கொண்டு புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடுவீர்கள்.​ ​
​ ​ ​ ​ பெண்மணிகள்,​​ குடும்பத்தில் நிறைந்த சந்தோஷத்தைக் காண்பீர்கள்.​ கணவரைப் புரிந்து கொண்டு நடப்பீர்கள்.​ உற்றார்,​​ உறவினர்களின் நன்மதிப்புக்குப் பாத்திரமாவீர்கள்.​ குழந்தைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவீர்கள்.​ புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.​ ​
​ ​ ​ மாணவமணிகளுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.​ பெற்றோரின் நல்லாதரவைப் பெறுவீர்கள்.​ கல்வியில் நன்கு வளர்ச்சியடைவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டிய நேரமிது.​ உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.​ ​
பரிகாரம்:​​ சிவ​பெருமானையும்,​​ மஹா விஷ்ணுவையும் வழிபட்டு முன்னேற்றமடையுங்கள்.
மேலும் இங்கே தொடர்க...